375. தரணிமிசை


ராகம்: அமிர்தவர்ஷிணிசதுஸ்ர த்ருவம் கண்ட நடை
தரணிமிசை அனையினிட வுந்தியின் வந்துகுந்
துளிபயறு கழலினிய அண்டமுங் கொண்டதின்
தசையுதிர நிணநிறைய அங்கமுந் தங்கவொன் பதுவாயுந்
தருகரமொ டினியபத முங்கொடங் கொன்பதும்
பெருகியொரு பதினவனி வந்துகண் டன்புடன்
தநயனென நடைபழகி மங்கைதன் சிங்கியின் வசமாகித்
திரிகியுடல் வளையநடை தண்டுடன் சென்றுபின்
கிடையெனவு மருவிமனை முந்திவந் தந்தகன்
சிதறுவுயிர் பிணமெனவெ மைந்தரும் பந்துவும் அயர்வாகிச்
செடமிதனை யெடுமெடுமி னென்றுகொண் டன்புடன்
சுடலைமிசை யெரியினிட வெந்துபின் சிந்திடுஞ்
செனனமிது தவிரஇரு தண்டையுங் கொண்டபைங் கழல்தாராய்
செருவெதிரு மசுரர்கிளை மங்கஎங் கெங்கணுங்
கழுகருட னயனமிது கண்டுகொண் டம்பரந்
திரியமிகு அலகையுடன் வெங்கணந் தங்களின் மகிழ்வாகிச்
சினவசுர ருடலமது தின்றுதின் றின்புடன்
டுமுடுமுட டுமுடுமுட டுண்டுடுண் டுண்டுடுண்
டிமிலைபறை முழவுதுடி பம்பையுஞ் சங்கமுந்தவமோதச்
சரவரிசை விடுகுமர அண்டர்தம் பண்டுறுஞ்
சிறையைவிட வருமுருக என்றுவந் திந்திரன்
சதுமுகனு மடிபரவ மண்டுவெஞ் சம்பொருங்கதிர்வேலா
சகமுழுது மடையஅமு துண்டிடுங் கொண்டலுந்
தெரிவரிய முடியினர வங்களுந் திங்களுஞ்
சலமிதழி யணியுமொரு சங்கரன் தந்திடும்பெருமாளே.

Learn The Song



Raga Amrithavarshini (Janyam of 66th mela Chithrambari)

Arohanam: S G3 M2 P N3 S    Avarohanam: S N3 P M2 G3 S

Paraphrase

தரணி மிசை அ(ன்)னையினிட உந்தியின் வந்து உகு துளி பயறு கழல் (dharaNimisai anaiyinida vundhiyin vandhu ugum thuLi payaRu kazhal) : In this world, a little droplet of the size of a lentil falls into the womb of a mother; இந்தப் பூமியில் தாயின் வயிற்றில் (கர்ப்பப்பையில்) ஒரு துளி பயறு அளவு விழுந்து சேர்ந்து ,

இனிய அண்டமும் கொண்டு அதில் தசை உதிர(ம்) நிண(ம்) நிறைய அங்கமும் தங்க (iniya andamung koNdadhin dhasaiyudhira niNa niRaiya angamun thanga) : it takes the shape of a delightful egg in which muscles, blood and flesh develop, with the formation of limbs; இன்பகரமான முட்டை வடிவாகி, அதில் சதை, இரத்தம், கொழுப்பு இவை நிறைவு பெற, (பின்னர்) அவயவங்களும் வந்து கூட, அண்டமுங் கொண்டு = முட்டை வடிவாகி

ஒன்பது வாயும் தரு கரமொடு இனிய பதமும் கொ(ண்)டு அங்கு ஒன்பதும் பெருகி (onbadhu vAyum tharu karamodu iniya padhamum kodu angu onbadhum perugi) : with nine outlets, arms and nice legs, the nine portals (consisting of two each of eyes, ears, nostrils and excretory organs and one mouth) become distinctly visible; அங்கு ஒன்பதும் பெருகி = அங்கே கண் (2), காது (2), மூக்குத் தொளை (2), வாய் (1), மலத்துவாரம் (1), சலத் துவாரம் (1) ஆகிய ஒன்பது துவாரங்களும் ஏற்பட்டு;

ஒரு ப(த்)தின் அவனி வந்து கண்டு அன்புடன் தநயன் என (orupadhin avani vandhu kaNdanbudan thanayanena) : in about ten months, the child arrives in this world to be greeted with pleasure by the parents who cherish the child as theirs;

நடை பழகி மங்கை தன் சிங்கியின் வசமாகி (nadai pazhagi mangai than singiyin vasamAgi) : the child learns to walk; (on becoming a youth) he is ensnared as a victim to the lustful acts of women; நடக்கக் கற்று,(வாலிப வயதில்) மாதர்களின் விஷமச் செயல்களில் அகப்பட்டு,

திரிகி உடல் வளைய நடை தண்டு உடன் சென்று (thirigi udal vaLaiya nadai thandudan sendru) : he eventually gets exhausted; his condition undergoes a reversal; his erect upper body bends down and he has to rely on a walking stick; சலிப்பு அடைந்து, நிலை மாறி, நிமிர்ந்த உடல் குனிய, தடியுடன் நடந்து செல்வதாகி, திரிகி (thirigi) : சலிப்பு அடைந்து, நிலை மாறி,

பின் கிடை எனவும் மருவி மனை முந்தி வந்து அந்தகன் சிதற உயிர் (pin kidai enavu maruvi manai mundhi vandh anthagan sidhaRa uyir) : thereafter, he is confined to bed at all times; the God of Death (Yaman) knocks the front door and takes out his life away from the body; பிறகு படுக்கையில் கிடந்து விட, வீட்டின் முன் வாயில் வழியே யமன் வந்து உயிரைச் சிதறும்படிச் செய்ய ,

பிணம் எனவே மைந்தரும் பந்துவும் அயர்வாகி (piNamenave maindharum bandhuvum ayarvAgi) : he is declared as a corpse, saddening his sons and relatives; பிணம் என்று முடிவு செய்து, மக்களும் சுற்றமும் சோர்வடைந்து,

செடம் இதனை எடும் எடுமின் என்று கொண்டு அன்புடன் சுடலை மிசை எரியில் இட வெந்து பின் சிந்திடும் (jedam idhanai edum edumin endru koNdu anbudan sudalai misai eriyil ida vendhu pin chinthidum) : people keep on repeating "take this corpse away"; the body is carried to the cremation ground and is laid lovingly on the fire logs; it is burnt and converted into ashes to be immersed in water. இந்தப் பிணத்தை எடுத்துச் செல்லவும் என்று பன்முறைகள் சொல்ல, எடுத்துக் கொண்டு போய் அன்புடன் சுடுகாட்டில் நெருப்பில் இட, வெந்து சாம்பலாகி நீரில் கலந்து அழிகின்ற

செனனம் இது தவிர இரு தண்டையும் கொண்ட பைங்கழல் தாராய் (jenanamidhu thavira iruthaNdaiyung koNdapaing kazhalthArAy) : To avoid future births, kindly bless me by offering Your hallowed, anklet-adorned feet! இந்தப் பிறவி இனி வராதிருக்க, தண்டைகள் அணிந்த உனது இரு திருவடிகளையும் தந்து அருள்வாயாக.

செரு எதிரும் அசுரர் கிளை மங்க(seruvedhirum asurarkiLai manga) : The multitude of hostile demons who came to the war was destroyed;

எங்கெங்கணும் கழுகு கருடன் நயனம் இது கண்டு கொண்டு அம்பரம் திரிய (engengaNum kazhu garudan nayanam idhu kaNdu koNdu ambaram thiriya) : eagles and vultures, with a keen eye for corpses, hovered around everywhere in the sky; எல்லா இடத்திலும் கழுகு, கருடன் இவைகளின் கண்கள் (பிணங்களைக்) கண்டு உணர்ந்து ஆகாயத்தில் சுற்றிவர,

மிகு அலகையுடன் வெம் கணம் தங்களின் மகிழ்வாகி சின அசுரர் உடலம் அது தின்று தின்று இன்புடன் (migu alagaiyudan vengaNan thangaLin magizhvAgi sina asurar udalamadhu thindru thindru inbudan) : hordes of devils devoured the corpses of the angry demons and, leaping in joy, மிக்கு வரும் பேய்களின் கொடிய கூட்டங்கள் தங்களுக்குள் மகிழ்ச்சி பூண்டு, கோபத்துடன் இறந்து விட்ட அசுரர்களின் உடல்களைத் தின்று, மகிழ்ச்சியுடன், அலகை (alagai) : பேய்;

டுமுடுமுட டுமுடுமுட டுண்டுடுண் டுண்டுடுண்டு திமிலை பறை முழவு துடி பம்பையும் சங்கமும் தவ மோத (dumu dumuda dumu dumuda duNduduN duNduduN thimilai paRai muzhavu thudi pambaiyum sangamun thavamOdha) : beat many drums and percussion instruments such as thimilai, paRai, muzhavu, thudi, pambai and sangam, making the sound 'dumu dumuda dumu dumuda duNduduN duNduduN' ;

சர வரிசை விடு குமர (sara varisaividu kumara) : when You kept on shooting arrows, row after row, Oh Kumara!

அண்டர் தம் பண்டு உறும் சிறையை விட வரு முருக என்று வந்து (aNdar tham paNduRum siraiyai vida varumuruga endru vandhu) : "Oh MurugA! You came to liberate the celestials from the prisons where they were shackled previously!" - with these words, தேவர்களை முன்பு அடைபட்டிருந்த சிறையினின்றும் விடுவித்த முருகனே என்று கூறி வந்து

இந்திரன் சது(ர்) முகன் அடி பரவ மண்டு வெம்ச(ம)ம் பொரும் கதிர் வேலா (indhiran chathumukanum adiparava maNdu venjam porung kadhirvElA) : IndrA and the four-faced Lord BrahmA prostrated at Your feet as You cornered the enemies and fought a fierce war wielding Your dazzling spear, Oh Lord! இந்திரன், நான்முகன் பிரமன் முதலியோர் உன் அடிகளைப் போற்ற, எதிரிகளை நெருக்கி கொடிய போரைச் செய்த ஒளி வீசும் வேலாயுதனே,

சக(ம்) முழுதும் அடைய அமுது உண்டிடும் கொண்டலும் தெரிவரிய (jagamuzhudhu madaiya amudhuNdidung koNdalun) : Even Lord VishNu, of the hue of dark cloud, who gobbled up the entire world as if it were nectar, உலகம் எல்லாவற்றையும் முழுதாக அமுதென உண்ட மேக வண்ணத் திருமாலும் காண முடியாத

முடியில் அரவங்களும் திங்களும் சலம் இதழி அணியும் ஒரு சங்கரன் தந்திடும் பெருமாளே. (theri ariyamudiyin aravangaLun thingaLum jalamidhazhi aNiyumoru sankaran thandhidum perumALE.) : was not able to find those tresses on which are held snakes, the crescent moon, River Ganga and kondRai (Indian laburnum) flower; those tresses belong to that unique Lord SivA, and You are His Son, Oh Great One! ஜடாமுடியில் பாம்புகளையும், சந்திரனையும், கங்கை, கொன்றை ஆகியவற்றையும் தரித்துள்ள ஒப்பற்ற சிவபெருமான் அருளிய பெருமாளே.

Comments

  1. Listen to the song sung by T.M. Soundhirarajan sent by me through Whatsapp. The first part of this Tiruppugazh reflects the same philosophy. Perhaps the lyrics is attibuted to Tirumular.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே