487. நஞ்சினைப் போலு


ராகம்: ஆபோகிதாளம்: கண்டசாபு (2½)
நஞ்சினைப் போலுமன வஞ்சகக் கோளர்களை
நம்புதற் றீதெனநினைந்துநாயேன்
நண்புகப் பாதமதி லன்புறத் தேடியுனை
நங்களப் பாசரணமென்றுகூறல்
உன்செவிக் கேறலைகொல் பெண்கள்மெற் பார்வையைகொல்
உன்சொலைத் தாழ்வு செய்துமிஞ்சுவாரார்
உன்றனக் கேபரமும் என்றனக் கார்துணைவர்
உம்பருக் காவதினின் வந்துதோணாய்
கஞ்சனைத் தாவிமுடி முன்புகுட் டேயமிகு
கண்களிப் பாகவிடுசெங்கையோனே
கண்கயற் பாவைகுற மங்கைபொற் றோடழுவு
கஞ்சுகப் பான்மைபுனைபொன்செய்தோளாய்
அஞ்சவெற் பேழுகடல் மங்கநிட் டூரர்குலம்
அந்தரத் தேறவிடுகந்தவேளே
அண்டமுற் பார்புகழு மெந்தைபொற் பூர்புலிசை
அம்பலத் தாடுமவர் தம்பிரானே.

Learn The Song


Know Ragam Abhogi (Janyam of 22nd mela Karaharapriya)

Arohanam: S R2 G2 M1 D2 S    Avarohanam: S D2 M1 G2 R2 S

Paraphrase

நஞ்சினைப் போலு மன வஞ்சகக் கோளர்களை நம்புதல் (nanjinaip pOlu mana vanjaga kOLargaLai nambuthal) : To trust people who have a devious and a venomous mind விஷம் போல மனத்தில் வஞ்சகம் கொண்டவர்களை

தீது என நினைந்து நாயேன் ( theethu ena ninainthu nAyEn) : is dangerous – believing so நம்புதல் கெடுதலாகும் என்று நினைத்து அடியேன்

நண்பு உகப் பாதமதில் அன்புறத் தேடி உனை (naNbu ugap pAtham athil anbuRath thEdi unai) : I am seeking Your friendly hallowed feet with abundant love, நட்பு பெருக உன் திருவடிகளில் அன்போடு தேடி உன்னை நண்பு/நட்பு (naNbu/natbu) : amity, friendship;

நங்களப்பா சரணம் என்று கூறல் (nangaL appA saraNam enRu kURal) : screaming "Oh Our Lord, I am surrendering to You" எங்கள் அப்பனே சரணம் என்று கூவி முறையிடும் கூச்சல்

உன் செவிக்கு ஏறலை கொல் (un sevikku ERalai kol) : Has my scream not reached Your ears? உனது செவிகளில் விழவில்லையா?

பெண்கள் மெற் பார்வையை கொல் ( peNgaL meR pArvaiyai kol) : Is it because You are so constantly looking at Your consorts that You failed to hear me? தேவிகள் வள்ளி தேவயானை மேல் கண்பார்வையால் கேட்கவில்லையா?

உன் சொலைத் தாழ்வு செய்து மிஞ்சுவார் யார் ( un solaith thAzhvu seythu minjuvAr Ar) : Can anyone dare to underestimate Your word and transgress You? உன் உபதேச மொழியைத் தாழ்ச்சி சொல்லி யார் வரம்பு மீறுவர்?

உன்றனக்கே பரமும் (unthanukkE paramum) : My protection is entirely Your responsibility! என்னைக் காக்கும் பாரம் உந்தனுக்கே ஆகும்.

என்றனக்கு ஆர் துணைவர் (enthanakku Ar thuNaivar) : Who else is there by my side to help me? உன்னை விட்டால் எனக்கு வேறு யார் துணைவர் உள்ளனர்?

உம்பருக்கு ஆவதினின் வந்து தோணாய் (umbaruk kAvathinin vanthu thONAy) : Just like You took care of the need of DEvAs, You must come before me to my aid. தேவர்களுக்கு அருளியதுபோல் என்முன்னும் தோன்றி அருள்க.

கஞ்சனைத் தாவி முடி முன்பு குட்டு ஏய (kanjanaith thAvi mudi munbu kuttEya ) : Once, You jumped to reach for the Head of BrahmA and banged it பிரமனை எட்டி அவனது முடியில் முன்பு நன்றாகக் குட்டி

மிகு கண் களிப்பாக விடு செங்கையோனே (migu kaN kaLippAga vidu sengaiyOnE) : with Your reddish knuckles, Your eyes brimming with fun! மிக்க களிப்புடன் வீசிய சிவந்த கையை உடையவனே,

கண் கயற் பாவை குற மங்கை பொற் தோள் தழுவு (kaN kayal pAvai kuRa mangai por thOL thazhuvu) : You embrace the beautiful shoulders of VaLLi, the damsel of the KuRavAs, with eyes like fish; கயல் மீன் போன்ற கண்ணாள் குற வள்ளியின் அழகிய தோளை அணைக்கும்

கஞ்சுகப் பான்மை புனை பொன் செய் தோளாய் (kanjugap pAnmai punai pon sey thOLAy) : and Your shoulders pressed hers just like the perfectly fitting shirt! பொன் தோளாய், உடலைச் சட்டை தழுவுவது போல இறுக்க அணைத்தவனே,

அஞ்ச வெற்பு ஏழு கடல் மங்க ( anja veRpu Ezhu kadal manga) : The Krauncha hills trembled, and water in the seven seas receded and dried up when கிரெளஞ்ச மலை நடுங்க, ஏழு கடல்களில் உள்ள நீர் வற்றி ஒடுங்க,

நிட்டூரர் குலம் அந்தரத்து ஏற விடு கந்தவேளே (nittUrar kulam antharaththu ERa vidu kantha vELE) : You drove the entire families of the demons (asuras) up the sky to their death, Oh Lord KanthA! அசுரர் குலத்தை விண்ணிலேறும்படி கொன்ற கந்தவேளே,

அண்ட முற் பார் புகழும் எந்தை பொற்பூர் புலிசை ( aNda muR pAr pugazhum enthai poR pUr pulisai) : The entire Universe praises our Lord SivA whose abode is Pulisai (Chidhambaram), அண்டம் முதலிய உலகங்கள் யாவும் புகழும் எம் தந்தையார் சிவபெருமானின் அழகிய புலியூரில் (சிதம்பரத்தில்)

அம்பலத்தாடுமவர் தம்பிரானே. (ambalaththAdum avar thambirAnE.) : where NadarAjA dances at the Golden Shrine; and You are His Great Master! அம்பலத்தில் ஆடும் நடராஜர் தம்பிரானே.

Comments

Post a Comment

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே