169. வேத வெற்பிலே


ராகம் : பீம்ப்ளாஸ் ஆதி திஸ்ர நடை (12)
வேத வெற்பி லேபு னத்தில் மேவி நிற்குமபிராம
வேடு வச்சி பாத பத்ம மீது செச்சைமுடிதோய
ஆத ரித்து வேளை புக்க ஆறி ரட்டிபுயநேய
ஆத ரத்தோ டாத ரிக்க ஆன புத்திபுகல்வாயே
காது முக்ர வீர பத்ர காளி வெட்கமகுடாமா
காச முட்ட வீசி விட்ட காலர் பத்தியிமையோரை
ஓது வித்த நாதர் கற்க வோது வித்தமுநிநாண
ஓரெ ழுத்தி லாறெ ழுத்தை யோது வித்தபெருமாளே.

Learn The Song



Learn The Song




Raga Bhimplas / Abheri (Janyam of 22nd mela Karaharapriya) -

Arohanam: S G2 M1 P N2 S    Avarohanam: S N2 D2 P M1 G2 R2 S


Paraphrase

வேத வெற்பிலே புனத்தில் மேவி நிற்கும் அபிராம (vEdha veRpilE punaththil mEvi niRkum abirAma) : You are the handsome one seated happily at ThirukazhukundRam and the millet-field; வேத வெற்பு(vetha veRpu) : veda giri also known as Thirukkazhukundram; அபிராம(abhirama) : handsome;

வேடுவச்சி பாத பத்மம் மீது செச்சை முடி தோய (vEduvacchi pAdha padhma meedhu secchai mudi thOya) : Your tresses adorned with vetchi flowers fall with love on the lotus feet of the hunter-girl, VaLLi, வள்ளியின் பாத தாமரை மீது உனது வெட்சி மாலை அணிந்த திருமுடி படும் படி வணங்கி; செச்சை (sechchai) : vetchi flowers;

ஆதரித்து வேளை புக்க ஆறு இரட்டி புய நேய (Adhariththu vELai pukka ARiratti buyanEya) : With loving support and timeliness, You went to her millet field, Oh twelve-shouldered Friend! அன்புடன் ஆட்கொள்ள தக்க சமயம் இதுவே என்று கருதி சிற்றேனல் (சிறிய தினை) காக்கும் வள்ளி இருக்கும் காட்டிற்கு புகும் பன்னிரண்டு புயங்கள் உள்ள அன்பு மிக்க நேயனே! ஆறு இரட்டி(ARu iratti) : two times six or twelve; வேளை புக்க(vELai pukka) : at the most opportune/appropriate moment;

ஆதரத்தோடு ஆதரிக்க ஆன புத்தி புகல்வாயே (Adharaththodu Adharikka Ana budhdhi pugalvAyE) : In order that I may worship You with the same deep affection, You have to preach to me the correct way.

காதும் உக்ர வீர பத்ர காளி வெட்க மகுடம் ஆகாசம் முட்ட வீசி விட்ட காலர் (kAdhum ugra veera badhra kALi vetka makudAm AkAsa mutta veesi vitta kAlar) : SivA, who performed Oordhwa ThAndavam to pick up the bejewelled crown that He threw into the sky and picked it up with his toes and made the fierce and valorous Bhadra Kali bashful with embarrassment (because she could not compete in dance with SivA), மகுடம் ஆகாச முட்ட = திருமுடி ஆகாயத்தில முட்டுமாறு வளர்ந்து நின்று,

பத்தி இமையோரை ஓதுவித்த நாதர் கற்க (baththi imaiyOrai Odhuviththa nAdhar kaRka) : and who (Shiva) taught the Devas devoted to Him, and who learned (the meaning of Pranava Mantra) from You, அன்பின் மிக்க தேவர்கள் முதலியோர்களுக்கு வேதாகமங்களைக் கற்பித்த சிவபெருமான் கற்றுக் கொள்ளுமாறும், )

ஓதுவித்த முநி நாண (Odhuviththa muni nANa) : while BrahmA, a student of ShivA, was ashamed (for not knowing the meaning of OM). சிவ பெருமானால் கற்பிக்கப்பட்டும் பிரணவத்தின் பொருளை அறியாத பிரமன் வெட்கம் அடையும்படியாக, ஓதுவித்த (Othuviththa) : one who learned (was taught);

ஓர் எழுத்தில் ஆறு எழுத்தை ஓதுவித்த பெருமாளே.(Orezhuththil ARezhuththai Odhuviththa perumALE.) : You taught SivA the significance of One Letter (OM) which, when combined with the five syllabled namasivaya, becomes the six-syllabled sadakshara or 'saravaNabava', Oh Great One! முருகனுக்கு, உரியது சடாக்ஷர மந்திரம். அது பிரணவத்தின் விரிவாக இருப்பது. ‘ஓம்” என்ற ஓரெழுத்து மந்திரமே, தன்னுள் அடங்கியிருந்த திருவைந்தெழுத்து மந்திரங்களையும் விரியச் செய்து ஆறெழுத்து மந்திரமாயிற்று என உணர்த்துகிறார். ஓரெழுத்தாகிய ஓம் என்ற பிரணவம் படைப்பிற்கு ஆதாரமாய், கேளாஒலி என்ற அநாஹத நாதமாக படைப்பிலுள்ள உயிர்களுக்குள்ளும் ஓசையின்றி ஒலித்துக்கொண்டிருக்கின்றது. பிரணவ மந்திரத்தோடு பஞ்சாட்சரமாகிய ‘நமசிவாய’ என்பது சேரும்போது அதுவே ஆறெழுத்தாகவும் சரவணபவ என்னும் ஆறெழுத்தாகவும் அதுவே இருக்கிறது என்றும் உபதேசித்து அருளிய பெருமாளே! என கொண்டாடுகிறார்.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே