325. அதல சேடனார்


ராகம் : பிருந்தாவன சாரங்காஅங்கதாளம் (5½)
1½ + 1½ + 2½ (5½)
அதல சேட னாராட அகில மேரு மீதாட
அபின காளி தானாட அவளோடன்
றதிர வீசி வாதாடும் விடையி லேறு வாராட
அருகு பூத வேதாளமவையாட
மதுர வாணி தானாட மலரில் வேத னாராட
மருவு வானு ளோராடமதியாட
வனச மாமி யாராட நெடிய மாம னாராட
மயிலு மாடி நீயாடிவரவேணும்
கதைவி டாத தோள்வீம னெதிர்கொள் வாளி யால்நீடு
கருத லார்கள் மாசேனைபொடியாகக்
கதறு காலி போய்மீள விஜய னேறு தேர்மீது
கனக வேத கோடூதிஅலைமோதும்
உததி மீதி லேசாயு முலக மூடு சீர்பாத
உவண மூர்தி மாமாயன்மருகோனே
உதய தாம மார்பான ப்ரபுட தேவ மாராஜ
னுளமு மாட வாழ்தேவர் பெருமாளே.

Learn The Song



Raga Brindavana Saranga (Janyam of 22nd mela Karaharapriya)

Arohanam: S R2 M1 P N3 S    Avarohanam: S N2 P M1 R2 G2 S

Paraphrase

The detailed story of how Saint Arunagirinathar made Murugan appear at the court of King Prabhudadeva can be read by clicking the underlined link.சம்பந்தாண்டான் என்பவரோடு அருணகிரியார் வாது செய்த போது முருக வேளைப் பிரபுட தேவராஜனுடைய சபையில் வரவழைக்கப் பாடிய பாடல் இது.

அதல சேடனார் ஆட (adhala sEdanAr Ada) : As AdhisEshan (the 1000-headed Serpent) danced in the netherworld, அதலம் (athalam) : first of the abysses or seven nether worlds;

அகில மேரு மீதாட (akila mEru meedhu Ada) : Mount Meru on the earth also danced,

அபின (அபின்ன) காளி தானாட (abina kALi thAnAda) : in unison with SivA's Dance, Kali also danced, அபின (அபின்ன)(abin(n)a) : மாறுபாடு இன்றி;

அவளோ(டு) அன்(று) அதிர வீசி வாதாடும் (avaLOdu andru adhira veesi vAdhAdum ) : along with Her, making Her shiver, raising His leg up in competition; Read How Lord Shiva Danced at Thiruvalankadu and Defeated Goddess Kali

விடையில் ஏறுவார் ஆட (vidaiyil EruvAr Ada) : SivA, who mounts on the Bull (Nandi), also danced,

அருகு பூத வேதாளம் அவையாட (arugu bUtha vEthALam avaiyAda) : and nearby, the BUthaganas and ghosts also danced,

மதுர வாணி தானாட (madhura vANi thAn Ada) : Saraswathi of sweet voice also danced,

மலரில் வேதனார் ஆட (malaril vEdhanAr Ada) : BrahmA on the Lotus also joined in the dance,

மருவு வானுளோர் ஆட மதியாட(maruvu vAnuLOr Ada madhi Ada) : all the Celestials and Moon also danced,

வனஜ மாமியார் ஆட (vanaja mAmiyAr Ada) : Lakshmi on Lotus, Your mother-in-law, danced,

நெடிய மாமனார் ஆட (nediya mAmanAr Ada) : Vishnu, the tall one (who assumed ViswarUpam) Your father-in-law,

மயிலும் ஆடி நீ ஆடி வரவேணும் (mayilum Adi nee Adi varavENum: ) : Your peacock should also dance and You too should appear before me dancing!

கதை விடாத தோள் வீமன் எதிர் கொள் வாளியால் நீடு கருதுலார்கள் மாசேனை பொடியாக(gadhai vidAdha thOL veeman edhir koL vALiyAl needu karudhalArgaL mAsEnai podiyAga) : Bhima, who never parted with his mace (gadha), from his shoulder, shot a series of arrows (in MahAbhArathA War) at the large army of his mighty opponents and decimated them (with the help of Krishna); கதாயுதத்தை தன் தோளினின்று அகற்றாத வீமன் செலுத்திய அம்பு மழையில், பெரும் பகைவர்களாகிய கெளரவர்களின் பெரிய சேனையை பொடிபட உதவியவரும், கருதுலார்கள் (karuthalArgaL) : enemies;

கதறு காலி போய் மீள (kadhaRu kAli pOy meeLa) : herds of wailing cows came rushing to (Brindhavanam) (hearing the magical flute of Krishna); கதறிச் சென்ற பசுக்கள் மீண்டுவரக் (குழலை ஊதியவரும்),

மாடு மேய்க்கும் சிறுவனாக இருந்த கண்ணன், புல்லாங்குழலை இசைத்தவாறே மாடுகளை மேய்ப்பான். தொலைதூரம் சென்று வழி தவறிய பசுக்கள் புல்லாங்குழல் இசையில் மயங்கி ஓடோடி வந்து சேர்ந்து விடும். இரவும் பகலும் எல்லா நேரங்களிலும் கண்ணனிடமே இந்த புல்லாங்குழல் இருந்தது. இதனால் பொறாமை கொண்ட கோபிகைகள் அந்த புல்லாங்குழலிடம் காரணம் கேட்டனர். புல்லாங்குழல் அடக்கத்துடன் பதில் தந்தது "நான் வெறுமையானவன் என்னுள் எதுவும் இல்லை, என்னை வைத்து அவர் இசை இசைக்கிறார், மாடு மேய்க்கிறார். எந்த நேரத்தில் எதை விரும்புகிறாரோ அந்த நேரத்தில் அவர் என்னை பயன்படுத்துகிறார்." தன்னுள் நுழையும் காற்றை இனிய இசையாக மாற்றும் தன்மை புல்லாங்குழலுக்கு உண்டு. அதுபோலவே எதுவுமற்ற வெறுமை நிலையில் உள்ள ஒருவன் கண்ணனை சரணடையும் பொழுது சிறந்தவனாக மாறுகிறான் என்பதே புல்லாங்குழலின் தாத்பரியம் ஆகும். நம்மைக் கண்ணனுக்கு அர்ப்பணம் செய்து அவனே வழிகாட்டி என உணர்ந்தால் நம்மில் அபூர்வ நாதங்கள் தோன்றும். அதுவே அவன் வாசிக்கும் இசை.

விஜயன் ஏறு தேர்மீது (vijayan Eru thEr meedhu) : as the charioteer on Vijayan (Arjuna)'s chariot,

கனக வேத கோடு ஊதி (kanaka vEdha kOdUdhi) : the golden conch shell that emitted vedic sounds when blown; தங்க மயமானதும், வேத ஒலியைத் தரும் சங்கை ஊதியவரும் , கோடு (kOdu) : horn or shanku for blowing

அலை மோதும் உததி மீதிலே சாயும் ( alai mOdhum udhadhi meedhilE sAyum) : by Krishna reclining on a serpent-bed on the milky ocean with waves tossing about, உததி (uthathi) : ocean;

உலகம் ஊடு சீர்பாத (ulagam Udu seerpAdha) : (in Vamana Avatharam) he measured the entire world with one foot (that foot-bearer, Krishna)

உவணம் ஊர்தி மாமாயன் மருகோனே (uvaNam Urdhi mAmAyan marugOnE) : He, the Great Mystic, with Garuda for vehicle. You are His favourite nephew!

உதய தாம மார்பான ( udhaya dhAma mArbAna) : Fresh garland adorning His chest, அன்று அலர்ந்த மலர் மாலையை அணி மார்பனாகிய; தாமம் = மலர்மாலை;

ப்ரபுடதேவ மாராஜ (prabuda dhEva mArAjan) : is the great King Praputa DEvA (of ThiruvaNNAmalai);

உளமும் ஆட வாழ் (uLamum Ada vAzh) : Your presence made the King's heart dance with joy

தேவர் பெருமாளே. (dhEvar perumALE.) : Oh the Greatest One of all Gods!

Comments

  1. Thanks for the meaning of the verses. We visited Tiruvannamalai in July 2016.At the Kambathu Ilayanaar Sannidhi a group was singing this song in a different and captivating tune. This is one of the 5 songs they sang. You can find the recording at https://youtu.be/HOWPHn0IO0o

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே