471. சரக்கேறி


ராகம்: கல்யாணிஅங்கதாளம் (8½)
2½ + 2 + 2 + 2
சரக்கே றித்தப் பதிவாழ் தொந்தப்
பரிக்கா யத்திற் பரிவோ டைந்துச்
சதிக்கா ரர்ப்புக் குலைமே விந்தச்செயல்மேவிச்
சலித்தே மெத்தச் சமுசா ரம்பொற்
சுகித்தே சுற்றத் தவரோ டின்பத்
தழைத்தே மெச்சத் தயவோ டிந்தக்குடிபேணிக்
குரக்கோ ணத்திற் கழுநா யுண்பக்
குழிக்கே வைத்துச் சவமாய் நந்திக்
குடிற்கே நத்திப் பழுதாய் மங்கப்படுவேனைக்
குறித்தே முத்திக் குமறா வின்பத்
தடத்தே பற்றிச் சகமா யம்பொய்க்
குலக்கால் வற்றச் சிவஞா னம்பொற்கழல்தாராய்
புரக்கா டற்றுப் பொடியாய் மங்கக்
கழைச்சா பத்தைச் சடலா னுங்கப்
புகைத்தீ பற்றப் புகலோ ரன்புற் றருள்வோனே
புடைத்தே யெட்டுத் திசையோ ரஞ்சத்
தனிக்கோ லத்துப் புகுசூர் மங்கப்
புகழ்ப்போர் சத்திக் கிரையா நந்தத்தருள்வோனே
திருக்கா னத்திற் பரிவோ டந்தக்
குறக்கோ லத்துச் செயலா ளஞ்சத்
திகழ்ச்சீ ரத்திக் கழல்வா வென்பப் புணர்வோனே
சிவப்பே றுக்குக் கடையேன் வந்துட்
புகச்சீர் வைத்துக் கொளுஞா னம்பொற்
றிருக்கா ளத்திப் பதிவாழ் கந்தப்பெருமாளே.

Learn The Song



Raga Kalyani (65th Mela)

Arohanam: S R2 G3 M2 P D2 N3 S    Avarohanam: S N3 D2 P M2 G3 R2 S


Paraphrase

சரக்கு ஏறி இத்தப் பதி வாழ் தொந்தப் பரிக் காயத்தில் (sarakku ERi iththa padhivAzh thondha parik kAyththil) : In the miserable body that associates itself with rich life in this materialistic world, பொருள் மிகுந்த இந்தப் பூமியில் உடைமைகளுடன் சம்பந்தத்தை வகிக்கின்ற துன்பம் தரும் இவ்வுடலில், பரி = வருத்தம்; காயம் = உடல்; தொந்தம் = சம்பந்தம், association, connection, from root word dvandva which means pair;

பரிவோடு ஐந்து சதி காரர் புக்கு ( parivOdu aindhu sadhikkArar pukku) : five treacherous people (namely five senses), feigning great affection, have entered, அன்பு பூண்டவர் போன்று உள்ள ஐந்து (பொறிகளாகிய) மோசக்காரர்கள் புகுந்து,

உலை மேவு இந்தச் செயல் மேவி (ulai mEvu indha seyal mEvi ) : and have resorted to this destructive path அழிவுக்குக் காரணமான இத்தகைய தொழில்களை விரும்பி மேற்கொண்டு, உலை மேவு (ulai mEvu) : உலைதல் கொண்ட;

சலித்தே மெத்தச் சமுசாரம் பொன் சுகித்தே (saliththE meththa samusAram poR sukiththE) : of making me fickle and enjoy the worldly life with family, wealth சஞ்சலப்பட்டு, மிகவும் குடும்பம், செல்வம் ஆகியவற்றைச் சுகத்துடன் அனுபவித்து; சலித்தே = சஞ்சலப்பட்டு, நிலை கொள்ளாமல் தவித்து;

சுற்றத்தவரோடு இன்ப(ம்) தழைத்தே மெச்ச (sutraththavarOdu inbath thazhaiththE mechcha) : and dally with relatives who please me by heaping their praises on me. சுற்றத்தாருடன் மகிழ்ச்சி மிகுந்து புகழும்படி

தயவோடு இந்தக் குடி பேணி (thayavOdu indha kudi pENi) : With great love, I cherish this little cottage of my body; (ultimately), அன்புடனே இந்த வாழ்விடத்தை விரும்பி, (இறுதியில்)

குரக்கோணத்தில் கழு நாய் உண்ப குழிக்கே வைத்து (kurak kONaththiR kazhu nAy uNbak kuzhikkE vaiththu) : and let this body be laid in a ditch to be preyed upon by eagles with sharp and split beaks, and dogs. குளம்பு போன்ற பிளவுபட்ட கூர்மையான மூக்கை உடைய கழுகும், நாயும் உண்ணும்படி குழியில் வைத்து, குரம் (kuram) : horse's hoof, குளம்பு ; குரக்கோணத்தில் கழு (kurak kONaththil kazhu) : குளம்புத் தன்மையுள்ள மூக்கையுடைய கழுகு; கோணம் (kONam) : மூக்கு;

