Posts

Showing posts from September, 2016

375. தரணிமிசை

ராகம் : அமிர்தவர்ஷிணி சதுஸ்ர த்ருவம் கண்ட நடை தரணிமிசை அனையினிட வுந்தியின் வந்துகுந் துளிபயறு கழலினிய அண்டமுங் கொண்டதின் தசையுதிர நிணநிறைய அங்கமுந் தங்கவொன் பதுவாயுந் தருகரமொ டினியபத முங்கொடங் கொன்பதும் பெருகியொரு பதினவனி வந்துகண் டன்புடன் தநயனென நடைபழகி மங்கைதன் சிங்கியின் வசமாகித் திரிகியுடல் வளையநடை தண்டுடன் சென்றுபின் கிடையெனவு மருவிமனை முந்திவந் தந்தகன் சிதறுவுயிர் பிணமெனவெ மைந்தரும் பந்துவும் அயர்வாகிச் செடமிதனை யெடுமெடுமி னென்றுகொண் டன்புடன் சுடலைமிசை யெரியினிட வெந்துபின் சிந்திடுஞ் செனனமிது தவிரஇரு தண்டையுங் கொண்டபைங் கழல்தாராய்

374. தத்தனமும் அடிமை

ராகம் : சுத்த சாவேரி தாளம் : ஆதி தத்த னமுமடிமை சுற்ற மொடுபுதல்வர் தக்க மனையினமு மனைவாழ்வுந் தப்பு நிலைமையணு கைக்கு வரவிரகு தைக்கு மயல்நினைவு குறுகாமுன் பத்தி யுடனுருகி நித்த முனதடிகள் பற்று மருள்நினைவு தருவாயே பத்து முடியுருளு வித்த பகழியினர் பச்சை நிறமுகிலின் மருகோனே

373. தசையும் உதிரமும்

ராகம் : பாகேஸ்ரீ அங்கதாளம் ( 7½) 1½ + 2 + 2 + 2 தசையு முதிரமு நிணமொடு செருமிய கரும கிருமிக ளொழுகிய பழகிய சடல வுடல்கடை சுடலையி லிடுசிறு குடில்பேணுஞ் சகல கருமிகள் சருவிய சமயிகள் சரியை கிரியைகள் தவமெனு மவர்சிலர் சவலை யறிவினர் நெறியினை விடஇனி யடியேனுக் கிசைய இதுபொரு ளெனஅறி வுறவொரு வசன முறஇரு வினையற மலமற இரவு பகலற எனதற நினதற அநுபூதி இனிமை தருமொரு தனிமையை மறைகளின் இறுதி யறுதியி டவரிய பெறுதியை இருமை யொருமையில் பெருமையை வெளிபட மொழிவாயே

372. ஞானா விபூஷணி

ராகம் : கானடா அங்க தாளம் 2½ + 2 + 2 + 2 (8½) ஞானாவி பூஷணி காரணி காரணி காமாவி மோகினி வாகினி யாமளை மாமாயி பார்வதி தேவிகு ணாதரி உமையாள்தன் நாதாக்ரு பாகர தேசிகர் தேசிக வேதாக மேயருள் தேவர்கள் தேவந லீசாச டாபர மேசர்சர் வேசுரி முருகோனே தேனார்மொ ழீவளி நாயகி நாயக வானாடு ளோர்தொழு மாமயில் வாகன சேணாளு மானின்ம னோகர மாகிய மணவாளா சீர்பாத சேகர னாகவு நாயினன் மோகாவி காரவி டாய்கெட ஓடவெ சீராக வேகலை யாலுனை ஓதவும் அருள்வாயே

371. செழுந்தாது

ராகம் : சுத்தசாவேரி அங்கதாளம் 1½ + 1½ + 2½ (5½) செழுந்தாது பார்மாது மரும்பாதி ரூபோடு சிறந்தியாதி லூமாசை யொழியாத திறம்பூத வேதாள னரும்பாவ மேகோடி செயுங்காய நோயாள னரகேழில் விழுந்தாழ வேமூழ்க இடுங்காலன் மேயாவி விடுங்கால மே நாயென் வினைபாவம் விரைந்தேக வேவாசி துரந்தோடி யேஞான விளம்போசை யேபேசி வரவேணும்

370. சூதின் உணவாசை

ராகம் : வாசஸ்பதி கண்டசாபு 1½ + 1 (2½) சூதினுண வாசைதனி லேசுழலு மீனதென தூசுவழ கானவடி வதனாலே சூதமுட னேருமென மாதர்நசை தேடுபொரு ளாசைதமி லேசுழல வருகாலன் ஆதிவிதி யோடுபிற ழாதவகை தேடியென தாவிதனை யேகுறுகி வருபோது ஆதிமுரு காதிமுரு காதிமுரு காஎனவு மாதிமுரு காநினைவு தருவாயே

369. சுருதி வெகுமுக

ராகம் : குந்தலவராளி அங்கதாளம் 1½ + 1½ + 1 + 1½ + 2 (7½) சுருதி வெகுமுகபு ராண கோடிகள் சரியை கிரியைமக யோக மோகிகள் துரித பரசமய பேத வாதிகள் என்றுமோடித் தொடர வுணரஅரி தாய தூரிய பொருளை யணுகியநு போக மானவை தொலைய இனியவொரு ஸ்வாமி யாகிய நின்ப்ரகாசங் கருதி யுருகியவி ரோதி யாயருள் பெருகு பரமசுக மாம கோததி கருணை யடியரொடு கூடியாடிம கிழ்ந்துநீபக் கனக மணிவயிர நூபு ராரிய கிரண சரண அபி ராம கோமள கமல யுகளமற வாது பாடநி னைந்திடாதோ

368. சுட்டது போலாசை

ராகம் : ஹிந்தோளம் தாளம் : சங்கீர்ணசாபு 3 + 1½ (4½) சுட்டதுபோ லாசை விட்டுலகா சார துக்கமிலா ஞான சுகமேவிச் சொற்கரணா தீத நிற்குணமூ டாடு சுத்தநிரா தார வெளிகாண மொட்டலர்வா ரீச சக்ரசடா தார முட்டவுமீ தேறி மதிமீதாய் முப்பதுமா றாறு முப்பதும்வே றான முத்திரையா மோன மடைவேனோ

367. சீதமலம் வெப்பு

ராகம் : பீம்ப்ளாஸ் தாளம் : ஆதி சீதமலம் வெப்பு வாதமிகு பித்த மானபிணி சுற்றி யுடலூடே சேருமுயிர் தப்பி யேகும்வண மிக்க தீதுவிளை விக்க வருபோதில் தாதையொடு மக்கள் நீதியொடு துக்க சாகரம தற்கு ளழியாமுன் தாரணி தனக்கு ளாரண முரைத்த தாள்தர நினைத்து வரவேணும்

366. சிவஞான புண்டரிக

ராகம் : கல்யாணி கண்டசாபு (2½) சிவஞான புண்டரிக மலர்மாது டன்கலவி சிவபோக மன்பருக அறியாமற் செகமீது ழன்றுமல வடிவாயி ருந்துபொது திகழ்மாதர் பின்செருமி யழிவேனோ தவமாத வங்கள்பயில் அடியார்க ணங்களொடு தயவாய்ம கிழ்ந்துதினம் விளையாடத் தமியேன்ம லங்களிரு வினைநோயி டிந்தலற ததிநாளும் வந்ததென்முன் வரவேணும்

365. சாங்கரி பாடியிட

ராகம் : வாசஸ்பதி தாளம் : சங்கீர்ணசாபு 2 + 1½ + 1 (4½) சாங்கரி பாடியிட வோங்கிய ஞானசுக தாண்டவ மாடியவர் வடிவான சாந்தம தீதமுணர் கூந்தம சாதியவர் தாங்களு ஞானமுற வடியேனுந் தூங்கிய பார்வையொடு தாங்கிய வாயுவொடு தோன்றிய சோதியொடு சிவயோகந் தூண்டிய சீவனொடு வேண்டிய காலமொடு சோம்பினில் வாழும்வகை அருளாதோ

364. சலமலம் அசுத்த

ராகம் : குந்தலவராளி அங்கதாளம் (5½) 4 + 1½ சலமல மசுத்த மிக்க தசைகுரு தியத்தி மொய்த்த தடியுடல் தனக்கு ளுற்று மிகுமாயம் சகலமு மியற்றி மத்த மிகுமிரு தடக்கை யத்தி தனிலுரு மிகுத்து மக்க ளொடுதாரம் கலனணி துகிற்கள் கற்பி னொடுகுல மனைத்து முற்றி கருவழி யவத்தி லுற்று மகிழ்வாகிக் கலைபல பிடித்து நித்த மலைபடு மநர்த்த முற்றி கடுவினை தனக்குள் நிற்ப தொழியாதோ