316. சூழும் வினை


ராகம்: மோகனம்தாளம்: சங்கீர்ண ரூபகம் (11)
சூழும்வி னைக்கட் டுன்பநெ டும்பிணிகழிகாமஞ்
சோரமி தற்குச் சிந்தைநி னைந்துறுதுணையாதே
ஏழையெ னித்துக் கங்களு டன்தினமுழல்வேனோ
ஏதம கற்றிச் செம்பத சிந்தனைதருவாயே
ஆழிய டைத்துத் தங்கையி லங்கையையெழுநாளே
ஆண்மைசெ லுத்திக் கொண்டக ரும்புயல்மருகோனே
வேழமு கற்கு தம்பியெ னுந்திருமுருகோனே
வேதவ னத்திற் சங்கரர் தந்தருள்பெருமாளே.

Learn The Song



Know The Raga Mohanam (Janyam of 29th mela Shankarabaranam)

Arohanam: S R2 G3 P D2 S    Avarohanam: S D2 P G3 R2 S

Paraphrase

சூழும் வினைக்கண் துன்ப (sUzhum vinaikkaN thunba) : Sorrows surround me as a result of my bad deeds or karma, பிறவிகள் தோறும் என்னைச் சூழ்ந்து வருகின்ற தீவினைகளின் காரணமாக உண்டாகும் துன்பம்,

நெடும் பிணி கழிகாமம் சோரம் (nedum piNi kazhi kAmam sOram) : prolonged illness, excessive lust, and stealth, கழிகாமம் = மிகுந்த காம உணர்வு,

இதற்கு சிந்தை நினைந்து (idhaRku chinthai ninaindhu) : and my mind is always filled by these thoughts.

உறு துணை யாதே (uRu thuNai yAdhE) : Who can guard me against all this? (இவைகளில் இருந்து தப்பிப் பிழைக்க) உறுதுணையாக அமைவது எது?

ஏழை என் இத்துக்கங்களுடன் தினம் உழல்வேனோ (Ezhai en ithdhukkangaL udan dhinam uzhalvEnO ) : Is this poor soul doomed to suffer daily with such grief? அறிவில்லாதவனாகிய நான் இந்த வகையான துக்கங்களுடனே நாளும் நிலைகெட்டு அலைதல் தகுமோ?

ஏதம் அகற்றிச் செம்பத சிந்தனை தருவாயே (Edham agatri sempadha chinthanai tharuvAyE ) : You must remove my shortcomings and make my mind concentrate only on Your rosy feet. ஏதம் (சமஸ்கிருதம்: खेद) (Etham) : suffering, affliction, distress;

ஆழி அடைத்து இலங்கையை எழுநாளே ஆண்மை செலுத்தி தன்கைக் கொண்ட (Azhi adaithu than kai ilankaiyai ezhunALE ANmai seluththik koNda) : He built a bridge across the sea and conquered LankA in seven days through the power of His valour;

கரும் புயல் மருகோனே ( karum puyal marugOnE) : He has the complexion of the dark clouds; and You are that Rama's nephew!

வேழ முகற்கு தம்பியெனும் திரு முருகோனே (vEzha mugaRkuth thambi enum thiru murugOnE) : Oh MurugA, You are the younger brother of the elephant-faced VinAyagA.

வேதவனத்தில் சங்கரர் தந்தருள் பெருமாளே.(vEdha vanaththil sankarar thandharuL perumALE.) : You are the son of Sankara, who presides at VEdhAraNiyam, Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே