474. அவகுண விரகனை


ராகம்: மோகனம்அங்கதாளம்
அவகுண விரகனை வேதாள ரூபனை
அசடனை மசடனை ஆசார ஈனனை
அகதியை மறவனை ஆதாளி வாயனைஅஞ்சுபூதம்
அடைசிய சவடனை மோடாதி மோடனை
அழிகரு வழிவரு வீணாதி வீணனை
அழுகலை யவிசலை ஆறான வூணனைஅன்பிலாத
கவடனை விகடனை நானாவி காரனை
வெகுளியை வெகுவித மூதேவி மூடிய
கலியனை அலியனை ஆதேச வாழ்வனைவெம்பிவீழுங்
களியனை யறிவுரை பேணாத மாநுட
கசனியை யசனியை மாபாத னாகிய
கதியிலி தனையடி நாயேனை யாளுவதெந்தநாளோ
மவுலியி லழகிய பாதாள லோகனு
மரகத முழுகிய காகோத ராஜனு
மநுநெறி யுடன்வளர் சோணாடர் கோனுடனும்பர்சேரும்
மகபதி புகழ்புலி யூர்வாழு நாயகர்
மடமயில் மகிழ்வுற வானாடர் கோவென
மலைமக ளுமைதரு வாழ்வேம னோகர மன்றுளாடும்
சிவசிவ ஹரஹர தேவா நமோநம
தெரிசன பரகதி யானாய் நமோநம
திசையினு மிசையினும் வாழ்வே நமோநம செஞ்சொல்சேருந்
திருதரு கலவி மணாளா நமோநம
திரிபுர மெரிசெய்த கோவே நமோநம
ஜெயஜெய ஹரஹர தேவா சுராதிபர்தம்பிரானே.

Learn The Song



Paraphrase

சிற்றம்பலக் கூத்தனும், செவ்வேட் பரமனும் ஒன்றே! தில்லை மன்றுளாடும் நடராஜன் முருகனே! மன்றுளாடும் சிவனும் முருகனே. திரிபுரம் எரி செய்த தலைவனும் அவனே. உமைதரு வாழ்வும், திரிபுரம் எரி செய்த கோவும் அவனே. "அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்!" சிவ பெருமான் இருக்கும் இடத்தில் எல்லாம் முருகப் பெருமான் இருப்பான்! சைவ சித்தாந்தப்படி, சிவன் வேறு, முருகன் வேறு அல்ல!

அவகுண விரகனை (avaguNa viraganai) : I am depraved and a scheming scoundrel; துர்க்குணம் படைத்த தந்திரசாலியான என்னை, விரகு (viragu ) : தந்திரம், சூழ்ச்சி; விரகன் (viragan) : cunning, scheming;

வேதாள ரூபனை (vEthALa rUpanai) : I look and behave like a devil; வேதாளமே உருவெடுத்தது போன்ற உருவத்தினனான என்னை,

அசடனை மசடனை (asadanai masadanai) : I am a stupid wicked fellow; முட்டாளும் குணம் கெட்டவனுமான என்னை, மசடன்(masadan) : குணம் கெட்டவன்;

ஆசார ஈனனை (AchAra eenanai) : I am bereft of discipline; ஆசாரக் குறைவுபட்டவனான என்னை,

அகதியை மறவனை (agadhiyai maRavanai) : I have absolutely no place to go and seek refuge: I have a hunter's killing instinct; கதியற்றவனை, மலை வேடனைப் போன்ற என்னை,

ஆதாளி வாயனை (AdhALi vAyanai) : I am a loud mouth; வீம்பு பேசும் வாயையுடைய என்னை, ஆதாளி (AdhALi) : ostentation, noise, agitation; பேரொலி; ஆதாளி வாயன் (AdhALi vAyan) : a boaster, braggart;

அஞ்சுபூதம் அடைசிய சவடனை (anjubUtham adaisiya savadanai) : I have a useless body composed of the wasteful and sludgy combination of the five elements; ஐம்பூதங்களின் சேர்க்கையான பயனற்ற உடலை உடைய என்னை, அடைசிய (adaisiya) : discarded, ஒதுக்கிய; சவடு (savadu) : sludge, sediment, வண்டல்;

மோடாதி மோடனை (mOdAthi mOdanai) : I am the most stupid of all stupid persons; மூடர்களுக்குள் தலைமையான மூடனாகிய என்னை,

அழிகரு வழிவரு வீணாதி வீணனை (azhikaru vazhi varu veeNAdhi veeNanai ) : I have my origin from a doomed egg and am an idler of idlers; அழிந்து போகும் கருவில் வந்த வீணருள் தலையான வீணனை,

அழுகலை அவிசலை (azhukalai avisalai) : I am a rotten stale foodstuff; அழுகிப் போன அவிந்து போன பண்டமாகிய என்னை,

ஆறான ஊணனை (ARAna UNanai) : I devour all kinds of food, a real glutton; அறுசுவை உணவை விரும்பி உண்ணும் என்னை,

அன்பிலாத கவடனை (anbilAdha kavadanai) : I am a cunning fellow devoid of love; அன்பில்லாமல் கபடமே குடிகொண்ட நெஞ்சினனான என்னை,

விகடனை நானா விகாரனை (vigadanai nAnA vigAranai) : I am a clown with a crooked mentality; கிறுக்கனான கோமாளியை, பலவித மனவிகாரங்களுள்ள என்னை, விகடன் = செருக்குள்ளவன்; கோமாளித்தனம் கொண்டவன்;

வெகுளியை வெகுவித மூதேவி மூடிய கலியனை (veguLiyai veguvidha mUdhEvi mUdiya kaliyanai) : I have a foul temper; I am a w;retched harbinger of disasters; கோபியை, மிகுந்த மூதேவித்தனம் உடைய சனியனை,

அலியனை ஆதேச வாழ்வனை (aliyanai AdhEsa vAzhvanai) : I lack the manliness and lead a fickle life; ஆண்மையற்றவனாகிய என்னை, நிலையற்ற வாழ்வு வாழும் என்னை,

வெம்பி வீழும் களியனை (vembi veezhum kaLiyanai) : I collapse after indulging in a heavy bout of drinking; வீணாகி விழும் பெருங்குடியனாகிய என்னை, களியன் (kaLiyan) : குடியன்;

அறிவுரை பேணாத மாநுட கசனியை (aRivurai pENAdha mAnuda kasaniyai) : I am a human scum never heeding good advice;நல்ல நெறி உரைகளை விரும்பாத மனிதப்பதர் போன்ற என்னை,

அசனியை மாபாதனாகிய கதியிலி தனை (asaniyai mA pAthanAgiya gathiyili thanai) : I roar thundrously and I am the worst sinner with no hope for salvation. இடிபோன்ற குரலனை, மகா பாதகனை, கதியேதும் அற்ற என்னை, அசனி = இடி;

அடி நாயேனை ஆளுவது எந்த நாளோ (adinAyEnai ALuvadhu endha nALO) : Despite all my shortcomings, will I be protected by You one of these days? இத்தகைய நாயினும் கீழான என்னை நீ ஆண்டருளும் நாள் உண்டோ?

மவுலியில் அழகிய பாதாள லோகனு ( mavuliyil azhagiya pAthALa lOkanu) : AdhisEshan, the Cobra King of PAthaLa, with his lovely crowns, மணிமுடிகள் அழகாக உள்ள பாதாளலோகனாகிய ஆதிசேஷனும், ஒப்பு: முது சேடன் இருள் அறு பாதாள லோகமும் இமையமும் நீறாக (குழவியுமாய்)

மரகத முழுகிய காகோத ராஜனு (maragatha muzhugiya kAkOdha rAjanu) : Pathanjali of emerald green body, is considered an incarnation of Adisesha, the King of Snakes. Adisesha is the Cosmic Energy of the creation. Adisesha, the son of Sage kashyapa and Kadru, keeps earth intact on his head and serves as a bed for MahaVishnu; he has also incarnated as Rama's brother Lakshmana and Krishna's brother Balrama. He is the symbolic manifestation of Time. When Adishesa uncoils, time moves forward and creation takes place; when he coils back, the universe ceases to exist. பச்சை நிறம் உடைய பாம்புகளுக்கு அரசனாகிய ஆதிசேடன் அவதாரமாகிய பதஞ்சலி முனிவரும், காகோதம்/காகோதரம் (kAkOtham) : that which moves on its belly in a zigzag way, snake;

மநு நெறியுடன் வளர் சோழ நாடர் கோனுடன் (manu neRiudan vaLar sOzha NAdar kOnudan) : AnabhAyan, the ChOzha Emperor, renowned for his just rule,
Sekkizhar, in his work on Thiruththondar puranam, has made mention of three Chozha kings, namely, Abayan, Anabaayan and the Third Kuloththunga Chozhan.
Scholars opine that the king could be Hirnayavarman. மநு நீதியுடன் ஆளும் சோழநாட்டரசர் தலைவன் அநபாயனுடன்/இரண்டாவது குலோத்துங்க சோழன் (1133-1150 AD) சில அறிஞர்கள் சோழநாட்டரசர் இரணியவர்மனை குறிப்பிடுவதாக கருதுகிறார்கள். அவரை பற்றின விபரங்கள் இதோ

உம்பர் சேரும் மகபதி (umbar sErum magapathi pugazh) : along with the DEvAs and IndrA praise the famous place தேவர்கள் புடைசூழ வரும் இந்திரனும்,

புகழ் புலியூர் வாழு நாயகர் (pugazh puliyUr vAzhu nAyakar) : PuliyUr (Chidhambaram) whose presiding deity is NatarAjar; He புகழ்கின்ற புலியூர் சிதம்பரத்தில் வாழ்கின்ற சபாநாயகர் நடராஜரும்

மட மயில் மகிழ்வுற (mada mayil magizhvuRa) : along with His consort, PArvathi, who stands by His side like a young peahen, are elated அவர் அருகில் இளமயில் போல நிற்கின்ற சிவகாமசுந்தரியும் மகிழ்ச்சி அடைய

வானாடர் கோவென (vAnAdar kO ena) : as DEvAs cheer You as their King! வானில் உள்ள தேவர்களுக்கெல்லாம் தலைவனாக விளங்கும்,

மலைமகள் உமை தரு வாழ்வே மனோகர (malai magaL umai tharu vAzhvE manOhara ) : You are the treasure delivered to us by Uma devi, daughter of Mount HimavAn! You are the most soothing one to our hearts! மலைமகள் பார்வதி பெற்ற செல்வமே, மனத்துக்கு இனியவனே,

மன்றுளாடும் சிவசிவ ஹரஹர தேவா நமோநம (mandruLAdum siva siva hara hara dhEvA namO nama) : You are the SivA who dances at the golden shrine at Chidhambaram, Hara Hara DEvA, I bow to You, I bow to You! பொன்னம்பலத்தில் நடனமாடும் சிவசிவ ஹரஹர தேவா, போற்றி, போற்றி,

தெரிசன பரகதி யானாய் நமோநம (dherisana paragathi AnAy namO nama) : Your vision is the Ultimate Refuge for us, I bow to You, I bow to You! கண்டு களிக்க வேண்டிய மேலான கதிப் பொருளானாய், போற்றி, போற்றி,

திசையினும் இசையினும் வாழ்வே நமோநம (dhisaiyinum isaiyinum vAzhvE namOnama ) : You dwell in all directions and in all forms of music, I bow to You, I bow to You! எல்லாத் திசைகளிலும், இசைகளிலும் வாழ்பவனே, போற்றி, போற்றி,

செஞ்சொல் சேரும் திருதரு கலவி மணாளா நமோநம (senchol sErun thiru tharu kalavi maNALA namO nama) : You are the consort of VaLLi, with sweet words, I bow to You, I bow to You! இனிய சொற்களையே பேசுகின்ற வள்ளிநாயகியின் இன்ப மணவாளனே, போற்றி, போற்றி,

திரிபுரம் எரிசெய்த கோவே நமோநம (thiripuram eri seydha kOvE namO nama) : You are the Lord who burnt down Thiripuram, I bow to You, I bow to You! திரிபுரத்தை எரித்த தலைவனே, போற்றி, போற்றி,

ஜெயஜெய ஹரஹர தேவா (jeya jeya hara hara dhEvA) : Oh Lord, Victory to You, hara hara DevA! ஜெயஜெய ஹரஹர தேவா,

சுராதிபர் தம்பிரானே.(surAdhipar thambirAnE) : You are the Leader of all DEvAs, Oh Great One! தேவர் தலைவர்களுக்குத் தம்பிரானே.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே