497. காரணமதாக


ராகம் : ஹம்சத்வனி அங்கதாளம் (8½)
2½ + 1½ + 1½ + 3
காரணம தாக வந்துபுவிமீதே
காலனணு காதி சைந்துகதிகாண
நாரணனும் வேதன் முன்பு தெரியாத
ஞானநட மேபு ரிந்து வருவாயே
ஆரமுத மான தந்தி மணவாளா
ஆறுமுக மாறி ரண்டுவிழியோனே
சூரர்கிளை மாள வென்ற கதிர்வேலா
சோலைமலை மேவி நின்ற பெருமாளே.

Learn The Song



Know The Raga Hamsadhwani (Janyam of 29th mela Shankarabaranam)

Arohanam: S R2 G3 P N3 S    Avarohanam: S N3 P G3 R2 S

Paraphrase

காரணமதாக வந்து புவி மீதே (kAraNam adhAga vandhu buvi meedhE) : I was born in this earth due to my karmas; ஊழ்வினையின் காரணமாக வந்து இந்த பூமியில் பிறந்து,

காலன் அணுகாது (kAlan aNugAdhu) : In order that Yaman (Death-God) does not come near me, (வினைப் போகம் முடிந்த பின் என்னைப் பற்றவருகின்ற) காலன் என்னை நெருங்காதபடிக்கு

இசைந்து கதிகாண (isaindhu gathi kANa) : I must reach salvation with Your concurrence நீ மனம் பொருந்தி நான் நற்கதியை அடைய,

நாரணனும் வேதன் முன்பு தெரியாத (nAraNanum vEdhan munbu theriyAdha) : Vishnu and BrahmA could never fathom திருமாலும் பிரம்மாவும் முன்பு கண்டறியாத

ஞான நடமே புரிந்து வருவாயே (nyAna natamE purindhu varuvAyE) : Your Cosmic Dance; You must come to me performing that dance ஞான நடனத்தை ஆடி வருவாயாக.

ஆர் அமுத மான தந்தி மணவாளா (Ar amudhamAna thandhi maNavALA) : You are the consort of Devayani, who is pure nectar personified நிறைந்த அமுது போல் இனிய தேவயானையின் மணவாளனே,

ஆறுமுகம் ஆறு இரண்டு விழியோனே (ARumugam ARiraNdu vizhiyOnE) : You have six holy faces and twelve eyes! ஆறு திருமுகங்களையும், பன்னிரண்டு கண்களையும் உடையவனே,

சூரர் கிளை மாள வென்ற கதிர்வேலா (sUrar kiLai mALa vendra kadhir vElA) : You possess the bright and mighty spear that conquered the entire dynasties of SUran. சூரர் கூட்டங்கள் இறக்கும்படியாக வெற்றி கொண்ட ஒளிமிக்க வேலனே,

சோலை மலை மேவி நின்ற பெருமாளே. (sOlai malai mEvi nindra perumALE.) : You chose PazhamuthirchOlai as Your abode, Oh Great One!பழமுதிர்ச்சோலை மலையில் மேவி விளங்கும் பெருமாளே.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே