347. எழுதரிய அறுமுகம் (விழையும் மனிதரை)


ராகம்: ஆனந்த பைரவிசதுச்ர மட்யம் கண்ட நடை (25)
எழுதரிய அறுமுகமு மணிநுதலும் வயிரமிடை
யிட்டுச் சமைந்தசெஞ் சுட்டிக் கலன்களுந்துங்கநீள்பன்
னிருகருணை விழிமலரு மிலகுபதி னிருகுழையும்
ரத்நக் குதம்பையும் பத்மக் கரங்களுஞ்செம்பொனூலும்
மொழிபுகழு முடைமணியு மரைவடமு மடியிணையு
முத்தச் சதங்கையுஞ் சித்ரச் சிகண்டியுஞ்செங்கைவேலும்
முழுதுமழ கியகுமர கிரிகுமரி யுடனுருகு
முக்கட் சிவன்பெருஞ் சற்புத்ர வும்பர்தந்தம்பிரானே.
தொலைவில்பிற வியுமகல வொருமவுன பரமசுக
சுத்தப் பெரும்பதஞ் சித்திக்க அன்புடன்சிந்தியாதோ

Learn The Song


Know The Raga Ananda Bhairavi (Janyam of 20th mela Natabhairavi)

Arohanam: S G2 R2 G2 M1 P D2 P S    Avarohanam: S N2 D2 P M1 G2 R2 S

Paraphrase

எழுத அரிய அறுமுகமும் அணி நுதலும் வயிரம் இடையிட்டுச் சமைந்த செம் சுட்டிக் கலன்களும் (ezhudha ariya aRumugamu maNi nudhalum vayiram idai ittu samaindha sensuttik kalangaLum) : Your six hallowed faces whose beauty is beyond description, the elegant forehead, the exquisitely dainty jewels studded with diamonds, எழுத முடியாத ஆறு திருமுகங்களும், அழகிய நெற்றியும், வைரங்கள் மத்தியில் வைக்கப் பெற்று அமைந்துள்ள செவ்விய சுட்டி முதலிய ஆபரணங்களும்;

துங்க நீள் பன்னிரு கருணை விழி மலரும் இலகு பதினிரு குழையும் (thunga neeL panniru karuNai vizhi malarum ilagu padhiniru kuzhaiyum) : the twelve pure and long flower-like eyes showering compassion, the twelve graceful hanging ear-rings, இலகு (ilagu): radiant, ஒளி வீசுகின்ற; பதினிரு (pathiniru): twelve; பத்துடன் இரண்டு, பன்னிரண்டு; குழை (kuzhai): ear-ring;

ரத்நக் குதம்பையும் கரங்களும் செம் பொன் நூலும் (rathna kudhambaiyum padhmak karangaLum sempon nUlum) : the studs made of gems, lotus-like hands, the reddish golden sacred thread,

மொழி புகழும் உடை மணியும் அரை வடமும் அடி இணையும் (mozhi pugazhum udai maNiyum arai vadamum adi iNaiyum) : the praiseworthy beads of gems on Your outfit, the waist-band, Your holy feet,

முத்தச் சதங்கையும் சித்ரச் சிகண்டியும் செம் கை வேலும் முழுதும் அழகிய குமர (muththach chadhangaiyum chithrach chikaNdiyum senkai vElum muzhudhum azhagiya kumara) : Your lilting anklets with pearls set inside, Your beautiful Peacock, and the Spear in Your hand - all these aspects of Yours are splendid, Oh Kumara!

கிரி குமரியுடன் உருகும் முக்கண் சிவன் பெறும் சற் புத்ர (giri kumariudan urugu mukkaN sivan peRun saR puthra) : You are the virtuous son of the three-eyed Lord SivA who dotes on PArvathi, the daughter of HimavAn!

உம்பர் தம் தம்பிரானே.(umbarthan thambirAnE.) : You are the Lord of all the celestials, Oh Great One!

ஒரு மவுன பரம சுக சுத்தப் பெரும் பதம் சித்திக்க அன்புடன் சிந்தியாதோ (oru mavuna parama suka sudhdha perum padham sidhdhikka anbudan chinthiyAdhO) : will You not kindly consider granting me Your hallowed and grand feet, the seat of matchless tranquility and supreme bliss?

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே