454.கடல் பரவு


ராகம்: ஆரபிஅங்கதாளம் (10)
3 + 3½ + 3½
கடல்பரவு தரங்க மீதெழு திங்களாலே
கருதிமிக மடந்தை மார்சொல்வ தந்தியாலே
வடவனலை முனிந்து வீசிய தென்றலாலே
வயலருணையில் வஞ்சி போதநலங்கலாமோ
இடமுமையை மணந்த நாதரி றைஞ்சும்வீரா
எழுகிரிகள் பிளந்து வீழஎ றிந்தவேலா
அடலசுரர் கலங்கி யோடமு னிந்தகோவே
அரிபிரம புரந்த ராதியர் தம்பிரானே.

Learn The Song


Know Ragam Arabhi (Janyam of 29th mela Shankarabaranam)

Arohanam: S R2 M1 P D2 S    Avarohanam: S N3 D2 P M1 G3 R2 S

Paraphrase

This song has been written in the Nayaka-Nayaki BhAva portraying the pangs of separation of the heroine from Lord Murugan. The sea, the moon, Love God, the flowery arrows and the scandal-mongering women are some of the sources which aggravate the separation from the Lord.

கடல் பரவு தரங்க மீதெழு திங்களாலே (kadal paravu tharanga meedhezhu thingaLAlE) : Due to the moon rising above the waves in the vast sea; கடலில் பரவிவரும் அலைகளின் மீது தோன்றி எழும் நிலாவாலும்,

கருதி மிக மடந்தைமார் சொல் வதந்தியாலே (karudhi miga madandhai mAr sol vadhandhiyAlE) : due to the gossip-mongering by all the women who keep on talking among themselves repeatedly; நினைத்து நினைத்துப் பெண்கள் தமக்குள் பேசும் வதந்தியாலும்,

வடவனலை முனிந்து வீசிய தென்றலாலே (vadava analai munindhu veesiya thendralAlE:) : and due to the hot southerly breeze which is blowing angrily vying with the Northern Inferno; வடவாக்கினியைக் கோபித்து சூடாக வீசும் தென்றல் காற்றாலும்,
Vadavagni or the Northern Inferno is located beneath the ocean and has the face of a horse. Hindu Scriptures suggest that mists and clouds are formed due to the activity of the Vadavagni under the sea. It also prevents the sea from consuming the land. Just before Pralaya, Vadavagni will burst forth as volcanoes from under the sea and escape. Subsequently the seas will consume the land.

வயல் அருணையில் வஞ்சி போத நலங்கலாமோ(vayal aruNaiyil vanji pOdha nalangalAmO) : this damsel is bothered (being separated from You). Is it fair that she suffers like this and becomes morose? (உன்னைப் பிரிந்ததால்) அறிவு மயங்கி, கலங்கி வருந்தலாமோ? நலங்குதல்(nalanguthal) : நொந்துபோதல், வருந்துதல் வயல் சூழ்ந்த இந்தத் திருவண்ணாமலையில் உள்ள வஞ்சிக் கொடி போன்ற பெண்

இடம் உமையை மணந்த நாதர் இறைஞ்சும் வீரா (idam umaiyai maNandha nAthar iRainjum veera) : You are worshipped by Lord SivA who shared the left half of His body with His Consort UmA (PArvathi). இடது பாகத்தில் உமாதேவியைச் சேர்த்துள்ள சிவபிரான் வணங்கும் வீரனே,

எழு கிரிகள் பிளந்து வீழ எறிந்த வேலா ( ezhu girigaL piLandhu veezha eRindha vElA) : The seven hills (Krounchagiri Range) were shattered to pieces by Your Spear! ஏழு மலைகளும் பிளந்து விழும்படியாக செலுத்திய வேலாயுதனே,

அடல் அசுரர் கலங்கி ஓட முனிந்த கோவே (adal asurar kalangi Oda munindha kOvE) : The mighty demons (asuras) ran away scared by Your wrath, Oh Lord! வலிமை வாய்ந்த அசுரர்கள் கலங்கி ஓடக் கோபித்த தலைவனே,

அரி பிரம புரந்தராதியர் தம்பிரானே.(ari birama purandharAdhiyar thambirAnE.) : You are worshipped by Vishnu, BrahmA and all DEvAs, Oh Great One! திருமால், பிரம்மா, இந்திராதி தேவர்கள் தம்பிரானே.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே