390. நீரு மென்பு


ராகம்: நவரச கன்னடதாளம்: ஆதி திச்ர நடை (12)
நீரு மென்பு தோலி னாலு மாவ தென்கை கால்க ளோடு
நீளு மங்க மாகி மாயவுயிரூறி
நேச மொன்று தாதை தாய ராசை கொண்ட போதில் மேவி
நீதி யொன்று பால னாகியழிவாய்வந்
தூரு மின்ப வாழ்வு மாகி யூன மொன்றி லாது மாத
ரோடு சிந்தை வேடை கூரஉறவாகி
ஊழி யைந்த கால மேதி யோனும் வந்து பாசம் வீச
ஊனு டம்பு மாயு மாயமொழியாதோ
சூர னண்ட லோக மேன்மை சூறை கொண்டு போய் விடாது
தோகை யின்கண் மேவி வேலை விடும்வீரா
தோளி லென்பு மாலை வேணி மீது கங்கை சூடி யாடு
தோகை பங்க ரோடு சூதுமொழிவோனே
பாரை யுண்ட மாயன் வேயை யூதி பண்டு பாவ லோர்கள்
பாடல் கண்டு ஏகு மாலின்மருகோனே
பாத கங்கள் வேறி நூறி நீதி யின்சொல் வேத வாய்மை
பாடு மன்பர் வாழ்வ தான பெருமாளே.

Learn The Song




Paraphrase

நீரும் என்பு தோலினாலும் ஆவது என் கை கால்களோடு ( neerum enbu thOlinAlum Avadhen kai kAlgaLOdu) : Along with my arms and legs made of water, bones and skin, நீர், எலும்பு, தோல் இவைகளால் ஆக்கப்பட்டதாகிய என்னுடைய கை, கால்கள் இவைகளோடு,

நீளும் அங்கமாகி மாய உயிர் ஊறி ( neeLum angamAgi mAya uyir URi) : to which are attached to long limbs and which get magically infused with life. நீண்ட அங்கங்களை உடையவதாகி, மாயமான உயிர் ஊறப் பெற்று,

நேசம் ஒன்று தாதை தாயர் ஆசை கொண்ட போதில் மேவி ( nEsam ondru thAdhai thAyar Asai koNda pOdhil mEvi) : I was conceived when my beloved father and mother united in love. அன்பு பொருந்திய தந்தை தாய் ஆகிய இருவரும் காதல் கொண்ட சமயத்தில் கருவில் உற்று,

நீதி ஒன்று பாலனாகி அழிவாய் வந்து (needhi ondru bAlanAgi azhivAy vandhu) : I was raised as a righteous boy but later followed a very destructive path. ஒழுக்க நெறியில் நிற்கும் பிள்ளையாய்த் தோன்றி, அழிதற்கே உரிய வழியில் சென்று,

ஊரும் இன்ப வாழ்வும் ஆகி ஊனம் ஒன்று இலாது (Urum inba vAzhvum Agi Unam ondrilAdhu) : I enjoyed a pleasurable life with nothing to complain about. அனுபவிக்கும் இன்ப வாழ்வை உடையவனாகி, குறை ஒன்றும் இல்லாமல்,

மாதரோடு சிந்தை வேடை கூர உறவாகி ( mAdharOdu chinthai vEdai kUra uRavAgi) : My heart longed for the company of women and had liaised amorously with them. மாதர்களுடன் மன வேட்கை மிக்கு எழ, அவர்களுடன் சம்பந்தப்பட்டு, வேடை (vEdai) : lovesickness; வேட்கை;

ஊழி இயைந்த கால(ம்) மேதியோனும் வந்து பாசம் வீச (Uzhi yaindha kAla mEdhi yOnum vandhu pAsam veesa) : At the final moment predetermined by fate, Yaman (God of Death), mounting his vehicle, buffalo, would come promptly to throw the rope (of attachment) around me, ஊழ் வினையின்படி ஏற்பட்ட முடிவு காலத்தில் எருமை வாகனனான யமனும் தவறாமல் வந்து பாசக் கயிற்றை வீச, ஊழி (uzhi) : end of the world; முடிவு காலம்; மேதி (mEthi) : buffalo; மேதியோன் (mEthiyOn) : one who rides the buffalo; Yama;

ஊன் உடம்பு மாயும் மாயம் ஒழியாதோ (Un udambu mAyu mAyam ozhiyAdhO) : and this body of flesh is bound to perish; will that magic cycle ever end? (இந்த) மாமிச உடல் அழிந்து போகும் மாயம் முடிவு பெறாதோ?

சூரன் அண்ட லோகம் மேன்மை சூறை கொண்டு போய் விடாது (sUran aNdalOka mEnmai sURai koNdu pOy vidAdhu) : To prevent the demon SUran from appropriating the supremacy of the celestial world, சூரன் அண்டங்களாம் லோகங்களின் மேலான தலைமையைக் கொள்ளை அடித்துப் போய் விடாமல்,

தோகையின் கண் மேவி வேலை விடும் வீரா ( thOgaiyin kaN mEvi vElai vidum veerA) : You mounted the pretty peacock and wielded Your spear, Oh valorous One! மயிலின் மேல் ஏறி வேலாயுதத்தைச் செலுத்திய வீரனே,

தோளில் என்பு மாலை வேணி மீது கங்கை சூடி ஆடு (thOLil enbu mAlai vENi meedhu gangai sUdi Adu) : He adorns His shoulders with a garland of bones and His tress with the river Ganga; He dances the cosmic dance; தோள் மீது எலும்பு மாலையையும், சடையில் கங்கையையும் தரித்து நடனம் புரிபவரும்,

தோகை பங்கரோடு சூது மொழிவோனே (thOgai pangarOdu sUdhu mozhivOnE) : He is the Cosort of PArvathi, the pretty peacock-like Goddess; to that Lord SivA You preached the most secret ManthrA (PraNava)! மயில் போன்ற பார்வதியின் பக்கத்தில் இருப்பவருமாான சிவபெருமானுக்கு ரகசியப் பிரணவப் பொருளை உபதேசித்தவனே,

பாரை உண்ட மாயன் வேயை ஊதி (pArai uNda mAyan vEyai Udhi) : He is the Lord who swallowed the entire world; He plays on the bamboo flute; இப்பூமியை உண்டவனான மாயவன், மூங்கில் புல்லாங் குழலை ஊதியவன்,

பண்டு பாவலோர்கள் பாடல் கண்டு ஏகும் மாலின் மருகோனே (paNdu pAvalOrgaL pAdal kaNdu Egu mAlin marugOnE) : You are the nephew of that Lord Vishnu who once, enamoured by the songs of His devoted poets like Thirumazhisai AzhwAr, went with them upon their request; முன்பு, (திருமழிசை ஆழ்வார் ஆகிய) புலவர்களின் பாடலைக் கேட்டு மகிழ்ந்து (பின்னர் அவர்களின் வேண்டுகோளுக்கு இரங்கி) அவர்கள் பின்பு செல்பவனாகிய திருமாலின் மருகனே, பாவலோர்(pAvalOr) : bards, poets;

Thirumazhisai Alwar and his shishya Kanikannan were living in Kanchipuram, worshiping Vishnu at the Yatotakari temple, when one day the Pallava king summoned Kanikannan to his court. The king asked Kanikannan to tell Thirumazhisai Alwar to compose a poem in praise of the king. Kanikannan responded that his guru only composed poems in praise of Vishnu, not human beings. Then the king asked if Kanikannan would at least compose a poem in praise of him, and he offered him gold and jewels in exchange, but Kanikannan refused. The king was furious, and exiled Kanikannan from Kanchipuram. When Thirumazhisai Alwar heard what had happened, he decided to leave the city as well, and he told the Vishnu deity of the Yatotakari temple to come with him. And the Vishnu statue got up, and walked out of the city! As soon as the three of them left, Kanchipuram was plunged into darkness. The king realized the errors of his ways and begged Thirumazhisai Alwar and Kanikannan to come back. They agreed, and told Vishnu to come back to the Yatotakari temple. Vishnu came back and lied down from right to left, rather than left to right as usual, as a reminder of how he had left and come back. In any case, it's because of this story that the Vishnu deity of the temple is called "Sonnavannam Seitha Perumal" or "Vishnu who did as he was told."

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள திருவெஃகாவில் சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயிலில் அரவணையில் துயில் அமர்ந்துள்ள யதோத்காரிக்கு திருமழிசை ஆழ்வார் தன்னுடைய சீடர் கணிகண்ணனோடு கைங்கரியம் செய்துவந்தார். தங்கள் குடிலைத் தினமும் தூய்மை செய்துவரும் தூய்மையான மனம் உள்ள வயது முதிர்ந்த பெண்ணுக்கு இரக்கப்பட்டு என்றும் இளமையாக இருக்கும்படி வரம் நல்கினார் அப்பெண்ணைக் கச்சிப்பதியில் அரசுபுரிந்த பல்லவராயன் எனும் அரசன் விரும்பி மணம்புரிந்தான். பன்னாட்கள் கழிந்தும் மாறாத தன் மனையாளின் யவனத்தின் காரணம் தெரிந்து கொண்டு தனக்கும் அவ்வரம் வேண்டும் என்ற விருப்பத்தை ஆழ்வாரின் சீடரான கணிகண்ணனிடம் சொன்னான். கனிகண்ணன் குரு சார்பில் மறுத்தவுடன் அரசன் குறைந்தபட்சம் ஆழ்வார் தன்னை ஏற்றிக் கவிதையாவது பாடுமாறு வேண்டினான். அதற்கும் கணிகண்ணன் மறுத்ததால் கோபமுற்ற அரசன் கணிகண்ணனை நகரைவிட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டான். யாவும் கேள்வியுற்ற அவருடைய குரு திருமழிசை சிஷ்யனுடன் தானும் ஊரை விட்டு போனது மட்டுமில்லாமல் கச்சிப்பதிக் கோவிலுக்குச் சென்று ஆண்டவனிடம் பதிகம் பாடி அவரையும் தன்னுடன் அழைத்துச் சென்று விட்டார். பின் அரசன் வருந்தி அழைத்தவுடன் பழையபடி இன்னொரு பதிகத்தால் ஆண்டவனை ஸ்துதித்து அவருடனும் கனிகண்ணனுடனும் மீண்டும் காஞ்சிக்கு திரும்ப வந்தார்.

பாதகங்கள் வேறி நூறி (pAthagangaL vERi nURi) : They destroy all unrighteous things, rendering them to pieces, பாபங்களைக் குலைத்துப் பொடி செய்து,

நீதியின் சொல் வேத வாய்மை பாடும் (needhi insol vEdha vAymai pAdum) : and sing songs composed only with the righteous words upholding the truth of the VEdAs; நீதிச் சொற்களைக் கொண்டு வேத உண்மைகளையே எடுத்துப் பாடுகின்ற

அன்பர் வாழ்வதான பெருமாளே. (anbar vAzhvadhAna perumALE.) : You are the Treasure of such devotees, Oh Great One! அன்பர்களுக்குச் செல்வமாக விளங்கும் பெருமாளே.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே