463. செயசெய அருணாத்திரி


ராகம்: தேஷ்தாளம்: ஆதி
செயசெய அருணாத் திரிசிவ யநமச்
செயசெய அருணாத் திரிமசி வயநச்
செயசெய அருணாத் திரிநம சிவயத்திருமூலா
செயசெய அருணாத் திரியந மசிவச்
செயசெய அருணாத் திரிவய நமசிச்
செயசெய அருணாத் திரிசிவ யநமஸ்த்தெனமாறி
செயசெய அருணாத் திரிதனின் விழிவைத்
தரகர சரணாத் திரியென உருகிச்
செயசெய குருபாக் கியமென மருவிச்சுடர்தாளைச்
சிவசிவ சரணாத் திரிசெய செயெனச்
சரண்மிசை தொழுதேத் தியசுவை பெருகத்
திருவடி சிவவாக் கியகட லமுதைக்குடியேனோ
செயசெய சரணாத் திரியென முநிவர்க்
கணமிது வினைகாத் திடுமென மருவச்
செடமுடி மலைபோற் றவுணர்க ளவியச்சுடும்வேலா
திருமுடி யடிபார்த் திடுமென இருவர்க்
கடிதலை தெரியாப் படிநிண அருணச்
சிவசுடர் சிகிநாட் டவனிரு செவியிற் புகல்வோனே
செயசெய சரணாத் திரியெனு மடியெற்
கிருவினை பொடியாக் கியசுடர் வெளியிற்
றிருநட மிதுபார்த் திடுமென மகிழ்பொற்குருநாதா
திகழ்கிளி மொழிபாற் சுவையித ழமுதக்
குறமகள் முலைமேற் புதுமண மருவிச்
சிவகிரி அருணாத் திரிதல மகிழ்பொற்பெருமாளே.

Learn The Song



Raga Desh (Janyam of 28th mela Hari Kambhoji)

Arohanam: S R2 M1 P N3 S    Avarohanam: S N2 D2 P M1 G3 R2 S


Paraphrase

This hymn speaks about the power and grandeur of the mantra 'sivayanama'
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே.
என்று பஞ்சாக்ஷரத்தின் பெருமையைச் சம்பந்தர் பாடி இருக்கிறார்.

செயசெய அருணாத்திரி சிவய நம (jaya jaya aruNAdhdhiri sivayanama) :
செயசெய அருணாத்திரி மசிவயந (jaya jaya aruNAdhdhiri masivayana)
செயசெய அருணாத்திரி நமசிவய திருமூலா (jaya jaya aruNAdhdhiri namasivaya thirumUlA)
செயசெய அருணாத்திரி யநமசிவ (jaya jaya aruNAdhdhiri yanamasiva)
செயசெய அருணாத்திரி வயநமசி (jaya jaya aruNAdhdhiri vayanamasi)
செயசெய அருணாத்திரி சிவய நமஸ்த்து என மாறி (jaya jaya aruNAdhdhiri sivaya namasthu ena mARi) : "Victory to You! Victory to You! Oh "sivayanama" of Mount AruNAchalam! Oh "masivayana" of Mount AruNAchalam! Oh "namasivaya" of Mount AruNAchalam! You are the Primordial One! Oh "yanamasiva" of Mount AruNAchalam! Oh "vayanamasi" of Mount AruNAchalam! Oh "sivayanama" of Mount AruNAchalam!" - repeating the same ManthrA by rotating cyclically the letters si, va, ya, na, ma; 'aththiri in aruNAdhdhiri' means mountain; 'achalam' in aruNachalam also means mountain. So aruNAdhdhiri means Arunachala/Thiruannamalai. ஜெயஜெய அருணாசலா, சிவயநம; ஜெயஜெய அருணாசலா, மசிவயந; ஜெயஜெய அருணாசலா, நமசிவய, அழகிய மூலப் பொருளே; ஜெயஜெய அருணாசலா, யநமசிவ; ஜெயஜெய அருணாசலா, வயநமசி; ஜெயஜெய அருணாசலா, சிவயநமஸ்த்து என்று சிவபெருமானின் பஞ்சாக்ஷரத்தை மாறி மாறிச் செபித்து,

செயசெய அருணாத்திரி தனின் விழி வைத்து (jaya jaya aruNAdhdhiri thanin vizhi vaiththu) : saying "Victory to You! Victory to You!" and fixing my eyes on the Mount AruNAchalam, ஜெயஜெய என்று கூறி அருணாசலத்தில் கருத்தை வைத்து,

அர கர சரணாத்திரி என உருகி (arahara charaNAdhdhiri ena urugi) : "Oh Hara Hara! Your feet are seen in the Mount" - meditating on You with these words, ஹர ஹர திருவடி மலையே (சிவ மலையே) என்று கூறித் தியானித்து, அத்ரி = மலை; சரணாத்திரி = (முருகனின்) திருவடியாகிய மலை;

செயசெய குரு பாக்கியம் என மருவி ( jaya jaya guru bAggiyamena maruvi ) : Realising that this ManthrA of "Jaya Jaya Arunathri " has been bestowed upon us by our kind Master, ஜெய ஜெய அருணாத்திரி என்னும் இந்த மந்திரம் எங்கள் குரு தந்த பாக்கியம் என்று என் உள்ளம் பொருந்தி,

சுடர் தாளை சிவசிவ சரணாத்திரி செய செயென (sudar thALai siva siva charaNAdhdhiri jaya jayena) : I wish to praise Your effulgent holy feet, saying "Lord SivA's hallowed mount-like feet! (they are in the shape of this great Mount), Victory to You! Victory to You!" பேரொளியாக விளங்கும் திருவடியை சிவசிவ திருவடி மலையே ஜெயஜெய எனப் புகழ்ந்து,

சரண் மிசை தொழுது ஏத்திய சுவை பெருக (saraN misai thozhudhEththiya suvai peruga) : and prostrating at those feet (the Mountain) and praying with growing ecstasy, திருவடி (சிவமலை) யின் மீது வீழ்ந்து தொழுது போற்றிய இன்பம் பெருக

திருவடி சிவ வாக்கிய கடல் அமுதைக் குடியேனோ (thiruvadi siva vAkkiya kadal amudhai kudiyEnO) : shall I be able to imbibe the blissful nectar emerging from the milky ocean of the SivA ManthrA? அந்தத் திருவடியின் (ஆண்டவனது) சிவ மந்திரமாகிய பாற்கடலில் இருந்து கிடைத்த அமுதம்போன்ற இன்பரசத்தைப் பருகி மகிழேனோ?

செயசெய சரணாத்திரி என முநிவர் கணம் (jaya jaya charaNAdhdhiri ena munivark gaNam) : Multitude of sages have chanted "Victory to You! Oh Mount AruNAchalam, being the hallowed feet of the Lord! ஜெய ஜெய திருவடி மலையே என்று முனிவர்களின் கூட்டங்கள்

இது வினை காத்திடும் என மருவ (idhu vinai kAththidum ena maruva) : This holy Mountain will save us from our past deeds!" - with this prayer they have thronged around the Mountain; இத் திருமலை வினையினின்றும் நம்மைக் காத்திடும் என்று கூடிப் பொருந்திட,

செட முடி மலை போற்று அவுணர்கள் அவிய சுடும் வேலா (seda mudi malai pOtr avuNargal aviya sudum vElA) : The demons, who believed that their bodies and crowns were saved by the Mount Krouncha and the seven mountains of their lineage, were killed and burnt down by Your powerful Spear, Oh Lord! தங்கள் உடலையும் முடியையும் கிரெளஞ்சம் மற்றும் எட்டு குலகிரிகள் என்னும் திக்கு மலைகள் காப்பாற்றுவதாக நினைத்த அசுரர்கள் மடிந்து விழச்செய்து சுட்டெரித்த வேலாயுதனே,

திரு முடி அடி பார்த்திடும் என இருவர்க்கு (thirumudi adi pArththidum ena iruvarkku) : Challenging Lord Vishnu and BrahmA to find His Head and reach His Feet, திருமுடியையும் திருவடியையும் கண்டு பிடியுங்கள் எனக் கூறி திருமால், பிரமன் ஆகிய இருவருக்கும்

அடி தலை தெரியாப்படி நிண அருண சிவ சுடர் (adi thalai theriyAppadi niNa aruNa sivasudar) : Lord SivA stood as a reddish Flame, with His Feet and Head beyond the ken (knowledge) of the two; அடியும் முடியும் தெரியாதவண்ணம் நின்ற செந்நிறச் சிவ சுடராகிய; நிண அருணச் சிவசுடர் = நின்ற சிவந்த நிறமுடைய சிவஜோதியாகிய,

சிகி நாட்டவன் இரு செவியில் புகல்வோனே (siki nAttavan iru seviyil pugalvOnE) : He has the unique central eye of Fire; You filled the two ears of that SivA with the preaching (of the PraNava ManthrA)! நெருப்புக் கண்ணை உடைய சிவபெருமானுடைய இரண்டு காதுகளிலும் (பிரணவ மந்திரத்தை) உபதேசம் செய்தவனே, சிகி (siki) : fire; நாட்டம்(naattam) : aim, eye; சிகி நாட்டவன்(siki naattavan) : one who has eyes of fire - Lord Shiva;

செயசெய சரணாத் திரி எனும் அடியெற்கு (jaya jaya saraNAthdhdhiri enum adiyeRku) : When I say, "Victory to You! Victory to You! Oh the holy Feet of the Lord in the form of Mount AruNachalam", ஜெயஜெய திருவடி மலையே (சிவமலையே) எனத் துதிக்கின்ற அடியேனுக்கு,

இரு வினை பொடியாக்கிய சுடர் வெளியில் (iruvinai podiyAkkiya sudar veLiyil) : my deeds (good and bad) are shattered in the blazing light, எனது (நல்வினை, தீவினை ஆகிய) இரு வினைகளையும் பொடியாக்கிய ஒளி வெளியில்

திரு நடம் இது பார்த்திடும் என மகிழ் பொன் குரு நாதா (thiru nadam idhu pArtthidum ena magizh poR gurunAthA) : and You joyfully beckon me to see the vision of Your cosmic dance, Oh my Master! திருநடனம் இதோ பார்ப்பாயாக எனக் கூறி மகிழ்ந்திடும் அழகிய குரு நாதனே, இந்த அடி அருணகிரிநாதருக்கு முருகன் திருநடன தரிசனம் தந்து அருளிய வரலாற்றைக் குறிப்பது. சிவஞானவொளி வீசும் வெளியில் காட்டிய அந்த நடன தரிசனம் இருவினைகளைத் துகள் செய்யும் திறம் உடையது.

திகழ் கிளி மொழி பால் சுவை இதழ் அமுத (thigazh kiLi mozhi pAR suvai idhazh amudha) : Her speech is like the sweet words of the parrot; Her wet lips taste like milk and nectar; விளங்கும் கிளி மொழி போலவும், பாலின் சுவை போலவும், வாயிதழின் ஊறல் அமுதம் போலவும் அமைந்த

குற மகள் முலை மேல் புது மணம் மருவி (kuRa magaL mulai mEl pudhu maNa maruvi) : She is VaLLi, the damsel of the KuRavAs; You enjoy Her freshly aromatic bosom; குறப் பெண்ணாகிய வள்ளியின் மார்பின் மீது உள்ள புது மணத்தைச் சுகித்து,

சிவகிரி அருணாத்திரி தலம் மகிழ் பொன் பெருமாளே. ( sivagiri aruNAdhdhiri thala magizh poR perumALE.) : You are seated with relish in the Mount of SivA, ThiruvaNNAmalai, Oh Handsome and Great One! சிவ மலையாகிய அருணாசலத் தலத்தில் மகிழ்கின்ற அழகிய பெருமாளே.

சிவயநம

போகர் அருளிய சிவ மந்திரம் நமசிவய சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி சிவனுடைய ஐந்து முகங்களை குறிக்கின்றன.
சிவாயநம என்கிற பஞ்சாக்ஷரத்தில்
சி – என்பது சிவத்தையும்,
வ – என்பது சிவத்துடன் நெருப்பிற் சூடுபோல் உடனாய் நிற்கும் திருவருளையும்,
ய – என்பது உயிரையும்,
ந – - என்னும் எழுத்து மும்மலங்களையும் தத்தம் தொழில்களில் ஏவிப் அவற்றோடு உடனாய் நின்று உயிரை மறைத்தலால் திரோத சக்தி என்றும் திரோதமலம் என்றும் கூறப்படும் சிவ சக்தியையும்,
ம – என்பது உயிரைக் கட்டி நிற்கும் ஆணவம் மாயை கன்மம் என்னும் மும்மலங்களையும் குறிப்பனவாகும்.
உலக பந்தத்தில் உழன்றுகொண்டிருக்கும்போது, உயிரானது பாசம் என்ற மறைப்பையும், மலத்தையும் சார்ந்து நிற்கும். பந்தம் அகன்ற காலத்தில், மறைப்பையும், மலத்தையும் அகன்று, அருளை அடைந்து, சிவத்தைக் கூடி, பெரும்பேறான முக்தி என்ற வீடுபேற்றை அடையும்.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே