482. காவி உடுத்தும்


ராகம்: மத்யமாவதிதாளம்: மிஸ்ர சாபு 2 + 1½ (3½)
காவி யுடுத்துந் தாழ்சடை வைத்துங்
காடுகள் புக்குந்தடுமாறிக்
காய்கனி துய்த்துங் காயமொ றுத்துங்
காசினி முற்றுந் திரியாதே
சீவ னொடுக்கம் பூத வொடுக்கம்
தேற வுதிக்கும்பரஞான
தீப விளக்கங் காண எனக்குன்
சீதள பத்மந்தருவாயே
பாவ நிறத்தின் தாருக வர்க்கம்
பாழ்பட வுக்ரந்தருவீரா
பாணிகள் கொட்டும் பேய்கள் பிதற்றும்
பாடலை மெச்சுங்கதிர்வேலா
தூவிகள் நிற்குஞ் சாலி வளைக்குஞ்
சோலை சிறக்கும் புலியூரா
சூரர் மிகக்கொண் டாட நடிக்குந்
தோகை நடத்தும்பெருமாளே.

Learn The Song



Raga Madhyamavati )Janyam of 22nd mela Karaharapriya)

Arohanam: S R2 M1 P N2 S    Avarohanam: S N2 P M1 R2 S


Paraphrase

காவி உடுத்தும் (kAvi uduththum) : Wearing saffron coloured robes, காவித் துணியை உடுத்திக் கொண்டும்,

தாழ் சடை வைத்தும் (thAzh sadai vaiththum) : growing long unkempt wild tresses, தாழ்ந்து தொங்கும் சடையை வளர்த்து வைத்தும்,

காடுகள் புக்கும் தடுமாறி (kAdugaL pukkum thadumARi) : roaming aimlessly around jungles, காடுகளில் புகுந்து தடுமாறியும்,

காய்கனி துய்த்தும் (kAy kani thuyththum ) : living on fruits and vegetables, காய், பழவகைகளைப் புசித்தும்,

காயம் ஒறுத்தும் (kAyam oRuththum) : torturing the body with fasting and other rituals, தேகத்தை விரதங்களால் வருத்தியும்

காசினி முற்றும் திரியாதே (kAsini mutrum thiriyAdhE) : and wandering all over the world are futile. உலகம் முழுவதும் திரிந்து அலையாமல், காசினி (kAsini) : earth;

சீவன் ஒடுக்கம் பூத ஒடுக்கம் தேற உதிக்கும் பரஞான (jeevan odukkam bUtha odukkam thERa uddhikkum) : The shrinking of the self into the soul and the control of the five elements and senses will give rise to supreme knowledge and a great illumination. சீவனை (சிவமயமாக) ஒடுக்குதலும் ஐம்பூதங்களுடைய ஒடுங்கும் போது நன்றாக மேலான ஞான ஒளி உண்டாகும்;
ஆன்மாவை மறைத்து இருக்கும் மாயை விலகினால் அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் ஆகிய ஐந்து திரைகளும் அகல, ஆன்மாவின் தூய்மையான ஒளி தோன்ற, அவ் ஆன்ம ஒளியில் நிலைபெற்ற ஆராய்கின்ற ஞானியார் காண்பான், காணப்படு பொருள், காட்சி ஆகிய மூன்றையும் கடந்து மேலாம் பிரணவ யோகத்தை அறிந்தவராவர்.

தீப விளக்கம் காண (paranyAna dheepa viLakkam kANa) : To enable me to see that Light, அந்த ஒளி விளக்கத்தை யான் காணும்படி,

எனக்குன் சீதள பத்மம் தருவாயே ( enakkun seethaLa padhman tharuvAyE) : You must grant me Your cool lotus feet. எனக்கு உன் குளிர்ந்த தாமரை அடிகளைத் தந்தருள்க.

பாவ நிறத்தின் தாருக வர்க்கம் பாழ்பட (pAva niRaththin thAruka varggam pAzh pada) : TharukAsuran and his clan, who were nothing but embodiment of sin, were decimated பாவமே உருவெடுத்த தாருகாசுரன் கூட்டத்தினர் பாழ் பட்டொழிய

உக்ரம் தருவீரா (ugram tharu veerA) : by Your anger, Oh valorous One! கோபம் காட்டிய வீரனே,

பாணிகள் கொட்டும் பேய்கள் பிதற்றும் ( pANigaL kottum pEygaL pidhatrum) : Overjoyed by Your victory, the ghosts in the battlefield clap their hands and sing cacaphonously, போர்க்களத்தில் கைகளைக்கொட்டும் பேய்கள் உளறும்

பாடலை மெச்சும் கதிர்வேலா (pAdalai mechchum kadhir vElA) : and those songs are hailed by You, Oh Lord with the bright Spear! பாடல்களைப் பாராட்டும் ஒளி வேலனே,

தூவிகள் நிற்கும் சாலி வளைக்கும் சோலை (thUvigaL niRkum sAli vaLaikkum sOlai) : Swans abound in the paddy fields, and plenty of groves surround, சாலி (sali) : paddy; அன்னங்கள் நிற்கும் வயல்கள் சூழ்ந்த சோலைகள்; தூவி = பறவை இறகு, மயிற்றோகை, அன்னத்தினிறகு, அன்னப்பறவை; சாலி = நெற்பயிர்;

சிறக்கும் புலியூரா (siRakkum puliyUrA) : the town, PuliyUr (Chidhambaram); and You are there! விளங்கும் புலியூரனே (சிதம்பரேசனே),

சூரர் மிகக் கொண்டாட நடிக்கும் தோகை நடத்தும் பெருமாளே.(sUrar migak koNdAda nadikkun thOgai nadaththum perumALE.) : Your peacock dances to the joy of all warriors, and You move about mounted on that peacock, Oh Great One! சூரர்கள் மிகக் கொண்டாடும்படியாக நடனமாடும் மயிலினை நடத்தும் பெருமாளே.

சீவன் சிவனில் ஒடுங்குதல்

போக்கும் வரவும் இரவும் பகலும் புறம்பும் உள்ளும்
வாக்கும் வடிவும் முடிவும் இல்லாதது ஒன்று வந்துவந்து
தாக்கும் மனோலயம்தானே தரும் எனைத் தன் வசத்தே
ஆக்கும் அறுமுகவா சொல்ல ஒணாது இந்த ஆனந்தமே.

போதலும், வருதலும், இரவும், பகலும், வெளியும், உள்ளிடமும், வாக்கும், உருவமும், ஆரம்பம் இறுதி என்று எந்த வித வரம்புகள் இன்றி இல்லாததாகிய ஒரு பரம்பொருள் அடியேனிடம் மீண்டும் மீண்டும் வந்து சார்ந்து நின்று, தானாகவே அடியேனுக்கு மன ஒடுக்கத்தைத் தந்தருளி அடியேனைத் தன்வயப்படுத்திக் கொள்கின்றபோது உண்டாகின்ற இணையற்ற பேரின்பம் இத்தகையது என்று கூறுவதற்கு இயலாது, ஆறு திருமுகங்களையுடைய திருமுருகப்பெருமானே!

Comments

  1. Very nice song on what actually is tapas and what is not, who are holy people and who are not....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே