170. மலைக்கு நாயக (விலைக்கு)


ராகம் : ஹம்சவினோதினிஅங்கதாளம் (9)
2 + 2 + 1½ +1½ + 2
மலைக்கு நாயக சிவக்காமி நாயகர்
திருக்கு மாரனெ முகத்தாறு தேசிக
வடிப்ப மாதொரு குறப்பாவை யாள்மகிழ்தருவேளே
வசிட்டர் காசிபர் தவத்தான யோகியர்
அகத்ய மாமுநி யிடைக்காடர் கீரனும்
வகுத்த பாவினில் பொருட்கோல மாய்வருமுருகோனே
நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர்
திருக்கொ ணாமலை தலத்தாரு கோபுர
நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில்வருவோனே
நிகழ்த்து மேழ்பவ கடற்சூறை யாகவெ
யெடுத்த வேல்கொடு பொடித்தூள தாஎறி
நினைத்த காரிய மநுக்கூல மேபுரிபெருமாளே.
கலக்க மாகவெ மலக்கூடி லேமிகு
பிணிக்கு ளாகியெ தவிக்காம லேயுனை
கவிக்கு ளாய்சொலி கடைத்தேற வேசெயுமொருவாழ்வே
கதிக்கு நாதனி யுனைத்தேடி யேபுக
ழுரைக்கு நாயெனை யருட்பார்வை யாகவெ
கழற்கு ளாகவெ சிறப்பான தாயருள்தரவேணும்

Learn The Song


Paraphrase

வசிட்டர், காசிபர், தவத்திற் சிறந்த சிவயோகியர், பெருமை மிக்க அகத்திய முனிவர், இடைக்காடர், நக்கீரதேவர் ஆகிய அறிவாளர்களான பெரியோர்கள் வகுத்துப் பாடிய பாடல்களில் உட்பொருள் வடிவமாகத் தோன்றுபவரே (முனிதலை முழுமையாக நீக்கியவர்கள் முனிவர்கள்! நினைத்த காரியங்களை அநுகூலமே புரிந்தருளுகின்றவரே! அறிவு கலக்குற்று மலபாண்டமாகிய உடலுடன் கூடி மிகுந்த நோய் வாய்ப்பட்டு தவிக்காமல் தங்களை தமிழ்க்கவி பாடி கடைத்தேறச் செய்தருளிய எம்பெருமானே! உமது திருவடியையே தேடி திருப்புகழ் பாடுகின்ற அடியேனைத் திருவருட் பார்வையாகப் பார்த்து உமது சரணாரவிந்தங்களுக்கு ஆளாகுமாறு சிறந்த தாயருளைத் தந்து ஆட்கொள்வீர்.

மலைக்கு நாயக சிவகாமி நாயகர் திரு குமாரன் என முகத்து ஆறு தேசிக (malaikku nAyaka sivakkAmi nAyakar thiru kumAran ena mukaththu ARu thEsika) : You are the Lord of all mountains! You are the handsome son of Lord SivA, the consort of DEvi SivagAmi (PArvathi)! You are the Great Master, with six hallowed faces!

வடிப்ப மாது ஒரு குற பாவையாள் மகிழ் தரு வேளே (vadippa mAthu oru kuRap pAvaiyAL makizh tharu vELE) : You are the Lord making happy the exquisitely beautiful damsel, VaLLi, of the KuRavAs!

வசிட்டர் காசிபர் தவத்தான யோகியர் அகத்ய மா முநி இடைக்காடர் கீரனும் வகுத்த பாவினில் பொருள் கோலமாய் வரு முருகோனே (vasittar kAsipar thavaththAna yOgiyar agathya mA muni idaik kAdar keeranum vakuththa pAvinil poruL kOlamAy varu murugOnE) : Oh MurugA, You pervade as the inner meaning of the poems composed by Vasishtar, KAsyapar, other Yogis who have excelled in penance, the great sage Agasthyar, IdaikkAdar and Nakkeerar! வசிட்டர், காசிபர், தவப்பேறுடைய யோகியர்கள், அகத்திமா முனிவர், இடைக் காட்டுச் சித்தர், நக்கீரன் என்பவர்கள் பாடிய பாக்களின் தத்துவப் பொருளையே திருமேனியாக கொண்டு எழுந்தருளுகின்ற முருகபெருமானே!

நிலைக்கு நான் மறை மகத்தான பூசுரர் திருக்கோணா மலை தலத்து ( nilaikku nAn maRai makaththAna pUsurar thirukkoNA malai thalaththu) : This place ThirukkONamalai (in Ceylon) has many great brahmins living here, who have mastered the imperishable four vEdAs; நிலைத்துள்ள வேதங்கள் நான்கையும் ஓதியுணர்ந்த சிறந்த அந்தணர்கள் வாழுகின்ற திருக்கோணமலையென்னும் திருத்தலத்தில் விளங்குகின்ற திருகோணமலைத் தளத்தில் பூசுரர் (boosurar) : Brahmins;

ஆரு கோபுர நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில் வருவோனே (Aru(m) kOpura nilaikkuL vAyinil kiLippAdu bUthiyil varuvOnE) : there is a prominent gateway known as KiLippAdu PUthi which is Your seat in the temple tower of ThirukkONa malai. உயர்ந்து விளங்கும் கோபுர வாசலின் நின்று பாடும் அனுபூதிப் பாடலின் பொருளாக விளங்கி வருகின்றவனே! கிளிப்பாடு பூதி (kiLippAdu boothi ) : is a place in the temple towers of ThirukkoNa malai. It may also refer to Saint Arunagirinathar's singing the anubhoothi after assuming the body of a parrot. If that be so, according to Dr. Sengalvaraya Pillai, the question arises if this song was indeed sung by the Saint. Krupananda Variar is of the opinion that he foresaw his becoming a parrot and sang this thiruppugazh.

நிகழ்த்தும் ஏழ் பவ கடல் சூறையாகவே எடுத்த வேல் கொ(ண்)டு பொடி தூளதா எறி (nigazhththum Ezh bava kadal sURaiyAgavE eduththa vEl ko(N)du podi thULathA eRi) : The spear in Your hallowed hand is capable of drying up the sea of seven existing births and destroying the enemies into pieces; புண்ணிய பாவங்களுக்கேற்ப நிகழ்கின்ற ஏழு பிறப்புக்களையும், தனது திருக்கரத்திலேந்திய ஒப்பற்ற வல்வேலினால் பொடிப் பொடியாகும்படி செய்து, ஏழ்பவகடல் : எழுவகைப் பிறவியான தாவரம், ஊர்வன, நீர்வாழ்வன, பறப்பன, விலங்கு, மனிதர், தேவர்;

நினைத்த காரியம் அநு(க்)கூலமே புரி பெருமாளே.(ninaiththa kAriyam anu(k)kUlamE puri perumALE.) : when You graciously bless, all wishes are realised beneficially, Oh Great One!

கலக்கமாகவே மல கூடிலே மிகு பிணிக்குள் ஆகியே தவிக்காமலே (kalakkamAgavE malak kUdilE migu piNikkuL AgiyE thavikkAmalE) : without confusing my mind any further, and saving me from many a debilitating disease that afflict this body which is nothing but a cage for the three slags (namely, arrogance, karma and delusion),

உனை கவிக்கு(ள்)ளாய் சொ(ல்)லி கடைத்தேறவே செயும் ஒரு வாழ்வே (unai kavikku(L)LAy so(l)li kadaiththERavE seyum oru vAzhvE) : kindly grant me a life that attains matchless and blissful salvation by praising You in my songs;

கதிக்கு நாதன் நீ உனை தேடியே புகழ் உரைக்கு நாயேனை அருள் பார்வையாகவே கழற்குள் ஆகவே சிறப்பான தாய் அருள் தரவேணும் (kathikku nAthan ni(nee) unaith thEdiyE pukazh uraikku nAyenai aruL pArvaiyAkave kazhaRkuL AkavE siRappAnathAy aruL tharavENum) : You are the Lord who dispenses the righteous destiny to me; I, the lowly dog, seek to sing Your Glory, and You should kindly bless me, with a mother's great love, so that I could attain Your hallowed feet! பரகதிக்குத் தலைவர் நீயே, உன்னைத் தேடி திருப்புகழ் பாடும் நாயேனை, திருவருட் பார்வையாகப் பார்த்து, உன்னுடைய திருவடிக்குள்ளாகுமாறு சிறந்ததாகிய தாயின் கருணையை ஒத்த திருவருளை தந்தருள்வாய்.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே