446. அருக்கார் நலத்தை


ராகம்: செஞ்சுருட்டி ஆதி கண்ட நடை (20)
அருக்கார் நலத்தைத் திரிப்பார் மனத்துக்
கடுத்தாசை பற்றித் தளராதே
அடற்கா லனுக்குக் கடைக்கால் மிதித்திட்
டறப்பே தகப்பட் டழியாதே
கருக்காரர் நட்பைப் பெருக்கா சரித்துக்
கலிச்சா கரத்திற்பிறவாதே
கருத்தா லெனக்குத் திருத்தா ளளித்துக்
கலைப்போ தகத்தைப்புகல்வாயே
ஒருக்கால் நினைத்திட் டிருக்கால் மிகுத்திட்
டுரைப்பார்கள் சித்தத்துறைவோனே
உரத்தோ ளிடத்திற் குறத்தேனை வைத்திட்
டொளித்தோடும் வெற்றிக்குமரேசா
செருக்கா தருக்கிச் சுரச்சூர் நெருக்கச்
செருச்சூர் மரிக்கப்பொரும்வேலா
திறப்பூ தலத்திற் றிரட்சோண வெற்பிற்
றிருக்கோ புரத்திற்பெருமாளே.

Learn The Song



Raga Senjurutti(Janyam of 28th mela Hari Kambhoji) By Charulata Mani

Arohanam: D2 S R2 G3 M1 P D2 N2   Avarohanam: N2 D2 P M1 G3 R2 S N2 D2 P D2 S


Paraphrase

In order that I do not ....

அருக்கார் நலத்தை திரிப்பார் மனத்துக்கு அடுத்த ஆசை பற்றித் தளராதே (arukkAr nalaththaith thirippAr manatthukku aduttha Asai patRith thaLarAthE ) : become fatigued with lust and spoil my precious health by coming under the sway of the whores; அருமை வாய்ந்த (உடல்) நலத்தைக் கெடுப்பவர்களான விலைமாதர்களுடைய மனத்துக்கு இசைந்து ஆசை கொண்டு சோர்வு அடையாமல், அருக்கு = அருமை.

அடல் காலனுக்கு கடைக் கால் மிதித்திட்டு அறப் பேதகப் பட்டு அழியாதே (adaR kAlanukku kadaik kAl mithitthitu aRap pEthakap pattu azhiyAthE) : unduly suffer with a distressed mind, having accepted the right of the powerful Yaman (God of Death) to take my life; வலிமை வாய்ந்த யமனுக்கு என் அந்திம காலத்தில் (உயிரைக் கொள்வதற்கு வேண்டிய) உரிமையை கொடுத்திட்டு, அதனால் மிகவும் மனம் வேறு பாடு அடைந்து நான் அழியாமலும்; கடைக்கால் = அடித்தளம்; அஸ்திவாரம்; மிதித்தல் = அடிவைத்தல்;

கருக்காரர் நட்பை பெருக்கு ஆசரித்து கலிச் சாகரத்தில் பிறவாதே (karukkArar natpaip perukku Asariththuk kali sAgaraththil piRavAthE ) : fall into the sea of misery by befriending those who are responsible for my repeated births, பிறவிக்கு காரணமான செய்கையோரது நட்பை மிகக் கொண்டாடிக் கைக்கொண்டு துன்பக் கடலில்அடிவைத்தல் நான் பிறவாமலும்,

கருத்தால் எனக்குத் திருத் தாள் அளித்து (karuththAl enakkuth thiru thAL aLiththuk) : Kindly have mercy on me by granting Your hallowed feet (ஆதாரம் இலேன் அருளைப் பெறவே நீதான் ஒரு சற்றும் கருத்தில் நினைந்திட்டு) நீ என் மீது அன்பு வைத்து உனது திருவடியைத் தந்து,

கலைப் போதகத்தைப் புகல்வாயே (kalai bOthakaththaip pugalvAyE) : and the wisdom of realizing the True Knowledge.இறைவனை அடைய வழி வகுக்கும் கலை ஞானத்தை எனக்கு உபதேசிப்பாயாக. போதகம் = ஞான மெய்ப்பொருள்; கலை = கல்வி; இசைக்கலை, ஆடற்கலை, ஓவியக்கலை, சிற்பக்கலை, கட்டடக்கலை, ஆகிய ஐந்து கலைகள்;

கலை = மாயை; கலை என்பது மாயையை அடைந்து, அம்மாயத்தில் உழன்று அம்மாயமே மெய்யெனக் கொண்டு அதனிலே நிலைத்திருப்பதே கலையாகும். மாயையினால் ஏற்படும் ஆணவ மலத்தை அறிவிலிருந்து அகற்றினால் உயிர்கள் விளக்கம் பெற்று இறைவனை உணரும் அருள் சக்தி கிடைக்கப் பெறுவார்கள். அத்தகைய ஞானத்தை நீ அருள்வாயாக.

ஒருக்கால் நினைத்திட்டு இருக்கால் மிகுத்திட்டு உரைப்பார்கள் சித்தத்து உறைவோனே (orukkAl ninaitthittu irukkAl migutthittu uraippArkaL sitthatthu uRaivOnE) : You dwell in the heart of those who meditate on You even only once and praise Your two holy feet! ஒரு முறை உன்னைத் தியானித்து (உனது) இரண்டு திருவடிகளையும் வெகுவாகப் புகழ்ந்து உரைப்பவர்களுடைய மனதில் உறைபவனே,

உரத் தோள் இடத்தில் குறத் தேனை வைத்திட்டு (ura thOL idaththil kuRa thEnai vaiththittu) : On Your strong shoulders You placed VaLLi, the honey-like sweet damsel of the KuRavAs, and வலிமையான தோளில் தேன்போல் இனிய குறப்பெண்ணான வள்ளியை வைத்து,

ஒளித்து ஓடும் வெற்றிக் குமரேசா (oLiththu Odum vetRik kumarEsA) : eloped with her successfully, Oh Kumara! மறைந்து ஓடின வெற்றி பொருந்திய குமரேசனே,

செருக்கால் தருக்கி சுரச் சூர் நெருக்கு (serukkA tharukki sura sUr nerukku) : He was arrogant and proud; He strangled the divine celestials; ஆணவம் கொண்டு, கர்வம் மிகுந்து, தெய்வத் தன்மை உடைய தேவர்களை ஒடுக்கிய

அச் செருச் சூர் மரிக்கப் பொரும் வேலா (ach seruch sUr marikkap porumvElA) : That SUran came to challenge You on the battlefield only to be killed by You, Oh Warrior with the Spear! போருக்கு வந்த அந்தச் சூரன் இறக்க சண்டை செய்த வேலனே,

திறப் பூதலத்தில் திரள் சோண வெற்பில் (thiRap pUthalaththil thiraL sONa veRpil) : In this stable world is this huge Mount ChoNAchalam (thiruvaNNAmalai) நிலை பெற்ற பூமியில் திரண்ட திரு அண்ணாமலையில்

திருக் கோபுரத்தில் பெருமாளே.(Thiru gOpuraththil perumALE.) : whose elegant temple tower is Your abode, Oh Great One! அழகிய கோபுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே