495. ஆசை நாலு


ராகம்: பீம்பளாஸ் அங்கதாளம் (9)
1½ + 1½ + 1 + 1½ + 1 + 1½ + 1
ஆசை நாலுசது ரக்கமல முற்றினொளி
வீசி யோடியிரு பக்கமொடு றச்செல்வளி
ஆவல் கூரமண்மு தற்சலச பொற்சபையு மிந்துவாகை
ஆர மூணுபதி யிற்கொளநி றுத்திவெளி
யாரு சோதிநுறு பத்தினுட னெட்டுஇத
ழாகி யேழுமள விட்டருண விற்பதியின்விந்துநாத
ஓசை சாலுமொரு சத்தமதி கப்படிக
மோடு கூடியொரு மித்தமுத சித்தியொடு
மோது வேதசர சத்தியடி யுற்றதிருநந்தியூடே
ஊமை யேனையொளிர் வித்துனது முத்திபெற
மூல வாசல்வெளி விட்டுனது ரத்திலொளிர்
யோக பேதவகை யெட்டுமிதி லொட்டும்வகை யின்றுதாராய்
வாசி வாணிகனெ னக்குதிரை விற்றுமகிழ்
வாத வூரனடி மைக்கொளுக்ரு பைக்கடவுள்
மாழை ரூபன்முக மத்திகைவி தத்தருணசெங்கையாளி
வாகு பாதியுறை சத்திகவு ரிக்குதலை
வாயின் மாதுதுகிர் பச்சைவடி விச்சிவையென்
மாசு சேரெழுபி றப்பையும றுத்தவுமைதந்தவாழ்வே
காசி ராமெசுரம் ரத்நகிரி சர்ப்பகிரி
ஆரூர் வேலுர் தெவுர் கச்சிமது ரைப்பறியல்
காவை மூதுரரு ணக்கிரிதி ருத்தணியல்செந்தில்நாகை
காழி வேளுர்பழ நிக்கிரி குறுக்கைதிரு
நாவ லூர்திருவெ ணெய்ப்பதியின் மிக்கதிகழ்
காதல் சோலைவளர் வெற்பிலுறை முத்தர்புகழ்தம்பிரானே.

Learn The Song



Paraphrase

இன் ஒளி வீசி ஓடி இருபக்கம் ஓடு உற செல் வளி ( in oLi veesi Odi iru pakkamodu uRa chel vaLi) : The Pranic air (oxygen) that spreads pleasant light and runs from both sides of the chakrA (through the nAdis called ida kala and pingala), வளி (vaLi) : air; இனிய ஒளியைப் பரப்பி இரண்டு பக்கங்களிலும் பொருந்தி (இடை கலை, பிங்கலை என்னும் இரு நாடிகளின் வழியாக) ஓடுகின்ற பிராண வாயு,

ஆசை நாலு சதுர கமலம் உற்று (Asai nAlu chathurak kamalam utru ) : locks into the lotus (MUlAdhAra ChakrA) square whose four sides are the four directions, திக்குகள் நான்கு பக்கங்களாகக் கொண்ட சதுரமான மூலாதாரக் கமலத்தில் பொருந்தி ஆசை (Asai) : பக்கம்; நாலு சதுரக் கமலம் (nAlu chathurak kamalam) : மூலாதாரம்;

ஆவல் கூர மண் முதல் சலசம் (Aval kUra maN mudhal jalaja) : and eagerly rises from the chakrA SwadhishtAnam (navel) right up to AgnyA (between the eyebrows) flowing through all the five kinds of lotus; மிக்க விருப்பத்துடன் சுவாதிஷ்டான (கொப்பூழ்) முதல் ஆக்கினை (புருவ நடு) வரை உள்ள ஐவகைக் கமலங்களிலும் ஓட வைத்து, மண் முதற் (maN mudhal) : மூலாதாரத்துக்கு அடுத்ததான பிருதிவியைத் (திருவாரூரை) ஆதாரத் தலமாகக்கொண்ட சுவாதிட்டான முதல்; சலசம் ( jalajam) : lotus; மண் முதற் சலசம் (maN mudhal jalajam) : பிருதிவியைத் (திருவாரூரை) ஆதாரத் தலமாகக்கொண்ட மூலாதாரத்துக்கு அடுத்த சுவாதிட்டான முதல் ஆக்கினை

பொன் சபையும் இந்து வாகை ஆர (poR sabaiyum indhu vAgai Ara) : filling the golden shrine (where NatarAjar dances) with moonlight; (தில்லையில் நடனம் செய்யும் நடராஜரின்) கனக சபையும் சந்திர காந்தியால் நிரம்பி விளங்க, இந்து (inthu) : சந்திரன்; இந்து வாகை ஆர (indhu vAgai Ara) :சந்திர காந்தி நிரம்ப;

மூணு பதியில் கொள நிறுத்தி (mUNu pathiyil koLa niRuththi) : holding the air steadily in the three zones (namely, the sun, the moon and the fire zones); மூன்று (அக்கினி, ஆதித்த, சந்திர) மண்டங்களிலும் பொருந்த நிறுத்தி,

வெளி ஆரு சோதி நூறு பத்தினுடன் எட்டு இதழாகி (veLi Aru jOthi nuRupaththin udan ettu idhazhAgi) : such that the resultant effulgence spreads in the thousand-and-eight petalled lotus (called SahsrAram), வெளிப்படும் சோதியான ஆயிரத்து எட்டு இதழோடு கூடிய ஸஹஸ்ராரம்,

ஏழும் அளவு இட்டு (Ezhum aLavu itttu) : and the six chakrAs making a total of seven centres - witnessing all the seven chakras; அதனுடன் கூடிய ஆறு ஆதாரங்களுடன் மொத்தம்) ஏழு இடங்களையும் கண்டறிந்து,

அருண விற்பதியில் விந்து நாத ஓசை சாலும் (aruNa viRpadhiyin vindhu nAdha Osai sAlum) : over those centres, in the twelfth (DwAdhasAntha) centre which is enriched with red light, where the merged Siva-Sakthi unison is resonating with great music, சிவந்த ஒளியுடன் கூடிய பன்னிரண்டாம் (துவாதசாந்த) ஆதாரத்தில், சிவசக்தி ஐக்கிய நாத ஓசை நிறைந்துள்ள

ஒரு சத்தம் அதிகப் படிகமோடு கூடி ஒருமித்து அமுத சித்தியொடும் (oru saththam adhigap padigamOdu kUdi orumith amudha sidhdhiyodum) : and reverberating powerfully, and appears like a matchless marble with the nectar from the Moon Zone gushing out and seeping through; ஒப்பற்ற சத்தம் மிகுந்த பளிங்கு போன்ற காட்சியுடன் கூடியதாய், ஒன்று சேர்ந்து மதி மண்டலத்தினின்றும் பெருகிப் பாயும் கலா அமிர்தப் பேற்றுடன்

ஓது வேத சர சத்தி அடி உற்ற திரு நந்தி ஊடே (Odhu vEdha sara saththi adi utra thiru nandhiyUdE) : in the celebrated light from the great Nandhi which is said to be the foundation of all the VEdAs, புகழ்ந்து சொல்லப்படும் வேதங்களுக்கு ஆதாரமாக உள்ள திரு நந்தி ஒளிக்குள்ளே,
சரம் என்றால் மூச்சுள்ளது. அசரம் என்றால் மூச்சில்லாதது. உரிய கால கணக்கோடு மூச்சை நெறிபடுத்தினால் உருவாவது வாசி. வாசியை பிராணாயாமமாக செய்து ஆதார தளங்களில் நிறுத்தி உரிய முறைப்படி அஷ்டாங்க யோகமாக செய்வது வாசி யோகம். நந்தி ஒளி காணும் லலாடஸ்தானத்தை அல்லது புருவ மத்தியை சுடர் மாடம் என்றும் குறிப்பதுண்டு. இங்கு 'சுழுமுனை', 'இடைகலை', 'பிங்கலை' ஆகிய மூன்று நாடிகளும் கூடுவதால் பிரகாசமான மண்டபம் தோன்றும்.

ஊமையேனை ஒளிர்வித்து உனது முத்தி பெற (UmaiEnai oLirvith unadhu muththi peRa) : kindly bless and enlighten me, this dumb and mute one, so that I am liberated! For this, ஊமையாகிய என்னை விளங்க வைத்து நீ அருளும் முத்தியைப் பெற (சிவயோக நிலையில் சொல்லற இருப்பதனால் ஊமை);

மூல வாசல் வெளி விட்டு (mUla vAsal veLi vittu) : In the primordial gate known as Brahmarandhram, பிரமரந்திரம் எனப்படும் மூலவாசல் வெளியிட்டு விளங்க,
மனிதனுடைய சிரசிலுள்ள உச்சிக்குழி முதல் உண்ணாக்கு வரை நீண்டுள்ள நுண்ணிய துவாரத்திற்குப் "பிரமரந்திரம்' என்று பெயர்.

Bramarandhra is a tender spot on the head where the bone does not form till the child grows to a certain age. Randhra means a passage, like a small hole or a tunnel. This is the space in the body through which life descends into the fetus. It is considered the gate through which we enter and leave the physical body.

உனது உரத்தில் ஒளிர் யோக பேதவகை எட்டும் இதில் ஒட்டும் வகை இன்று தாராய் (unadhu uraththil oLir yOga bEdha vagai ettum idhil ottum vagai indru thArAy) : the yOgAs of eight kinds which are ebullient by Your kind grace, will have to be synchronised; please show me the method by which this can be accomplished. The eight limbs of yoga are: 1. YAMA – Restraints, moral disciplines or moral vows, 2. NIYAMA – Positive duties or observances, 3. ASANA – Posture, 4. PRANAYAMA – Breathing Techniques, 5. PRATYAHARA – Sense withdrawal, 6. DHARANA – Focused Concentration, 7. DHYANA – Meditative Absorption, 8. SAMADHI – Bliss or Enlightenment. உனது அருளாற்றலால் ஒளிர்கின்ற யோக விதங்கள் எட்டும் இதில் பொருந்தும் வகையை நான் அறியுமாறு இன்று தந்தருளுக.

ஆசை நாலு சதுர கமலம்....அமுத சித்தி
இடைபிங்கலை யென்ற இரு நாடிகளின் வழியே ஓடிக்கழியும் பிராண வாயுவை அங்ஙனஞ் செல்லவிடாது முதுகு தண்டின் நடுவே தாமரை நூல்போல் நுணுகியுள்ள கழுமுனை நாடி வழியே செலுத்துதல் வேண்டும். அங்ஙனம் கழுமுனை வழியே செலுத்தும் பிராண வாயுவை முறைப்படி சுவதிஷ்டானம் மணிபூரகம் அநாகதம் விசுத்தி ஆக்கினை யென்ற ஐந்து ஆதாரங்களில் நிறுத்தி பிரமரந்திரத்தில் செலுத்தி அதற்குமேல் சகஸ்ரார கமலமாகிய துவாதசாந்தத்தில் செலுத்துதல் வேண்டும். மூலாதாரத்தில மூண்டெழுங் கனலை காலா லெழுப்புங் கருத்தறிந்து முறைப்படி எழுப்பி மதிமண்டலத்தில் தாக்கச் செய்வதால் அமிர்ததாரை பொங்கி வழியும். வாயு அடங்கி உடம்பெங்கும் வியாபிப்பதால் தசவித நாதங்கள் உண்டாகும்.

வாசி வாணிகன் என குதிரை விற்று மகிழ் (vAsi vANigan enak kudhirai vitru magizh) : He came happily in the disguise of a horse-trader and குதிரை வியாபாரி என வந்து குதிரைகளை விற்று மகிழ்ச்சிகொண்ட

வாத ஊரன் அடிமை கொளு க்ருபை கடவுள் (vAdha vUran adimaik koLu krupaik kadavuL) : took control of VadhavUrar (MAnikkavAacakar); He is the most compassionate one; திருவாதவூரராகிய மாணிக்க வாசகரை அடிமையாகக் கொண்ட கிருபாகர மூர்த்தி,

மாழை ரூபன் முக மத்திகை விதத்து அருண செம் கையாளி (mAzhai rUpan muga maththigai vidhatharuNa sengaiyALi) : His complexion is that of gold; in His hallowed reddish hands, He held many varieties of saddles and whips of the horses; He is Lord SivA; பொன் உருவத்தினன், ஒலிக்கின்ற குதிரைச் சம்மட்டியால் குதிரையைச் செலுத்துகின்ற வகை பொருந்திய ஒளியும் அழகும் உடைய திருக்கரத்தை உடையவரும் ஆகிய சிவபெருமானுடைய ; முக மத்திகை (muga maththigai) : good-looking horse-whip, நல்ல வடிவுடன் விளங்கும் குதிரைச் சவுக்கு ; மாழை (mAzhai) : gold;

வாசி வாணிகன் ............................செங்கையாளி
மாணிக்கவாசகர் குதிரை வாங்கக் கொண்டுபோன செல்வத்தைத் திருப்பணியில் செலவழித்து குருந்தடியிற் குருவருள் பெற்று சிவஞான போதச் செல்வராய் அமர்ந்திருந்தனர். சிவபெருமான் அவர் பொருட்டு நரிகளைப் பரிகளாக்கி வேதப்புரவி மீது குதிரைச் சேவகராக மதுரையிற் சென்று பாண்டியனிடம் குதிரை விற்று மணிவாசகரை ஆட்கொண்டு அருளினார்.

வாகு பாதி உறை சத்தி கவுரி குதலை வாயின் மாது (vAgu pAdhi uRai saththi gavurik kudhalai vAyin mAdhu) : concorporate in half of His body is ParAsakthi, Gowri, Mother who prattles like a child; இடது பக்கத்தில் உறைகின்ற சக்தி, கெளரி, மழலைச் சொல் பேசும் மாது; வாகு பாதி = அழகிய பாதி, இடது பாகம்;

துகிர் பச்சை வடிவி சிவை (thugir pachchai vadivi sivai) : She has a complexion combining coral and emerald-green hues; She is the Consort of SivA; பவளமும் பச்சை நிறமும் கொண்ட வடிவினள்,

என் மாசு சேர் எழு பிறப்பையும் அறுத்த உமை தந்த வாழ்வே ( en mAsu sErezhu piRappaiyum aRuththa umai thandha vAzhvE) : She severed my seven births filled with blemishes; She is UmAdEvi; and You are Her Treasure, Oh Lord! என்னுடைய குற்றம் நிறைந்த ஏழு பிறப்புகளையும் அறுத்த உமா தேவியார் ஈன்ற செல்வமே,

காசி ராமெசுரம் ரத்நகிரி சர்ப்பகிரி ( kAsi rAmesuram rathnagiri sarpagiri) : KAsi, RAmEswaram, Rathnagiri (ThiruvAtpOkki), the Snake Mountain (ThiruchchengkOdu), காசி, இராமேசுரம், திருவாட்போக்கி, திருச்செங்கோடு, (ரத்நகிரி அய்யர்மலை, வாட்போக்கி (வாட்டம் போக்கும் வாட்போக்கி), சிவாயமலை, மணிகிரி, சிவதைபுரி, ரத்தினவெற்பு என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. மலைப்படிகளின் அமைப்பும் பிரகாரங்களின் அமைப்பும் "ஓம்' எனும் பிரணவம் போன்றிருத்தலால் "சிவாய மலை' என்று பெயர் பெற்றது.)

ஆரூர் வேலூர் தெவூர் கச்சி மதுரை பறியல் ( ArUr vElur dhevur kachchi madhuraip paRiyal) : ThiruvArUr, Vellore, ThEvUr, KAnchipuram, Madhurai, ThiruppaRiyal, திருவாரூர், வேலூர், தேவூர், காஞ்சீபுரம், மதுரை, திருப்பறியல்,

காவை மூதூர் அருண கிரி திருத்தணியல் செந்தில் நாகை (kAvai mUdhur aruNagiri thiruththaNiyal sendhil nAgai) : ThiruvAnaikkA, ThiruppunaivAsal, ThiruvaNNAmalai, ThiruththaNigai, ThiruchchendhUr, NagappatiNam, திருவானைக்கா, திருப்புனைவாசல், திருவண்ணாமலை, திருத்தணிகை, திருச்செந்தூர், நாகப்பட்டினம், மூதூர் என்பது பழம்பதியாகிய திருவண்ணாமலை;

காழி வேளூர் பழநிக்கிரி குறுக்கை (kAzhi vELur pazhanik giri kuRukkai) : SeegAzhi, Vaitheeswaran KOyil (VELUr), Mount Pazhani, ThirukkuRukkai, சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில் (வேளூர்), பழநிமலை, திருக்குறுக்கை (அட்டவீரட்ட தலங்களுள் ஒன்று; மன்மதனை எரித்த இடம்),

திரு நாவலூர் திருவெ(ண்)ணெய் பதியில் மிக்க திகழ் (thirunAvalUr thiru veNeyp padhiyin mikka thigazh) : ThirunAvalUr and ThiruveNNainallUr - these are a few places where You have Your abode, and திருநாவலூர், திருவெண்ணெய் நல்லூர் முதலிய தலங்களில் விளங்கும்,(மேலும்)
திருநாவலூர் - சுந்தரமூர்த்தி நாயனார் பிறந்த தலம். திருவெண்ணெய்நல்லூர் - சுந்தரமூர்த்தி நாயனார் திருமணம் செய்து கொள்ளும் போது, முன்னர் கயிலாயத்தில் அருளியபடி இறைவன் வயது முதிர்ந்த அந்தணராய்த் தோன்றித் தடுத்தாட்கொண்டருளிய இடம்.

காதல் சோலை வளர் வெற்பில் உறை முத்தர் புகழ் தம்பிரானே.(kAdhal sOlai vaLar veRpil uRai muththar pugazh thambirAnE.) : Your favourite residing place is the mountain in Pazhamuthir cOlai; the realised souls living in all these centres praise You, Oh Great One! உனக்கு விருப்பமான சோலை மலையிலும் உறைகின்ற ஜீவன் முக்தர்கள் புகழ்கின்ற தம்பிரானே.

Summary/பொழிப்புரை

மதுரையம்பதியில் குதிரை வியாபாரியாக வந்து அரிமர்த்தன பாண்டியனிடம் குதிரை விற்று, அதனால் மகிழ்ச்சியுற்று மாணிக்கவாசகரை அடிமைகொண்ட கருணைக் கடவுளும், பொன்னார் மேனியரும், குதிரைச் சம்மட்டியினால் குதிரையைச் செலுத்துகின்ற வகையும் ஒளியும் உடைய சிவந்த திருக்கரத்தை யுடையவரும், ஆகிய சிவபெருமானுடைய இடப்பாகத்தில் வீற்றிருப்பவரும், அருட்சத்தியும், பொன்னிறமுடையவரும்,மழலை மொழி பேசும் மாதரசும், பவள நிறத்துடன் கூடிய பச்சை நிறமுடையவரும், மங்கலமானவரும், அடியேனுடைய ஏழு பிறப்பையும் அறுத்த உமாதியாருமாகிய பார்வதியம்மையார் பயந்த திருப்புதல்வரே! காசி, திருவிராமேச்சுரம், இரத்தினகிரி, திருச்செங்கோடு, திருவாரூர், வேலூர், தேவூர், காஞ்சி, மதுரை, திருப்பறியல், திருவானைக்கா, பழமலை, திருவண்ணாமலை, திருத்தணிகை, திருச்செந்தூர், நாகப்பட்டினம், சீகாழி, புள்ளிருக்கும் வேளூர், பழநி, குறுக்கை, திருநாவலூர், திருவெண்ணெய் நல்லூர் முதலிய திருத்தலங்களிலும், மிகவுந்திகழ்கின்றதும் சோலைகளுடன் கூடியதுமாகிய பழமுதிர்சோலையிலும் எழுந்தருளியுள்ள முத்தான்மாக்களால் புகழப்பெறுகின்ற தனிப்பெருந்தலைவரே! இனிய ஒளியைப் பரப்பி இடைகலை பிங்கலை யென்னும் இரு நாடிகளின் வழியாக ஒடிக்கழியும் பிராணவாயுவை நான்கு பக்கத்தையுடைய மூலாதாரத்திற் பொருந்தி, அங்கிருந்து சுழுமுனைநாடி வழியாக, சுவாதிஷ்டானம் முதல் ஆக்கினை யீறாகவுள்ள ஐந்து கமலத்திலும் ஓட்டி நிறுத்தி, அக்கினி சூரியன் சந்திரன் என்ற மூன்று மண்டங்களிலுஞ் செலுத்தி, பிரமந்திர கமலத்திலும் பொருந்த நிறுத்தி, அப்பால் ஆயிரத்தெட்டு இதழோடுங் கூடிய சோதி நிறைந்த வெளியாகிய துவாதசாந்த கமலம் வரை ஏழுதலங்களையும் பொருந்தச் செலுத்தி, சூரிய ஒளி வீசும் ஒளி மண்டலத்தில் பிரமநாதமானது ஒலிக்க அதனுடன் ஒருமித்து, மதிமண்டத்தில் கலாமிர்தம் பெருகிப் பாய அவ்வமிர்தப் பேற்றுடன், வேதங்கூறுகின்ற சர சத்திக்கு ஆதாரமாகவுள்ள ஸ்ரீ நந்தி ஒளியையும் ஊமையேனுக்குத் தெரிசிப்பித்து, தேவரீரது முத்தியைப் பெற பிரமந்திர வெளி வாசல் திறந்துவிட்டு இங்ஙனஞ் செய்வதால், உமது திருவருள் வலிமையால் விளங்குகின்ற அஷ்டாங்க யோகங்களும் இதனுடன் பொருந்தும் வகையை அடியேனுக்கு இன்று தந்தருளவேண்டும்.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே