386. நாளு மிகுத்த


ராகம் : கமாஸ்தாளம்: அங்கதாளம் 2 + 1½ + 3 (6½)
நாளு மிகுத்த கசிவாகி
ஞான நிருத்தமதைநாடும்
ஏழை தனக்கு மநுபூதி
ராசி தழைக்கஅருள்வாயே
பூளை யெருக்கு மதிநாக
பூண ரளித்தசிறியோனே
வேளை தனக்குசிதமாக
வேழ மழைத்தபெருமாளே.

Learn The Song




Know the Ragam Khamas/Kamas

Janyam of 28th mela Hari Kambhoji
Arohanam: S M1 G3 M1 P D2 N2 S    Avarohanam: S N2 D2 P M1 G3 R2 S


Paraphrase

நாளு மிகுத்த கசிவாகி (nALu miguththa kasivAgi) : My mind, saturated everyday, made tender and infused with love, நாள்தோறும் மிகுந்த அன்பு ஊறி நெகிழ்ந்த மனத்தினனாய்,

ஞான நிருத்தம் அதை நாடும் ( nyAna niruththam adhai nAdum) : seeks the vision of Your dancing posture, manifesting Wisdom. உனது நடனக் கோலத்தைக் காண விரும்பும்

ஏழை தனக்கும் அநுபூதி (Ezhai thanakkum anubUthi) : In order that I, lowly and poor, experience bliss; எளியோனாகிய எனக்கும் அனுபவஞானம் என்னும்

ராசி தழைக்க அருள்வாயே (rAsi thazhaikka aruLvAyE) : I seek Your gracious blessing for receiving that good fortune! பாக்கியம் பொருந்தி பெருகி விளங்க அருள் புரிவாயாக.

பூளை எருக்கு மதி நாக பூணர் அளித்த சிறியோனே (pULai erukku madhinAga pUNar aLiththa siRiyOnE) : He wears on His tresses the pULai (Indian laburnum) flower, the erukkam leaf, the crescent moon and the serpent that SivA has delivered You as His child! பூளைப்பூ, எருக்கு இலை, பிறைச் சந்திரன், பாம்பு ஆகியவற்றை சடையிலே அணிந்துள்ள சிவபெருமான் அளித்த குழந்தையே,

வேளை தனக்கு உசிதமாக வேழம் அழைத்த பெருமாளே.(vELai thanakku uchithamAga vEzham azhaiththa perumALE.) : At the opportune time, You were able to cleverly command the assistance of Your brother VinAyagA in the form of an elephant (who helped You woo VaLLi and win over her), Oh Great One! உனக்கு வேண்டிய சமயத்தில் சமயோசிதமாக யானையாகக் கணபதியை வரவழைத்த பெருமாளே.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே