431. செறிதரும்


ராகம்: ஷண்முகப்ரியாதாளம்: ஆதி
செறிதரும் செப்பத் துற்பல வெற்பும்
பிறிதுமங் கத்தைக் குற்றவி ருப்புஞ்
சிகரிதுண் டிக்கக் கற்றத னிச்செஞ்சுடர்வேலும்
திரள்புயங் கொத்துப் பட்டவ னைத்துந்
தெளியநெஞ் சத்துப் புற்றும யக்கம்
திகழ்ப்ரபஞ் சத்தைப் புற்புத மொக்கும்படிநாடும்
அறிவறிந் தத்தற் கற்றது செப்புங்
கடவுளன் பத்தர்க் கச்சம றுத்தன்
பருள்பவன் பொற்புக் கச்சியுள் நிற்கும்பெருமானென்
றவிழுமன் புற்றுக் கற்றும னத்தின்
செயலொழிந் தெட்டப் பட்டத னைச்சென்
றடைதரும் பக்வத் தைத்தமி யெற்கென்றருள்வாயே
குறியவன் செப்பப் பட்டஎ வர்க்கும்
பெரியவன் கற்பிக் கப்படு சுக்ரன்
குலைகுலைந் துட்கக் சத்யமி ழற்றுஞ்சிறுபாலன்
குதலையின் சொற்குத் தர்க்கமு ரைக்குங்
கனகனங் கத்திற் குத்திநி ணச்செங்
குடர்பிடுங் கித்திக் குற்றமு கச்சிங்கமுராரி
பொறிவிடுந் துத்திக் கட்செவி யிற்கண்
துயில்கொளுஞ் சக்ரக் கைக்கிரி சுத்தம்
புயலெனும் பொற்புப் பெற்றநி றத்தன்ஜகதாதை
புனிதசங் கத்துக் கைத்தல நிர்த்தன்
பழையசந் தத்தைப் பெற்றம டப்பெண்
புகலுகொண் டற்குச் சித்திய ளிக்கும்பெருமாளே.

Learn The Song




Raga Shanmukhapriya (56th mela)

Arohanam: S R2 G2 M2 P D1 N2 S    Avarohanam: S N2 D1 P M2 G2 R2 S


Raga Shanmukhapriya By Sanjay Subramanian



Paraphrase

செறிதரும் செப்பத்து உற்பல வெற்பும் (seRi tharum seppaththu uRpala veRpum ) : ThiruththaNigai, the mountain with a pond in which the reddish kazhuneer flowers blossom densely every day; நெருக்கமாக வளர்கிற செம்மையான செங்கழுநீர் மலர் (தினமும் மலரும் சுனையுடன்) இருக்கும் திருத்தணிகை மலையும், வெற்பு (veRpu) : mountain;

பிறிதும் அங்கு அத்தைக்கு உற்ற இருப்பும் (piRithum angu aththaikku uRRa iruppum) : other similar abodes comparable to Thiruththangai; மற்றும் அத்தணிகை மலைக்குச் சமமான மற்றத் தலங்களும், அங்கு அத்தைக்கு உற்ற = அங்கு அதனைப் போன்ற;

சிகரி துண்டிக்கக் கற்ற தனிச்செஞ் சுடர் வேலும் (sigari thuNdikka kaRRa thanic senj chudar vElum) : Your unique, bright and sparkling spear which learnt to chop off hills like Mount Krouncha; கிரெளஞ்ச மலையைப் பிளக்கக் கற்றுக்கொண்ட ஒப்பற்ற செவ்வொளியுடன் கூடிய வேலும்,

திரள் புயம் கொத்துப் பட்ட அனைத்தும் (thiraL buyam koththup patta anaiththum ) : and the bunch of Your twelve strong shoulders - all these, திரண்ட பன்னிரு தோள்கள் கொத்தாக உள்ள எல்லாமும்,

தெளிய நெஞ்சத் துப்பு உற்று (theLiya nenjath thuppuRRu) : clearly form a vision in my mind! தெளிவாக நெஞ்சத்திலே தரிசனம் செய்து அறிவு பெற்று,

மயக்கம் திகழ் ப்ரபஞ்சத்தைப் புற்புதம் ஒக்கும்படி நாடும் அறிவறிந்து (mayakkam thigazh prapanjaththaip puRputham okkum padi nAdum aRivaRinthu) : I must seek the true knowledge which teaches that this delusory world is like a mere bubble in the water; மயக்கம் நிறைந்துள்ள இந்த உலகை நீர்க்குமிழிக்கு சமமானது என்று ஆராய்ந்து உணரும் அறிவை அடைந்து,

அத்தற்க்கு அற்றது செப்புங் கடவுளன் (aththaRku aRRathu seppum kadavuLan) : that You are the God who preached to Lord SivA the significance of detachment; சிவபிரானுக்கு பற்றற்ற பிரணவப் பொருளை உபதேசித்த கடவுள் நீ என்றும்,

பத்தர்க்கு அச்சம் அறுத்து அன்பருள்பவன் (paththarkku accham aRuththu anbu aruLbavan) : that You destroy Your devotees' fear and shower love on them graciously; அடியார்க்கு அச்சத்தை அகற்றி அன்பை அருள்பவன் நீ என்றும்,

பொற்புக் கச்சியுள் நிற்கும் பெருமான் என்று (poRpuk kacchiyuL niRkum perumAn enRu) : and that You stand majestically in this beautiful place Kachchi (kAnjeepuram). அழகிய கச்சியில்(காஞ்சீபுரத்தில்) நின்றருளும் பெருமான் நீ என்றும்,

அவிழும் அன்புற்றுக் கற்று (avizhum anpuRRuk kaRRu) : My love should pour from a serene heart, after I learn the ways of worshipping; நெகிழ்ந்து உருகும் அன்பின் வசமாகி, திருவருள் நெறியைப் பயின்று,

மனத்தின் செயல் ஒழிந்து (manaththin seyal ozhinthu) : all other activities of my mind should cease; மனத்தின் செயலெல்லாம் நீங்கப் பெற்று,

எட்டப் பட்டதனைச் சென்று அடை தரும் (ettap pattathanaic chenRu adai tharum) : at that stage, whatever is within my mind's reach should be attainable; அந்த நிலையில் எட்டப் படுவதான பொருளைச் சென்று அடைகின்ற

பக்வத்தைத் தமியெற்கு என்று அருள்வாயே (pakvaththai thamiyeRku enRu aruLvAyE) : and when will You grant me that kind of maturity? மனப் பக்குவத்தை அடியேனுக்கு என்றைக்குத் தந்தருள்வாயோ?

குறியவன் செப்பப் பட்ட எவர்க்கும் பெரியவன் (kuRiyavan seppap patta evarkkum periyavan) : He was of a short stature (VAmanan) but He was taller than all those people of fame; வாமன வடிவமாகிக் குறுகி, ஆனால் சொல்லப்படும் யாவரினும் பெரியவர் ஆனவரும்,

கற்பிக்கப்படு சுக்ரன் குலை குலைந்து உட்கக் சத்யமிழற்றுஞ் சிறுபாலன் (kaRpikkappadu sukran kulai kulainthu utka sathyam izhaRRum siRu bAlan) : The little boy (PrahlAdhan) stated, in his childish babble, only the truth to the utter dismay of his teacher Sukran who became very scared; கல்வி கற்றுக் கொடுக்கவந்த சுக்கிராச்சாரியார் உள்ளம் நடுநடுங்கி அஞ்சும்படி, உண்மையையே உரைத்த சிறு குழந்தை பிரகலாதனின்

குதலையின் சொற்குத் தர்க்கம் உரைக்குங் கனகன் (kuthalaiyin soRkuth tharkkam uraikkum kanagan) : all the words from his child were refuted by HiraNyan; மழலைச் சொல்லிற்கு எதிர்வாதம் பேசிய

அங்கத்தில் குத்தி நிணச் செங் குடர் பிடுங்கி (angaththiR kuththi niNa cheng kudar pidungi) : He (Vishnu) pierced all the limbs of HiraNyan's body and plucked out his reddish intestines, ஹிரண்யனுடைய உடலைக் குத்தி, மாமிசம் நிறைந்த சிவந்த குடலைப் பிடுங்கி,

திக்குற்ற முகச் சிங்க முராரி (thikkuRRa muga singa murAri ) : with the hair around His face reaching all the eight directions; Narasimha came with a lion's face and a human body; He destroyed the demon Muran and therefore was known as MurAri; எட்டுத் திசைகளிலும் பிடறி மயிர் பறக்கும் சிங்க முகத்தை உடைய நரசிம்மரும், முரன் என்ற அரக்கனைக் கொன்ற முராரியும்,

பொறி விடுந் துத்திக் கட்செவியிற் கண் துயில் கொளுஞ் ( poRi vidum thuththik katcheviyiR kaN thuyilkoLum) : Slumbering on AdhisEshan, the serpent with sparkling hoods, ஒளிவீசும் படப் பொறிகளை உடைய பாம்பு ஆதிசேஷன் மீது துயில்பவரும், துத்தி (thuththi) : the spots on the neck of a cobra, பாம்பின் படப் பொறி; கட்செவி (katchevi ) : serpent;

சக்ரக் கைக்கிரி (chakrak kaik giri) : and holding a wheel (Sudharsanam) in His hand and resembling a mountain, சக்ராயுதத்தைக் கையிலே தாங்கும் மலை போன்றவரும்,

சுத்தம் புயலெனும் பொற்புப் பெற்ற நிறத்தன் (suththam puyal enum poRpup peRRa niRaththan) : He has the complexion of the pure rainy cloud; தூய மேகம் போன்ற அழகிய நிறத்தை உடையவரும், பொற்பு = அழகு வாய்ந்த.

ஜக தாதை (jaga thAthai) : and is the father of the entire world; உலகுக்கெல்லாம் தந்தையும்,

புனித சங்கத்துக் கைத்தல நிர்த்தன் (punitha sangaththu kaiththala nirththan) : He holds in His other hand the sacred conch-shell (PAnchajanyam) and is the dancer (who danced on the hood of the giant-snake, KALingan). பாஞ்ச ஜன்யம் என்ற பரிசுத்தமான சங்கைக் கரத்திலே கொண்டவரும், (காளிங்கன் என்ற பாம்பின் தலையில்) நடனமாடியவரும்,

பழைய சந்தத்தைப் பெற்ற மடப்பெண் (pazhaiya santhaththaip peRRa madap peN) : He came as a young damsel (Mohini) in a traditional old-fashioned style; பழமையான (மோகினி) வடிவத்தைப் பெற்று இளம்பெண்ணாக வந்தவரும்,

புகலு கொண்டற்குச் (pukalu koNdaRku) : To Vishnu whose hue is like that of the blue cloud, புகழப் பெறும் நீல மேகம் போன்ற நிறத்தினருமாகிய திருமாலுக்கு , கொண்டல் (kondal) : cloud;

சித்தியளிக்கும் பெருமாளே. (siththi aLikkum perumALE.) : You granted heavenly bliss (at KAnchipuram), Oh Great One! வீடு பேற்றினை (திருமேற்றளீசுவரராக திருமாலுக்கு காஞ்சிபுரத்தில்) தந்தருளிய பெருமாளே.

தல வரலாறு:

கோயிலில் இரண்டு தனித்தனி மூலஸ்தானத்தில் அருளும் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

பாற்கடலில் பள்ளிகொண்டிருந்த மகாவிஷ்ணுவிற்கு, சிவ சாரூப நிலை பெற வேண்டும் என்ற ஆசை எழுந்தது. ஞானசம்பந்தர் அத்தலத்திற்கு வருகை தந்து பதிகம் பாடும் வரை அங்கிருந்து தவம் செய்தால் வேண்டியது சித்திக்கும் என்று இறைவன் வரமளித்தார். அதன்படி மகாவிஷ்ணு, வேகவதி தீர்த்தத்தில் நீராடி சிவனை நோக்கி கிழக்கு பார்த்து நின்ற கோலத்திலேயே தவம் செய்தார். சிவதல யாத்திரை சென்ற திருஞானசம்பந்தர், இத்தலம் வந்த போது தவக்கோலத்தில் நின்று கொண்டிருப்பது சிவன்தான் என எண்ணிக்கொண்டு, சிவனுக்கு பின்புறத்தில் தூரத்தில் நின்றவாறே பதிகம் பாடினார். அவரது பாடலில் மனதை பறிகொடுத்த விஷ்ணு, அப்படியே உருகினார். பாதம் வரையில் உருகிய நிலையில் பாடல் முடியவே அவரது பாதம் மட்டும் அப்படியே நின்று விட்டது. தற்போதும் கருவறையில் லிங்கமும், அதற்கு முன்பு பாதமும் இருப்பதை காணலாம். சம்பந்தரின் பாடலுக்கு உருகியவர் என்பதால் இவர்,"ஓதஉருகீஸ்வரர்' என்ற பெயர் பெற்றார்.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே