436. புனமடந்தை


ராகம் : சங்கராபரணம் தாளம்: ஆதி - 2 களை (16)
புனமடந் தைக்குத் தக்கபு யத்தன்
குமரனென் றெத்திப் பத்தர்து திக்கும்
பொருளைநெஞ் சத்துக் கற்பனை முற்றும்பிறிதேதும்
புகலுமெண் பத்தெட் டெட்டியல் தத்வம்
சகலமும் பற்றிப் பற்றற நிற்கும்
பொதுவையென் றொக்கத் தக்கதொ ரத்தந்தனைநாளும்
சினமுடன் தர்க்கித் துச்சிலு கிக்கொண்
டறுவருங் கைக்குத் திட்டொரு வர்க்குந்
தெரிவரும் சத்யத் தைத்தெரி சித்துன்செயல்பாடித்
திசைதொறுங் கற்பிக் கைக்கினி யற்பந்
திருவுளம் பற்றிச் செச்சைம ணக்குஞ்
சிறுசதங் கைப்பொற் பத்மமெ னக்கென்றருள்வாயே
கனபெருந் தொப்பைக் கெட்பொரி யப்பம்
கனிகிழங் கிக்குச் சர்க்கரை முக்கண்
கடலைகண் டப்பிப் பிட்டொடு மொக்கும்திருவாயன்
கவளதுங் கக்கைக் கற்பக முக்கண்
திகழுநங் கொற்றத் தொற்றைம ருப்பன்
கரிமுகன் சித்ரப் பொற்புகர் வெற்பன் றனையீனும்
பனவியொன் றெட்டுச் சக்ரத லப்பெண்
கவுரிசெம் பொற்பட் டுத்தரி யப்பெண்
பழயஅண் டத்தைப் பெற்றம டப்பெண் பணிவாரைப்
பவதரங் கத்தைத் தப்பநி றுத்தும்
பவதிகம் பர்க்குப் புக்கவள் பக்கம்
பயில்வரம் பெற்றுக் கச்சியில் நிற்கும்பெருமாளே.

Learn The Song



Raga Shankarabaranam By VoxGuru Rathna Prabha & Pratibha Sarathy (29th mela)

Arohanam: S R2 G3 M1 P D2 N3 S    Avarohanam: S N3 D2 P M1 G3 R2 S


Paraphrase

புன மடந்தைக்கு தக்க புயத்தன் (puna madanthaikkuth thakka buyaththan) : "He has the most appropriate shoulders suitable for VaLLi, the damsel of the millet field; தினைப்புனத்து மடந்தையாகிய வள்ளிக்கு ஏற்றதான புயங்களை உடையவன்,

குமரன் என்று எத்திப் பத்தர் துதிக்கும் பொருளை (kumaran enRu eththip paththar thuthikkum poruLai) : He is Kumaran" - so praise His devotees paying obeisance; The object of such worship (Murugan); குமரன் என்று போற்றி பக்தர்கள் துதிக்கின்ற பொருளை,

நெஞ்சத்து கற்பனை முற்றும் பிறிது ஏதும் (nenjaththuk kaRpanai mutRum piRithu Ethum) : represents the entire range of imagination occurring in my mind and extends beyond them; மனத்தில் கொண்ட கற்பனைகள் முழுமையும், பிறவான பலவற்றையும்,

புகலும் எண்பத்து எட்டு எட்டு இயல் தத்(து)வம் சகலமும் பற்றி (pugalum eNbaththettu ettu iyal thathvam sakalamum patRi): It is attached to the celebrated ninety-six tenets; புகழ்ந்து சொல்லப்படும் தொண்ணூற்றாறு வகையான தத் துவ உண்மைகளும் ஆக எல்லாவற்றையும் பற்றியும்,

பற்று அற நிற்கும் பொதுவை (patRaRa niRkum pothuvai) : yet this universal substance stands detached from those tenets; பற்று இல்லாமலும் நிற்கும் பொதுப் பொருளை,

என்று ஒக்கத் தக்கது ஓர் அத்தம் தனை (enRu okkath thakkathu Or aththan thanai) : Its luminosity is comparable to that of the sun, and It is a matchless treasure; சூரியனுக்கு ஒப்பாகத் தக்க (பேரொளியைக் கொண்ட) ஒப்பற்றச் செல்வத்தை, என்று (endru) : sun; ஓர் அத்தம்/அற்றம் (Or aththam/atram): incomparable object; அத்தம் என்றால் செல்வம்; அற்றம் என்று எடுத்துக் கொண்டால் 'இல்லாதது' அதாவது 'ஒப்பற்றது';

நாளும் சினமுடன் தர்க்கித்துச் சிலுக்கிக் கொண்டு (nALum sinamudan tharkkiththu silukkik koNdu) : Every day, people argue and fight about It animatedly, with a lot of ire and fury; நாள் தோறும் கோபத்துடன் வாதாடிப் பேசி சண்டையிட்டுக் கொண்டு

அறுவரும் கைக்குத்து இட்டு (aRuvarum kaikkuththu ittu) : people belonging to the six different religions exchange blows while debating about It; அறு வகைச் சமயத்தாரும் கைக் குத்துடன் வாதம் செய்து,

ஒருவர்க்கும் தெரி அரும் சத்(தி)யத்தை தெரிசித்து (oruvarkkum theri arum sathyaththai therisiththu) : yet no one is able to discern It, which is True Knowledge. I wish to have the vision of that Truth, ஒருவருக்கும் தெரிதற்கு அரிதான சத்தியப் பொருளை தரிசனம் செய்து,

உன் செயல் பாடி (un seyal pAdi) : sing of Your miraculous deeds and உன் திருவிளையாடல்களைப் பாடி,

திசைதொறும் கற்பிக்கைக்கு (thisaithoRum kaRpikkaikku) : preach about You to everyone in all the eight directions திக்குகள் தோறும் (உள்ள யாவருக்கும்) எடுத்து உபதேசிக்க,

இனி அற்பம் திரு உ(ள்)ளம் பற்றி (ini aRpan thiruvuLam patRi ) : Now it is Your turn to have mercy on this miserable lowly self; இனி மேல் நீ சற்று தயை கூர்ந்து, அற்பம் = சிறிது

செச்சை மணக்கும் சிறு சதங்கைப் பொன் பத்மம் எனக்கு என்று அருள்வாயே ( sechai maNakkum siRu sathangaip poR pathmam enakku enRaruLvAyE) : When do You propose to bless me with Your hallowed lotus feet, fragrant with vetchi flowers and adorned with lilting anklets? வெட்சி மாலை மணம் வீசும், சிறிய சதங்கை அணிந்துள்ள உன் அழகிய திருவடித் தாமரையை எனக்கு எப்போது தந்து அருள்வாய்?

கனப் பெரும் தொப்பைக்கு எள் பொரி அப்பம் கனி கிழங்கு இக்கு (gana perum thoppaikku etpori appam kani kizhangu ikku) : He has a big belly into which He feeds sesame seeds, rice crispies, sweet rice-cakes, fruits, roots, sugarcane, கனத்த பெரிய வயிற்றில் எள், பொரி, அப்பம், பழம், கிழங்கு, கரும்பு இவைகளையும்,

சர்க்கரை முக்கண் கடலை கண்டு அப்பி பிட்டொடு மொக்கும் திரு வாயன் (sarkkarai mukkaN kadalaikaN dappip pittodu mokkum thiruvAyan) : jaggery, coconut, peanuts, sugar candy and pittu (sweet fried rice powder), all of which He swallows in a gulp; சர்க்கரை, தேங்காய், கடலை, கற்கண்டு இவைகளையும் வாரி உண்டு பிட்டுடன் விழுங்கும் திரு வாயை உடையவர்,

கவள(ம்) துங்கக் கை கற்பக(ம்) முக்கண் (kavaLam thunga kkaik kaRpaka mukkaN) : He tosses down cooked rice with His great snout; He is KaRpaga VinAyagar, like the wish-yielding celestial tree; He has three eyes; சோற்றுத் திரளை உண்ணும் சிறந்த துதிக்கையை உடைய கற்பக விநாயகர் (கற்பகத்தரு போல கேட்டதைக் கொடுப்பவர்), முக்கண்ணர், கவள(ம்) துங்கக் கை (kavaLam thungakkai): சோற்றுக் கவளத்தை உண்ணும் தூய தும்பிக்கையை உடையவர்;

திகழு(ம்) நம் கொற்றத்து ஒற்றை மருப்பன் கரி முகன் (thikazhum nam kotRaththu otRai maruppan karimugan) : He is our celebrated valorous Lord with the single tusk; He has an elephant's face; விளங்கும் நமது வீரம் வாய்ந்த ஒற்றைக் கொம்பர், யானை முகத்தினர்,

சித்ரப் பொன் புகர் வெற்பன் தனை ஈனும் பனவி (chithrap poR pugar veRpan thanai eenum panavi) : He has pretty dots on His forehead; He is huge like a mountain; that Ganapathi was delivered by the warm-hearted Mother; அழகிய, பொலிவுள்ள (மத்தகத்தில்) புள்ளிகளை உடைய மலை போன்ற கணபதியைப் பெற்ற அந்தணி,

ஒன்று எட்டுச் சக்ரத் தலப் பெண் (onRu ettu chakra thalap peN) : She presides over (1+8) nine chakrAs; (1+8) ஒன்பது கோணங்களை உடைய சக்ரத்தில் (நவாவரணத்தில்) வீற்றிருக்கும் பெண்,

கவுரி செம் பொன் பட்டுத் தரி அப்பெண் (gavuri sem poR pattuth thari appeN) : She is Gowri donning a beautiful reddish silk sari; கெளரி, செவ்விய அழகிய பட்டாலாகிய மேலாடை அணிந்துள்ள அந்தப் பெண்,

பழய அண்டத்தைப் பெற்ற மடப் பெண் (pazhaya aNdaththaip petRa madap peN) : She is primordial; She created the entire universe; பழையவளும், அண்டங்களைப் பெற்றவளுமாகிய இளம் பெண்,

பணிவாரை பவ தரங்கத்தைத் தப்ப நிறுத்தும் பவதி (paNivArai bava tharangaththai thappa niRuththum bavathi) : She is Bhagavathi (PArvathi) capable of dispelling the wavy sea of birth from Her devotees; தன்னைப் பணிபவர்களுடைய பிறப்பு என்னும் அலை கடலை விலக்கி நிறுத்தும் பகவதி (பார்வதி),

கம்பர்க்குப் புக்கவள் பக்கம் (kambarkkup pukkavaL pakkam) : EkAmabaranAthar (Lord SivA) is Her consort; You are seated very close to that UmAdEvi. ஏகாம்பர நாதரைக் கணவராக அடைந்தவள் ஆகிய உமா தேவிக்குப் பக்கத்தில் அமர்ந்து,

பயில் வரம் பெற்றுக் கச்சியில் நிற்கும் பெருமாளே.(payil varam petRuk kacchiyil niRkum perumALE.) : and obtained the requisite boon at KAnchipuram, Your abode, Oh Great One! வரத்தைப் பெற்று, காஞ்சீபுரத்தில் நின்றருளும் பெருமாளே.
Despite a request conveyed through a messenger by Lord SivA to release BrahmA from Murugan's prison, Murugan refused to do so. Only after His father's personal appearance and fervent appeal, Murugan released BrahmA. As atonement for this insubordination, Murugan had to do penance at KumarakOttam in KAnchipuram and obtained the boon from His parents.

தந்தை சொல்லி அனுப்பியும் பிரமனைச் சிறையினின்று விடாது, பின்னர் அவர் நேரில் வந்து சொல்லிய பின் பிரமனை முருகன் விடுத்தார். இந்த குற்றம் நீங்க, முருகவேள் காஞ்சீபுரத்தில் உள்ள குமரக் கோட்டத்தில் தவம் புரிந்து, தோஷம் நீங்கி வரம் பெற்றார்.

குமரக்கோட்டத்து முருகன் கோயில் காஞ்சியில் காமாட்சி அம்மன் கோயிலுக்கும், ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கும் நடுவில் சோமாஸ்கந்தர் அமைப்பில் அமைந்துள்ளது. இத்தல முருகனே, "திகட சக்கரம்' என பூசாரியான கச்சியப்ப சிவாச்சாரியருக்கு அடியெடுத்துக் கொடுத்து "கந்தபுராணம்' எழுதுமாறு செய்தான். கந்தபுராணம் அரங்கேறிய போது ஏற்பட்ட ஐயத்தையும் தீர்த்து வைத்தான். குமரக்கோட்டத்திற்கு வழி தெரியாமல் நின்ற பாம்பன் சுவாமிகளுக்கு முருகனே சிறுவன் வடிவில் வந்து வழிகாட்டினான்.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே