432. தலைவலை


ராகம் : சுத்த தன்யாசிதாளம் : ஆதி
தலைவலை யத்துத் தரம்பெ றும்பல
புலவர் மதிக்கச் சிகண்டி குன்றெறி
தருமயில் செச்சைப் புயங்க யங்குறவஞ்சியோடு
தமனிய முத்துச் சதங்கை கிண்கிணி
தழுவிய செக்கச் சிவந்த பங்கய
சரணமும் வைத்துப் பெரும்ப்ர பந்தம்வி ளம்புகாளப்
புலவனெ னத்தத் துவந்த ரந்தெரி
தலைவனெ னத்தக் கறஞ்செ யுங்குண
புருஷனெ னப்பொற் பதந்த ருஞ்சனனம்பெறாதோ
பொறையனெ னப்பொய்ப் ப்ரபஞ்ச மஞ்சிய
துறவனெ னத்திக் கியம்பு கின்றது
புதுமைய லச்சிற் பரம்பொ ருந்துகைதந்திடாதோ
குலசயி லத்துப் பிறந்த பெண்கொடி
யுலகடை யப்பெற் றவுந்தி யந்தணி
குறைவற முப்பத் திரண்ட றம்புரிகின்றபேதை
குணதரி சக்ரப் ப்ரசண்ட சங்கரி
கணபண ரத்நப் புயங்க கங்கணி
குவடுகு னித்துப் புரஞ்சு டுஞ்சினவஞ்சிநீலி
கலபவி சித்ரச் சிகண்டி சுந்தரி
கடியவி டத்தைப் பொதிந்த கந்தரி
கருணைவி ழிக்கற் பகந்தி கம்பரியெங்களாயி
கருதிய பத்தர்க் கிரங்கு மம்பிகை
சுருதிது திக்கப் படுந்த்ரி யம்பகி
கவுரிதி ருக்கொட் டமர்ந்த இந்திரர் தம்பிரானே.

Learn The Song



Know the ragam Suddha Dhanyasi (Janyam of 22nd mela Karaharapriya)
Arohanam: S G2 M1 P N2 S    Avarohanam: S N2 P M1 G2 S


Paraphrase

ஸ்ரேஷ்ட ஸ்தானத்தில் வைக்க தகுதி பெற்றுள்ள பல புலவர்கள் போற்றித் துதிக்கும் தங்களது மயிலையும், கிரெளஞ்சமலையைப் பிளந்து எறிந்த வேலாயுதத்தையும், வெட்சி மாலையை அணிந்த திருத்தோள்களையும், கய வஞ்சியாகிய தேவயானையையும், குறவஞ்சியாகிய வள்ளியம்மையையும், பொன் சங்கிலி, முத்துச் சலங்கை ஆகியவை சூழ்ந்துள்ள மிகச் சிவந்த தாமரை மலர் போன்ற திருவடியையும் பாட்டுக்குப் பொருளாக அமைத்து, பெரிய பாமாலைகளைப் பாடவல்ல, கரிய மேகம் மழை பொழிவது போலப் பாடும் புலவன் இவன் என்று சொல்லும்படியும், உண்மை ஞானம் பெற்ற தலைவன் இவன் எனக் கூறும்படியும், தக்க தருமங்களைச் செய்யும் நற்குணமுடைய சத்புருஷன் இவன் என்றும் உலகோர் கூறும்படியும், மேலான பதவியைத் தருகின்றதான பிறப்பை என் ஆன்மா பெறாதோ?

The poet wonders whether his birth/life would ever get the exalted status where people would extol him as a philanthropist, a self-realized soul, and a 'kALappulavan' who can pour out poetry like a dark black cloud praising Lord's peacock, His 'vel', His shoulders adorned by 'vetchi' flowers, His consorts Valli and Deivayaanai, and His twin feet adorned with anklets. But being conferred such titles will not suffice for the poet; so he prays for the supreme boon of becoming one with the Lord and attain liberation.

தலை வலையத்துத் தரம் பெறும் பல புலவர் மதிக்கச் சிகண்டி (thalaivalaiyaththu tharam peRum pala pulavar mathikka sikaNdi) : Your Peacock that is praised by many poets of the highest calibre; முதல் வகுப்பில் வைக்கத்தக்க தகுதி பெற்ற பல புலவர்கள் போற்றித் துதிக்கும் உனது மயிலையும்,

குன்றெறி தரும் அயில் (kunRu eRi tharu mayil) : Your Spear that You flung at and shattered Mount Krouncha; கிரெளஞ்ச மலையைப் பிளந்து எறிந்த உன் வேலையும்,

செச்சைப் புயம் (sechaip buyam) : Your shoulders that are adorned with the garland of vetchai flowers; வெட்சி மாலையைப் புனைந்த உன் திருப்புயங்களையும்,

கயம் குற வஞ்சியோடு (kayam kuRa vanjiyOdu) : Your two consorts, namely DEvayAnai and VaLLi, the damsel of the KuRavAs; (கயவஞ்சி) தேவயானையையும், குறவஞ்சி வள்ளியையும், க(ய/ஜ)ம் (gajam) : elephant;

தமனிய முத்துச் சதங்கை கிண்கிணி தழுவிய செக்கச் சிவந்த பங்கய சரணமும் (thamaniya muththu chathangai kiNkiNi thazhuviya chekka chivantha pangaya saraNamum) : and Your reddish lotus feet adorned with golden chains, anklets with pearls, and kiNkiNi (another lilting anklet) பொற்சங்கிலி, முத்துச் சலங்கை, கிண்கிணி ஆகியவை தழுவிய செக்கச் சிவந்த உனது சரணாம்புஜத்தையும்

வைத்துப் பெரும் ப்ரபந்தம் விளம்பு (vaiththup perum prabantham viLambu) : with these as subjects, he is capable of composing great songs; பாட்டுக்குப் பொருளாக வைத்து பெரிய பாமாலைகளைப் பாடவல்ல,

காளப் புலவனென ( kALap pulavan ena) : he is indeed a great poet like the dark clouds (in showering poems); கரிய மேகம் மழை பொழிவதுபோலப் பொழியும் புலவன் இவன் என்று சொல்லும்படியும்,

தத்துவம் தரம் தெரி தலைவனென (thaththuvam tharam theri thalaivan ena) : he is a leader who has attained true knowledge; உண்மை ஞானம் உணர்ந்த தலைவன் இவன் எனக் கூறும்படியும், தத் த்வம். உண்மைத் தன்மை.

தக்க அறம் செயும் குண புருஷனென ( thakkaRam cheyum guNa purushan ena) : and he is a paragon of virtues giving charity to worthy causes - with these words, the world should praise me. தக்க தர்மங்களைச் செய்யும் குணவானான சத்புருஷன் இவன் என்றும் உலகோர் கூறும்படியுமாக,

பொற் பதம் தரும் சனனம் பெறாதோ (poR patham tharum chananam peRAthO) : May I not be granted a birth in which I can attain Your golden feet? மேலான பதவியைத் தரும் பிறப்பை என் ஆத்மா பெறாதோ?

பொறையன் எனப் பொய்ப் ப்ரபஞ்சம் அஞ்சிய துறவன் என (poRaiyan ena poy prapanjam anjiya thuRavan ena) : "He is a forbearing person and he has renounced everything, dreading this world which is full of myths" இவன் பொறுமைசாலி என்றும், இந்தப் பொய்யுலகைக் கண்டு அஞ்சும் துறவி என்றும்,

திக்கு இயம்புகின்றது புதுமை அல (thikku iyambukinRathu puthumai ala) : It is no wonder that the people of the world from all the directions refer to me in the above terms. எல்லாத் திசைகளிலும் உள்ளோர் அடியேனைக் கூறுவது ஆச்சரியம் இல்லை.

சிற் பரம் பொருந்துகை தந்திடாதோ (chiR param porunthugai thanthidAthO ) : Will You graciously bless me to attain the blissful state that is beyond any knowledge? அறிவுக்கும் மேலான பதத்தில் சேரும் பேற்றை உன் திருவருள் தந்திடாதோ?

குல சயிலத்துப் பிறந்த பெண் கொடி (kula sayilaththup piRantha peN kodi) : She is the creeeper-like daughter born to the great Mount, HimavAn; சிறந்த மலையாகிய இமயமலைக்குப் பிறந்த கொடி போன்றவள்,

உலகு அடையப் பெற்ற உந்தி (ulagu adaiyap peRRa unthi) : In Her womb, the entire universe was conceived; உலகம் முழுவதையும் ஈன்றெடுத்த திருவயிற்றை உடையவள்,

The poet sees Lord Shiva as Devi — after all, Devi occupies Shiva's left half of the body; காமாட்சித் தாயை அருணகிரிநாதர் சிவனின் பெண்ணுருவாகவே பார்க்கிறார். அம்பிகையே அப்பனில் சரி பாதி

அந்தணி (anthaNi) : She has immense compassion; or, She recites the scriptures as a Brahmin lady; அழகிய தட்பத்தை (காருண்யத்தை) உடையவள்; அல்லது, அந்தணன் - மறையவன் - சிவனுக்கு மறையவன் என்றொரு பெயருமுண்டு. அதன் பொருள் வேதங்களானவன், வேதங்கள் ஓதுபவன், பசு பாசங்களை மறைத்தவன், மறைந்து நின்றருளுபவன்; அந்தணி - பெண்பால்

குறைவற முப்பத்திரண்டு அறம் புரிகின்ற பேதை (kuRaivaRa muppaththiraNdu aRam purikinRa pEthai) : She is the young damsel carrying out the thirty-two religious duties without any flaw; குறைவில்லாமல் முப்பத்திரண்டு அறங்களையும் முறையே புரியும் பாலாம்பிகை. பேதை என்றால் 5 வயது முதல் 7 வயது வரை உள்ள சிறுமி;

குணதரி சக்ரப் ப்ரசண்ட சங்கரி (guNathari chakrap prasaNda sankari) : She is the repository of all virtues; She is Sankari reigning with valour on all the chakrAs and yanthrAs (Seats of Goddess Shakthi); நற்குணங்களைத் தரித்தவள், மந்திர யந்திரத்தில் வீரத்துடன் வீற்றிருக்கும் சங்கரி,

கண பண ரத்நப் புயங்க கங்கணி (gaNa paNa rathnap puyanga kangaNi) : her bangles consist of multi-hooded serpents, holding precious gems; கூட்டமான படங்களையும், ரத்தினங்களையும் உள்ள சர்ப்பங்களைக் கைகளில் வளையல்களாகத் தரித்தவள்,

குவடு குனித்துப் புரம் சுடும் சின வஞ்சி ( kuvadu kuniththup puram chudun china vanji) : looking like a beautiful creeper vanji (rattan reed), but with intense rage, She bent Mount Meru as a bow to burn down the three mounts, Thiripuram; மேரு மலையை வில்லாக வளைத்து, திரிபுரத்தைச் சினத்துடன் எரித்த வஞ்சிக் கொடி போன்றவள்,

நீலி கலப விசித்ரச் சிகண்டி (neeli kalaba vichithra sikaNdi) : Her complexion is blue; She has the likeness of a peacock with beautiful feathers; நீல நிறத்தினள், தோகை மயிலின் அழகிய சாயலை உடையவள்,
அம்பிகை மயில் வடிவம் கொண்டு மயிலாப்பூரிலும், மாயூரத்திலும் சிவபெருமானை வழிபட்டாள்.
ஒரு முறை பார்வதிதேவிக்கு ஐந்தெழுத்து மந்திரத்தின் உட்பொருளை சிவபெருமான் உபதேசிக்கும் பொழுது அங்கு தோகை விரித்தாடிய மயில் அம்பிகையின் கவனத்தை ஈர்த்தது. கோபம் கொண்ட சிவனார் "மயிலுருக் கொண்டு மண்ணுலகம் செல்வாயாக!’’ என்று உமையவளை சபித்தார்.மயில் உருவத்தில் பூலோகம் வந்த பார்வதிதேவி, தொண்டை நாட்டில் புன்னை மரம் நிறைந்த சோலை ஒன்றில் லிங்கம் ஸ்தாபித்து வழிபட்டு விமோசனம் பெற்றாள். தற்காலம் மயிலாக வலம் வந்த மயிலையில் அன்னை கற்பகவல்லியாக அருள்பாலிக்கிறாள்.

இதே போல் தட்சன் மகளாக பிறந்து தாட்சாயினி என்ற பெயர் பெற்றதனை வெறுத்து அதனை நீக்கிக்கொள்ள நினைத்து, மயில் வடிவம் கொண்டு பூசித்த அம்பிகைக்கு ஆண் மயிலாக ஆடி அருளிய இடம் மாயவரம்.

சுந்தரி கடிய விடத்தைப் பொதிந்த கந்தரி (sunthari kadiya vidaththaip pothintha kanthari) : She is the most beautiful; In Her neck She holds the most virulent poison; பேரழகி, கொடிய விஷத்தைக் கழுத்திலே பொதிந்தவள், கந்தரம் = கழுத்து;

கருணை விழிக் கற்பகம் (karuNai vizhik kaRpagam) : She has eyes showering compassion; She is like the wish-yielding celestial tree, KaRpagam; கருணை பொழியும் விழிகளை உடையவள், கேட்ட வரம் நல்கும் கற்பகத் தரு,

திகம்பரி எங்கள் ஆயி (thigambari yengaL Ayi) : She wears as clothing all the eight directions; She is our Mother; திசைகளையே ஆடைகளாய் உடைய எங்கள் தாய்,

கருதிய பத்தர்க்கு இரங்கும் அம்பிகை (karuthiya paththarkku irangkum ambigai) : She is the Goddess showering grace upon all the devotees who think about Her; அவளை நினைத்த பக்தர்களுக்கு கருணை புரியும் அம்பிகை,

சுருதி துதிக்கப் படும் த்ரியம்பகி (suruthi thuthikkap padum thriyambaki) : She has three eyes (namely, the sun, the moon and fire) worshipped by all the four VEdAs; வேதங்களால் போற்றப்படும் முக்கண்களை (சூரியன், சந்திரன், அக்னி) உடையவள்,

கவுரி திருக்கொட்டமர்ந்த (gavuri thirukkottu amarntha) : and She is Gowri, KamAkshi, and in Her sacred temple at KAnchipuram, You are seated. (இத்தனை பெருமைகளை உடைய) கெளரியாகிய காமாக்ஷியின் கோயிலாகிய திருக்கோட்டத்தில் (காஞ்சீபுரத்தில்) வீற்றிருப்போனே, கவுரி திருக்கோட்டம் - காமக்கோட்டம்; கோட்டம் - கோயில்.

இந்திரர் தம்பிரானே.(inthirar thambirAnE.) : Oh Lord, You are the Great One worshipped by all the Heads of the Celestials! தேவர்களுக்கெல்லாம் தலைவர்களான இந்திரர்கள் வணங்கும் பெருமாளே.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே