Posts

Showing posts from 2018

இருவர் மயலோ - பதவுரை

Posted by Smt. Janaki Ramanan, Pune. Read here the meaning in English for the song Iruvar mayalo "இருவர் மயலோ" என்று தொடங்கும் திருவண்ணாமலைத் திருத்தலப் பாடல். ஆதி முதற் பொருளாக, அண்டமெலாம் வியாபித்து நிற்கும் விஸ்வரூபனாக, பூத நாயகனாக, முருகனைக் கண்டு மலைக்கும் அருணகிரியாரின் பரவச நிலை சொல்லும் பாடல். முருகனிடம் முறையிடும் வழிமுறைகள் பற்றிய கேள்வி ஞானம் கூட இல்லாத தன் குரல் அவனுக்கு எட்டுமோ எனக் கேள்வி எழுப்பும் அதே நேரம், அவன் கடாட்சம் தன் மேல் படாததற்குக் காரணம், அவன் கவனம் தன் இரு தேவியரிடமே நிலைப்பது தானோ, என நயம் படக் கேட்கும் உரிமையுள்ள தூய பக்தராக அருணகிரியாரைப் பார்க்கிறோம்.

விரகொடு வளை: JR கருத்துரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song viragodu vaLai ( விரகொடு வளை ) in English, click the underlined hyperlink. முன்னுரை திருவருணையின் திருவருட் செல்வா சரணம். "விரகொடு வளை" எனத் தொடங்கும் திருவருணை திருத்தலப் பாடல். ஏதேதோ துயரங்களில் மூழ்குகின்றோம்; எழுகின்றோம். அவற்றையெல்லாம் பொறுத்துக் கொண்டு மேடு பள்ளங்களில் ஏறி இறங்குகின்றோம். ஆனால் மீள முடியாத பெருந்துயராய் மரண பயம் அச்சுறுத்துகிறது. அந்தத் துயருக்கு வடிகால் உண்டா என்று தவிப்போருக்கு வடிவேலன் என்றொரு இணையிலா சக்தி உண்டு என்று கூறித் தொய்ந்த மனங்களைத் தூக்கி நிறுத்துகிறார் அருணகிரிநாதர். நிழல் அருமை வெய்யிலில் தெரிவது போல், ஐயன் கழல் அருமை மரணத்தின் உச்சக்கட்டத்தில் தெரியும் என்பதாலே அதையும் விளக்குகிறார். அச்சுறுத்தவில்லை; ஆழ்ந்த நம்பிக்கை கொடுக்கிறார். விரகொடு வளை சங்கடமது தரு வெம் பிணி கொடு"

சீசி முப்புரக் காடு — JR கருத்துரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song cheechi muppura ( சீசி முப்புர ) in English, click the underlined hyperlink. முன்னுரை காமக் கோட்டத்தின் கந்தா! அத்திவரதரின் அழகிய மருகா! சரணம். "சீசி முப்புரக் காடு நீறெழ" என்று தொடங்கும் காஞ்சிபுரம் திருத்தலப் பாடல். பக்தர்களுக்காக ஒளிமயமான மலர்ப்பாதை விரித்து வைத்திருக்கிறான் முருகன். அதில் நடந்தால் ஆணவம், கன்மம், மாயை என்ற மாசுகள் எரிந்து போகும். பஞ்ச கோசங்கள் தாண்டிய ஆன்ம ஸ்வரூபம் காட்சி தந்துவிடும். சூரிய ஞானப் பெருவெளியில் சஞ்சாரம் செய்யும் பேறு கிட்டும். முக்தி வாசல் திறக்கும். அநுபூதியாம் பேரானந்த அனுபவம் மலர்ந்து விடும். இவையெல்லாம் புரியாமலே வாழ்வின் பெரும் பகுதி வீணாகி விட்டதே, வேலா! பந்த பாசங்கள் அகற்றி, உன் மேல் மாறாத நேசத்தை நெஞ்சிலே நிறுத்தி வைப்பாய் – என அருணகிரிநாதர் வேண்டுகின்ற பாடல். மனித நெஞ்சத்தை நன்னிலமாக்கி, அதில் பக்தியை விதைக்க அவர் பாடுபடுவது தான் ஒவ்வொரு பாடலுமே. பாடலின் இரண்டாம் பகுதியில் அவனுடைய புகழ் என்னும் தேனை அருந்தச் செய்து விடுவதாலே சொல்லொணா மன நிறைவு.

சில திருப்புகழ் பாட்டுக்கள் : J R விளக்கவுரை

By Janaki Ramanan, Pune Click anywhere on the panel to expand it and click once again to collapse. Clicking the red underlined words in the panel will take you to the English translation of the song. 11. அந்தகன் வரும் அருணகிரிநாதரைச் சுற்றிச் சுழன்று சுழித்து ஓடும் பக்தி வெள்ளம் தான் இந்தப் பாடல். அந்தக் கந்தவெள்ளம் எந்த அழுக்கையெல்லாம் அடித்துச் சென்று விடும் தெரியுமா எனக் கேட்டு, நெஞ்சத்தில் நம்பிக்கை தழைக்க வைக்கும் பாடல். மரண பயம் பயந்து ஓடிவிட, காம இச்சை கலங்கிக் கதறி விலகிவிட, படைப்பின் அடித்தளமாக அமைந்த சத்வ, ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்களும் விடைபெற்றுக் கொண்டு விட, ஞானம் மட்டும் மிஞ்ச, ஞான பண்டிதன் விஞ்சி நிற்க, பக்தன் நான் விம்மி நிற்க, அந்த இன்பநிலை தருவாய் செந்தில் வேந்தே என வேண்டுகிறார் அருணகிரியார். அந்தகன் வருந்தினம் பிறகிட சந்ததமும் வந்து கண்டரிவையர்க் கன்புருகு சங்கதத் தவிர முக்.....குணமாள விளக்கம் : கணத்துக்குக் கணம் "வந்துவிடுவானோ, வந்து விடுவானோ" என்று எந்தக் கூற்றுவனுக்குப் பயந்துசப்தநாடிகளும் ஒடுங்க அமர்ந்திருக்கி

வம்பறாச் சில கன்னமிடும் -- JR கருத்துரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song vambaRa( வம்பறாச் சில ) in English, click the underlined hyperlink. முன்னுரை காஞ்சித் தலைவனே சரணம். "வம்பறாச் சில கன்னமிடும்" என்று தொடங்கும் காஞ்சிபுரம் திருத்தலப் பாடல். 'நகரேஷு காஞ்சி ' எனக் கொண்டாடப்படும் எழில் நகரம். ஆன்மீகச் சிகரம். பஞ்ச பூத ஸ்தலங்களில் பொறுமைக்கும், அருமைக்கும், பெருமைக்கும் எடுத்துக்காட்டான நிலமாகிய மண்ணின் ஸ்தலம். முக்தி வாசல் திறக்கும் ஏழு புனித ஸ்தலங்களில் ஒன்று. ஏகன் அவன் என உணர்த்த மிக உயர்ந்து நிற்கும் ஏகாம்பரேஸ்வரர் ஆலய கோபுரம். கட்டிடக் கலையின் நுணுக்கங்கள் கொட்டிக் கிடக்கும் கைலாசநாதர் கோவில். வர மழை பொழியும் வரதராஜன் ஆலயம். ஞானத்தை ஒரு விழியாகவும், கருணையை மறு விழியாகவும் கொண்டு அன்னை காமாட்சி ஆட்சி செய்யும் ஸ்தலம். கணித வல்லுனரையும் பிரமிக்க வைக்கும் ஸ்ரீசக்ர அமைப்பு. சிவசக்தி ஐக்கியமாய் அது அகிலம் காக்கும் சிறப்பு. அன்னை தானே தவமியற்றி வழிகாட்டும் தனித்துவம் கொண்ட தலம். கந்தக் கோட்ட சுந்தரக் கந்தன் அருணகிரியாரைச் சொக்க வைத்துக் காத்தம் போல் இழுத்த தலம். அவர் எண்ணத

பரிமள மிகவுள — JR கருத்துரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song parimaLa migauLa ( பரிமள மிகவுள ) in English, click the underlined hyperlink. முன்னுரை ஆனைக்காவின் கவினே சரணம். "பரிமள மிகவுள" என்று தொடங்கும் திருவானைக்கா திருத்தலப் பாடல். மனிதனின் ஆசைகள் – குறிப்பாகப் பெண்ணாசை – அனைத்தையும் தராசின் ஒரு தட்டில் அடுக்கி வைத்தாலும், ஐயன் முருகன் அருள் மறு தட்டிலே மலர்ந்து விட்டால், அந்தத் தட்டு அவன் கனத்த கருணையால் அழகாய்க் கீழே இறங்க, பக்தனுக்காக அவன் இரங்க, மனிதன் கரையேறும் அதிசயம் நடந்து விடுகிறது என்கிறார் அருணகிரியார். பெண்ணாசை என்னும் பெருநெருப்பு மனித வாழ்வை முழுவதுமாய் எரித்து முடித்து விடுகிறது. அந்தச் சாம்பலிலிருந்து வாழ்வைத் துளிர்த்துத் தழைக்க வைக்கும் அற்புதத்தை அருணகிரியாரின் வாழ்க்கையில் வள்ளல் நடத்திக் காட்டினான். துராசை தன்னைக் கொண்டு வந்து நிறுத்திய அவலநிலையைப் படம் பிடித்துக் காட்டினால் தான் கந்தன் கருணையின் ஆழம் புரியும் என்பதை உணர்ந்து, தன்னையே சவுக்கடி போன்ற சொற்களால் தாக்கிக் கொள்கிறார் அருணகிரியார். அது மனித மனங்களில் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தும் என

தலைவலையத்து — JR கருத்துரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song thalaivalaiyaththu ( தலைவலையத்து ) in English, click the underlined hyperlink. முன்னுரை குமரக் கோட்டத்தின் கொஞ்சும் எழிலே சரணம். "தலைவலையத்துத் தரம் பெறும்" என்று தொடங்கும் காஞ்சிபுரம் திருத்தலப் பாடல். தலைவன் முருகன் அருணகிரியாரைத் தடுத்தாட்கொண்ட பொழுது, அவர் நொந்த உடலை, நெஞ்சத்தைத் தேற்றி விட்டான். பட்ட காயங்கள் ஆற்றி விட்டான். பரம பக்தனாக மாற்றி விட்டான். ஆனந்த வெள்ளத்தில் திக்குமுக்காடிய அருணகிரியார், அரிய வேண்டுதல்களை அவன் முன் வைக்கின்றார். அவன் திருப்புகழைப் பாடச் சிறந்த கவித்துவம் கேட்கின்றார். தத்துவ ஞானம் வேண்டுகிறார். தர்மநெறி நடக்கும் மாண்பும், அவர் சத்புருஷன் என்று அனைவரும் ஏற்றுக் கொள்ளும் ஏற்றமான நிலையும் வேண்டுகிறார். அவனது அன்னையாம் அம்பிகையின் மகிமைகளையும் மகிழ்ந்து பாடுகிறார். பக்தியும் , தமிழும் பொங்கி வரும் இன்பக் கடலோ இந்தப் பாடல்!

தசையும் உதிரமும்: JR கருத்துரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song thasaiyum uthiramum in English, click the underlined hyperlink. முன்னுரை வடிவும் இளமையும் வளமையும் கொண்ட குமரா சரணம். "தசையும் உதிரமும் " என்று தொடங்கி, இசையாய், கலிதையாய், அம்பிகையையும் அருமை மைந்தனையும் அருணகிரியார் பாடும் பாடல் அருணை நகரில் அன்று ஆட்கொண்டான் மைந்தன். ஆறுதல் சொன்னாள் அன்னை. மீண்டும் பிறந்து வந்தது போன்ற அந்த அரிய தருணங்களை நினைத்து நினைத்துப் போற்றிப் பாடும் பொதுப் பாடல்.

தமரும் அமரும் : J R விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song thamarum amarum ( தமரும் அமரும் ) in English, click the underlined hyperlink. முன்னுரை கழைக் கூத்தாடிகள் ஒரு ஆதாரத்தை விட்டு விட்டு, கண் இமைப்பதத்குள் இன்னொரு ஆதாரத்தைப் பற்றிக் கொண்டு சாகசம் காட்டுவார்கள். வாழ்விலோ, நாம் ஒவ்வொரு முறையும் ஆதாரம் என்று பற்றிப் பிடித்துக் கொண்டு ஆசுவாசப்படும் மனைவி, மக்கள், உற்றம், சுற்றம் என்பதெல்லாம் தாமே கழன்று கொள்ளும் பரிதாப நிலை வந்தால் என்ன செய்வோம்! சாஸ்வதம் சரவணன் திருவடிகள் தான் என உணர்த்துகிறார் அருணகிரிநாதர். மரண பயம் போக்கும் மநதிரம் சொல்கிறார். திரும்பத் திரும்பச் சொல்வதெல்லாம், மயங்கிக் கிடக்கும் மனித குலத்துக்காகத்தான்.

நாலிரண்டு இதழாலே — J.R. விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune To read the meaning of the song naalirandu ithazhaale in English, click the underlined hyperlink. உமையாள் சுதனே சரணம். "நாலிரண்டு இதழாலே என்று தொடங்கும் திருப்புகழ் பொதுப் பாடல். முன்னுரை பாரதத்தின் நீள அகலங்களை அளந்தது போல், ஐயன் முருகனின் அனைத்து திருத்தலங்களுக்கும் யாத்திரை சென்று திருப்புகழ் பாடித் திருவண்ணாமலை திரும்பிய பின்னரும், பன்னிரு விழியோனின் புகழ் பாடும் ஆர்வம் அடங்காமல் இருந்த அருணகிரியார், திருவண்ணாமலைத் திருத்தலத்தில் இருந்தவாறே, தன் இதயத் தலத்தில் குமரனைக் கண்டு பாடிய பாடல்கள் பொதுப் பாடல்கள் என்று குறிக்கப் பெறுகின்றன. அத்தகைய பாடல்களில் ஒன்று தான் "நாலிரண்டு இதழாலே " என்று தொடங்கி, உமையாளையும், உமையாள் சுதனையும் துதிக்கும் பாடல். அன்னையின் புகழை அவர் பாடும் அருமையைக் கேட்போம். அத்தனையும் தித்திக்கும் தேன் மலர்கள்.

இருவினை ஊண் — J.R. விளக்கவுரை

By Smt. Janaki Ramanan, Pune You may read the explanation of the song iruvinai UN by clicking the underlined hyperlink. நினைத்தவுடன் முக்தி தரும் அருணையின் முத்துக் குமரா சரணம். "இருவினை ஊண்" என்று தொடங்கும் திருவருணைப் பாடல் முன்னுரை சிவலோகமோ என பிரமிக்க வைக்கும் அருணையில் அமரர் குழாமும், முனி புங்கவர்களும், ரிஷிகளும் வந்து குவிந்து, கை குவித்து, அரனாரையும், முருகவேனளயும் தொழுது நிற்கும் சிறப்புச் சொல்கிறார் அருணகிரிநாதர். சாட்சாத் முருகனே "அருணகிரி நாதா" எனப் பெயர் சூட்டி, அவரை அன்புடன் அழைத்த தலம் அல்லவா! துன்பக் கடலில் அலைப்புண்டு தத்தளிக்கும் மரக்கலம் போன்ற இந்த நிலையற்ற உடல் மேல் மாந்தர்க்கு ஏன் இந்த மயக்கம் எனப் பரிதவிக்கிறார். மயக்கங்கள் நீங்கி முருகன் மலர்ப் பாதம் கிடைக்குமோ என ஏங்குகிறார். அருணையில் அவன் ஆட்கொணட பின்னரும் ஏன் இந்தக் கலக்கம்? வினைகளை வேரறுக்க இடையறாமல் வேலவனைத் தொழ வேண்டும் என்பதைத் தான் வலியுறுத்துகிறார். சைவ வைணவ பேதம் காட்டாமல் ஆடல் அரசனையும், அண்டம் உண்டவனையும் பாடும் பாடல

கரிமுகக் கடக் களிறு — J.R. விளக்கவுரை

By Smt.Janaki Ramanan, Pune For an explanation of the song in English, click the underlined hyperlink karimugak kada அருணையின் கருணை மழையே சரணம். "கரிமுகக் கடக் களிறு" என்று தொடங்கும் திருவருணைப் பாடல். முன்னுரை முருகன் அருட் பார்வை பட்டுவிட்டால் வறண்டு கிடக்கும் நிலம், மக்கள் மனம் எல்லாம் வளம் கொழிக்கும் இடமாக மாறிவிடும் அல்லவா! அவன் நிலையாகக் கோயில் கொண்டிருக்கும் அருணை பற்றிக் கேட்கவா வேண்டும்! 'கரிமுகக் கடக் களிறு' என்ற இன்ப மயமான திருவருணைப் பாடல். அருணையின் வளத்தைப் படம் பிடிக்கும் பைந்தமிழின் சுவை. கஜானனன் புகழ் பாடும் கனிச்சுவை. நான்மாடக் கூடலில், நடன சுந்தரனின் திருவிளையாடல் சொல்லும் சொற்சுவை. வேலனின் வீரமும், கருணையும் வழி வழி வந்தவை என உணர்த்துகிறாரோ அருணகிரிநாதர்! இதோ பாடலை சுவைப்போம்.

நிராமய — J.R. கருத்துரை

By Smt Janaki Ramanan, Pune. You may read in English the meaning of the song niramaya by clicking the underlined hyperlink. விராலிமலை வேந்தே சரணம். "விராலிமலைக்கு வா, வா" என அருணகிரிநாதரை அழைத்து, திருப்புகழ் என்னும் அமுத ப்ரவாகம் கங்கையாய்ப் பொங்கி வருவதற்கு வழி செய்து விட்டான் வடிவேலன். "நிராமய " என்று தொடங்கும் பாடல் ஒன்றிலேயே திருப்புகழின் சாரம் முழுவதும் அடங்கி விடும் அற்புதம். தனாதன தனாதன தனாதன தனாதன தனாதன தனாதன தனதான என்று துள்ளி வரும் சந்தம் . "ரா" என்ற எதுகை பாடல் முழுவதும் பரவி நிற்கும் இன்பம். பொருள் பொதிந்த ஒவ்வொரு சொல்லாகப் பார்ப்போம்.

குடிவாழ்க்கை — J.R.விளக்கவுரை

By Janaki Venkatraman, Pune. You may read in English the meaning of the song kudivaazhkkai by clicking the underlined hyperlink. வெள்ளிமலையும் வள்ளிமலையும் காத்து நிற்கும் புள்ளி மயில் வாகனா சரணம். காக்கும் கடவுள் கந்தன் தான் என்பதைக் 'குடி வாழக்கை" என்ற பாடலில் தீர்மானமாய்ச் சொல்லி நம் கலக்கங்கள் தீர்க்கிறார் அருணகிரிநாத ஸ்வாமிகள். வட நாட்டில் வெள்ளி மலை காத்துப் புள்ளி மயில் மேல் திகழ்ந்த குமரேசா வடிவாட்டி வள்ளி அடி போற்றி வள்ளி மலை காத்த நல்ல மணவாளா

கறுத்த தலை - J.R. விளக்கவுரை

By Smt. Janaki Ramanan, Pune You may read the explanation for the song karuththa thalai by clicking the underlined hyperlink. வேங்கட மலையில் உறை வேலவா சரணம். திருப்புகழ் பாடல்களுக்கு ஆங்காங்கே புராணங்களைக் கொண்டு வநது சேர்த்துத் பொருட் செறிவும் மெருகும் ஊட்டுகிறார் அருணகிரிநாதர். "கறுத்த தலை" என்ற திருவேங்கடம் பாடலில் கந்தபுராணத்தின் அடிச்சுவட்டில் நடக்கிறார். மத நல்லிணக்கம் என்ற நோக்கமும் இதில் நிறைவேறுகிறது. மலர்க்கமல வடிவுள செங்கை அயிற் குமர குகை வழி வந்த மலைச் சிகர வடமலை நின்ற பெருமாளே அதாவது, சிவந்த தாமரைக் கரத்தில் வேல் தாங்கி ஒரு குகை வழியே வேங்கட மலை வந்து சேர்ந்த பெருமானே என்கிறார். சுவாமிகள் திருப்பதிக்குச் சென்ற காலத்தில் வடவேங்கடத்தில் முருகர் ஆலயத்துடன் திருமால் ஆலயமும் இருந்தது. ஒரு காலத்தில் முருகபிரான் உமையம்மையாருடன் பிணங்கி பாதாள வழியே வந்து ஒரு குகை வழியாகத் திருவேங்கடத்துக்கு வந்த சரிதத்தைத் இந்த அடிகளில் குறித்துள்ளார்.

அந்தோ மனமே — J.R. கருத்துரை

By Smt Janaki Ramanan, Pune For a comple translation/explanation of the song ' anthO manamE ' in English, please click the underlined hyperlink. சீரான சிராப்பள்ளியில் கோயில் கொண்டிருக்கும் குமரா சரணம். "அந்தோ மனமே" என்று தொடங்கும் திருச்சிராப்பள்ளிப் பாடலில் "சிராப்பள்ளி் என்பார் மனமேதினி நோக்கிய பெருமாளே," என்கிறார் அருணகிரியார். அதாவது, திருச்சிராப்பள்ளி, திருச்சிராப்பள்ளி, என்று திரும்பத் திரும்பச் சொல்வோரின் உள்ளத்தையே தன் கோயிலாகக் கொண்டு விடுகிறானாம் முருகன்! எத்துணை தலப் பெருமை! "திருச்சிராப்பள்ளி என்னலும் தீவினை நரிச்சிராது நடக்கும் நடக்குமே" என்கிறார் அப்பர் பெருமானும். அதாவது, சிராப்பள்ளி என்று சொன்னதும் தீவினை ஓடி விடுமாம். அத்தகைய சீரும் பேரும் பெற்ற திருத்தலப் பாடலில், அலை பாயும் மனதை நிலைப்படுத்த வழிகள் சொல்கிறார் அருணகிரிநாதர்.

நினது திருவடி — J.R. கருத்துரை

By Smt. Janaki Ramanan For a complete translation/explanation of the song ninathu thiruvadi , please click the underlined hyperlink. அருணகிரிநாதர் திருவண்ணாமலை கோபுரத்தின் மீது ஏறி தனது உயிரை மாய்த்துக் கொள்ள கீழே விழுந்த பொழுது காப்பாற்றி, 'முத்தைத்தரு' என்று அடி எடுத்துக் கொடுத்த முருகப்பெருமான், அவரை 'வயலூருக்கு வா!' என்று பணித்தார். மகிழ்ச்சி அடைந்த அருணகிரியார் இத்தலத்திற்கு வருகை புரிந்தார். அங்கு முருகன் காட்சி தராததால் அசரீரி பொய்யோ? என்று உரக்கக் கூறினார். அவர் முன் முருகபெருமானின் அண்ணன் விநாயகர், பொய்யா கணபதி தோன்றி, சுப்ரமணியசுவாமியை திருக்கல்யாணக் கோலத்தில் காட்சி தரும்படி அருளினார். அருணகிரிநாதருக்காக முருகன் தன் வேல் கொண்டு குத்தி ஒரு தீர்த்தக் குளம் ஏற்படுத்தினார். அதில் தீர்த்தமாடிய அருணகிரி நாதருடைய நாவில் முருகன் வேல் கொண்டு ஓம் என்ற பிரணவ மந்திரம் எழுதிய பின்னர் அவர் கவிபாடும் ஆற்றலும் அறிவும் பெற்றார். இன்ப மயமான இளங்குமரனைப் பாடும் சந்தமயமான "நினது திருவடி" என்னும் திருப்புகழின் ஊற்றுக் கண் திறக்கிறது.

சிரமங்க அங்கை — JR கருத்துரை

By Smt. Janaki Ramanan, Pune For a detailed exposition of the thiruppugazh song, click: siramanga mangai வள்ளிமலையின் வாழ்வே சரணம். முருகனின் தண் கழல் பட்டுப் Uட்டுக் குளிர்ந்த , சிறந்த, அழகினை அள்ளிச் சொரிகின்ற வள்ளிமலை. அதைத் தன் தமிழால், பக்தியால் நனைக்கின்றார் அருணகிரி நாதர். "சிரம் அங்கம் அங்கை" என்று தொடங்கும் பாடல்.

ககனமும் அனிலமும் — J.R. கருத்துரை

By Smt Janaki Ramanan, Pune. You may read the detailed explanation of the song gaganamum anilamum in English by clicking the underled hypelink. வள்ளிக்கு வாய்த்த பெருமாளே சரணம். " ககனமும் அனிலமும் " என்று தொடங்கும் பாடலில் வளமான வள்ளிமலையை சுகமான தமிழால் வர்ணித்து விழி முன்னே காட்டுகிறார் அருணகிரி நாதர். வகுளமும் முகுளித வழைகளும் மலிபுன வள்ளிக் குலாத்தி கிரி அதாவது, பூத்துக் குலுங்கி மகிழ்ச்சி தரும் மகிழ மரங்களும், அரும்பு கட்டிச் சரம் சரமாய்த் தொங்கும் சுர புன்னை மரங்களும், பயிர் முற்றிச் செழித்த தினைப் புனங்களும், அடர்ந்து படர்ந்த வள்ளிக் கொடிகளும் நிறைந்த வள்ளி மலை என்ற அழகான வர்ணனை. வள்ளி மணவாளனை வரவேற்க இயற்கை எடுத்த எழிற் கோலமோ அது? வனசரர் மரபினில் வருமொரு மரகத வள்ளிக்கு வாய்த்த பெருமாளே

தேனுந்து முக்கனி — J.R. எண்ண அலைகள்

By Smt Janaki Ramanan, Pune. For a full paraphrase and explanation of the song thenunthu mukkanigal , click the underlined hyperlink. குன்று தோறும் ஆடும் குமரா சரணம். முதலில் ஜோதி மயமாய் சோணாசலத்திலும், பின் அருள் மயமாய் வயலூரிம், அதன் பின் அன்பு மயமாய் விராலிமலையிலும் அருணகிரிநாதரை ஆட்கொண்டான் அந்த சுந்தரக் கந்தன். அவருள்ளே ஞானத்தின் பொறி கனிந்து கொண்டே வந்தது. யோக நிலைகள் புரிபட்டன. யோக சாதனைகள் கை கூடின. தமிழ்த் தாயும் அமுதென அருள் பொழிந்தாள். அவரை ஸ்தலம் ஸ்தலமாய் அழைத்து தேனுந்து முக்கனிகளின் சாற்றினை விஞ்சும் சிவஞானப் பேற்றினை ஊட்டினாள். தூய பக்தி நிலைக்கு மாற்றினாள். வனத்து மங்கையும், வானத்து மங்கையும் தன்னுடன் இணைந்திருக்க, சக்தி நிலைகள் காட்டினாள். பரதத்துவம் புரிந்து விட்டதாலே, அகத்திலும் புறத்திலும் சரவணபவனே நிறைந்து விட்டதாலே மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுக்தி, ஆக்ஞை என்ற அகத்தின் ஆறு ஆதார ஸ்தானங்களையே புறத்தில் அறுபடை வீடுகளாய்க் கண்டு அருணகிரியார் பாடிய திருப்புகழ் என்னும் தேனமுதம் கிடைத்தது. வேதாந்த சாரத்தைப் பிழிந்து, அதில் சந்தமெனும் அ

எழுகு நிறை நாபி — J.R. விளக்கவுரை

By Smt. Janaki Ramanan, Pune You may read the explanation in English for the song ezhugu nirai naabhi by clicking the underlined hyperlink வேதாசலமாம் திருக்கழுக் குன்றத்தின் திருமுருகா சரணம். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு விளையும் சங்கு தீர்த்தம் உள்ள சிறந்த தலம் திருக்கழுக்குன்றம். வேதபுரீஸ்வரரும், பெண்ணின் நல்லாள் அம்மையும் கோயில் கொண்டிருக்க, வேதங்களும், கழுகுகளும் வழிபாடு செய்யும் தெய்வீகத் தலம். பட்சி தரிசனத்திற்காக இன்றும் மக்கள் கூடும் புனிதத் தலம். "எழுகு நிறை நாபி" என்ற திருக்கழுக்குன்றப் பாடலில், வேண்டுகோள் எதுவுமே வைக்காமல், குறையில்லா நிறைகுடமாய் நின்று முருகனின் துதி பாடுகிறார் அருணகிரிநாத ஸ்வாமிகள். அவன் அருமை பெருமைகள் மட்டுமே சொல்லப்படும் அழகிய பாடல். இது பக்தியின் உச்சம். பரமானந்த வெள்ளம்.

வேத வெற்பிலே — விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune. You may read the meaning of the song vEtha verpile in English by clicking the underlined hyperlink. வேத வெற்பின் வேலவா சரணம். "வேத வெற்பிலே " என்று தொடங்கும் திருக்கழுக்குன்றம் பாடல் தெய்வீக மணம் நிரம்பி உள்ளதாக இருக்கிறது. வேத வெற்பிலே புனத்தில் மேவி நிற்கும் அபிராம "வேதாசலமாக உயர்ந்து நிற்கும் திருக்கழுக்குன்றத்தையும், தினைப் புனத்தையும் விரும்பி வந்து, நிலைத்து நின்ற பேரழகா" என முருகனைத் துதிக்கிறார் அருணகிரிநாதர். ஏன் வேத வெற்பை விரும்பி வந்தான் வேலவன்? பெயரிலேயே தன் சிறப்பைச் சொல்லி நிற்கும் குன்றம் அது. வேதங்களே மலையாக உயர்ந்து நிற்பதால் அது வேத வெற்பு. அதன் சிகரத்தில் தேவர்கள் கூடி வேத கோஷங்கள் எழுப்பிக் கொண்டிருப்பதால் அது வேத வெற்பு. வேத புரீஸ்வரரின் அருள் நிறைந்து இருப்பதால் வேத வெற்பு. "கணக்கிலாத் திருக்கோலம் நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே " என்று உருகுகிறார் மாணிக்கவாசகர். தவசிகள் இருவர் இன்றும் கழுகுகள் ௹பத்தில் தரிசனம் தரும் வேத வெற்பு. அதனால் அங்கே விருப்பத்துடன் வந்து நிற்கிறானாம் வேலவன்.

ஐயும் உறு நோயும் — ஒரு விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune. Please click the following underlined link for a word-by-word explanation of the song aiyumuru noyum in English. வள்ளி மணவாளா சரணம். அருணகிரியாருக்கு ஆயிரமாயிரம் ஆன்மீக அர்த்தங்கள் உணர்த்திய மலை வள்ளிமலை. வள்ளி தத்துவம் என்ற பரமாத்ம-ஜீவாத்ம ஐக்கியத்தைத் தெளிவாக்கிய மலையும் வள்ளிமலையே. நோய், மோகம், மற்றும் தாபம் என்னும் இருட் கடலில் மூச்சுத் திணறும் பொழுது, ஐயன் முருகன் வாழும் வள்ளிமலைக் காற்றே உயிர் மூச்சாகி உய்விக்கும் என உணர்ந்து உணர்த்துகிறார் அருணகிரிநாதர். இதோ அந்த வள்ளிமலை பாடல்.

கீத விநோத -- J.R. விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune. For a paraphrasing of this song in English, click geetha vinOtha முன்னுரை மனிதனின் ஐம்பொறிகளுக்கும் மூவாசைகளுக்கும் நடக்கும் கயிற்று இழுப்புப் போட்டியில் பொறிகள் கலங்கித் துவண்டு தோல்வியுறுவது வாடிக்கையாகி விடுகிறது. அதிலும் பெண்ணாசை, அதர்மச் செயல்கள் அத்தனையையும் செய்யத் தூண்டி, பேரழிவில் கொண்டு சேர்க்கிறது. மீட்சிப் பாதையில் நடக்க ஆரம்பித்த பின்னரும், பெண்ணாசை இன்னும் மிச்சம் இருக்குமோ என்று அச்சம் கொண்டு, அறுமுகவனை அழைக்கிறார் அருணகிரிநாதர். சரவணனிடம் சரணாகதி செய்து விட்டாலோ அந்தப் பெண்ணாசையே மண்ணோடு மண்ணாகும் விந்தை நடந்து விடுகிறது என்று விளக்கேற்றும் பாடல்.

195. இலாபமில் By Janaki Ramanan

The song ilabbamil is explained in English here : 195.Ilabamil The explanation in Tamil has been posted by Smt Janaki Ramanan, Pune . விராலிமலையில் தான் அருணகிரிநாதருக்கு எத்தனை, எத்தனை இனிய ஆன்மீக அனுபவங்கள்! சிவ அம்சங்கள் அத்தனையும் உள்ளடக்கி, சிவ ஸ்வரூபனாகவே தரிசனம் தந்து விளையாடுகிறான் வேலவன். சிவ பாலனாகவும் காட்சி தருகிறான். எந்த ரூபத்தில் வந்தாலும் ஆட்கொள்ளும் பரம்பொருள் அவன் தான் எனச் சரவணனைச் சரண் அடைகிறார் அருணகிரியார். முதல் பகுதி காட்டுவது, சிவன் அம்சமும், முருகன் அம்சமும் பிரிக்க முடியாதபடி இணைந்திருக்கும் , "சத்" எனும் சத்திய தரிசனமோ! இரண்டாம் பகுதி, மங்கல ஸ்வரூபனாக, சிவபாலனாகக் காட்சி தரும் "சித் " எனும் ஞானமோ! மூன்றாம் பகுதி முருகனை ஆனந்த மயமாகக் காணும் நிலையோ! மொத்தத்தில் அவன் சச்சிதானந்தனே தானோ, என எண்ண வைக்கும் ஆன்மீக விளக்கு. விளக்கவுரை இலாபமில் பொலாவுரை சொலா மன தபோதனர் இயாவரும் இராவு பகல் அடியேனை விளக்கம் விராலிமலைக்கு என்னை ஈர்த்து வந்த காந்தமே கந்தா ! எப்படி எப்படியோ இருந்த என்னை முற்றிலும் புதியவன் ஆக்கி விடு. பொய்மையோ, வீண் வ

கரிபுராரி காமாரி - ஒரு விளக்க உரை

Posted By Mrs. Janaki Ramanan, Pune. You can refer to the song and its meaning : karipurari 'கரிபுராரி காமாரி' என்று தொடங்கும் விராலி மலை பாடலில் – முன் பாதி தந்தையின் புகழ். பின் பாதி எந்தையாம் முருகனின் புகழ் – என்று பாடிப் பரவசம் அடைகிறாரோ அருணகிரி நாதர்! பாடலின் முன் பகுதி சிவனின் தனித்தன்மையை, தத்துவத்தை, அருமையைப் பெருமையை, வலிமையை, யோக நிலையின் சிறப்பை, ஞானத்தின் ஜொலிப்பைச் சொல்கிறது. இரண்டாம் பகுதி வேலவனின் வீரத்தை, தீரத்தை, அவதார நோக்கமாம் சூர சம்ஹாரத்தைச் சொல்லி, அவன் மறக்கருணையையும் அறக்கருணையையும் சொல்கிறது. முக்தி வாசல் திறப்பவன் முருகன் என்று உறுதி அளிக்கும் பாடல். வரிக்கு வரி, தேன் சிந்தும் சந்தத்தில் அமைந்த பாடல்.

காணாத தூர - ஜானகி ரமணனின் கருத்துரை

Posted by Smt. Janaki Ramanan. You may read kaanaatha thoora for an explanation of the song in English சோணாசலத்தின் சுடரொளியே சரணம். "காணாத தூர நீள் நாத வாரி" என்று தொடங்கும் திருவருணைத் திருத்தலப் பாடல். அண்ட சராசரத்திலும் அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் ஆன்மாவாய் அமைந்திருப்பவன் முருகன் என்பதாலே அருணகிரிநாதருக்கு அவனை வெவ்வேறு விதமாய் உருவகப்படுத்தி உருக முடிகிறது. குழந்தையாய் மடி மீது வைத்துக் கொஞ்ச முடிகிறது. அன்னை தந்தையாய் வைத்து அடிபணிய முடிகிறது. நாயகனாய் நினைத்து ஏங்க முடிகிறது. எல்லாமே அவன், ஒவ்வொன்றிலும் அவன் என்று பார்க்கும் பக்தியின் பரிமாணங்கள் இவை. இந்தப் பாடலும் முருகனை நாயகனாய்ப் பாவித்து தன்னை நாயகியாய் வைத்து பக்தன் அருணகிரியார் பாடும் பாடல். இந்த நாயக நாயகி பாவத்தின் உச்சம் தான் வள்ளி தத்துவம் என்பதும் நினைவில் கொள்ளத் தக்கது. காணாத தூர நீள் நாத வாரி காதார வாரம் விளக்கம் : தலைவன் உடன் இருக்கும் பொழுது, கண்ணுக்கெட்டிய தூரம் வரை Uரந்து விரிந்திருக்கும் இந்தக் கடலின் அலை ஓசை இன்ப நாதமாய் ஒலிக்கிறது. இன்றோ தலைவனைப் பிரிந்திருக்கும் இந்த நேரத்தில் அது நாரா

குமரி காளி - J.R. கருத்துரை

By Smt Janaki Ramanan You may read Kumari Kali for an explanation in English. சோணாசலத்தின் சுந்தரா சரணம். "குமரி காளி" என்று இதமாய் இடையில் தொடங்கும் திருவருணைப் பாடல் (ஆரம்ப வரி - அமுதமூறு சொலாகிய) முன்னுரை ஒப்புயர்வற்ற அத்தனுக்கும், அன்னைக்கும் செல்வக் குமாரன், குமரன். எத்தனையோ திருப்புகழ் பாடல்களில் அந்தப் பெற்றோரின் ஆற்றலை, கருணையை, பாடிக் களிக்கிறார் அருணகிரியார். ஷண்முகனைப் பாடும் பொழுதே ஷண்மதத்தின் தலையாய தெய்வங்களையும் பாடி மத இணைப்புக்கும், மன இணைப்புக்கும் வழி வகுக்கிறார். இந்தப் பாடலில் 35 நாமங்களால் ஜகன் மாதாவைத் துதிக்கிறார். அன்னையின் ஒவ்வொரு நாமமும் அமுத ஊற்று. ஊற்றுக் கண் திறப்போம்.

பரிய கைப் பாசம் - ஜானகி ரமணனின் கருத்துரை

By Smt Janaki Ramanan, Pune. For a paraphrasing of this song in English, click pariya kai paasam சோணாசலத்தின் ஜோதிப் பிழம்பே சரணம். "பரிய கைப் பாசம்" என்று தொடங்கும் திருவருணை திருத்தலப் பாடல். முன்னுரை ஒரு விதத்தில் வாழ்க்கையின் இறுதிப் போட்டி, ஒரு கயிறு இழுக்கும் போட்டி தானோ! ஒருபுறம் நம் பாச பந்தங்கள். மறுபுறம் காலனின் பாசக் கயிறு. ஒரு கட்டத்தில் போராட்டம் நிற்கிறது. உயிர் தன் இச்சைப்படி உடலை விட்டுப் பறக்கிறது. அதன் பிறகு இந்த உடலைச் சீண்டுவார் இல்லை. இதற்கா போராடிப் போராடி வாழ்கிறோம்? ஜனன மரண சுழற்சியில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? அர்த்தம் வேண்டுமானால் மெய் ஞானம் பெற வேண்டும் என உணர்ந்து கொள்ளும் அருணகிரியார், அந்த ஞானத் தெளிவு தந்து தன்னை ஆட்கொள்ளுமாறு அறுமுகவனிடம் வேண்டும் பாடல். பல பாடல்களில் பல்வேறு விதமாக இந்தக் கருத்தையே ஏன் திரும்ப திரும்ப வலியுறுத்துகிறார்? சலித்துக் கொள்வதையும், திசை திரும்புவதையும், திசை திருப்புவதையுமே தொழிலாகக் கொண்ட மனித மனது ,இன்றில்லா விட்டால் நாளை, இந்தப் பாடலில் இல்லாவிட்டால் இன்னொரு பாடலில் லயித்து, தான் சொல்வதை ஏற்றுக் கொள

புலையனான மாவீனன்: ஜானகி ரமணனின் கருத்துரை

By Smt. Janaki Ramanan, Pune For a paraphrase of this song in English, click pulaiyanaana maaveenan திருவருணையின் திருவருளே சரணம். "புலையனான மாவீனன்" என்று தொடங்கும் திருவருணைத் திருத்தலப் பாடல். சேற்றிலே உழன்று பின் ஞானச் செந்தாமரையாய் மலர்ந்த அருணகிரிநாதர், அத்தனை பழி பாவங்களையும் தன் மேல் இழுத்துப் போட்டுக் கொண்டு முருகனிடம் மன்னிப்புக்காக மன்றாடும் தூய பக்தனாக ஜொலிக்கும் பாடல். அந்த நீண்ட பாவப் பட்டியல் ஒரு தனி மனிதனின் பாவச் சுமையாய் இருக்க முடியாது. மனித இனத்தின் பாவங்களைச் சொல்கிறார். அவரவர் தத்தம் பாவம் உணரந்து பரமகுருவின் மன்னிப்பைப் பெற வேண்டும் என்ற ஆதங்கம் அடி நாதமாய் ஒலிக்கும் பாடல். பாவப் புயலிலிருந்து விடுபட்டு அமைதி அடைய அவர் போட்டுத் தந்திருக்கும் ஆன்மீகப் பாதை இந்த பாடல்.

கருணை சிறிதுமில் : ஜானகி ரமணனின் கருத்துரை

For an explanation of this song in English, click karunai sirithumil அருணையின் கருணை மழையே சரணம் . " கருணை சிறிதுமில்" என்று தொடங்கும் திருவருணை திருத்தலப் பாடல். முன்னுரை : அருணையில் அன்றொரு நாள், பழைய அடியவரான அருணகிரியாரை முருகன் ஆட்கொண்டது உண்மை தான். ஆனால் பேரின்பமாம் முக்தி நிலை அடைய அவர் ஏற வேண்டிய உயரங்கள், தூண்ட வேண்டிய நல் உணர்வுகள், தாண்ட வேண்டிய தடைகள், விட வேண்டிய பற்றுக்கள், பட வேண்டிய சிரமங்கள் என்னென்ன என்பதை அவருக்கு உணர்த்தி விடுகிறான். தான் உணர்ந்ததை, இந்தப் பாடல் மூலம் உலகுக்கு உணர்த்துகிறார் அருணகிரிநாதர், இது நல்லதொரு ஆன்மீக வழிகாட்டல். சாரத்தை விட்டுச் சக்கைகளைச் சேகரிக்கும் சமய வாதிகளுக்குச் சாட்டை அடி கொடுக்கிறார். சக்தியின் சிறப்புக்கள் சொல்லிச் சக்தி உமை பாலனைப் பாடிப் பரவசம் அடைகிறார். பொருள் பொதிந்த பாடல் வரிகளை பிரித்துப் பார்த்துப் புரிந்து கொள்வோம்.

அழுதும் ஆ ஆ என - J.R. விரிவுரை

Posted by Smt. Janaki Ramanan, Pune For an English version of the paraphrase of this song, click azhuthum avaavena சோணாசலத்தின் ஞானச்சுடரே சரணம். "அழுதும் ஆ ஆ எனத் தொழுதும் " எனத் தொடங்கும் திருவண்ணாமலைத் திருத்தலப் பாடல். முன்னுரை மிகச் சிறந்த வேண்டுதல்களைச் செவ்வேளிடம் வைக்கும் அருணகிரிநாதரின் பக்குவ நிலையைப் இதில் பார்க்கிறோம். விதண்டா வாதம் செய்யும் மதவாதிகளால் என்றுமே புரிந்து கொள்ள முடியாத புனிதமான பக்தி நிலை கேட்கிறார். மாசு மருவற்ற தெளிந்த ஞானம் கேட்கிறார். கர்ம வினையால் திரும்பத் திரும்ப பிறவிச் சுழலில் சுற்றிச் சுற்றி வந்து களைப்பதோ, எனக் கதறுகிறார். சரவணப் பொய்கையில் தவழ்ந்து, அறுவர் அமுதம் உண்ட ஆறுமுகமே அனைத்திற்கும் மேற்பட்ட மெய்ப்பொருள் என்ற உன்னத உணர்வில் திளைக்கிறார்.

விராலிமலை முருகன்

Image
மதுரை திருச்சி நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டத்தில் திருச்சிக்கு 20 கிமீ முன்பாக அமைந்திருக்கிறது. தற்போது சிறு நகரமாக மாறிவிட்ட விராலி மலை முன்னர் வனப்பகுதியாக இருந்திருக்க வேண்டும். இந்த முருகன் மருத்துவ முருகனாம்! முருகன் வள்ளியை மணந்ததாகக் கூறப்படும் இக்கோயில் மயில்களால் சூழப்பட்டு மிக ரம்மியமாகக் காட்சியளிக்கும். பயந்த தனி வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமும் அல்லவா? மூலவர் சண்முகநாதன். அம்மன் வள்ளி தேவசேனா இருவருமாவர். திருவண்ணாமலையைப் போல, இதுவும் ஏராளமான சித்தர்களும், யோகிகளும், ஞானிகளும் வாழ்ந்த/ வாழும் பூமி. விராலிமலையில்தான் பரகாயப்பிரவேசம் என்னும் அரும் பெரும் சித்தியை அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் வழங்கியதாகப் புராணம் கூறுகிறது.

சுந்தரரின் தோழரும், அருணகிரி நாதரும்

You can read here the story of Paravai Nachiyar in English "பரவைக்கு எத்தனை" என்று தொடங்கும் பொதுப் பாடலில், தன் அடியார்களுக்காக எதையும் செய்யத் தயங்காத மாண்பு கொண்டவர் அந்த மகாதேவன் என்பதையும், சுந்தர மூர்த்தி நாயனாரின் நண்பனாகவே தன்னை ஆக்கிக் கொண்டவர், கந்தனின் தந்தை என்பதையும் பாடிப் பரவசம் ஆகிறார் அருணகிரியார். " பரவைக் கெத்தனை விசை தூது பகரற்கு உற்றவர் மாண் " ஒரு பெரிய புராணத்தையே உள்ளடக்கிய வரிகள். உரிமையால் பக்தன் உத்தரவிட, கருணையால் அதைச் செய்து முடிக்கும் பரமன். பாசமும் நேசமும் இருவருக்கும் பாலமிடும் எழிற் கோலம். பழைய சிவ அடிமை சுந்தரர் ப்ராரப்தம் முடித்து முக்தி பெற எடுத்த பிறவி. சிவபக்தைகள் இருவர், பரவை நாச்சியாராகவும், சங்கிலி நாச்சியாராகவும் பிறந்து, சுந்தரரைக் கை பிடிக்கக் காத்திருக்க, இறைவன் திருவருளால் இகபர சுகம் பெற, திருவாரூரில் பரவையையும், திருவொற்றியூரில் சங்கிலியையும் மணம் புரிந்து கொள்கிறார் வன் தொண்டர் சுந்தரர்.

The Amazing Arunachala Mountain At Thiruvannamalai

Image
Annamalaiyar Temple is located at the base of Annamalai hills in the town of Thiruvannamalai. The 2668-feet Annamalai mountain is considered an enormous Shiva Lingam. The mere thought of Annamalai mountain bestows salvation to the meditator. That is why many sages worship and circumambulate the mount reverentially. This mountain, with tremendous magnetic power, has existed ever since the earth came into existence. While the Indian subcontinent’s most famous mountain range formation, the Himalayas, is less than 50 million years old, scientific and geological research led by Professor Kent C. Condie, of New Mexico Institute of Mining and Technology, found that the Archaean rock formation of Arunachala belong to the Proterozoic age and is more than 2.5 Billion years old. In the Krita Yuga this was a fire mountain; in the Treta Yuga, a ruby mountain; in the dwapara yuga, a golden mountain; and in the kali yuga, a stone/granite mountain.

Devi's Penance In Kancheepuram

Image
The sthalapurana of Ekambareswarar Temple at Kancheepuram says that when Lord Siva was deeply immersed in the task of creating, protecting and destroying the Universe, His consort Parvati playfully closed his eyes. The momentary closure caused eons of darkness for the Gods. To prevent similar incidents from recurring, Parvati Devi expressed to Shiva that she should unite with Him in a single form and Shiva agreed. Shiva used the occasion as a divine ploy to set an example of righteousness in atoning for causing harm to others, even if done unknowingly. He asked Parvati to do penance at Himalayas, Benaras, Kanchipuram and finally at Thiruvannamalai where He would yield His left side and unite with Her.

The Legends of Kalahasthi

Image
Kalahasteeswara temple stands on the banks of River Swarnamukhi at Kalahasthi, also called Dakshina Kailasam and Dakshina Kashi. Krishnadeva Raya, emperor of the Vijayanagara Empire, built this 135-foot high temple in 1516 AD and its seven-storeyed-gopuram, following the successful Kalinga war in which he vanquished the Gajapati kings of Orissa. Of the five pancha bhoota sthalas representing the five elements, this temple represents the element Wind. This temple is known for Sarpadosha Nivaarana Pooja performed for propitiating the serpents Rahu and Ketu . According to ancient Tamil sources, SriKalahasti has been known as the ‘Kailas of the South’ and the small river Swarnamukhi on whose banks it sits, the ‘Ganges of the South'. The temple has a statue of the hunter Thinnan who offered his own kann (eyes) to this Shivalinga and became renowned as Bhakta Kannappa. In days of yore, a spider (sri), serpent (kala) and elephant (hasti) elephant worshipped Shiva with great devotion,

Shiva as a Bangle Seller

Once Lord Shiva wanted to expunge the ignorance of sages of Tharugavanam (deodar/pine forest) and lead them to true knowledge, and also to show the limits of chastity of their wives. With sacred ashes smeared over His body, He disguised Himself as a mendicant (Bhikshatana), he reached the forest. The wives of the sages came out of their homes to give alms. They were overwhelmed by the charm of the mendicant. With melting desire in their hearts, their bangles loosened and fell down into the mendicant's bowl, and their dress slipped down as they gazed at him in awe and longing. As the mendicant moved away taking away their bangles, the women realized the impropriety of their actions and begged Him in vain to return their bangles.

The Ascetics Who Witnessed The Ananda Thandava At Thillai

Lord Adishesha once heard about Shiva's Ananda Thandava from a rapturous Vishnu who recalled the ecstasy He felt while witnessing the dance at Darukavanam. Adi Shesha begged his Lord Vishnu's permission to go and see the Cosmic dance for himself. After performing strenuous tapas, Shiva promised that he would be able to witness His dance at Chidambaram and blessed him with the boon of being born a son to the sage Atri and his wife Anasuya. Anasuya was frightened to see the baby with a half snake form, and she dropped him from her hands out of shock. From there came his name Pata-anjali, Patanjali, Fallen from Folded Hands. At this time, Rishi Madhyandina (one of the fifteen disciples of Sage Yajnavalkya) who lived on the banks of the Ganga, directed his son to go to Thillai forest and pray to Lord Shiva. The son started praying to the Swayambhu linga under a banyan tree near a tank in the same forest. He used to collect flowers for puja and he prayed for the boon of getting t

Why Shiva Danced At Thillai

Long ago, the sages in Daruka forest had become arrogant, having acquired immense powers by performing severe penances. The rishis followed the school of purva-mimasa of the Vedas. They denied that there was any principle except Karma and believed in the assured efficacy of rituals. They rejected the existence of a Supreme Being and deluded themselves into believing that they were the architects of their own destiny. Their wives were conceited about their ostensible chastity and loyalty to their husbands. Vainly thinking that God can be controlled by rituals and 'mantras', they began creating havoc on earth. Lord Shiva, with the help of Lord Vishnu, made a plan to put an end to this misery. They went to Daruka Vana, Shiva appearing as a naked mendicant ( bhikshatana ) and Vishnu, as His enchanting wife.

The Significance and The Secret of Chidambaram

Image
Pancha Bhuta Sthalas are the five temples in South India, built for each of the five elements – Earth, Water, Fire, Air and Space. Geographically, they are all within the Deccan Plateau – four in Tamil Nadu and one in Andhra Pradesh. The temple for water is in Thiruvanaikaval fire is in Thiruvannamalai air is in Kalahasti earth is in Kanchipuram space is in Chidambaram Chidambaram is one of the most ancient, historic and culturally significant shrine in India. It is associated with Nataraja or Shiva, doing the Cosmic Dance of Bliss expressing the rhythm and harmony of life. It represents the exuberance of creation, which self-created itself from the eternal stillness. The Cosmic Dance is a symbolic representation of the five-fold activities of God - Creation, Preservation, Destruction, Veiling (Maya) and Blessing. Shiva, in the form of Bhikshatana, enacted this dance after His victory over the married ascetics of Daruka Vanam. Chidambaram is one of the five dance Halls of