சவமாய் நந்து இக் குடிற்கே நத்திப் பழுதாய் மங்கப் படுவேனை (savamAy nandhu ik kudiRkE naththi pazhudhAy manga paduvEnai) : I dote on this cottage of a body which finally decays into a corpse; குழியில் வைத்துப் பிணமாய்க் கெடுகின்ற இந்தக் குடிசையாகிய உடலையே விரும்பி, பயனற்று அழிதல் உறுகின்ற என்ன, நந்துதல் = கெடுதல்; நத்து = அன்பு;

குறித்தே முத்திக்கு ம(மா)றா இன்பத் தடத்தே பற்றி (kuRiththE muththikku maRA inbath thadaththE patri) : Will You make me Your target and direct me towards an undeviating path of bliss, குறிக் கொண்டு, முக்திக்கு மாறுதல் இல்லாத இன்ப வழியைக் கைப்பற்றி,

சக மாயம் பொய்க் குலம் கால் வற்ற (jagamAyam poyk kulam kAl vatra) : making the worldly delusions, deceptions, caste and creed disappear, உலக மாயை, பொய், குலம், குடி என்கின்ற பற்றுக் கோடுகள் வற்றிப்போக,

சிவ ஞானம் பொன் கழல் தாராய் (siva nyAnam poR kazhal thArAy) : and grant me Your hallowed feet, namely, the True Knowledge of SivA? சிவ ஞானமாகிய உனது அழகிய திருவடியைத் தந்து அருளுக.

புரக் காடு அற்றுப் பொடியாய் மங்க (pura kAdu atru podiyAy manga) : The forests of Thiripuram were shattered to pieces; திரி புரம் என்னும் காடு அழிந்து பொடியாய் மறையவும்,

கழைச் சாபத்து ஐச் சடலான் உங்க (kazhai chApaththu ai sadalAn unga) : Manmathan who held the bow of sugarcane and had a handsome body was reduced to ashes; கரும்பு வில்லை ஏந்தியவனும் அழகிய உடலை உடையவனுமான மன்மதன் அழியவும், கழை சாபம் (kazhai chApam) : sugarcane bow; (ai) : beauty; ஐச் சடலான் (ai sadalAn) beautiful bodied, Lord of beautiful body Manmatha; அழகிய தேகத்தை கொண்ட மன்மதன் மலர் அம்புகளாலும் வளைந்த கரும்பு வில்லின் நாண் வரிசையாக சேர்ந்திருக்கும் காதுக்கு சுகமான ரீங்காரத்துடன் கூடிய வண்டுகளாலும் நம் பஞ்சேந்திரியங்களை வசப்படுத்தி லோகத்தை காமத்தில் கட்டிப் போடுகிறான்.;

புகைத் தீ பற்ற அப்புகலோர் அன்புற்று அருள்வோனே (pugai thee patra appugalOr anbutru aruLvOnE) : when the powerful Lord SivA burnt them (with His third eye) creating fire and smoke; that SivA delivered You to us graciously! புகை கொண்ட தீயை (நெற்றிக் கண்ணால்) பற்றச் செய்த அந்த வெற்றியாளராகிய சிவபிரானால் அன்பு கொண்டு அருளப்பட்டவனே, புகல் (pugal) : victory; தீ பற்று அ புகலோர் (thee patra a pugalOr) : அக்கினி பற்றச் செய்த அந்த வெற்றியாளர்

புடைத்தே எட்டுத் திசையோர் அஞ்ச ( pudaiththE ettuth dhisaiyOr anja) : You terrified and thrashed everyone in all the eight directions அடித்து வீழ்த்தியே எட்டுத் திக்குகளிலும் உள்ளோர்களும் பயப்படும்படி,

தனிக் கோலத்துப் புகு சூர் மங்க (thanik kOlaththu pugu sUr manga) : and took many unique disguises and destroyed that demon SUran, தனிப்பட்ட உருவத்துடன் புகுந்த சூரன் அழியும்படி அவனை

புகழ்ப் போர் சத்திக்கு இரையா ஆநந்தத்து அருள்வோனே ( pugazh pOr saththikku irai Anadhaththu aruLvOnE) : and in the battle, happily offered him as prey to Your famous spear, Oh Lord! போரில் புகழ் கொண்ட சக்தி வேலாயுதத்துக்கு உணவாக மகிழ்ச்சியுடன் அருளியவனே,

திருக் கானத்தில் பரிவோடு (thiruk kAnaththiR parivOdu) : When You entered the millet field, full of love, அழகிய வள்ளி மலைக் காட்டில் நீ அன்பு பூண்டு செல்ல,

அந்தக் குறக் கோலத்துச் செயலாள் அஞ்ச (andhak kuRa kOlaththu seyalAL anja) : and the damsel of the KuRavAs, VaLLi, pretty as Lakshmi, was scared (at the sight of the elephant), அந்தக் குறக்கோலம் பூண்டிருந்த இலக்குமி போன்ற வள்ளி (யானையைக் கண்டு) பயப்பட்டதும்

திகழ்ச்சீர் அத்திக்கு அழல் வா என்பப் புணர்வோனே (thigazh seer aththikku azhal vA enbap puNarvOnE) : You reassured her saying "Do not be scared by this famous elephant; do not cry, and come to me" and embraced her. விளங்கும் சீர் பெற்ற (இந்த) யானைக்கு பயந்து அழ வேண்டாம், வா என்று சொல்லி, அவளை அணைந்தவனே;
அழேல் என்ற சொல் அழல் என வந்தது.

சிவப் பேறுக்குக் கடையேன் வந்து உள் புக (sivap pERukku kadaiyEn vandhu uL puga) : In order that I, the basest person, be eligible to enter the domain of SivA சிவகதி அடையும் பேற்றுக்கு, கடையவனாகிய நான் வந்து உட்சேருவதற்கு

சீர் வைத்துக் கொ(ள்)ளு (seer vaiththuk koLu) : kindly accept me granting the requisite greatness! வேண்டிய சிறப்பினைத் தந்து என்னை ஏற்றுக் கொள்வாயாக.

ஞானம் பொன் திருக் காளத்திப் பதி வாழ் கந்தப் பெருமாளே.(nyAnam pon thirukkaLaththi padhi vAzh kandha perumALE.) : You have Your abode at ThirukkALathi, famous for its wisdom and beauty, Oh Lord KanthA, Oh Great One! ஞானமும் பொலிவும் அழகும் நிறைந்த திருக் காளத்தி என்னும் தலத்தில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே.

பொருளுரை

பொருள் மிகுந்த இந்தப் பூமியில் வாழ்கின்ற சம்பந்தத்தை வகிக்கின்ற இவ்வுடலில் அன்பு பூண்டவர் போன்று உள்ள ஐந்து (பொறிகளாகிய) மோசக்காரர்கள் புகுந்து, அழிவுக்குக் காரணமான இத்தகைய தொழில்களை விரும்பி மேற்கொண்டு, சஞ்சலப்பட்டு, மிகவும் குடும்பம், செல்வம் ஆகியவற்றைச் சுகத்துடன் அனுபவித்து, சுற்றத்தாருடன் மகிழ்ச்சி மிகுந்து புகழும்படி அன்புடனே இந்த வாழ்விடத்தை விரும்பி, (இறுதியில்) பிளவுபட்ட கூர்மையான மூக்கை உடைய கழுகும், நாயும் உண்ணும்படி குழியில் வைத்துப் பிணமாய்க் கெடுகின்ற இந்தக் குடிசையாகிய உடலையே விரும்பி, பயனற்று அழிதல் உறுகின்ற என்னை, குறிக் கொண்டு, முக்திக்கு மாறுதல் இல்லாத இன்ப வழியைக் கைப்பற்றி, உலக மாயை, பொய், குலம், குடி என்கின்ற பற்றுக் கோடுகள் வற்றிப்போக, சிவ ஞானமாகிய உனது அழகிய திருவடியைத் தந்து அருளுக.

திரி புரம் என்னும் காடு அழிந்து பொடியாய் மறையவும், கரும்பு வில்லை ஏந்தியவனும் அழகிய உடலை உடையவனுமான மன்மதன் அழியவும், புகை கொண்ட தீயை (நெற்றிக் கண்ணால்) பற்றச் செய்த அந்த வெற்றியாளராகிய சிவபிரானால் அன்பு கொண்டு அருளப்பட்டவனே, அடித்து வீழ்த்தியே எட்டுத் திக்குகளிலும் உள்ளோர்களும் பயப்படும்படி, தனிப்பட்ட உருவத்துடன் புகுந்த சூரன் அழியும்படி அவனை போரில் புகழ் கொண்ட சக்தி வேலாயுதத்துக்கு உணவாக மகிழ்ச்சியுடன் அருளியவனே, அழகிய வள்ளி மலைக் காட்டில் நீ அன்பு பூண்டு செல்ல, அந்தக் குறக்கோலம் பூண்டிருந்த இலக்குமி போன்ற வள்ளி (யானையைக் கண்டு) பயப்பட்டதும், விளங்கும் சீர் பெற்ற (இந்த) யானைக்கு பயந்து அழ வேண்டாம், வா என்று சொல்லி, அவளை அணைந்தவனே, சிவகதி அடையும் பேற்றுக்கு, கடையவனாகிய நான் வந்து உட்சேருவதற்கு வேண்டிய சிறப்பினைத் தந்து என்னை ஏற்றுக் கொள்வாயாக. ஞானமும் பொலிவும் அழகும் நிறைந்த திருக் காளத்தி என்னும் தலத்தில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே