282. ஆறும் ஆறும்


ராகம் : நாட்டகுறிஞ்சிதாளம்: ஆதி திச்ர நடை (12)
ஆறு மாறு மஞ்சு மஞ்சும் ஆறு மாறு மஞ்சு மஞ்சும்
ஆறு மாறு மஞ்சு மஞ்சும்அறுநாலும்
ஆறு மாய சஞ்ச லங்கள் வேற தாவி ளங்கு கின்ற
ஆரணாக மங்க டந்த கலையான
ஈறு கூற ரும்பெ ருஞ்சு வாமி யாயி ருந்த நன்றி
யேது வேறி யம்ப லின்றியொருதானாய்
யாவு மாய்ம னங்க டந்த மோன வீட டைந்தொ ருங்கி
யான வாவ டங்க என்றுபெறுவேனோ
மாறு கூறி வந்தெ திர்ந்த சூரர் சேனை மங்க வங்க
வாரி மேல்வெ குண்ட சண்டவிததாரை
வாகை வேல கொன்றை தும்பை மாலை கூவி ளங்கொ ழுந்து
வால சோம னஞ்சு பொங்கு பகுவாய
சீறு மாசு ணங்க ரந்தை ஆறு வேணி கொண்ட நம்பர்
தேசி காக டம்ப லங்கல்புனைவோனே
தேவர் யாவ ருந்தி ரண்டு பாரின் மீது வந்தி றைஞ்சு
தேவ னூர்வி ளங்க வந்தபெருமாளே.

Learn The Song




Raga Nattai Kurinji (Janyam of 28th mela Hari Kambhoji)

Arohanam: S R2 G3 M1 N2 D2 N2 P D2 N2 S
Avarohanam: S N2 D2 M1 G3 M1 P G3 R2 S


Paraphrase

அறிவு வடிவாக நிளங்கும் இறைவனை ஞானத்தின் எல்லையாகத் திகழும் மோனத்தில் தான் உணர முடியும். மோன நிலை மனமே அற்ற நிலை. The all-pervading eternal entity that is the sub-stratum of every living and non-living subastance is the Brahman who is formless, transcendent, pure consciousness, pure existence. Brahman is the uncaused cause of the Universe; not conditioned by time, space and causation. Brahman is the basis, source and support of everything — the transcendent reality which is the Divine Ground of all matter, energy, time, space, being, and everything beyond in this universe. Its nature consists of the three attributes of (1) sat (Absolute Being), (2) chit (Consciousness), (3) ananda (Bliss). What prevents us from seeing ourselves as we truly are – as Pure Consciousness – are the three malas or cloakings that make us feel separate and different, despite the common unifying spirit in all beings. This experience of differentiation comes from a power called Maya which is a mala that our bodies are subject to. Mala means taint or impurity, a limiting condition that hampers the free expansion of spirit. It is of three forms, anava mala, maya mala, and karma mala. These Malas are part of our existence, part of the fabric of who we are. Only when the body and mind are in a state of total silence, the mind, anchored as a mere observer of Itself, can experience its infinite nature.

ஆறும் ஆறும் அஞ்சும் அஞ்சும் ஆறும் ஆறும் அஞ்சும் அஞ்சும் ஆறும் ஆறும் அஞ்சும் அஞ்சும் அறுநாலும் ஆறுமாய ( ARum ARum anjum anjum ARum ARum anjum anjum ARum ARum anjum anjum aRu nAlum ARum Aya) : six plus six plus five plus five plus six plus six plus five plus five plus six plus six plus five plus five plus twenty-four plus six (totalling ninety-six) tenets in all,

சஞ்சலஞ்கள் வேறதா விளங்குகின்ற (sanchalangaL vERadhA viLangugindra ) : are the thathvAs (tenets) causing distress - this One stands alone different from all these tenets! துன்பங்கள் அனைத்தினுக்கும் காரணமாக விளங்குகின்ற தொண்ணூற்று ஆறு தத்துவங்களுக்கும் வேறாக விளங்குகின்றதும்,

ஆரண ஆகமம் கடந்த (AraNa Agamam kadandha) : It also transcends the VEdAs and scriptures! வேதங்களின் உட்பொருளையும், ஆகமங்களின் உட்பொருளையும் கடந்த நிலையில் விளங்குவது பரம்பொருள்.
வேதம் - அறிவு நூல்; ஆகமம் - வழிபாட்டு நூல். உலகியல் பொது தர்மங்களைப் போதிப்பது வேதம். ஆன்மிகச் சிறப்பியல்புகளை உபதேசிப்பது சிவாகமம்.

கலையான ஈறு கூற அரும் பெரும் சுவாமியாய் இருந்த நன்றி (kalaiyAna eeRu kURarum perum suvAmi Ayirundha nandri) : It is all beneficial and divine; it is beyond description even for the instructive art of SidhdhAntha (which are the end part of vedas and agamas)!
The first part of sivagamas contain karma kanda and the concluding part contain jnanakanda. The jnanakandas are the philosophica)l questions that lead to the discovery of the nature of the highest reality. The karma kanda are the techniques used by the sages to realize this highest truth.
உபதேச கலையாகிய சித்தாந்தமே விளக்குவதற்கு அரியதான பெரிய நன்மை பொருளை; கலையான ஈறு (kalaiyAna eeRu) : உபதேச கலையாகிய சித்தாந்தம்;
விரிவாக்கம்: ஆன்மிகச் சிறப்பியல்புகளை உபதேசிக்கும் சிவாகமம், கர்ம காண்டம் மற்றும் ஞானகாண்டம் அடங்கியது. தந்திர கலையும் மந்திர கலையும் சேர்ந்த கர்ம காண்டம், நாம் நாள்தோறும் செய்ய வேண்டிய நித்திய கர்மாநுட்டானங்களையும், பயன் கருதிச் செய்யப் பெறும் சிறப்புக் கர்மாக்களையும், அதன் செயல்முறைகளையும் கூறுவது. உபதேச கலை என்பது ஞானகாண்டம்; தலைவனாகிய இறைவனது இயல்புகளையும், உயிர்களின் இயல்புகளையும், உலகு, உடல், மனம் முதலியவற்றின் (தத்துவங்களின்) இயல்புகளையும் இது உணர்த்தும்.
;

ஏது வேறு இயம்பலின்றி (yEthu vERiyambal indri) : This cannot be explained by any cause whatsoever! மூலகாரணம் வேறு சொல்லுவதற்கு இல்லாமல்; ஏது (Ethu) : sanskrit word hetu (हेतु) which means purpose, cause; ஆராய்ச்சிக்கு அப்பாற் பட்டவன்; அனுபவத்தால் உணரப்படும் பொருள்.

ஒரு தானாய் யாவுமாய் (oru thAnAy yAvumAy ) : It is all by Itself; it is all-pervasive;

மனம் கடந்த மோன வீடு அடைந்து (manam kadandha mOna veedu adaindhu ) : To reach the silent bliss beyond perception,

ஒருங்கி யான் அவா அடங்க என்று பெறுவேனோ (orungi yAn avA adanga endru peRuvEnO) : when will I be able to restrain my desires with a focussed mind?

மாறு கூறி வந்தெதிர்ந்த சூரர் சேனை மங்க (mARu kURi vandhu ethirndha sUrar sEnai manga) : Destroying SUra's armies which confronted You, swearing abusively, and

வங்க வாரி மேல் வெகுண்ட (vanga vAri mEl veguNda) : becoming furious with the seas in which ships move about, கலங்கள் செலுத்தப்படும் கடலின் மீது சினம் கொண்டு, வங்கம் (vangam) : ship;

சண்ட வித தாரை வாகை வேல (chanda vidha thArai vAgai vEla) : Your spear was fast, furious and sharp enough to ensure victory! வேகம் கொண்டு ஒழுங்காகச் செல்லக்கூடியதான வெற்றி வேலினை ஏந்தியவரே! சண்ட வித (chanda vitha) : வலிமை கொண்ட; விரைவும் கோபமும் கொண்ட; தாரை (thArai) : sharp;

கொன்றை தும்பை மாலை கூவிளங்கொழுந்து வால சோமன் (kondrai thumbai mAlai kUviLang kozhundhu vAla sOman) : kondRai (Indian laburnum) and thumbai garlands, vilvam leaves, crescent moon, வால சோமன் = இளம் பிறைச் சந்திரன்

நஞ்சு பொங்கு பகுவாய சீறு மாசுணம் (nanju pongu baguvAya seeRu mAsuNam ) : poisonous and fierce serpent with a split mouth, பகுவாய் - பிளந்த வாய்;

கரந்தை ஆறு வேணி கொண்ட நம்பர் தேசிகா (karandhai ARu vENi koNda nambar dhEsikA) : basil leaves and a river (Ganga) are all adorning the tresses of our Lord SivA; and You are His Master! கரந்தை (karanthai) : திருநீற்று பச்சை ;

கடம்பு அலங்கல் புனைவோனே (kadambu alangal punaivOnE) : You wear the lovely garland made of Kadamba flowers!

தேவர் யாவரும் திரண்டு (dhEvar yAvarun thiraNdu ) : All the DEvAs congregate

பாரின் மீது வந்து இறைஞ்சு (pArin meedhu vandhu iRainju ) : and come to earth for prostrating before You

தேவனூர் விளங்க வந்த பெருமாளே (dhEvanUr viLanga vandha perumALE.) : at DhEvanUr, which prospers due to You, Oh Great One! (விழுப்புரம் மாவட்டம்) தேவனூர் என்னும் ஊரில் அமைந்துள்ள திருநாதீஸ்வரர் கோயில் சிறக்க வந்த பெருமாளே.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே