453. இருவினை ஊண்


ராகம்: ஆரபிதிச்ர ரூபகம் (5)
2 + 1½ + 1½
இருவினை யூண்ப சும்பை கருவிளை கூன்கு டம்பை
யிடரடை பாழ்ம்பொ தும்பகிதவாரி
இடைதிரி சோங்கு கந்த மதுவது தேங்கு கும்ப
மிரவிடை தூங்கு கின்றபிணநோவுக்
குருவியல் பாண்ட மஞ்சு மருவிய கூண்டு நெஞ்சொ
டுயிர்குடி போங்கு ரம்பையழியாதென்
றுலகுட னேன்று கொண்ட கருமபி ராந்தொ ழிந்து
னுபயப தாம்பு யங்களடைவேனோ
அருணையி லோங்கு துங்க சிகரக ராம்பு யங்க
ளமரர் குழாங்கு விந்துதொழவாழும்
அடியவர் பாங்க பண்டு புகலகி லாண்ட முண்ட
அபிநவ சார்ங்க கண்டன்மருகோனே
கருணைம்ரு கேந்த்ர அன்ப ருடனுர கேந்த்ரர் கண்ட
கடவுள்ந டேந்த்ரர் மைந்தவரைசாடுங்
கலபக கேந்த்ர தந்த்ர அரசநி சேந்த்ர கந்த
கரகுலி சேந்த்ரர் தங்கள்பெருமாளே.

Learn The Song


Know Ragam Arabhi (Janyam of 29th mela Shankarabaranam)

Arohanam: S R2 M1 P D2 S    Avarohanam: S N3 D2 P M1 G3 R2 S

Paraphrase

The poet yearns to attain the lotus feet of the Lord by relinquishing the attachment to the despicable body, which is simply a misery-filled receptacle for the embryo to grow and is filled with filthy scum.

இருவினை ஊண் பசும் பை (iruvinai UN pasum pai) : It is just a green bag of skin in which the good and bad deeds are stored; இரண்டு வினைகளுக்கும் உணவிடமான புத்தம் புது தோல் பை; ஊண் = உணவு;

கரு விளை கூன் குடம்பை (karu viLai kUn kudampai) : It is but a vessel in which the embryo grows; கரு வளருவதற்கு இடமான பாத்திரம் ஆகிய உடம்பு, குடம்பை (kudambai) : கூடு, முட்டை, உடல்;

இடர் அடை பாழ் பொதும்பு (idar adai pAzh pothumbu) : It is a pothole filled with woes and is destructible; துன்பங்களையே அடைத்து வைத்துள்ள, பாழடையப் போவதான குகை, பொதும்பு (pothumbu) : A hole, a hollow place,

அகி(ஹி)த வாரி இடை திரி சோங்கு (ak(h)itha vAri idai thiri sOngu) : It is a rudderless ship tottering in the mid-sea of distress and evil; துன்பமும் தீமையும் கொண்ட கடலின் நடுவில் திரிகின்ற மரக்கலம், சோங்கு (sOngu) : மரக்கலம்;

கந்தம் மது அது தேங்கு கும்பம் (kantham mathu athu thEngu kumbam) : It is a cesspool filled with faeces and urine; மலச்சேறும் மூத்திர நீரும் நிரம்பிய இடம்,

இரவு இடை தூங்குகின்ற பிண நோவுக்கு உருவு இயல் பாண்டம் (iravu idai thUngukinRa piNa nOvukku uruvu iyal pANdam) : It is but a sleeping corpse in the night and a receptacle for all diseases; இரவிலே தூங்குகின்ற பிணம் போன்றதும், நோயினுக்கு உருவாய் அமைந்ததுமான பாத்திரம்,

அஞ்சும் மருவிய கூண்டு (anjum maruviya kUNdu) : It is a cage in which all the five elements are filled;ஐம்பூதங்களும் பொருந்தி உள்ள கூடு,

நெஞ்சொடு உயிர் குடி போம் குரம்பை (nenjodu uyir kudi pOm kurambai) : It is this body, a small cottage, from which my mind and life will depart simultaneously. என் மனத்துடன் உயிரும் (உடலை விட்டு) வெளியேறும் சிறு குடில் - ஆகிய இந்த உடம்பு

அழியாது என்று (azhiyAthu enRu) : Thinking that this body is indestructible, அழியாமல் நிலைத்து நிற்கும் என்று,

உலகுடன் ஏன்று கொண்ட கரும பிராந்தி ஒழிந்து (ulagudan EnRu koNda karuma pirAnthi ozhinthu) : I develop attachment with people of this world, due to delusion, being the result of my past deeds. To rid myself of that delusion, உலகத்தாரிடம் நான் கொண்டுள்ள, வினைப் பயனால் வரும் மயக்கம் நீங்கப் பெற்று,

உன் உபய பதாம் புயங்கள் அடைவேனோ (un ubaya pathAm puyangaL adaivEnO) : will I ever be able to attain Your two hallowed lotus feet? உனது இரண்டு தாமரைத் திருவடிகளை அடையும் பாக்கியத்தைப் பெறுவேனோ?

அருணையில் ஓங்கு துங்க சிகரம் (aruNaiyil Ongu thunga sikaram) : In front of the imposing and impeccable Temple Tower of ThiruvaNNAmalai, திரு அண்ணாமலையில் உயர்ந்து ஓங்கிய பரிசுத்தமான கோபுர வாயிலில்,

கராம் புயங்கள் அமரர் குழாம் குவிந்து தொழ வாழும் அடியவர் பாங்க (karAm puyangaL amarar kuzhAm kuvinthu thozha vAzhum adiyavar pAnga:) : You are the friend for Your devotees whom even the celestials revere with their lotus hands folded; ! தாமரை போன்ற கைகளைக் கூப்பி தேவர்கள் தொழ வாழ்கின்ற அடியார்களின் தோழனே, பாங்கன் (paangan) : friend;

பண்டு புகல் அகிலாண்டம் உண்ட (paNdu pukal akilANdam uNda) : Once, the entire world was swallowed by முன் ஒரு காலத்தில் சொல்லப்படுகின்ற எல்லா உலகங்களையும் உண்ட,
பிரம்மாவின் ஆயுசு முடிந்த பின், மகா பிரளய காலத்தில், திருமால் 14 லோகங்களையும் விழுங்கி, தன் திருவயிற்றில் அடக்கி கொள்கிறார். மீண்டும் ஸ்ருஷ்டி செய்யும் போது, உலகங்களை மீண்டும் படைத்து, புதிய பிரம்மாவை நியமிக்கிறார்.

அபிநவ சார்ங்க கண்டன் மருகோனே (abinava sArnga kaNdan marugOnE) : Lord Vishnu, who holds in His hand the unique bow, SArangam; You are His nephew! புதுமை வாய்ந்த சாரங்கம் என்னும் வில்லை ஏந்திய வீரனாகிய திருமாலின் மருகோனே, கண்டன் = வீரன்;

கருணை ம்ருகேந்த்ர அன்பருடன் (karuNai mrugEnthra anbarudan) : The compassionate sage, Vyagrapadar, the tiger-footed one, கருணை நிறைந்த புலிக்கால் கொண்ட வியாக்ரபாதருடன்,

உரகேந்த்ரர் கண்ட கடவுள் நடேந்த்ரர் மைந்த (uragEnthrar kaNda kadavuL natEnthrar maintha) : and the Great Serpent King, Sage Pathanjali, witnessed the great cosmic dance of Nataraja. You are the son of that NatarAja; சர்ப்ப சிரேஷ்டரான பதஞ்சலி முநிவரும் தரிசித்த நடராஜரின் மகனே,

வரை சாடும் கலப ககேந்த்ர (varai sAdum kalapa kagendra) : The thick feathers of Your Peacock are capable of smashing the mountains to pieces! மலைகளைத் தூளாக்கும் தோகை உடைய மயில் வாகனனே, கலப ககேந்த்ர --- ககம் - பறவை. பறவைகளில் தலை சிறந்தது மயில். இது ஓம் என்ற பிரணவ வடிவானது.

தந்த்ர அரச (kEnthra thanthra arasa) : You are well-versed in literature and agamas, Oh King! இலக்கிய, ஆகம நூல்களில் வல்லவனே, அரசனே, தந்திரம் - ஆகமம். ஆகம நூல்களில் வல்லவர் முருகர்.

நிசே(ஜே)ந்த்ர கந்த (nisEnthra kantha) : You are the greatest preserver of Truth, Oh Kantha! சத்திய சிரேஷ்டனாகிய மெய்ப்பொருளே, கந்தனே,

குலிச கர இந்த்ரர் தங்கள் பெருமாளே. (kulisa kara inthrar thangaL perumALE.) : You are the Lord worshipped by all IndrAs who wield the weapon Vajra, Oh Great One! வஜ்ராயுதத்தைக் கையில் கொண்ட தேவேந்திரர்களுக்குப் பெருமாளே. குலிசம் (kulisam) : வஜ்ராயுதம்;

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே