496. கருவாகியெ


ராகம்: தேனுகாதாளம்: திஸ்ர த்ரிபுடை
கருவாகியெ தாயுத ரத்தினி
லுருவாகவெ கால்கையு றுப்பொடு
கனிவாய்விழி நாசியு டற்செவி நரைமாதர்
கையிலேவிழ வேகிய ணைத்துயி
லெனவேமிக மீதுது யிற்றிய
கருதாய்முலை யாரமு தத்தினிலினிதாகித்
தருதாரமு மாகிய சுற்றமு
நலவாழ்வுநி லாதபொ ருட்பதி
சதமாமிது தானென வுற்றுனைநினையாத
சதுராயுன தாளிணை யைத்தொழ
அறியாதநிர் மூடனை நிற்புகழ்
தனையோதிமெய்ஞ் ஞானமு றச்செய்வதொருநாளே
செருவாயெதி ராமசு ரத்திரள்
தலைமூளைக ளோடுநி ணத்தசை
திமிர்தாதுள பூதக ணத்தொடுவருபேய்கள்
திகுதாவுண வாயுதி ரத்தினை
பலவாய்நரி யோடுகு டித்திட
சிலகூகைகள் தாமுந டித்திடஅடுதீரா
அருமாமறை யோர்கள்து தித்திடு
புகர்வாரண மாதுத னைத்திகழ்
அளிசேர்குழல் மேவுகு றத்தியை அணைவோனே
அழகானபொன் மேடையு யர்த்திடு
முகில்தாவிய சோலைவி யப்புறு
அலையாமலை மேவிய பத்தர்கள்பெருமாளே.

Learn The Song





Paraphrase

கருவாகியெ தாய் உதரத்தினில் (karuvAgiye thAy udharaththinil) : As a foetus, I grew up in the womb of my mother. கருவாய் அமைந்து தாயின் வயிற்றினில்

உருவாகவெ கால் கை உறுப்பொடு (uruvAgave kAl kai urRuppodu) : I took shape with the growth of the legs, arms and other limbs like உருவம் பெற்று, கால் கை என்ற உறுப்புக்களுடன்

கனிவாய் விழி நாசி உடற் செவி (kani vAy vizhi nAsi udaR sevi) : the sweet mouth, eyes, nose and ears. இனிய வாய், கண்கள், மூக்கு, உடல், செவி என்ற அங்கங்களுடன்

நரை மாதர் கையிலே விழ ஏகி ( narai mAdhar kaiyilE vizha vEgi) : Ultimately, I landed in the hands of the midwife. மருத்துவச்சியின் கைகளிலே விழும்படியாக பிறந்து வந்து,

அணைத் துயிலெனவே மிக மீது துயிற்றிய (aNaith thuyil enavE miga meedhu thuyitriya) : I was made to sleep in the bed with utmost care by படுக்கையில் படுத்துக்கொள் என்று மிகவும் பாராட்டித் தூங்கச்செய்த,

கருது ஆய் முலை ஆரமுதத்தினில் இனிதாகி (karudhAy mulai Aramudhaththinil inidhAgi) : a very caring mother who breast-fed me with nectar-like milk, and I grew up as her darling. அக்கறையோடு கவனிக்கும் தாயின் முலையில் நிறைந்த அமுதம் போன்ற பாலைப் பருகி இனியனாக வளர்ந்து,

தரு தாரமும் ஆகிய சுற்றமு (tharu dhAramum Agiya sutramu) : My own wife, the other relatives, தனக்கென்று வாய்த்த மனைவி, உடன் அமைந்த உறவினர்கள்,

நல வாழ்வு நிலாத பொருள் பதி (nala vAzhvu nilAdha porut padhi) : my happy life, the insecure wealth and my hometown நல்ல வாழ்வு, நிலைத்து நிற்காத செல்வம், ஊர்,

சதமாமிது தான் என உற்று உனை நினையாத சதுராய் (sathamAm idhuthAn ena utru unai ninaiyAdha chathurAy) : were all considered by me as everlasting, and my smartness lay in not thinking about You. இவையெல்லாம் நிலைத்து நிற்கும் எனக் கருதி, உன்னை நினைத்துப் பார்க்காத சாமர்த்தியம் உடையவனாய்,

உன தாளிணையைத் தொழ அறியாத நிர் மூடனை (una thAL iNaiyaith thozha aRiyAdha nir mUdanai) : I was an utter fool not knowing how to worship Your hallowed feet. உன்னிரு பாதங்களைத் தொழ அறியாத முழு மூடனாகிய என்னை,

நிற் புகழ்தனை ஓதி மெய்ஞ் ஞானமுறச் செய்வதொரு நாளே ( niR pugazh thanai Odhi meynyAnam uRach seyvadh orunALE) : Will there be a day when You will make me realise the true wisdom of praising Your glory? உன் புகழை ஓதி உண்மை ஞானத்தை அடையச்செய்யும் நாள் ஒன்று உண்டாகுமோ?

செருவாய் எதிராம் அசுரத்திரள் தலை மூளைகளோடு நிணத் தசை (seruvAy edhirAm asurath thiraL thalai mULaigaLodu niNath thasai) : The heads, brains, fat and flesh of the multitude of demons who confronted You in the battlefield போர்க்களத்தில் எதிர்த்துவந்த அசுரர் கூட்டங்களின் தலை, மூளை, சதை, இறைச்சி இவைகளை

திமிர் தாதுள பூத கணத்தொடு வரு பேய்கள் திகுதா உணவாய் (thimir dhAthuLa bUtha gaNaththodu varu pEygaL thigudhA uNavAy) : were devoured in a hurry by the fiends who were accompanied by the flock of obese devils. தேகக் கொழுப்பும் சத்துத் தாதுக்களும் உள்ள பூதகணங்களுடன் வருகின்ற பேய்கள் திகுதிகுவென்று உணவாக உண்ண,

உதிரத்தினை பலவாய் நரியோடு குடித்திட (udhiraththinai palavAy nari Odu kudiththida) : They were joined by the herds of foxes in drinking the gushing blood. பெருகும் ரத்தத்தை வெகுவாக வந்த நரிகள் குடித்திட,

சில கூகைகள் தாமு நடித்திட அடு தீரா (sila kUgaigaL thAmu nadiththida adu dheerA) : Some kOttAns (owl-like birds) danced with joy. That is the way You destroyed the demons, Oh valorous One! சில கோட்டான்கள் தாமும் அங்கு நடனமாட, போர் செய்த தீரனே,

அரு மாமறையோர்கள் துதித்திடு (aru mA maRaiyOrgaL thudhiththidu) : She is worshipped by great scholars rare VEdAs (scriptures); அரிய சிறந்த வேதநெறியாளர்கள் துதித்துப் போற்றுகின்ற,

புகர் வாரண மாதுதனை (pugar vAraNa mAdhu thanai) : She is DEvayAnai, the beautiful daughter of the spotted Elephant; யானை வளர்த்த மகள், அழகிய தேவயானைத் தேவியையும்,

திகழ் அளி சேர் குழல் மேவு குறத்தியை அணைவோனே (thigazh aLi sEr kuzhal mEvu kuRaththiyai aNaivOnE) : She is VaLLi, the damsel of the KuRavAs, around whose hair beetles gather (to taste the honey in the flowers); and You hug them both! விளங்கும் வண்டுகள் (பூவிலுள்ள தேனுக்காக) மொய்க்கும் கூந்தலை உடைய குறத்தி வள்ளியையும் தழுவுகின்றவனே,

அழகான பொன் மேடை உயர்த்திடு (azhagAna pon mEdai uyarththidu) : The grand gold-laden terraces are so high that அழகிய பொன் மயமான மாடங்களின் உச்சியில் தங்கும்

முகில் தாவிய சோலை (mugil thAviya sOlai) : clouds hover on them and on the tall groves; மேகங்களைத் தொடும் உயரமான சோலைகளும்,

வியப்புறு அலையா மலை மேவிய பத்தர்கள் பெருமாளே.(viyappuRu alaiyAmalai mEviya baththargaL perumALE.) : You are the Lord of Your devotees, Oh Great One!: and the mountain is full of wonders at the unwavering mountain in PazhamuthirchOlai which is Your abode! அற்புதமான, சலனமற்ற பழமுதிர்ச்சோலை என்னும் மலையில் வீற்றிருப்பவனே, அன்பர்கள் போற்றுகின்ற பெருமாளே.

Comments

Post a Comment

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே