468. வலிவாத


ராகம்: கௌரி மனோஹரிதாளம்: கண்ட சாபு (2½)
வலிவாத பித்தமொடு களமாலை விப்புருதி
வறல்சூலை குட்டமொடுகுளிர்தாகம்
மலிநீரி ழிச்சல்பெரு வயிறீளை கக்குகளை
வருநீர டைப்பினுடன்வெகுகோடி
சிலைநோய டைத்தவுடல் புவிமீதெ டுத்துழல்கை
தெளியாவெ னக்குமினிமுடியாதே
சிவமார்தி ருப்புகழை எனுநாவி னிற்புகழ
சிவஞான சித்திதனையருள்வாயே
தொலையாத பத்தியுள திருமால்க ளிக்கவொரு
சுடர்வீசு சக்ரமதையருள்ஞான
துவர்வேணி யப்பன்மிகு சிவகாமி கர்த்தன்மிகு
சுகவாரி சித்தனருள் முருகோனே
அலைசூரன் வெற்புமரி முகனானை வத்திரனொ
டசுராரி றக்கவிடு மழல்வேலா
அமுதாச னத்திகுற மடவாள்க ரிப்பெணொடும்
அருணா சலத்திலுறைபெருமாளே.

Learn The Song




Paraphrase

வலி வாத பித்தமொடு கள மாலை விப்புருதி (vali vAtha piththamodu kaLa mAlai vippurudhi) : Epilepsy, rheumatism, biliousness, mumps, ringworm, வலிப்பு நோய், பித்த நோய், கண்டமாலை நோய், சிலந்திப்புண், களம்(kaLam) : neck, throat, கண்டம்;

வறள் சூலை குட்டமொடு குளிர் தாகம் (vaRaL sUlai kuttamodu kuLir dhAgam) : dehydration, ulcer, leprosy, chillness, thirst, உடல் இளைப்பு, வயிற்று உளைவு, குஷ்டம், குளிர், தாகம்,

மலி நீரிழிச்சல் பெரு வயிறு ஈளை கக்கு (malineer izhichchal peru vayiR eelai kakku) : excessive diabetes, edema in the stomach, pneumonia, vomiting, மிக்க நீரிழிவு, மகோதரம், கபம் கட்டுதல், வாந்தி,

களை வரு நீரடைப்பினுடன் வெகு கோடி (kaLai varu neeradaippinudan vegu kOdi) : inability to urinate due to prostatis, and so many other million diseases அயர்ச்சி தரும் மூத்திரத்தடை நோய் இவைகளுடன் வெகு கோடிக்கணக்கான களை (kaLai) : fatigue;

சிலை நோய் அடைத்த உடல் புவி மீது எடுத்து உழல்கை (silai nOy adaiththa udal buvi meedhu eduththu uzhalgai) : wandering on this earth with this body filled with viciously growling diseases சீறி எழும் நோய்களை அடைத்துள்ள இந்த உடலை, பூமியின் மீது எடுத்துத் திரிதல்

தெளியா எனக்கும் இனி முடியாதே (theLiyA enakkumini mudiyAdhE) : is just not possible for me any more as I lack clear intellect. தெளிந்த அறிவு இல்லாத எனக்கும் இனிமேல் முடியாது.

சிவமார் திருப்புகழை எனு நாவினிற் புகழ ( sivamAr thiruppugazhai enu nAviniR pugazha) : To make my tongue praise Your auspicious glory, மங்கலம் நிறைந்த உனது திருப்புகழை என் நாவாறப் புகழ்வதற்கு

சிவ ஞான சித்திதனை அருள்வாயே (siva nyAna sidhdhi thanai aruLvAyE) : will You kindly bless me with the attainment of the Knowledge of SivA? சிவஞான சித்தியை தந்து அருள்வாயாக.

தொலையாத பத்தியுள திருமால் களிக்க ஒரு (tholaiyAdha baththiyuLa thirumAl kaLikka) : Vishnu, who has abiding devotion to SivA, was exhilarated நீங்காத பக்தியைக் கொண்ட திருமால் மகிழ,

சுடர் வீசு சக்ரமதை அருள் (oru sudar veesu chakramadhai aruL) : when His unique and bright wheel (Sudharsanam) was presented to Him ஒப்பற்றதாய் ஒளி வீசும் சுதர்சன சக்கரத்தை அவருக்கு அருளிய ஞானமயமான

ஞான துவர் வேணி அப்பன் மிகு சிவகாமி கர்த்தன் (nyAna thuvar vENi appan migu sivakAmi karththan) : by the wise Lord SivA with tresses of coral hue and who is the Consort of SivagAmi (PArvathi); பவள நிறச் சடையப்பன், புகழ்மிக்க சிவகாமியின் தலைவன், மிக்க துவர்(thuvar) : பவளம்;

மிகு சுக வாரி சித்தன் அருள் முருகோனே ( migu sukavAri sidhdhan aruL murugOnE) : He is the ocean of supreme bliss; You are that SivA's son, Oh MurugA! சுக சாகரம் போன்ற சித்த மூர்த்தி சிவபிரான் அருளிய முருகனே,

அலை சூரன் வெற்பும் அரி முகன் ஆனை வத்திரனொடு (alai sUran veRpum ari mugan Anai vaththiranod) : The seas, the demon SUran, Mount Krouncha, the lion-faced demon Singamukan, the elephant-faced demon TharakAsuran and along with them கடல், சூரன், கிரெளஞ்சமலை, சிங்கமுகன், ஆனைமுகனான தாரகாசுரனுடன்

அசுரார் இறக்க விடும் அழல் வேலா (asurAr iRakka vidum azhal vElA) : all other demons were killed when You wielded the burning Spear, Oh Lord! அசுரர்கள் யாவரும் இறக்கும்படிச் செய்த நெருப்பு வேலனே,

அமுதாசனத்தி குற மடவாள் கரிப் பெணொடும் (amudhA sanaththi kuRa madavAL karippeNodum) : She sits on the seat of nectar; She is the damsel of the KuRavAs; along with that VaLLi, and DEvayAnai, the daughter reared by AirAvadham, the celestial elephant, அமுதமயமான பீடத்தினள் குறமகள் ஆகிய வள்ளியுடனும், யானை ஐராவதம் வளர்த்த பெண் தேவயானையுடனும் அசனம்(asanam) : food;

அருணாசலத்தில் உறை பெருமாளே ( aruNAchalaththil uRai perumALE.) : You are seated at Your abode in ThiruvaNNAmalai, Oh Great One! திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே