389. நிருதரார்க்கொரு


ராகம்: மத்யமாவதிஅங்கதாளம் (7½)
1½ + 2 + 2 + 2
நிருத ரார்க்கொரு காலா ஜேஜெய
சுரர்க ளேத்திடு வேலா ஜேஜெய
நிமல னார்க்கொரு பாலா ஜேஜெயவிறலான
நெடிய வேற்படை யானே ஜேஜெய
எனஇ ராப்பகல் தானே நான்மிக
நினது தாட்டொழு மாறே தானினியுடனேதான்
தரையி னாழ்த்திரை யேழே போலெழு
பிறவி மாக்கட லூடே நானுறு
சவலை தீர்த்துன தாளே சூடியுனடியார்வாழ்
சபையி னேற்றியின் ஞானா போதமு
மருளி யாட்கொளு மாறே தானது
தமிய னேற்குமு னேநீ மேவுவதொருநாளே
தருவி னாட்டர சாள்வான் வேணுவி
னுருவ மாய்ப்பல நாளே தானுறு
தவசி னாற்சிவ னீபோய் வானவர்சிறைதீரச்
சகல லோக்கிய மேதா னாளுறு
மசுர பார்த்திப னோடே சேயவர்
தமரை வேற்கொடு நீறா யேபடவிழமோதென்
றருள ஏற்றம ரோடே போயவ
ருறையு மாக்கிரி யோடே தானையு
மழிய வீழ்த்தெதிர் சூரோ டேயமரடலாகி
அமரில் வீட்டியும் வானோர் தானுறு
சிறையை மீட்டர னார்பால் மேவிய
அதிப ராக்ரம வீரா வானவர் பெருமாளே.

Learn The Song



Raga Madhyamavati )Janyam of 22nd mela Karaharapriya)

Arohanam: S R2 M1 P N2 S    Avarohanam: S N2 P M1 R2 S


Paraphrase

நிருதரார்க்கு ஒரு காலா ஜேஜெய ( nirudharArkku oru kAlA jE jeya) : " The Yaman (Death-God) for all the asuras (demons), Victory to You, Victory to You, அசுரர்களுக்கு ஒரு யமனாக ஏற்பட்டவனே, வெல்க, வெல்க,

சுரர்கள் ஏத்திடு வேலா ஜேஜெய (surargaL Eththidyu vElA jE jeya) : Object of worship by all the DEvAs, Victory to You, Victory to You, தேவர்கள் போற்றித் துதிக்கும் வேலனே, வெல்க, வெல்க,

நிமலனார்க்கு ஒரு பாலா ஜேஜெய ( nimalanArkku oru bAlA jE jeya) : incomparable Son of SivA who is the purest form, Victory to You, Victory to You, பரிசுத்த மூர்த்தியாம் சிவனாருக்கு ஒப்பற்ற குமாரனே, வெல்க, வெல்க,

விறலான நெடிய வேற்படையானே ஜேஜெய ( viRalAna nediya vER padaiyAnE jE jeya) : You hold the extremely strong weapon of Spear, Victory to You, Victory to You", மிக வலிமையான வேலினை ஆயுதமாய்க் கொண்டோனே, வெல்க, வெல்க,

என இராப்பகல் தானே நான் மிக (ena irAp pagal thAnE nAn miga) : With these words, I want to profusely praise You day and night. என்றெல்லாம் இரவும் பகலுமாக நான் நிரம்பவுமே

நினது தாள் தொழு மாறே தான் இனி உடனே தான் (ninadhu thAL thozhumARE thAnini udanEthAn) : and worship Your feet without any further delay; உன்னுடைய திருவடியைப் பணிந்து போற்றும் படியாக இனியும் சிறிதும் தாமதம் செய்யாமலே தான்,

தரையின் ஆழ்த் திரை ஏழே போல் எழு (tharaiyin Azh thirai EzhE pOl ezhu ) : Rising just like the seven deep oceans of this world, இந்தப் புவியில் ஆழமுள்ள ஏழு கடல்களைப் போல் எழுகின்ற

பிறவி மாக் கடலூடே நான் உறு சவலை தீர்த்து ( piRavi mAk kadalUdE nAn uRu savalai theerththu) : the unbearable mental agonies I suffer, rise over the small ocean called birth, and these must be destroyed; பிறவி என்னும் பெருங்கடலில் நான் அனுபவிக்கும் மனக் குழப்பங்களைத் தீர்த்து,

உன தாளே சூடி ( una thALE sUdi) : I should bear Your feet on my head; உன் பாதமே தலையில் சூடியவனாய்,

உன் அடியார் வாழ் சபையின் ஏற்றி (un adiyAr vAzh sabaiyin Etri) : I should be elevated to the congregation of Your devotees; உன் அடியார்கள் வாழ்கின்ற கூட்டத்திலே கூட்டி வைத்து,

இன் ஞானா போதமும் அருளி ஆட் கொளுமாறே தான் (in nyAnA bOdhamum aruLi AtkoLumARE thAn) : You should graciously preach the meaning of the Sweet and True Knowledge and completely take me over. இனிய ஞான உபதேசத்தையும் எனக்கு அருளி, என்னை ஆண்டுகொண்டு அருள்வதன் பொருட்டே

அது தமியனேற்கு முனே நீ மேவுவது ஒருநாளே (adhu thamiyanERku munE nee mEvuvadhu orunALE) : All this can happen only when You appear before this lonely soul; will there be a day when this happens? தனியேனாக உள்ள என் முன் நீ தோன்றும் ஒருநாள் உண்டோ?

தருவின் நாட்டரசு ஆள்வான் (tharuvinAt arasALvAn) : IndrA, the ruler of the land of DEvAs known for its KaRpaga trees, கற்பகத் தருக்கள் நிறைந்த தேவநாட்டு அரசாட்சியைப் புரியும் இந்திரன்

வேணுவின் உருவமாய்ப் பல நாளே தானுறு ( vENuvin uruvamAyp pala nALE thAnuRu) : was doing penance (at SirkAzhi) taking the form of a bamboo tree மூங்கிலின் உருவம் எடுத்து, பல நாட்களாக

தவசினால் சிவன் நீ போய் வானவர் சிறை தீர (thavasinAR siva nee pOy vAnavar siRai theera) : Impressed by the penance, Lord SivA commanded You as follows - "Go and free all DEvAs from their imprisonment; தான் செய்த தவத்தின் பயனாக சிவபிரான் உன்னை அழைத்து நீ சென்று தேவர்களின் சிறையை நீக்கி,

சகல லோக்கியமே தான் ஆளுறும் அசுர பார்த்திபனோடே சேயவர் தமரை வேற் கொடு நீறாயே பட (sakala lOkkiyamE thAn ALuRum asura pArthibanOdE sEyavar thamarai vERkodu neeRAyE pada) : and destroy SUran, the King of Asuras, who is enjoying all worldly pleasures and his children and uproot the entire lineage எல்லாவிதமான உலகப்பற்றும் சுகபோகமும் ஆண்டு அனுபவிக்கும் அசுரர்களின் அரசன் சூரனையும் அவனது மக்கள், சுற்றத்தாரையும் வேல் கொண்டு அவர்கள் பொடியாக விழும்படி தாக்கு என்று, லோக்கியம் - லெளகீகம் - உலகப்பற்று;

விழ மோதென்று அருள ஏற்று அமரோடே போய் (vizha mOdhendru aruLa Etru amarOdE pOy) : fell them all by attacking them". Accepting the command, You went to war, வேல் கொண்டு அவர்கள் பொடியாக விழும்படி தாக்கு என்று திருவாய் மலர்ந்து ஆணையிட, அதனை ஏற்று போர்க்களத்துக்குச் சென்று

அவருறையு மாக்கிரியோடே தானையும் அழிய (avar uRaiyu mAggiriyOdE thAnaiyum azhiya) : destroyed their mount Krouncha, the seven hills, all their armies, அசுரர் தங்கிய பெரிய கிரெளஞ்சம், ஏழு மலைகளுடன், சேனையும் அழிந்து, தானையும் = (அவர்களுடைய) சேனைகளையும்

வீழ்த்து எதிர் சூரோடே அமர் அடலாகி அமரில் வீட்டி(ழ்த்தி)யும் (veezhththu edhir sUrOdE amar adalAgi amaril veettiyum (veezhthiyum)) : and fought with SUran who opposed You, killing him. அழிந்து விழச்செய்து, எதிர்த்து வந்த சூரனுடன் பகை பூண்டு, போரிலே அவனை அழித்தும்

வானோர் தானுறு சிறையை மீட்டு அரனார் பால் மேவிய (vAnOr thAnuRu siRaiyai meet aranAr pAl mEviya) : Then You released the DEvAs from prison before returning to Lord SivA. அடைபட்டிருந்த சிறையினின்றும் தேவர்களை விடுவித்துக் காத்தும் சிவபிரானிடம் திரும்பி வந்து சேர்ந்த,

அதி பராக்ரம வீரா (athi parAkrama veerA) : You are such a superb warrior and மகா பராக்ரம வீரனே,

வானவர் பெருமாளே.(vAnavar perumALE.) : the Lord of all the DEvAs, Oh Great One! தேவர்கள் தொழும் பெருமாளே.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே