268. பாலோ தேனோ பாகோ


ராகம் : நீலாம்பரி  தாளம்: ஆதி 2 களை
பாலோ தேனோ பாகோ வானோர்
பாரா வாரத்தமுதேயோ
பாரோர் சீரோ வேளேர் வாழ்வோ
பானோ வான்முத்தெனநீளத்
தாலோ தாலே லோபா டாதே
தாய்மார் நேசத்துனுசாரந்
தாரா தேபே ரீயா தேபே
சாதே யேசத்தகுமோதான்
ஆலோல் கேளா மேலோர் நாண்மா
லானா தேனற் புனமேபோய்
ஆயாள் தாள்மேல் வீழா வாழா
ஆளா வேளைப்புகுவோனே
சேலோ டேசே ராரால் சாலார்
சீரா ரூரிற் பெருவாழ்வே
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப்பெருமாளே.

Learn The Song



Raga Neelambari (Janyam of 29th mela Shankarabaranam)

Arohanam: S G3 M1 P N3 S    Avarohanam: S N3 P D2 N2 P M1 G3 R2 M1 G3 S

Paraphrase

Saint Arunagirinathar expresses regret that he should lead

பாலோ தேனோ பாகோ (pAlO thEnO pAkO) : "Are you milk, honey or a piece of jaggery?

வானோர் பாராவாரத்து அமுதேயோ (vAnOr pArAvAraththu amuthEyO) : or are you the nectar drawn out by the celestials from the milky ocean? பாராவாரம் (paaraavaaram) : sea, ocean;

பாரோர் சீரோ வேள் ஏர் வாழ்வோ (pArOr seerO vELEr vAzhvO) : Are you the treasure owned by the people of the world? Or are you blessed with a life like that of the God of Love (Manmathan)? இவ்வுலகில் உள்ளோரின் சிறப்புப் பொருளோ? மன்மதனுக்கு நிகரான வாழ்வோ?

பானோ வான்முத்தென (pAnO vAn muththu ena) : Are you the sun or the most precious pearl?" - with such greetings, சூரியனோ? சிறந்த முத்தோ (என்றெல்லாம் என்னைக் கொஞ்சி) (வான் = சிறந்த; ('வான்கழல்' பதத்துடன் ஒப்பிடுக)

நீளத் தாலோ தாலேலோ பாடாதே (neeLath thAlO thAlE lOpA dAthE) : lullabies were no longer sung to me; தால் - நாக்கு;

தாய்மார் நேசத்து உனு சாரந் தாராதே (thAymAr nEsath thunusAram thArAthE) : no mother thought of me with love and breast-fed me; நேசத்து = அன்புடன், உன்னு - விரைந்து எழுதல். சாரம் - சாறு

பேர் ஈயாதே பேசாதே (pEr eeyAthE pEsAthE:) : I was not given any worthy name nor was I ever spoken to with love;

ஏசத் தகுமோ தான் (yEsath thagumO thAn) : I was only ridiculed. Is it fair?

ஆலோல் கேளா மேலோர் நாள் (AlOl kELA mElOr nAL) : The other day, upon hearing the shouts of VaLLi driving away the birds (while guarding the millet), ஆல்+ஓலம் (Al Olam) : expression used to drive away birds;

மால் ஆனாது ஏனற் புனமே போய் (mAl AnAthu EnaR punamE pOy) : You became so uncontrollably passionate that You proceeded right up to her millet field,

ஆயாள் தாள்மேல் வீழா வாழா (AyAL thAL mEl veezhA vAzhA) : and fell at the feet of Mother VaLLi declaring that Your life then became worth living;

ஆளா வேளைப் புகுவோனே ( ALA vELaip puguvOnE) : thus You entered her life at an opportune moment as an attendant and servant! வள்ளிக்கு வேளைக்காரனாக, சமயத்தில் புகுந்து விளையாடியவனே; அடியவர்களை உற்ற வேளையில் வந்து காக்கும் சிறப்பால் முருகனை வேளைக்காரன் என்று அழைக்கிறோம்.

சேலோடே சேர் ஆரால் சாலார் (sElO dEsE rArAl sAlAr ) : Along with sEl fish, there are plenty of Aaral fish in this prosperous place, ThiruvArUr; சேல், ஆரால் (sEl, Araal) : kinds of fish; சாலார் (sAlAr) : மிகுந்து நிறைந்துள்ள;

சீர் ஆரூரிற் பெருவாழ்வே (seer ArUriR peruvAzhvE) : You are the treasure of this town!

சேயே வேளே பூவே கோவே (sEyE vELE pUvE kOvE) : You are Lord Siva's Son! You are Lord KandhA! You are fresh like the flower! Oh King! செம்மை நிறத்தவனே/ இறைவன் தந்த மகனே!/பெருமைக்குரியவனே!, வேளே! பொலிவுள்ளவனே! தலைவனே! வேள் = அரசன், கொடையாளி;

தேவே தேவப்பெருமாளே. (thEvE thEvap perumALE.) : Oh Lord of all the celestials! Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே