302. என்னால் பிறக்கவும்


ராகம் : பேகடாதாளம்: ஆதி
என்னால் பிறக்கவும் என்னா லிறக்கவும்
என்னால் துதிக்கவும் கண்களாலே
என்னா லழைக்கவும் என்னால் நடக்கவும்
என்னா லிருக்கவும்பெண்டிர்வீடு
என்னால் சுகிக்கவும் என்னால் முசிக்கவும்
என்னால் சலிக்கவும்தொந்தநோயை
என்னா லெரிக்கவும் என்னால் நினைக்கவும்
என்னால் தரிக்கவும்இங்குநானார்
கன்னா ருரித்தஎன் மன்னா எனக்குநல்
கர்ணா மிர்தப்பதம்தந்தகோவே
கல்லார் மனத்துட னில்லா மனத்தவ
கண்ணா டியிற்றடம்கண்டவேலா
மன்னான தக்கனை முன்னாள்மு டித்தலை
வன்வாளி யிற்கொளும்தங்கரூபன்
மன்னா குறத்தியின் மன்னா வயற்பதி
மன்னா முவர்க்கொருதம்பிரானே.

Learn The Song



Raga Begada (Janyam of 29th mela Shankarabaranam)

Arohanam: S G3 R2 G3 M1 P D2 P S    Avarohanam: S N3 D2 P M1 G3 R2

Paraphrase

Because of ignorance, ego, and illusion, man considers himself to be the real doer and suffers the consequences of his actions/karma. God gives people the freedom to exercise their free will and makes them responsible for their actions, and hence they remain bound to the cycle of births and deaths. But if a devotee of God surrenders himself completely to God, accepts God as the real Doer and performs actions as an instrument of God, he is freed from the positive and negative consequences of his actions. Saint Arunagirinathar had completely surrendered his free will to Lord Murugan's will. A beautiful song sung with total surrender to the Lord.

என்னால் பிறக்கவும் என்னால் இறக்கவும் (ennAl piRakkavum ennAl iRakkavum) : By my own effort, for me to be born in this world or die, அடியேனால் விரும்பிய வண்ணம் பிறக்கவும்அல்லது நினைத்தவுடன் இறந்து போகவும்,

என்னால் துதிக்கவும் (ennAl thudhikkavum ) : to worship.

கண்களாலே என்னால் அழைக்கவும் (kaNgaLAlE ennAl azhaikkavum) : to beckon someone with my eyes at will,

என்னால் நடக்கவும் என்னால் இருக்கவும் (ennAl nadakkavum ennAl irukkavum) : to walk or stay in any place by my own accord,

பெண்டிர் வீடு என்னால் சுகிக்கவும் (peNdir veedu ennAl sukikkavum) : to desire and enjoy women and home,

என்னால் முசிக்கவும் (ennAl musikkavum) : to become emaciated due to uncontrolled passion, முசித்தல் = களைத்தல் ; இடர்ப்படுதல் ; மெலிதல் ; அழிதல் ;

என்னால் சலிக்கவும் (ennAl salikkavum) : or to become fed up,

தொந்த நோயை என்னால் எரிக்கவும் (thondha nOyai ennAl erikkavum) : to burn all the diseases arising from my Karma, வினையின் வசமாக வரும் நோய்களை நான் பொசுக்குவதற்கும்,

என்னால் நினைக்கவும் (ennAl ninaikkavum) : to have thoughts,

என்னால் தரிக்கவும் (ennAl tharikkavum ) : to bear pleasure and pain,

இங்கு நான் ஆர் (ingu nAnAr) : Who am I to do all these things on this earth? (I do not have either the capacity or the independence to do so). இங்கே எனக்கு என்ன சுதந்திரம் உண்டு? எல்லாம் அவன் திருவருட்செயலே.

கல் நார் உரித்த என் மன்னா (kannAr uriththa en mannA) : You have done the rare feat of making my heart melt, which is as difficult as pulling fibers from stone, Oh My King! கல்லில் நார் உரித்தல் (kallil naar uriththal) : to try to extract or obtain non-existent things, இல்லாத பொருளைப் பெற முயலுதல்;

எனக்கு நல் கர்ணாமிர்தப்பதம் தந்த கோவே (enakku nal karNA mirthap padham thandha kOvE) : Your preaching feels like Divine Nectar in my ears, Oh My Lord! செவிக்கு நல்ல அமுதம் போன்ற உபதேச மொழியை எனக்கு அருளிச்செய்த அரசனே ;

கல்லார் மனத்துடன் நில்லா மனத்தவ (kallar manaththudan nilla manaththava) : You do not have the heart to dwell in the minds of those who do not learn or contemplate on You உன்னைக் கற்றறியார் மனத்தில் தங்காத மனத்தோனே,

கண்ணாடியில் தடம் கண்டவேலா (kaNNAdiyil thadam kaNda vElA) : With Your spear You created a pond (at VayalUr) with crystal clear water! This refers to the Shakti teertham that Murugan created at Vayalur by wielding His spear and carving a pond that had crystal clear water. Saint Arunagirinathar refers to this pond and its crystal clear water in the song pakkuva achara as niththila neeravi. கண்ணாடி போல் தெளிவான தடாகத்தை வேலால் கண்டவனே! தடம் = தடாகம்;
வயலூரிலுள்ள சக்தி தீர்த்தம் முருகப்பெருமான் வேலை செலுத்தி உண்டாக்கிய தீர்த்தம் என்று கருதப்படுகிறது. பளிங்கு போன்று விளங்கும் இத்தீர்த்தத்தை அருணகிரியார் 'நித்தில நீராவி' என்று பக்குவ ஆசார என்ற பாட்டில் குறிப்பிடுகிறார். நித்திலம்' என்றால் 'முத்து' என்று பொருள்.

மன்னான தக்கனை முன்னாள் (mannAna thakkanai munnAL) : When once King Daksha heaped insults,

முடித்தலை வன் வாளியிற் கொளும் தங்கரூபன் மன்னா (mudith thalai vanvALiyil koLum thanga rUpan manna) : SivA of golden body severed his crowned head with a fierce arrow. You are that SivA's Master, Oh Lord! அவனது மகுடம் அணிந்த தலையை கொடிய வாலினால் வெட்டிய பொன்னார் மேனியராகிய சிவபிரானுக்கும் தலைவரே!

குறத்தியின் மன்னா (kuRaththiyin mannA) : You are also the Lord of VaLLi, the damsel of KuRavAs!

வயற்பதி மன்னா (vayaRpadhi mannA) : You are the King at VayalUr

முவர்க்கொரு தம்பிரானே.(muvarkkoru thambirAnE. ) : You are the incomparable Leader of the Trinity (BrahmA, Vishnu and SivA), Oh Great One!

Read Also

unEr elumbu (ஊனேர் எலும்பு)

Comments

  1. Wonderful explanation. All act of Lord Murugan. I am destined and graced to read this today 🙏🙏🙏

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே