430. சீசி முப்புரக் காடு


ராகம் : தர்பார்மிஸ்ரசாபு 1½ + 2 (3½)
சீசி முப்புரக் காடு நீறெழச்
சாடி நித்திரைக் கோசம் வேரறச்
சீவன் முத்தியிற் கூட வேகளித்தநுபூதி
சேர அற்புதக் கோல மாமெனச்
சூரி யப்புவிக் கேறி யாடுகச்
சீலம் வைத்தருட் டேறி யேயிருக்கறியாமற்
பாசம் விட்டுவிட் டோடி போனதுப்
போது மிப்படிக் காகி லேனினிப்
பாழ்வ ழிக்கடைக் காம லேபிடித் தடியேனைப்
பார டைக்கலக் கோல மாமெனத்
தாப ரித்துநித் தார மீதெனப்
பாத பத்மநற் போதை யேதரித்தருள்வாயே
தேசில் துட்டநிட் டூர கோதுடைச்
சூரை வெட்டியெட் டாசை யேழ்புவித்
தேவர் முத்தர்கட் கேத மேதவிர்த் தருள்வோனே
சீர்ப டைத்தழற் சூல மான்மழுப்
பாணி வித்துருப் பாத னோர்புறச்
சீர்தி கழ்ப்புகழ்ப் பாவை யீனபொற்குருநாதா
காசி முத்தமிழ்க் கூட லேழ்மலைக்
கோவ லத்தியிற் கான நான்மறைக்
காடு பொற்கிரிக் காழி யாருர்பொற்புலிவேளூர்
காள அத்தியப் பால்சி ராமலைத்
தேச முற்றுமுப் பூசை மேவிநற்
காம கச்சியிற் சால மேவுபொற்பெருமாளே.

Learn The Song



Raga Darbar (Janyam of 22nd mela Karaharapriya)

Arohanam: S R2 M1 P D2 N2 S    Avarohanam: S N2 S D2 P M1 R2 G2 G2 R2 S


Paraphrase

சீசி முப்புரக் காடு நீறெழச் சாடி (cheechi muppurak kAdu neeRezha chAdi) : One must burn away the three despicable slags (namely, arrogance, karma and delusion) which are like the three evil mountains called Thiripuram that, like wild forests, must be burnt down to ashes; சீச்சீ என்று வெறுக்கத்தக்க தீய திரிபுர மலைகள் போன்ற (ஆணவம், கன்மம், மாயை என்ற) மும்மலங்களாகிய காடு வெந்து சாம்பலாகும்படி,

நித்திரைக் கோசம் வேரற ( nidhdhiraik kOsam vEraRa) : uproot sleepiness and the five shrouds that cover the soul; தூக்கமும், ஆன்மாவை முடிக்கொண்டுள்ள பஞ்ச கோசங்களும் வேரோடு அற,

சீவன் முத்தியிற் கூடவே (jeevan mukthiyiR kUdavE) : to enable the soul to get liberated, to attain eternal bliss; ஆன்மா முக்தி நிலை அடைந்து விடுதலை பெற,

களித்து அநுபூதி சேர (kaLiththu anubUthi sEra) : to experience rapturous enlightenment; யான் மகிழ்ந்து பேரின்ப அநுபவத்தைப் பெற,

அற்புதக் கோலமாம் என சூரியப் புவிக்கு ஏறி ஆடுக (aRbudhak kOlamAm ena sUriyab buvikku ERi Aduga ) : and create a wonderful vision of climbing up to the land of the sun and dancing in ecstasy; அற்புதத் தோற்றம் இது என்று கூறும்படியாக சூரிய மண்டலத்தில் யான் சென்று அங்கு நடனம் புரிய; சூரியப் புவிக்கு ஏறி ஆடுக = சூரிய மண்டலத்தில் சென்று அங்கு நடனம் புரிய; பிரம்மனது அனாகத சக்கரம் சிதம்பரம்; அங்கு பெருமான் ஆடும் நடனம் பார்த்தோர் அற்புதம் என வியக்குமாறு விளங்கும்.

நமது உடல் மூன்று மண்டலங்களால் ஆனது. ஆசனவாய் முதல் தொப்புள் வரை அக்கினி மண்டலம். தொப்புள் முதல் தொண்டைவரை சூரிய மண்டலம், அதற்குமேல் சந்திர மண்டலம் உள்ளது.

அதாவது, உடலில் உள்ள ஆறு சக்ரங்களும் மூன்று மண்டலங்களாய்ப் பிரிக்கபட்டிருகின்றன. அவை சூரிய மண்டலம், அக்னி மண்டலம், சந்திர மண்டலம் என்றாகின்றன‌. மூலாதாரமும். மூலாதாரமும், ஸ்வாதிஷ்டானமும், அக்னி மண்டலத்தில் வருகின்றன. ம‌ணிபூரகமும், அனாஹதமும், சூர்ய மண்டலத்திலும், விஷுத்தியும், ஆக்ஞாவும், சந்திர மண்டலத்திலும் வருகின்றன.

இந்த மூன்று மண்டலத்தின் ஆறு சக்கரங்களுக்கான இழை சுழுமுனை நாடி; இந்த நாடியின் முதல் தொடக்கமான மூலாதாரத்தில் தான் (குண்டலினி) சக்தி சுருண்டிருக்கின்றதது. இந்த சக்தியினை மூச்சுபயிற்சி மூலம் எழுப்பினால், அது இதயத்தில் உள்ள சூரிய மண்டலத்தை ஊடுருவிச் சென்று, அதற்கு மேல் உள்ள சந்திர மண்டலத்தை அடைந்து அங்கு இருந்து கொண்டு உடலிலுள்ள 72,000 நாடிகளிலும் உயிர்ப்பைச் செலுத்தி, தன்னுடைய இடமான மூலாதார சக்கரத்திற்கு வந்து பாம்பு போல் சுருட்டி படுக்கிறது.

சீலம் வைத்தருள் தேறியே இருக்க அறியாமல் (seelam vaiththaruL thERiyE irukka aRiyAmal) : For this, one must follow the righteous path and realise Your grace, steadily remaining in tranquility. Not knowing how to accomplish that ஒழுக்க வழியினில் சென்று திருவருளை உணர்ந்து நிலைபெற்றிருக்கத் தெரியாமல்,

பாசம் விட்டு விட்டோடி போனது (pAsam vittuvit Odi pOnadhup) : I am being hounded by attachments which seem to go away for some time but return to me with a vengence. பாசங்கள் என்னை விட்டு விலகி மீண்டும் ஓடிவந்து சேரும் நிலை

போதும் இப்படிக்கு ஆகிலேன் (pOdhum ippadikku AgilEn) : I have had enough. I do not want to be subjected to this misery. போதும் போதும். இப்படிப் பாசத்தில் அகப்படும் நிலை எனக்கு வேண்டாம்.

இனிப் பாழ் வழிக்கு அடைக்காமலே பிடித்து அடியேனைப் (inip pAzh vazhik adaikkAmalE pidiththu adiyEnai) : Henceforth, please do not thrust me into this disgusting track and kindly take charge of me; இனியாகிலும் இந்தப் பாழும் நெறியில் என்னை அடைத்து வைக்காமல்

பார் அடைக்கலக் கோலமாம் என தாபரித்து ( pAr adaikkalak kOlamAm enath thApariththu) : Be compassionate and show me Your vision that is the only salvation for me in this world; என்னைப் பற்றிக்கொண்டு உலகில் எனக்குப் புகலிடமாக இருக்கும் தோற்றத்தைக் காண்பித்து,

நித்த ஆரம் ஈதென பாத பத்ம நற் போதையே தரித்தருள்வாயே (niththa Aram eedhenap pAdha padma naR bOdhaiyE dhariththu aruLvAyE) : Kindly grant me Your hallowed lotus feet which are eternal jewels for me to wear! ஆதரவுடன் யான் நித்தியமான ஓர் ஆபரணத்தை அணிவதற்காக உன் திருவடியாகிய நற்கமல மலரை என் மீது தரிக்கச் செய்வாயாக.

தேசு இல் துட்ட நிட்டூர கோதுடைச் சூரை வெட்டி (dhEsil dhushta nishtUra kOdhudai sUrai vetti ) : You cut off the demon Suran who was ignorant, wicked, evil and full of blemishes; ஞானம் இல்லாத துஷ்டனும், கொடுமை வாய்ந்தவனும், குற்றங்கள் நிறைந்தவனுமான சூரனை வெட்டி,

எட்டாசை ஏழ் புவித் தேவர் முத்தர்கட்கு ஏதமே தவிர்த்து அருள்வோனே (yettAsai yEzh buvith dhEvar muththarkatku EdhamE thavirthth aruLvOnE) : and You gracefully relieved the miseries of the celestials and ascetic sages in all the eight directions of the seven worlds! எட்டுத் திசைகளிலும் ஏழுலகிலும் இருக்கும் தேவர்கள், ஜீவன்முக்தரான அறிஞர்களின் துயரத்தை நீக்கி அருளியவனே,

சீர் படைத்து அழற் சூல மான் மழுப் பாணி (seer padaiththu azhaR sUla mAn mazhup pANi) : He (Lord SivA) holds in His hands the eminent fire, a trident, a deer and a pick-axe; தன் திருக்கரங்களில் சிறப்பு வாய்ந்த நெருப்பு, சூலம், மான், மழு ஆகியவற்றை ஏந்தியவரும்,

வித்துருப் பாதன் ( viththurup pAdhan) : His feet are red like coral; பவளம் போன்ற சிவந்த பாதங்களை உடையவருமான சிவபெருமானின்

ஓர் புறச் சீர் திகழ்ப் புகழ்ப் பாவை ஈன பொற் குருநாதா (Or puRa seer thigazh pughazh pAvai yeena poR gurunAtha) : on the side of His body, the celebrated Goddess PArvathi DEvi is seated elegantly; and She delivered You, oh handsome Master! பவளம் போன்ற சிவந்த பாதங்களை உடையவருமான சிவபெருமானின் ஒரு பாகத்தில் அமர்ந்த சிறப்புப் பொருந்திய புகழ்த் தேவி பார்வதி பெற்றெடுத்த அழகிய குருநாதனே,

காசி முத்தமிழ்க் கூடல் ஏழ்மலைக் கோவலத்தியிற் கான (kAsi muththamizhk kUdal Ezhmalai kOvalaththiyiR kAna ) : KAsi (Varanasi), Madhurai (famous for the three branches of Tamil), the seven hills (ThiruvEnkatam), ThirukkovalUr, Thiruvanaikka, காசி, முத்தமிழ் விளங்கும் மதுரை, ஏழு மலைகளுடைய திருவேங்கடம், திருக்கோவலூர், திருவானைக்கா; கோவல் = திருக்கோவலூர், அத்தியில் கானம் = திரு ஆனைக்கா

நான்மறைக் காடு பொற்கிரிக் காழி ஆருர் பொற் புலி வேளூர் (nAnmaRaik kAdu poRgirik kAzhi Arur poR puli vELUr) : VedAraNyam (the forest of the four vEdAs), Kanagamalai, SeegAzhi, ThiruvArUr, beautiful Chidhambaram, நான்கு வேதங்களும் தங்கும் வேதாரணியம், கநகமலை, சீர்காழி, திருவாரூர், அழகிய சிதம்பரம், புள்ளிருக்கும் வேளூராகிய வைத்தீசுரன் கோயில்; பொன் புலி = சிதம்பரம், வேளூர் = புள் (பறவை, ஜடாயு) இருக்கு வேளூர் என்னும் வைத்தீசுரன்கோயில்,

காள அத்தி அப்பால் சிராமலை (kALa hasthi appAl sirAmalai) : KALahasthi and ThirisirApalli are a few abodes of Yours, திருக்காளத்தி, அதன்பின் திரிசிராப்பள்ளி முதலிய தலங்களிலும்

தேச முற்று முப் பூசை மேவி (dhEsa mutru mup pUjai mEvi) : besides several places throughout the country, where You are worshipped all the three times of the day. நாடு முழுவதும் மூன்று காலங்களிலும் வழிபாடு நடத்தப் பெற்று,

நற் காம கச்சியிற் சால மேவு பொற் பெருமாளே (naRkAma kachchiyiR sAla mEvu poR perumALE.) : You are seated with relish at the holy place, KAmakOttam in Kacchi (kAnjeepuram), Oh Handsome and Great One! நல்ல காமகோட்டம் என்ற கச்சியில் (காஞ்சீபுரத்தில்) மிகவும் விரும்பி வீற்றிருக்கும் அழகிய பெருமாளே.

திரிபுர தகனத்தின் தாத்பர்யம்

நமக்கு பிறவி ஏற்பட காரணமாய் இருப்பது அநாதி காலமாய் நம்முள்ளே இருந்து வரும் முக்குணங்களினால் விளையும் கர்மவினைகளே. தத்துவ விளக்கத்தில் சத்துவ குணத்தை தங்கமாகவும், ரஜோ குணத்தை வெள்ளியாகவும், தமோ குணத்தை இரும்பாகவும் உருவகிப்பர். இந்த மூன்று கோட்டைகளும் முக்குணங்களினால் விளையும் கர்ம வினையை குறிப்பன. பிறவிப்பெருங்கடலை நீந்தவேண்டுமென்றால் இம்மூன்று கர்மவினைகளையும் ஒரு சேர அழிக்கவேண்டும். இது இறைவன் ஒருவரால் மட்டுமே முடியும். இவ்வாறு நமது கர்மவினைகளை அழித்து பிறவியில்லா பேரின்ப நிலையை அளிப்பதே திரிபுரம் எரித்த திருவிளையாடலின் உட்பொருள் என்று ஆன்றோர் கூறுவர்.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே