337. இரவொடும் பகலே


ராகம் : தர்பாரி கானடா அங்க தாளம் (7½)
1½ + 2 + 2 + 2
இரவொ டும்பக லேமா றாதே
அநுதி னந்துய ரோயா தேயே
யெரியு முந்தியி னாலே மாலேபெரிதாகி
இரைகொ ளும்படி யூடே பாடே
மிகுதி கொண்டொழி யாதே வாதே
யிடைக ளின்சில நாளே போயே வயதாகி
நரைக ளும்பெரி தாயே போயே
கிழவ னென்றொரு பேரே சார்வே
நடைக ளும்பல தாறே மாறேவிழலாகி
நயன முந்தெரி யாதே போனால்
விடிவ தென்றடி யேனே தானே
நடன குஞ்சித வீடே கூடாதழிவேனோ
திருந டம்புரி தாளீ தூளீ
மகர குண்டலி மாரீ சூரி
திரிபு ரந்தழ லேவீ சார்வீயபிராமி
சிவனி டந்தரி நீலீ சூலீ
கவுரி பஞ்சவி யாயீ மாயீ
சிவைபெ ணம்பிகை வாலா சீலாஅருள்பாலா
அரவ கிங்கிணி வீரா தீரா
கிரிபு ரந்தொளிர் நாதா பாதா
அழகி ளங்குற மானார் தேனார் மணவாளா
அரிய ரன்பிர மாவோ டேமூ
வகைய ரிந்திர கோமா னீள்வா
னமரர் கந்தரு வானோ ரேனோர்பெருமாளே.

Learn The Song



Raga Darbari Kanada (Janyam of 20th mela Natabhairavi)

Arohanam: S R2 G2 M1 P D1 N2 S    Avarohanam: S D1 N2 P M1 P G2 M1 R2 S

Paraphrase

இரவொடும் பகலே மாறாதே ( iravodum pagalE mARAdhE) : Day and night, without a change,

அநுதினம் துயர் ஓயாதேயே (anudhinam thuyar OyAdhEyE) : every day i suffer in misery without remission;

எரியும் உந்தியினாலே மாலே பெரிதாகி (eriyum undhiyinAlE mAlE peridhAgi) : The hunger in the stomach is like a fire causing desires to rise high.

இரைகொளும்படி ஊடே பாடே மிகுதி கொண்டு ( irai koLumpadi UdE pAdE migudhi koNdu) : In search of food, I toil excessively, with

ஒழியாதே வாதே (ozhiyAdhE vAdhE) : constant bickering and arguments.

இடைகளின் சில நாளே போயே வயதாகி (idaigaLin sila nALE pOyE vayadhAgi) : In between, several days elapse, and I grow old.

நரைகளும் பெரிதாயே போயே கிழவன் என்றொரு பேரே சார்வே (naraigaLum peridhAyE pOyE kizhavan endroru pErE sArvE) : My hair becomes increasingly grey, and I am branded as "the old man".

நடைகளும் பல தாறே மாறே விழலாகி (nadaigaLum pala thARE mARE vizhalAgi) : My steps begin to falter, and I start stumbling.

நயனமும் தெரியாதே போனால் (nayanamum theriyAdhE pOnAl) : My eyes begin to lose their vision.

விடிவது என்று அடியேனே தானே (vidivadhendr adiyEnE thAnE) : When shall I, the poor me, see the dawn? (in other words, when will my miseries end?)

நடன குஞ்சித வீடே கூடாது அழிவேனோ ( nadana kunjitha veedE kUdAdhu azhivEnO ) : Will I perish without attaining the blissful heaven where Lord NadarAjA dances with a bent and raised leg? குஞ்சித (kunjitha) : crooked; நடன குஞ்சித ( natana kunjitha) : காலை வளைத்து தூக்கின நடனத்தை செய்பவன்;

திரு நடம் புரி தாளீ தூளீ (thiru natampuri thALee thULee) : She has feet that execute the holy dance; She dons the holy ash;

மகர குண்டலி மாரீ சூரி (magara kundali mAree sUree) : She wears eardrops shaped like the makara fish; She is Durga known as MAri; She is MahA KALi;

திரிபுரம் தழல் ஏவீ சார்வீ அபிராமி (thiripuran thazhal Evee sArvee abirAmi) : She ignited the fire in Thiripuram; She is the ultimate refuge; She is the most beautiful; சார்வீ (sArvE) : புகலிடமாய் உள்ளவள்;

சிவன் இடந்தரி நீலீ சூலீ (sivan idanthari neelee sUlee) : She occupies the left side of Lord SivA's body; She has a blue complexion; She holds a trident in her hand;

கவுரி பஞ்சவி ஆயீ மாயீ (gavuri panchavi Ayee mAyee) : She is known as Gowri; She offers protection as the fifth Sakthi; She is Our Mother; She is the Greatest Mystic (MahA MAyee);பஞ்ச கிருத்தியங்களான சிருஷ்டி, ஸ்திதி, சம்காரம், திரோதானம், அனுக்கிரகம் என்னும் ஐந்து கிருத்தியங்களில் ஐந்தாவதாக இருக்கும் அனுக்கிரகம் என்ற ஆத்மவித்யையை அருளும் ஆருண்ய ரூபமே பஞ்சமி ஆகும்.

சிவை பெண் அம்பிகை வாலா சீலா அருள்பாலா (sivai peN ambigai vAlA seelA aruL bAlA) : She is the Consort of SivA; She is the Goddess in the form of a little girl; She is the purest Celestial named PArvathi; and You are Her Child!

அரவ கிங்கிணி வீரா தீரா ( arava kingkiNi veerA dheerA) : The anklets in Your feet make lilting sound, Oh valorous and Courageous One!

கிரி புரந்து ஒளிர் நாதா பாதா (giri purandhoLir nAthA pAdhA) : You are the luminous Lord protecting all mountains! You place Your holy feet on the heads of Your devotees!

அழகு இளம் குற மானார் தேனார் மணவாளா (azhagiLan kuRamAnAr thEnAr maNavALA) : You are the honey-like sweet Consort of VaLLi, the beautiful and young damsel of the KuRavAs!

அரி அரன் பிரமாவோடே மூவகையர் (ari aran biramAvOdE mUvagaiyar) : The Trinity of Vishnu, SivA and BrahmA,

இந்திர கோமான் நீள் வான் அமரர் கந்தரு வானோர் (indhira kOmAn neeL vAn amarar kandharu vAnOr) : King IndrA, the DEvAs in the large Celestial Land, GandharvAs and

ஏனோர் பெருமாளே (EnOr perumALE.) : all others worship You, Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே