343. ஊனுந் தசை


ராகம் சிந்து பைரவிதாளம்: ஆதி
ஊனுந் தசையுடல் தானொன் பதுவழி
யூருங் கருவழியொருகோடி
ஓதும் பலகலை கீதஞ் சகலமு
மோரும் படியுனதருள்பாடி
நானுன் திருவடி பேணும் படியிரு
போதுங் கருணையில்மறவாதுன்
நாமம் புகழ்பவர் பாதந் தொழஇனி
நாடும் படியருள்புரிவாயே
கானுந் திகழ்கதி ரோனுஞ் சசியொடு
காலங் களுநடையுடையோனுங்
காருங் கடல்வரை நீருந் தருகயி
லாயன் கழல்தொழுமிமையோரும்
வானிந் திரனெடு மாலும் பிரமனும்
வாழும் படிவிடும்வடிவேலா
மாயம் பலபுரி சூரன் பொடிபட
வாள்கொண் டமர்செய்த பெருமாளே.

Learn The Song



Raga Sindhu Bhairavi (Janyam of 8th mela Hanumatodi )

Arohanam: S R1 G2 M1 P D1 N2 S    Avarohanam: S N2 D1 P M1 G2 R1 S

Raga Sindhu Bhairavi (Janyam of 20th mela Natabhairavi)

Arohanam: S R1 G2 M1 P D1 N2 S    Avarohanam: S N2 D1 P M1 G2 R1 S

Paraphrase

ஊனும் தசை உடல் தான் ஒன்பது வழி (Unum dhasai udal thAn onbadhu vazhi) : The body consisting of flesh and muscles comes along with nine portals (two eyes, two ears, two nostrils, a mouth and two excretory organs.)

ஊரும் கருவழி ஒருகோடி (Urum karuvazhi oru kOdi) : and takes millions of births through the womb. (To end the miserable birth cycle,)

ஓதும் பல கலை கீதம் சகலமும் ஓரும் படி (Odhum palakalai geetham sagalamum) : whatever holy writings that I read, the music I practise and all other learnings I acquire, I must realise their significance; நான் படிக்கின்ற சாத்திர நூல்களையும், இசை ஞானத்தையும் மற்ற எல்லா கற்கவேண்டியவையும் யான் உணரும்படியாக ஓரும் படி (Orum padi) : உணரும் படி;

உனது அருள் பாடி (Orumpadi unadhu aruL pAdi) : To enable me to sing Your glory,

நான் உன் திருவடி பேணும் படி (nAnun thiruvadi pENum padi) : and willingly pay obeisance to Your hallowed feet

இரு போதும் கருணையில் மறவாது (iru pOdhum karuNaiyil maravAdhu) : keeping Your grace in my mind in the morning and in the evening,

உன் நாமம் புகழ்பவர் பாதம் தொழ இனி நாடும் படி அருள் புரிவாயே (nAmam pugazhbavar pAdham thozha ini nAdumpadi aruL purivAyE) : kindly bless me to seek Your devotess who praise Your holy name and prostrate at their feet.

கானுந் திகழ் கதிரோனுஞ் சசியொடு காலங்களு நடையுடையோனும் (kAnum thigazh kadhirOnum sasiyodu kAlangaLu nadai udaiyOnum) : The sun and the moon that shine even in the jungles, the three dimensions of time (the past, the present and the future), the wind, காட்டிலும் கூட தன் கதிர்களை வீசும் சூரியனும், சந்திரனும், இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்ற முக்காலங்களும், காற்றும், கான் (kAn) : forest; கதிரோன்(kathirOn) : sun; சசி (sasi) : moon; நடையுடையோன் (nadai udaiyOn) : காற்று;

காரும் கடல் வரை நீரும் தரு கயிலாயன் (kArum kadal varai neerum tharu kayilAyan) : the clouds, the oceans, the mountains and the water were all gifted by Lord SivA who presides at the Mount KailAsh, மேகமும் கடலும் மலையும் நீரும் - இவைகளையெல்லாம் படைத்த கைலாயநாதனாகிய சிவபிரானின்

கழல் தொழும் இமையோரும் ( kazhal thozhum imaiyOrum) : all those celestials who worship that SivA,

வான் இந்திரன் நெடு மாலும் பிரமனும் (vAn indhira nedu mAlum biramanum ) : IndrA of the heavenly land, the tall one (Vishnu) and BrahmA,

வாழும் படிவிடும் வடிவேலா (vAzhum padi vidum vadivElA) : all of them were all protected when You wielded Your sharp spear, Oh Lord!

மாயம் பலபுரி சூரன் பொடிபட (mAyam pala puri sUran podipada) : The demon SUran, who was up to several delusory tricks and disguises, was shattered to pieces

வாள் கொண்டு அமர் செய்த பெருமாளே.(vAL koNdamar seydha perumALE.) : when You fought him with a drawn sword, Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே