308. நிகரில் பஞ்ச பூதமும்


ராகம்: மனோலயம்அங்கதாளம் (1½ + 1½ + 2)
நிகரில் பஞ்ச பூதமு நினையு நெஞ்சு மாவியு
நெகிழ வந்து நேர்படுமவிரோதம்
நிகழ்த ரும்ப்ர பாகர நிரவ யம்ப ராபர
நிருப அங்கு மாரவெ ளெனவேதம்
சகர சங்க சாகர மெனமு ழங்கு வாதிகள்
சமய பஞ்ச பாதக ரறியாத
தனிமை கண்ட தானகிண் கிணிய தண்டை சூழ்வன
சரண புண்ட ரீகமதருள்வாயே
மகர விம்ப சீகர முகர வங்க வாரிதி
மறுகி வெந்து வாய்விட நெடுவான
வழிதி றந்து சேனையு மெதிர்ம லைந்த சூரனு
மடிய இந்தி ராதியர்குடியேறச்
சிகர துங்க மால்வரை தகர வென்றி வேல்விடு
சிறுவ சந்த்ர சேகரர் பெருவாழ்வே
திசைதொ றும்ப்ர பூபதி திசைமு கன்ப ராவிய
திருவி ரிஞ்சை மேவியபெருமாளே.

Learn The Song




Manolayam (Janyam of 15th Mela MayamalavaGowlai) By Chitra Nagaraj

Arohanam: S R₁ M₁ P D₁ Ṡ    Avarohanam: Ṡ N₃ D₁ P M₁ R₁ S

Paraphrase

'At the Lord's feet, the antagonistic forces of the five elements, the mind and the life force that permeates the body meld together without any hostility', so proclaim the vedas. But His grandeur is unknown to demagogues and religious fanatics. His feet alone shine at the time of holocaust.

நிகரில் பஞ்ச பூதமும் ( nigaril pancha bUthamum ) : "The incomparable five elements,

நினையும் நெஞ்சும் ஆவியும் ( ninaiyu nenjum Aviyum) : the mind with thinking ability and the soul,

நெகிழ வந்து நேர்படும் அவிரோதம் (negizha vandhu nErpadum avirOdham) : mingle and melt in a state of non-enmity;

நிகழ் தரும் ப்ரபாகர (nigazh tharum prabAkara) : by Your Grace, Oh the Radiant Sun of Knowledge!

நிரவயம் பராபர நிருப அங்குமாரவெள் (niravayam parApara nirupa ankumAraveL ) : You are immortal and supreme, Oh beautiful Lord KumArA!" நிரவயம் (niravayam) : indestructible, அழிவிலாத;

என வேதம் ( enavEdham ) : - so chant the VEdAs (scriptures) praising It.

சகர சங்க சாகரம் என முழங்கு வாதிகள் (sagara sanka sAgaram ena muzhangu vAdhigaL) : The radical demagogues who make loud noise like the roaring ocean (founded by SakarAs) which is full of conch shells;

சமய பஞ்ச பாதகர் அறியாத (samaya pancha pAthakar aRiyAdha ) : who are religious debauchees can never know Its value!

தனிமை கண்டதான ( thanimai kaNdadhAna) : It stands all alone uniquely even when the Universe is about to end. ஊழி காலத்தில் தனித்து நிற்பதான;

கிண் கிணிய தண்டை சூழ்வன (kiNkiNiya thaNdai sUzh vana) : It is adorned by victorious anklet, with lilting beads inside. At the end of the yugas when darkness and deluge takes over the universe, it is the Lord's feet that shine (அதிக வித கலப கக மயிலின் மிசை யுக முடிவில் இருள் அகல ஒரு சோதி (சீர்பாத வகுப்பு) ) and restart the creation process.

சரண புண்டரீகம் அது அருள்வாயே (charaNa puNdareekamadh aruLvAyE) : It is nothing else but Your Lotus Feet; and will You grant It to me?

மகர விம்ப சீகர முகர வங்க வாரிதி (makara vimba seekara mukara vanga vAridhi) : The seas which are full of sharks and fish, bright, with noisy waves, and with a number of ships passing through, விம்ப (vimba) : radiant, ஒளி கொண்டது; சீகரம் (seegaram) : wavy, அலையுள்ளது; முகரம் (mugaram) : noisy, having conch shells, ஒலி கொண்டது/சங்குகள் உள்ளது; வங்கம் (vangam) : ship;

மறுகி வெந்து வாய்விட (maRugi vendhu vAyvida) : simply boiled over and evaporated due to excess heat;

நெடுவான வழி திறந்து சேனையும் (neduvAna vazhi thiRandhu sEnaiyum ) : the armies of asuras (demons) who came along the wide sky;
During the war of the demons with the celestials, Murugan blocked the gate of the galaxy through which the demons were proceeding. But Suran opened this colossal aerial gate and the demon army converged on the celestial army.

எதிர் மலைந்த சூரனு மடிய (edhir malaindha sUranu madiya) : and SUran who opposed You fighting in the battlefield, - all died;

இந்திராதியர் குடியேற (indhirAdhiyar kudiyEra) : the DEvAs, led by IndrA, were able to settle in their redeemed heavenly land;

சிகர துங்க மால் வரை தகர (sikara thunga mAlvarai thagara) : and the peaks of the magical mountain Krouncha were shattered; மால் வரை (maal varai) : illusionary mountain;

வென்றி வேல் விடு சிறுவ ( vendri vEl vidu siRuva) : all these happened when You let go Your victorious Spear, Oh Young One!

சந்த்ர சேகரர் பெருவாழ்வே ( chandhra sEkarar peru vAzhvE) : You are the treasure of Lord SivA, who wears the crescent moon on His tresses!

திசைதொறும் ப்ர பூபதி திசை முகன் பராவிய (dhisai dhoRum prabU pathi dhisai mukan parAviya) : From all directions, the famous kings, DEvAs and BrahmA worship this famous place called திசை முகன்(thisai mugan) : Brahma;

திருவிரிஞ்சை மேவிய பெருமாளே. (thiru virinjai mEviya perumALE.) : Thiruvirinjai, which is Your abode, Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே