421. வேத வித்தகா


ராகம் : சாமா அங்கதாளம் (8½)
1½ + 1½ + 1 + 2½ + 2
வேத வித்தகா சாமீ நமோநம
வேல்மி குத்தமா சூரா நமோநம
வீம சக்ரயூ காளா நமோநமவிந்துநாத
வீர பத்மசீர் பாதா நமோநம
நீல மிக்ககூ தாளா நமோநம
மேக மொத்தமா யூரா நமோநமவிண்டிடாத
போத மொத்தபேர் போதா நமோநம
பூத மற்றுமே யானாய் நமோநம
பூர ணத்துளே வாழ்வாய் நமோநமதுங்கமேவும்
பூத ரத்தெலாம் வாழ்வாய் நமோநம
ஆறி ரட்டிநீள் தோளா நமோநம
பூஷ ணத்துமா மார்பா நமோநமபுண்டரீக
மீதி ருக்குநா மாதோடு சேயிதழ்
மீதி ருக்குமே ரார்மாபு லோமசை
வீர மிக்கஏழ் பேர்மாதர் நீடினம் நின்றுநாளும்
வேத வித்தகீ வீமா விராகிணி
வீறு மிக்கமா வீணா கரேமக
மேரு வுற்றுவாழ் சீரே சிவாதரெயங்கராகீ
ஆதி சத்திசா மாதேவி பார்வதி
நீலி துத்தியார் நீணாக பூஷணி
ஆயி நித்தியே கோடீர மாதவியென்றுதாழும்
ஆர்யை பெற்றசீ ராளா நமோநம
சூரை யட்டுநீள் பேரா நமோநம
ஆர ணத்தினார் வாழ்வே நமோநம தம்பிரானே.

Learn The Song



Raga Sama (Janyam of 28th mela Hari Kambhoji)

Arohanam: S R2 M1 P D2 S    Avarohanam: S D2 P M1 G3 R2 S


Paraphrase

வேத வித்தகா சாமீ நமோநம (vEdha viththagA sAmee namO nama): You are the greatest expert in all scriptures, My Lord, I bow to You, I bow to You. வேதங்கள் உணர்ந்த பேரறிவாளனே, ஸ்வாமியே, போற்றி, போற்றி

வேல் மிகுத்த மாசூரா நமோநம (vEl miguththa mA sUrA namO nama): You hold the spear grandly, Oh valorous One, I bow to You, I bow to You. வேலினைச் சிறப்பாக ஏந்தும் மஹா சூரனே, போற்றி, போற்றி

வீம சக்ரயூ காளா நமோநம (veema chakra yUgALA namO nama): You use the terrifying chakravyooha expertly in the war; I bow to You, I bow to You. அச்சம் தரக்கூடிய சக்கர வடிவாக அமைந்த படை வகுப்பை ஆண்டவனே, போற்றி, போற்றி! யூகம்(yoogam): படையின் அணிவகுப்பு;

விந்து நாத (vindhu nAdha): You are the combination of Shakthi (Vindhu) and SivA (NAtham), I bow to You, I bow to You. ஆவுடையாகவும் லிங்கமாகவும் சிவசக்தி உருவமாக விளங்குபவனே,

வீர பத்ம சீர் பாதா நமோநம (veera padhma seer pAdhA namO nama): Oh Brave One, Your feet are just beautiful like lotus, I bow to You, I bow to You. வீரனே, தாமரை போன்ற அழகிய திருவடிகளை உடையவனே, போற்றி, போற்றி

நீல மிக்க கூதாளா நமோநம (neela mikka kUthALA namO nama): You are adorned with plenty of violet flowers (kUthaLa), I bow to You, I bow to You. நீல நிறத்தில் மிகுந்த கூதளப்பூமாலைகள் அணிந்தவனே, போற்றி, போற்றி

மேகம் ஒத்த மாயூரா நமோநம (mEga moththa mAyUrA namO nama): You ride the peacock that has the complexion of the clouds, I bow to You, I bow to You. மேக நிறம் கொண்டுள்ள மயில் வாகனனே, போற்றி, போற்றி

விண்டிடாத போதம் ஒத்த பேர் போதா நமோநம (viNdidAdha bOdha moththa pEr bOdhA namO nama): You are the Knowledge of those who have reached the pinnacle of wisdom that can never be interpreted, I bow to You, I bow to You. சொல்வதற்கு அரிய ஞான நிலையை அடைந்தவர்களின் ஞானப் பொருளே, போற்றி, போற்றி

பூத மற்றுமே ஆனாய் நமோநம (bUtha matrumE AnAy namO nama): You are the five elements and all other things too, I bow to You, I bow to You. பஞ்ச பூதங்களாயும் பிறவானவையாகவும் ஆனவனே, போற்றி, போற்றி

பூரணத்துளே வாழ்வாய் நமோநம (pUraNath uLE vAzhvAy namO nama): You are inside everything that is absolute, I bow to You, I bow to You. பரிபூரணப் பொருளாக வாழ்பவனே, போற்றி, போற்றி

துங்க மேவும் பூதரத்தெலாம் வாழ்வாய் நமோநம (thunga mEvum bUtha rath elAm vAzh vAy namO nama): You have as abode all mountains that are pure, I bow to You, I bow to You. பரிசுத்தமான மலைகளில் எல்லாம் வாழ்பவனே, போற்றி, போற்றி

ஆறிரட்டி நீள் தோளா நமோநம (AR irattineeL thOLA namO nama): You have twelve broad shoulders, I bow to You, I bow to You. பன்னிரண்டு நீண்ட புஜங்களை உடையவனே, போற்றி, போற்றி

பூஷணத்து மா மார்பா நமோநம (bUsha Naththu mA mArbA namO nama): Your chest is grand and bejewelled, I bow to You, I bow to You. ஆபரணங்களை அணிந்த அழகிய மார்பனே, போற்றி, போற்றி

புண்டரீக மீதிருக்கு நா மாதோடு (puNdareeka meedh irukku nA mAdhOdu): Along with Saraswathi, the Mother who sits on white lotus, வெள்ளைத் தாமரையின் மீது வீற்றிருக்கும் சரஸ்வதியோடு,

சேயிதழ் மீதிருக்கும் ஏரார் மா (sEyidhazh meedh irukkum ErAr mA): the beautiful Mother Lakshmi, who sits on red lotus, செந்தாமரை மீது அமர்ந்த அழகு நிறைந்த லக்ஷ்மியும், சேய் (sEy) : சிவப்பு, இளமை; ஏர் ஆர் (Er Ar) : beautuful, அழகு பொருந்திய; மா(mAma): திருமகள்;

புலோமசை வீர மிக்க ஏழ் பேர் மாதர் (pulOmasai veera mikkka EzhpEr mAdhar): (IndrANi, wife of IndrA), the valorous seven mothers (Saptha MAthas), இந்திராணியும், வீரம் மிகுந்த சப்த மாதாக்களும்; "> சச்சி என்ற இந்திராணியும் சப்த மாதர்களில் ஒருவள்; புலோம குலத்தில் அசுரன் புலோமனின் மகள்.
Shachi is the daughter of Puloman, an asura son of the sage Kashyapa and his wife Danu. Virabhadra, Brahmani, Maheshvari, Kaumari, Vaishnavi, Varahi, Indrani, Chamunda are regarded as forms of Devi (Durga) and known as seven mothers. Brahmani is the four-headed counterpart of Brahma; Maheshvari is the female counterpart of Shiva; Kaumari is counterpart of the warrior son of Shiva and Parvati; Vaishnavi is the counterpart of Vishnu; the boar-headed Varahi, counterpart of Varaha is an incarnation of Vishnu; Indrani is the counter-part of Indra and finally Chamunda is the only goddess who is not the counterpart of a male god, but represents a female form of Shiva's power.

நீடினம் நின்று நாளும் (needinam nindru nALum): and similar Divine mothers stand together and pray daily (as follows); மற்றுமுள்ள எல்லா தெய்வ மகளிரும் எதிரே நின்று நாள்தோறும்

வேத வித்தகீ வீமா (vEdha viththagee veemA): "Oh, Expert in scriptures, You are a terrific Goddess; வேத ஞானியே, பயங்கரியே,

விராகிணி (virAgiNi): You are without any attachment; பற்று அற்றவளே,

வீறுமிக்க மா வீணா கரே (veeRu mikka mA veeNA karE): You hold the famous Veena (Vipanchi Veena) in Your hand; சிறப்புமிக்க அழகிய (விபஞ்சி என்ற) வீணையை கையில் ஏந்தியவளே,

மகமேரு உற்று வாழ் சீரே (maha mEru utru vAzh seerE): You reside with grandeur in the Great KailAsh; மகாமேரு மலையில் தங்கி வாழும் சிறப்பை உடையவளே,

சிவாதரெ (sivAdharE ): You occupy the left side of SivA; சிவனுடைய உடலில் பங்கு கொண்டவளே,

அங்கராகீ (angarAgee): You wear fragrant scents on Your body; உடம்பெல்லாம் பரிமள கந்தங்களைப் பூசியவளே,

ஆதி சத்தி சாமாதேவி பார்வதி (Adhi saththi sAmA dhEvi pArvathi ): You are the prime Shakthi; You are the Goddess PArvathi, praised in Sama VEdha; ஆதிசக்தியே, சாமவேதம் போற்றும் தேவியே, பார்வதியே,

நீலி (neeli): You love violet flowers (NeelOthpala flowers); நீல நிறத்தவளே,

துத்தியார் நீள் நாக பூஷணி (thuththiyAr neeNAga bUshaNi): You wear as jewels long snakes with dotted designs; புள்ளிகள் நிறைந்த நீண்ட நாகங்களை ஆபரணமாக அணிந்தவளே, துத்தி(thuththi): the spots on the hood of a cobra,

ஆயி நித்தியே கோடீர மாதவி (Ayi niththiyE kOdeera mAdhavi): Mother, You are Eternal; and You are Durga with long tresses" அன்னையே, என்றும் இருப்பவளே, சடையுள்ள துர்கா தேவி,

என்று தாழும் ஆர்யை பெற்ற சீராளா நமோநம (endru thAzhum Aryai petra seerALA namO nama): The Great Goddess thus worshipped delivered You as Her darling! I bow to You, I bow to You. என்றெல்லாம் துதி செய்து வணங்குகின்ற மஹாதேவி பெற்ற சீராளனே, போற்றி, போற்றி

சூரை அட்டு நீள் பேரா நமோநம (sUrai yattu neeL pErA namO nama): Your name and fame are due to Your slaying of the demon, SUran, I bow to You, I bow to You. சூரனை வதைத்துப் பேரும் புகழும் பெற்றவனே, போற்றி, போற்றி

ஆரணத்தினார் வாழ்வே நமோநம (AraNaththinAr vAzhvE namO nama): You are the greatest wealth of all those who know the scriptures, I bow to You, I bow to You, வேதம் ஓதுவோர்களின் செல்வமே, போற்றி, போற்றி

தம்பிரானே. (ThambirAnE.): Oh the Lord of all Lords! அனைவருக்கும் பெருமாளாக விளங்குபவனே.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே