350. ஏட்டிலே


ராகம் : காவடி சிந்துதாளம்: மிஸ்ர சாபு
1½ + 2 (3½)
ஏட்டி லேவரை பாட்டி லேசில
நீட்டி லேயினிதென்றுதேடி
ஈட்டு மாபொருள் பாத்து ணாதிக
லேற்ற மானகுலங்கள்பேசிக்
காட்டி லேயியல் நாட்டி லேபயில்
வீட்டி லேஉலகங்களேசக்
காக்கை நாய்நரி பேய்க்கு ழாமுண
யாக்கை மாய்வதொழிந்திடாதோ
கோட்டு மாயிர நாட்ட னாடுறை
கோட்டு வாலிபமங்கைகோவே
கோத்த வேலையி லார்த்த சூர்பொரு
வேற்சி காவளகொங்கில்வேளே
பூட்டு வார்சிலை கோட்டு வேடுவர்
பூட்கை சேர்குறமங்கைபாகா
பூத்த மாமலர் சாத்தி யேகழல்
போற்று தேவர்கள்தம்பிரானே.

Learn The Song





Paraphrase

யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும் தாமே பெற வேலவர் தந்ததனால்
நாம் கற்ற கல்விக்குக் கைமாறாக அவனுக்கு நமது புலமையை அர்ப்பணம் செய்யவேண்டும்.
It is He who has graciously granted us the boon of knowledge and wisdom.

ஏட்டிலே வரை பாட்டிலே (EttilE varai pAttilE) : In all those songs inscribed on palm leaves praising human beings, ஏட்டிலே எழுதப்படும் நரஸ்துதி பாடல்கள்;

சில நீட்டிலே (sila neettilE) : some of which are sung elaborately,

இனிதென்று தேடி (inidhu endru thEdi) : I thought I found a nice source of income in them and went after rich people. சம்பாதிக்க இனிய வழிகள் என்று பிரபுக்களை நாடி;

ஈட்டு மாபொருள் பாத்துணாது (eettu mA poruL pAththuNAdhu) : But I never cared to share the great wealth so earned. பாத்து உணாது (pAththu uNAthu) : பங்கிட்டு உண்ணாமல்;

இகல் ஏற்றமான குலங்கள் பேசி (igal Etra mAna kulangaL pEsi) : I was simply bragging about how great my lineage was!

காட்டிலே இயல் நாட்டிலே பயில் வீட்டிலே (kAttilE iyal nAttilE payil veettilE) : In the forests or countryside or even in my own household,

உலகங்கள் ஏச (ulagangaL Esa) : everyone in this world decried me for my meanness.

காக்கை நாய் நரி பேய்க் குழாம் உண (kAkkai nAy nari pEyk kuzhAm uNa) : Finally, is it for feeding the crowds of crows, dogs, foxes and devils

யாக்கை மாய்வது ஒழிந்திடாதோ (yAkkai mAyvadh ozhindhidAdhO) : that my body is meant? Can I put an end to such death and decay of my body?

கோட்டும் ஆயிர நாட்டன் நாடுறை (kOttum Ayira nAtta nAduRai) : In the Land of the great IndrA who has thousand eyes, lives நாட்டம் (naattam) : eye; கோட்டும் (kOttum : அமையப் பெற்ற; ஆயிர நாட்டன் (Ayira nAttan) : thousand eyed (Indra);

கோட்டு வால் இப மங்கை கோவே ( kOttu vAl iba mangai kOvE) : DEvayAnai, who was reared by AirAvatham, the white elephant with tusks; she is Your consort. வால் (vaal) : white; கோட்டு வால் இப (kOttu vAl iba) : தந்தங்களை உடைய வெண்ணிற யானை (ஐராவதம்);

கோத்த வேலையில் ஆர்த்த சூர் (kOththa vElaiyi lArththa sUr) : The earth wears the ocean as clothing; in that ocean, SUran created havoc, and வேலை (velai) : sea, ocean; கோத்த வேலை (kOththa vElai) : (உலகு ஆடையாக) உடுத்துள்ள கடல்;

பொரு வேற் சிகாவள கொங்கில் வேளே (poruvER sikAvaLa kongil vELE) : You fought with Your Spear with Peacock as Your vehicle. You reside in several mounts in Kongu NAdu! கொங்கில் (kongil) : கொங்கு நாட்டில் உள்ள திருச்செங்கோடு, சென்னிமலை, மருதமலை முதலியன; சிகாவளம்/சிகாவலம் = மயூரம், மயில் ;

பூட்டு வார் சிலை கோட்டு வேடுவர் பூட்கை சேர் குற மங்கை ( pUttu vAr silai kOttu vEduvar pUtkai sEr kuRa mangai) : She is the hunter lass following the traditions of the hunters living in the mounts and holding large bows with taut strings; வார் ( vAr) : churning rope; பூட்டு வார் சிலை ( pUttu vAr silai) : நாண் ஏற்றப்பட்ட பெரிய வில்; கோட்டு வேடுவர் (kOttu vEduvar) : மலை வேடர்கள்; வேடுவர் பூட்கை (veduvar pootkai) : வேடர்களின் கொள்கை;

பாகா ( bAgA) : and You are the consort of that VaLLi,

பூத்த மாமலர் சாத்தியே (pUththa mAmalar sAththiyE ) : Fresh flowers are showered daily at Your feet by

கழல் போற்று தேவர்கள் தம்பிரானே.(kazhal pOtru dhEvargaL thambirAnE.) : DEvAs worshipping Your feet, Oh great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே