120. உய்ய ஞானத்து



ராகம்: லலிதா தாளம்: கண்டசாபு (2½)
உய்யஞா னத்துநெறி கைவிடா தெப்பொழுது
முள்ளவே தத்துறைகொடுணர்வோதி
உள்ளமோ கத்திருளை விள்ளமோ கப்பொருளை
யுள்ளமோ கத்தருளியுறவாகி
வையமே ழுக்குநிலை செய்யுநீ திப்பழைய
வல்லமீ துற்பலசயிலமேவும்
வள்ளியா நிற்புதிய வெள்ளில்தோய் முத்தமுறி
கிள்ளிவீ சுற்றுமலர்பணிவேனோ
பையரா வைப்புனையு மையர்பா கத்தலைவி
துய்யவே ணிப்பகிர திகுமாரா
பையமால் பற்றிவளர் சையமேல் வைக்குமுது
நெய்யனே சுற்றியகு றவர்கோவே
செய்யுமால் வெற்புருவ வெய்யவேல் சுற்றிவிடு
கையமால் வைத்ததிருமருகோனே
தெய்வயா னைக்கிளைய வெள்ளையா னைத்தலைவ
தெய்வயா னைக்கினிய பெருமாளே.

Learn The Song




uyya njAnaththu neRi kaividA theppozhuthum
uLLa vEthaththuRaikodu uNarvOthi
uLLa mOgaththiruLai viLLa mOgapporuLai
uLLa mOgaththaruLi uRavAgi
vaiyam Ezhukku nilai seyyu neethi pazhaiya
valla meethuRpala sayila mEvum
vaLLiyA niRputhiya veLLilthOy muththamuRi
kiLLi veesutRu malar paNivEnO
pai arAvai punai umaiyar bAgaththalaivi
thuyya vENi bagirathi kumArA
paiya mAl patRi vaLar saiyamEl vaikkumuthu
neyyanE sutRiya kuRavar kOvE
seyyu mAl veRpuruva veyyavEl sutRividu
kaiya mAl vaiththa thiru marugOnE
theyva yAnaikkiLaiya veLLai yAnaiththalaiva
theyva yAnaikkiniya perumALE.

Paraphrase

உய்ய ஞானத்து நெறி கை விடாது எப்பொழுதும் உள்ள வேத துறை கொடு உணர்வு ஓதி (uyya njAnaththu neRi kaividAthu eppozhuthum uLLa vEtha thuRaikodu uNarvu Othi ) : To be liberated and to pursue the route to True Knowledge, I want to chant the scriptures to enlighten my intellect; பிறவித் துன்பத்தினின்றும் உய்யும் பொருட்டு ஞான வழியை அடியேன் எக்காலத்திலும் கைவிடாது பற்றி, உள்ள வேத நூல்களைக் கொண்டு, உணர்வுடன் ஓதி, உய்ய ( uyya ) : to be liberated;

உள்ள மோகத்து இருளை விள்ள மோக பொருளை உள்ள மோகத்து அருளி உறவாகி (uLLa mOgaththu iruLai viLLa mOgapporuLai uLLa mOgaththaruLi uRavAgi) : To dispel the darkness of delusion from my mind, I seek Your grace for becoming interested in blissful liberation and strengthen my relationship with You; விள்ள (viLLa) : to drive away; மோக பொருளை உள்ள மோகத்து அருளி ( mOgapporuLai uLLa mOgaththaruLi) : To become involved and interested in what is worthy of desire, i.e., liberation, with your grace; இருளை விள்ள = இருளை நீக்க; மோகப்பொருள் = ஆசை வைக்க வேண்டிய பொருளாகிய மோக்ஷ இன்பம்; உள்ள மோகம் = கருதும் ஆசை;

வையம் ஏழுக்கும் நிலை செய்யும் நீதி (vaiyam Ezhukku nilai seyyu neethi ) : You protect the seven worlds steadily by Your equitable dispensation of justice!

பழைய வல்லம் மீது உற்பல சயில மேவும் வள்ளியா (pazhaiya vallam meethu uRpala sayilamEvum vaLLiyA) : Oh Consort of VaLLi, You relish being seated at the ancient mount in Thiruvallam and at Mount ThiruththaNigai, famous for its blue lilies! சயிலம் ( sayilam ) : mountain/hill; பழமையான திருவல்லத்திலும், நீலோற்பல கிரியிலும் வீற்றிருக்கும் கருணையனே!
பழமையான சிவத்தலமாகிய திருவல்லம் வில்வவனநாதேஸ்வரர் கோயில் நீவா நதிக்கரையில் இருக்கிறது. இங்கிருந்து வள்ளிமலை 8 மைல் தொலைவு.
உற்பலம் ( uRpalam) : blue lilies; வள்ளியா = கருணையனே, கொடை வள்ளலே!

நின் புதிய வெள்ளில் தோய் முத்த முறி கிள்ளி வீசி உற்று மலர் பணிவேனோ (nin puthiya veLLil thOy muththa muRi kiLLi veesi utRu malar paNivEnO) : Shall I be able to pluck the tender leaves of fresh Vilwa trees and place them in total surrender at Your lotus feet? புதிய வெள்ளில் தோய் (puthiya veLLil thOy) : புதியதான வில்வ மரத்தில் முளைத்த; வெள்ளில் ( veLLil) : vilwa tree; முறி (muRi ) : tender leaves, தளிர்; முத்த முறி (muththa muRi ) : newly sprouted leaves;

பை அராவை புனையும் ஐயர் பாக தலைவி ( paiyarA vaippunaiyu maiyar pAkaththalaivi ) : He (Lord SivA) is the Leader wearing a hooded serpent; She (PArvathi) is seated on the left side of His body; In order to quell the arrogance of the sages of the Daruka forest, Shiva appears as a handsome mendicant, and seduces the wives of the sages. The ascetics try to destroy Him by sending a deer, a tiger and a snake to kill Him but he defeats all of them. He wraps the serpent around Hisneck as a garland, and similarly keeps other animals on His body as ornaments. தாருகவனத்து முனிவர்கள் அபிசார வேள்வி செய்து சிவபெருமானைக் கொல்லும் பொருட்டுக் கொடிய அரவுகளை ஏவினார்கள். கருணை வடிவாய இறைவன் கொல்ல வந்த பாம்புகளைத் தாம் கொல்லாது அணிகலமாக அணிந்து அவைகட்கு அருள் புரிந்தார். பை ( pai) : hood; அரா( araa ) : serpent; ஐயர் (aiyar ) : elderly person; here, Lord Shiva;

துய்ய வேணி பகிரதி குமாரா (thuyyavE Nippakirathi kumArA) : River Ganga (BhAgeerathi) is held by Him in His unblemished tresses; and You are the son of all the three (Shiva, Parvati and Ganga)! துய்ய (thuyya ) : pure, undefiled;

பைய மால் பற்றி வளர் சையம் மேல் வைக்கும் முது நெய்யனே (paiyamAl patRi vaLar caiyamEl vaikkumuthu neyyanE) : Love blossomed gradually (in VaLLi's mind) in Mount VaLLimalai, and You fell in intense love with that Mount! பைய மால் பற்றி வளர் சையம் (paiya mAl patRi vaLar saiyam ) : முருகன் மீது மெதுவாக ஆசை பற்றி வளர்ந்த வள்ளி மலையில் (உலவிய வள்ளி மீது); பைய ( paiya ) : slowly or gradually; முது நெய்யனே ( muthu neyyanE ) : மிகுந்த நேயம் கொண்டவனே; சையம் ( saiyam ) : hill; here, Vallimalai;

சுற்றிய குறவர் கோவே (suRRiya kuRavar kOvE) : You became the leader of all the hunters who surrounded You!

செய்யு மால் வெற்பு உருவ வெய்ய வேல் சுற்றி விடு கைய (seyyumAl veRpu uruva veyya vEl sutRividu kaiya) : To pierce the mystical mount Krouncha, You wielded the red-hot spear with a spinning action of Your hand! மால் செய்யும் வெற்பு (maal seyyum veRpu) : delusion-causing mount; here, Krauncha hill;

மால் வைத்த திரு மருகனே (mAl vaiththa thiru marugOnE) : You are the nephew of Lakshmi held dearly by Vishnu in His heart! திரு( thiru ) : Lakshmi;

தெய்வ யானைக்கு இளைய வெள்ளை யானை தலைவ (theyvayA naikkiLaiya veLLaiyA naiththalaiva) : You are the younger brother of the Divine Elephant, VinAyagA; You are the master of the white elephant, AirAavatham (which Indra gifted to Murugan at the time of Murugan's marriage with Theivayanai; இந்திரன் தெய்வயானையை முருகப் பெருமானுக்குக் கல்யாணம் செய்வித்து வெள்ளை யானையைச் சீதனமாகத் தந்தான்.

தெய்வ யானைக்கு இனிய பெருமாளே. (theyva yAnaikku iniya perumALE.) : and You are the beloved consort of DEvayAnai, Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே