269. குசமாகி


ராகம் : தர்மவதிஅங்கதாளம் (5)
1 + 1½ + 1½ + 1
குசமாகி யாருமலை மரைமாநு ணூலினிடை
குடிலான ஆல்வயிறுகுழையூடே
குறிபோகு மீனவிழி மதிமாமு காருமலர்
குழல்கார தானகுணமிலிமாதர்
புசவாசை யால்மனது உனைநாடி டாதபடி
புலையேனு லாவிமிகுபுணர்வாகிப்
புகழான பூமிமிசை மடிவாயி றாதவகை
பொலிவான பாதமலரருள்வாயே
நிசநார ணாதிதிரு மருகாவு லாசமிகு
நிகழ்பொத மானபரமுருகோனே
நிதிஞான போதமர னிருகாதி லேயுதவு
நிபுணாநி சாசரர்கள்குலகாலா
திசைமாமு காழியரி மகவான்மு னோர்கள்பணி
சிவநாத ராலமயில்அமுதேசர்
திகழ்பால மாகமுற மணிமாளி மாடமுயர்
திருவான்மி யூர்மருவுபெருமாளே.

Learn The Song




Paraphrase

குசம் ஆகி ஆரும் மலை (kusamAgi Arum malai) : Filled and rounded mountains, called the breasts; ஆர் (Ar) : Fullness, completeness;

மரை மா நுண் நூலின் இடை ( marai mA nuN nUlin idai) : the waistline is slender like the lotus fibre; (தா)மரை ((thaa)marai) : lotus;

குடிலான ஆல் வயிறு (kudilAna Al vayiRu) : the banyan-leaf shaped cottage in the abdomen that houses the embryo, கருவுக்கு இருப்பிடமான ஆலிலை போன்ற வயிறு ;

குழை ஊடே குறி போகு மீன விழி (kuzhaiyUdE kuRipOku meenavizhi) : fish-like eyes that dart towards the studs on the ears,

மதி மா முக ஆரும் மலர் ( mathi mA muga Arumalar) : the flower-like face resembles the moon; ஆரும் மலர் (Arum malar) : நிறைந்த மலர்;

குழல் கார் அதான குணமிலி மாதர் (kuzhal kAr athAna guNamili mAthar) : and the hair is like the dark cloud. These are the attributes of the characterless whores. குழல் (kuzhal) : hair; கார் (kaar) : cloud;

புச வாசையால் மனது உனை நாடிடாத படி (buja vAsaiyAl manathu unai nAdidAtha padi) : Craving to hug their shoulders, and neglecting to seek Your blessings,

புலையேன் உலாவி மிகு புணர்வாகி (pulaiyEn ulAvi migu puNarvAgip) : I, the basest one, have been wandering aimlessly, indulging in excessive carnal pleasure.

புகழான பூமிமிசை மடிவாய் இறாத வகை (pugazhAna bUmi misai madivAy iRAtha vagai) : I do not want to deteriorate like this and die in this famous world; மடிவாய் (madivaay) : to die, to be destroyed, அழிவு உற்றவனாக; இறாத வகை (iRaatha vagai) : do not end up, முடிந்து போகாத வண்ணம்

பொலிவான பாதமலர் அருள்வாயே (polivAna pAthamalar aruLvAyE) : for that, kindly bless me with Your bright lotus feet!

நிச நாரணாதி திரு மருகா (nija nAraNAthi thiru marugA) : You are the handsome nephew of the real Lord, NArAyaNA!

உலாசமிகு நிகழ் போதமான பர முருகோனே (ulAsa migu nigazh bOthamAna para murugOnE) : You are the supreme Lord, Oh MurugA, in the form of pure and blissful knowledge! உள்ளத்தில் மிகுந்த ஆனந்தக் களிப்பை உண்டாக்கும் ஞானமே வடிவான மேலான முருகக் பெருமானே!

நிதி ஞான போதம் அரன் இரு காதிலே உதவு நிபுணா (nithi njAna bOtham aran iru kAthilE uthavu nipuNA) : You are the expert who imparted the treasure that is the true knowledge into both the ears of Lord SivA!

நிசாசரர்கள் குல காலா (nisAsarargaL kula kAlA) : You are the God of Death for the entire dynasty of demons! நிசா சரர்கள்(nisAsarargaL ) : those who walk in the darkness, the demons;

திசை மாமுக ஆழி அரி மகவான் முனோர்கள் பணி சிவநாதர் (thisai mAmuga Azhi ari magavAn munOrgaL paNi sivanAthar) : BrahmA, with four faces pointing to the four directions, Vishnu with the wheel Sudharsana as His weapon, IndrA and other celestials worship Lord Shiva; ஆழி அரி (Azhi ari) : Lord Vishnu with the Chakra; மகவான் (magavaan) : Indra;

ஆலம் அயில் அமுதேசர் திகழ்பால ( Alam ayil amuthEsar thikazhpAla) : You are the renowned child of that nectar-like Lord (ShivA) who devoured poison; ஆலம் (Alam) : poison; ஆலம் அயில் = ஆலகால விடத்தை உண்ட;

மாகம் உற மணி மாளி மாடம் உயர் திருவான்மியூர் மருவு பெருமாளே.(mAgam uRa maNimALi mAdamuyar thiruvAnmi yUr maruvu perumALE.) : The lovely palaces of this place, ThiruvAnmiyUr, are so high that they stretch up to the skies, and it is Your abode, Oh Great One! மாகம் உற (mAgan uRa) : reaching upto the sky; மணி மாளி = அழகிய மாளிகைகள்;

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே