462. சிவமாதுடனே


ராகம்: ஆபோகிதாளம்: ஆதி
சிவமா துடனே அநுபோ கமதாய்
சிவஞா னமுதே பசியாறித்
திகழ்வோ டிருவோ ரொருரூ பமதாய்
திசைலோ கமெலா மநுபோகி
இவனே யெனமா லயனோ டமரோ
ரிளையோ னெனவேமறையோத
இறையோ னிடமாய் விளையா டுகவே
யியல்வே லுடன்மாஅருள்வாயே
தவலோ கமெலா முறையோ வெனவே
தழல்வேல் கொடுபோ யசுராரைத்
தலைதூள் படஏழ் கடல்தூள் படமா
தவம்வாழ் வுறவேவிடுவோனே
கவர்பூ வடிவாள் குறமா துடன்மால்
கடனா மெனவேஅணைமார்பா
கடையேன் மிடிதூள் படநோய் விடவே
கனல்மால் வரைசேர் பெருமாளே.

Learn The Song


Know Ragam Abhogi (Janyam of 22nd mela Karaharapriya)

Arohanam: S R2 G2 M1 D2 S    Avarohanam: S D2 M1 G2 R2 S

Paraphrase

சிவ மாதுடனே அநுபோகமதாய் (siva mAdhudanE anubOgamadhAy) : (I want to become) One that experienced bliss with the Goddess called Sivam சிவம் என்கின்ற தலைவியுடன் இன்ப நுகர்ச்சி கொண்டவனாக,
அனுபோகம் என்பது தற்போதங்கெட்டு, சிவோகம் பாவனையில் சிவானுபவத்தில் திளைத்து தோய்ந்து ஒன்றி இருப்பது.

சிவ ஞானமுதே பசியாறி (siva nyAnamudhE pasiyARi) : and drank the nectar of "Knowledge of SivA" to quench the hunger; சிவஞானம் என்ற அமுதத்தை உண்டு அதனால் அறிவுப் பசி தீர்ந்து,

திகழ்வோடு இருவோர் ஒரு ரூபமதாய் (thigazhvOd iruvOr oru rUpamadhAy) : resulting in the dual form of God-Goddess merging into one form; and விளங்கும் 'தலைவன் - தலைவி' என்ற ஈருருவமும் ஒரே உருவமாய்

திசை லோகமெலாம் அநுபோகி (thisai lOkam elAm anubOgi) : and people all over the world assert that someone who has experienced with relish (the union) எட்டுத் திசையிலுள்ளவர் "சுகித்து உணர்பவன்

இவனே என மால் அயனோடு அமரோர் இளையோன் எனவே (ivanE ena mAl ayanOd amarOr iLaiyOn enavE) : "It is none other than Him" and Vishnu, BrahmA and all the DEvAs proclaim, "this younger son of God (Murugan) is that person" இவன்தான்" என்று திருமால், பிரமன், தேவர்கள் அனைவரும் கூறி, இவன் இளையவன் (முருகன்) என வியந்து கூற,

மறை ஓத (maRai Odha) : the VEdAs also said that it was so. வேதமும் அவ்வாறே என்று ஆமோதித்துக் கூற,

இறையோன் இடமாய் விளையாடுகவே (iRaiyOn idamAy viLaiyAdugavE) : In order that I too can play (like You), could You ask SivA சிவபிரானிடத்தில் வேண்டி, யான் (உன்னைப் போல்) விளையாடுவதற்காக

இயல் வேலுடன் மா அருள்வாயே (iyal vEl udan mA aruLvAyE) : to grant me a beautiful spear and a peacock? அழகிய வேலும் மயிலும் தந்தருள்வாயாக.

தவ லோகம் எலாம் முறையோ எனவே (thava Lokam elAm muRaiyO enavE) : The entire world screamed that it (SUran's tyranny) was not fair; மிகவும் உலகங்கள் யாவும் இது முறையாகுமா என்று ஓலமிட,

தழல் வேல் கொடு போய் (thazhal vEl kodu pOy) : so You took the fiery spear நெருப்பை வீசும் வேலுடன் சென்று

அசுராரைத் தலைதூள் பட (asurArai thalai thUL pada) : and beheaded the demons (asuras). அசுரர்களின் தலைகள் பொடிபடும்படி,

ஏழ் கடல் தூள் பட (Ezh kadal thUL pada) : The seven seas rose in commotion and ஏழு கடல்களும் தூள்படும்படி,

மா தவம் வாழ்வுறவே விடுவோனே (mA thavam vAzhuRavE viduvOne) : the great sages were saved when You threw Your spear! சிறந்த தவத்தினர் வாழ்வுறுமாறு அந்த வேலைச் செலுத்தியவனே,

கவர் பூ வடிவாள் (kavar pU vadivAL) : With enchanting beauty like a flower மனம் கவரும் மலரின் அழகுடையவளும்,

குற மாதுடன் மால் கடனாம் எனவே (kuRa mAdhudan mAl kadanAm enavE) : is the damsel of KuRavas, VaLLi; You love her as if duty-bound குறப்பெண்ணும் ஆகிய வள்ளியிடம் ஆசை கொள்வது உன் கடமை என்று

அணை மார்பா (aNai mArbA) : and embrace her! அவளை அணைந்த மார்பனே,

கடையேன் மிடிதூள் பட (kadaiyEn midi thUL pada) : For destroying the miseries of this lowly self கடைப்பட்டவனாகிய என் துன்பம் தூள்படவும்,

நோய் விடவே (nOy vidavE) : and removing all my ailments, என் நோய் தொலையவும் (அருளி),

கனல் மால் வரை சேர் பெருமாளே.(kanal mAl varai sEr perumALE.) : You chose the fiery mountain (thiruvaNNAmalai) as Your abode, Oh Great One! அக்கினிப் பெருமலையாம் திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே