294. ஆனைமுகவற்கு


ராகம்: நீலாம்பரி    தாளம்: ஆதி 2 களை
ஆனைமுக வற்கு நேரிளைய பத்த
ஆறுமுக வித்தகமரேசா
ஆதியர னுக்கும் வேதமுதல் வற்கும்
ஆரணமு ரைத்தகுருநாதா
தானவர் குலத்தை வாள்கொடு துணித்த
சால்சதுர் மிகுத்ததிறல்வீரா
தாளிணைக ளுற்று மேவியப தத்தில்
வாழ்வொடு சிறக்கஅருள்வாயே
வானெழு புவிக்கு மாலுமய னுக்கும்
யாவரொரு வர்க்குமறியாத
மாமதுரை சொக்கர் மாதுமை களிக்க
மாமயில் நடத்து முருகோனே
தேனெழு புனத்தில் மான்விழி குறத்தி
சேரமரு வுற்றதிரள்தோளா
தேவர்கள் கருத்தில் மேவிய பயத்தை
வேல்கொடு தணித்தபெருமாளே.

Learn The Song




Raga Neelambari (Janyam of 29th mela Shankarabaranam)

Arohanam: S G3 M1 P N3 S    Avarohanam: S N3 P D2 N2 P M1 G3 R2 M1 G3 S

Paraphrase

ஆனைமுக வற்கு நேர் இளைய பத்த (Anai mugavaRku nEriLaiya baththa) : My dear, You are the immediate younger brother of elephant-faced VinAyagA.

ஆறுமுக வித்தக அமரேசா (ARumuga viththaga amarEsA) : You are also the six-faced scholar and the Lord of all DEvAs.

ஆதி அரனுக்கும் வேத முதல்வற்கும் (Adhi aranukkum vEdha mudhalvarkkum ) : To the primordial Lord SivA and to BrahmA, presiding over the VEdAs,

ஆரணம் உரைத்த குருநாதா (AraNam uraiththa gurunAtha) : You are the Great Master who taught the scriptures!

தானவர் குலத்தை வாள் கொடு துணித்த (dhAnavar kulaththai vAL kodu thuNiththa) : Dynasties of the demons were beheaded with the sword

சால் சதுர் மிகுத்த திறல் வீரா (sAlchathur miguththa thiRal veerA) : of Yours, the shrewdest war-strategist and valorous one! சால் = திறமையான, கவனத்துடன்;

தாள் இணைகள் உற்று மேவிய பதத்தில் ( thAL iNaigaL utru mEviya padhaththil) : I must surrender at Your two lotus feet and attain the status

வாழ்வொடு சிறக்க அருள்வாயே (vAzhvodu siRakka aruLvAyE) : so that my life prospers with Your Grace.

வான் எழு புவிக்கு மாலும் அயனுக்கும் (vAn ezhu buvikkum mAlum ayanukkum) : The seven worlds* of the upper strata, Vishnu and BrahmA,

யாவர் ஒருவர்க்கும் அறியாத (yAvar oruvarkkum aRiyAdha) : or any one, for that matter, could not perceive the greatness of

மாமதுரை சொக்கர் மாதுமை களிக்க (mAmadhurai chokkar mAdhumai kaLikka) : SivA who resides in Madhurai as Chokkar; He and PArvathi were thrilled

மாமயில் நடத்து முருகோனே (mA mayil nadaththu murugOnE) : when You flew around on the peacock, Oh Muruga.

தேனெழு புனத்தில் மான் விழி குறத்தி (thEn ezhu punaththil mAnvizhi kuRaththi) : The deer-eyed damsel of KuravAs, namely VaLLi, who resides in the millet-field at VaLLimalai, where honey is abundant,

சேர மருவுற்ற திரள் தோளா (sEra maruvutra thiraL thOLA) : was embraced by You with Your strong shoulders!

தேவர்கள் கருத்தில் மேவிய பயத்தை (dhEvargaL karuththil mEviya bayaththai) : Any fear about SUran that was lurking in the minds of DEvAs

வேல்கொடு தணித்த பெருமாளே.(vEl kodu thaNiththa perumALE.) : You removed them with Your Spear, Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே