435. புரைபடும்


ராகம்: ஹிந்தோளம்தாளம்: ஆதி
புரைபடுஞ் செற்றக் குற்றம னத்தன்
தவமிலன் சுத்தச் சத்யஅ சத்யன்
புகலிலன் சுற்றச் செத்தையுள் நிற்குந் துரிசாளன்
பொறையிலன் கொத்துத் தத்வவி கற்பஞ்
சகலமும் பற்றிப் பற்றற நிற்கும்
பொருளுடன் பற்றுச் சற்றுமில் வெற்றன்கொடியேனின்
கரையறுஞ் சித்ரச் சொற்புகழ் கற்குங்
கலையிலன் கட்டைப் புத்தியன் மட்டன்
கதியிலன் செச்சைப் பொற்புய வெற்புங்கதிர்வேலுங்
கதிரையுஞ் சக்ரப் பொற்றையு மற்றும்
பதிகளும் பொற்புக் கச்சியு முற்றுங்
கனவிலுஞ் சித்தத் திற்கரு திக்கொண்டடைவேனோ
குரைதருஞ் சுற்றுச் சத்தச முத்ரங்
கதறிவெந் துட்கக் கட்புர துட்டன்
குலமடங் கக்கெட் டொட்டொழி யச்சென்றொருநேமிக்
குவடொதுங் கச்சொர்க் கத்தரி டுக்கங்
கெடநடுங் கத்திக் கிற்கிரி வர்க்கங்
குலிசதுங் கக்கைக் கொற்றவ னத்தங்குடியேறத்
தரைவிசும் பைச்சிட் டித்தஇ ருக்கன்
சதுர்முகன் சிட்சைப் பட்டொழி யச்சந்
ததமும்வந் திக்கப் பெற்றவர் தத்தம்பகையோடத்
தகையதண் டைப்பொற் சித்ரவி சித்ரந்
தருசதங் கைக்கொத் தொத்துமு ழக்குஞ்
சரணகஞ் சத்திற் பொற்கழல் கட்டும்பெருமாளே.

Learn The Song



Paraphrase

புரை படும் செற்றக் குற்ற மனத்தன் (puraipadum setRak kutRa manaththan) : My mind is stained with several blemishes like uncontrollable anger; தணியாத கோபம் முதலிய குற்றங்கள் யாவும் உள்ள கறை படிந்த மனத்தன், புரை (purai) : blemish, குற்றம்; செற்றம் (setram) : anger, தணியாத கோபம்;

தவமிலன் சுத்தச் சத்ய அசத்யன் (thavamilan suththa sathya asathyan) : I have never done any penance; I utter unadulterated lies at all times; தவம் ஏதும் இல்லாதவன், கலப்பில்லாத பொய்யையே பேசுபவன்,

புகலிலன் சுற்றச் செத்தையுள் நிற்குந் துரிசாளன் (pugalilan sutRa seththaiyuL niRkum thurisALan) : I have no other refuge; I am like the dirt caught in the vortex of the garbage swirling around in the wind; வேறு திக்கற்றவன், காற்றில் சுழலும் குப்பைக்குள்ளே நிற்கும் அழுக்கைப் போன்றவன்; செத்தை = குப்பை, உலர்ந்த சருகு முதலியன; துரிசாளன் (thurisALan) : துக்கத்தை உடையவன்;

பொறையிலன் (poRaiyilan) : I have no patience; பொறுமையே இல்லாதவன்,

கொத்துத் தத்வ விகற்பம் சகலமும் பற்றி பற்றற நிற்கும் பொருள் உடன் (koththu thathva vigaRpam sagalamum patRi) : even though the Eternal Truth is attached to diverse truths or objects, It remains detached; பலதரப்பட்ட உண்மைகளின் வேறுபாடுகள் யாவையும் பற்றி நின்றும், பற்று இன்றி நிற்கின்ற பொருளாகிய மெய்ப் பொருள் மேல்

பற்றுச் சற்றுமில் வெற்றன் (patRaRa niRkum poruLudan patRu chatrumil vetRan) : to this Eternal Truth(God), I have no attachment; I am such a useless person; பற்று இன்றி நிற்கிற மெய்ப்பொருள் (கடவுள்) மேல் விருப்பம் சற்றும் இல்லாத பயனற்றவன்,

கொடியேன் நின் கரை அறும் சித்ரச் சொற் புகழ் கற்குங் கலையிலன் (kodiyEn nin karaiyaRum chithra soR pugazh kaRkum kalaiyilan) : I am a wicked person; I do not have any aesthetic sense to learn about Your boundless glory; பொல்லாதவன், உன் எல்லையற்ற அழகிய புகழைக் கற்கும் கலை ஞானம் சிறிதும் இல்லாதவன், கரை அறும் (karai aRum) : limitless, எல்லை இல்லாத

கட்டைப் புத்தியன் மட்டன் (kattai buththiyan mattan) : My intellect is far too shallow; I am debased; and குறுகிய அறிவை உடையவன், மட்டமானவன்,

கதியிலன் (gathiyilan) : I am not destined to attain salvation. நற்கதி அடையும் பாக்கியம் இல்லாதவனாகிய அடியேன்,

செச்சைப் பொற் புய வெற்பும் கதிர்வேலும் (sechaip poRpuya veRpum kathir vElum) : Your mountain-like shoulders adorned with garlands of vetchi flowers, Your dazzling spear, வெட்சிமலர் அணிந்த அழகிய மலைபோன்ற தோள்களையும், ஒளி வீசுகின்ற வேலாயுதத்தையும்,

கதிரையும் சக்ரப் பொற்றையு மற்றும் பதிகளும் பொற்புக் கச்சியு (kathiraiyum chakrap potRaiyu matRum pathigaLum poRpuk kachiyu) : Your seats in KadhirgAmam, Vattamalai, other abodes and beautiful KAnchipuram கதிர்காமத்தையும், வட்டமலையையும், மற்றைய திருத்தலங்களையும், அழகிய காஞ்சீபுரத்தையும்; சக்ரப் பொற்றை - சக்கரவாளகிரி, சக்கரம் - பூமி; பொற்றை - மலை, பூமியிலுள்ள மலைகள்: சக்கரம் பாம்பின் படம் என்னும் பொருளில் சக்ரப் பொற்றை-திருச்செங்கோடு (சர்ப்பகிரி)

முற்றும் கனவிலும் சித்தத்தில் கருதிக்கொண்டு அடைவேனோ ( mutRum kanavilum chiththaththil karuthik koNdu adaivEnO) : will I ever contemplate on these abodes, totally absorbed in their thoughts even in my dreams, and attain You? முழுக்க முழுக்க, கனவிலும் மனத்திலே வைத்துத் தியானித்துக் கொண்டு உன்னைச் சேரமாட்டேனோ?

குரை தரும் சுற்றுச் சத்த சமுத்ரம் கதறி வெந்து உட்க (kurai tharum sutRu saththa samuthram kathaRi venthu utka) : The seven roaring oceans surrounding the earth wailed, boiled over, and were dried; பூமியைச் சுற்றியும் ஒலிக்கின்ற ஏழு சமுத்திரங்களும் கதறி, வெந்து போய் வற்றிவிடவும், குரை தரும் (kurai tharum) : roaring, ஒலிக்கின்றதும்; சத்(ப்)த சமுத்ரம் (saththa samudram) : seven seas;

கட்புர துட்டன் குலமடங்கக் கெட்டு ஒட்டொழிய (katpura thuttan kulamadangak kettu ottozhiya) : the wicked demon SUran, who ruled the great city (of Veeramahendrapuri), was annihilated with his entire clan; பெருமை மிக்க ஊரான வீரமகேந்திரபுரியை ஆண்ட துஷ்டனான சூரனும் அவனது குலம் முழுவதும் அழிந்து அனைவரும் ஒழியவும், கண் புரம் (kaN puram) : பெருமை மிக்க ஊர், வீரமகேந்திரபுரி);

சென்று ஒரு நேமிக் குவடு ஒதுங்க (senRu oru nEmik kuvadu othunga) : the unique mount ChakravALam was displaced from its original position; ஒப்பற்ற சக்ரவாளக்கிரி தன் இடம் விட்டுப் போய் ஓரமாய் ஒதுங்கவும், நேமி = வட்டம், தேரின் சக்கரம், தேருருளை, சக்கராயுதம்; குவடு = மலை;

சொர்க்கத்தர் இடுக்கம் கெட (sorkkaththar idukkam keda) : the miseries of the celestials were removed; தேவர்களின் துயரங்கள் யாவும் நீங்கவும்,

நடுங்கத் திக்கிற் கிரி வர்க்கம் (nadungath thikkiR giri vargam) : the group of renowned mountains in all the eight directions trembled; அஷ்ட திக்கிலும் உள்ள குலகிரிக் கூட்டங்கள் யாவும் நடுங்கவும்,

குலிச துங்கக் கைக் கொற்றவன் நத்தம் குடியேற (kulisa thungak kai kotRavan naththam kudiyERa) : IndrA, holding the weapon vajrAyutham in His holy hand, was able to resettle in His home at AmarApuri; வஜ்ராயுதத்தைத் தன் தூய கரத்தில் வைத்துள்ள இந்திரன் தனது ஊராகிய அமராபுரியில் மீண்டும் குடியேறவும், கொற்றவன் (kotravan) : Indra; நத்தம் (naththam) : town, ஊர்;

தரை விசும்பைச் சிட்டித்த இருக்கன் சதுர்முகன் சிட்சைப் பட்டொழிய (tharai visumbai sittiththa irukkan chathur mugan sitchaip pattozhiya) : BrahmA, the four-faced God who is an expert in Rig VedA and who has created the earth and the sky, fled after being punished (by knocks on His heads); விசும்பு (visumbu) : sky; பூமியையும் ஆகாயத்தையும் படைத்த, 'ரிக்கு' வேதத்தில் வல்லவனான நான்முகன் பிரமன் தண்டிக்கப்பட்டு (குட்டப்பட்டு) விலகவும்,

சந்ததமும் வந்திக்கப் பெற்றவர் தத்தம் பகையோட (santhathamum vanthikkap petRavar thaththam pagaiyOda) : the enemies of Your devotees who always worship You were banished, எப்போதும் வணங்குகின்ற அடியார்களின் பகைவர்கள் யாவரும் ஓட்டம் பிடிக்கவும்,

தகைய தண்டைப் பொற் சித்ர விசித்ரம் தரு சதங்கைக் கொத்து ஒத்து முழக்கும் சரண கஞ்சத்தில் பொற்கழல் கட்டும் பெருமாளே. (thagaiya thaNdaip poR chithra vichithram tharu sathangaik koththu oththu muzhakkum saraNa kanjaththiR poRkazhal kattum perumALE.) : when You tie the pretty anklet, thaNdai, and the bunches of golden sathangai (a unique anklet with intricate designs) making lilting sounds in a synchronised meter, on Your lotus feet, Oh Great One! அழகிய தண்டையும், பொன்னாலான அழகிய விசித்ரமான வடிவமுள்ள சதங்கைக் கூட்டமும் தாள ஒற்றுமையுடன் ஒலி செய்யவும் பாதத் தாமரைகளில் அழகிய வீரக் கழலைக் கட்டிய பெருமாளே. கஞ்சம் (kanjam) : lotus;

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே