267. பாலோ தேனோ

ராகம் : குந்தலவராளி தாளம்: ஆதி 2 களை
பாலோ தேனோ பலவுறு சுளையது
தானோ வானோர் அமுதுகொல் கழைரச
பாகோ வூனோ டுருகிய மகனுணவருண்ஞானப்
பாலோ வேறோ மொழியென அடுகொடு
வேலோ கோலோ விழியென முகமது
பானோ வானூர் நிலவுகொ லெனமகண்மகிழ்வேனை
நாலாம் ரூபா கமலஷண் முகவொளி
யேதோ மாதோம் எனதகம் வளரொளி
நானோ நீயோ படிகமொ டொளிரிடமதுசோதி
நாடோ வீடோ நடுமொழி யெனநடு
தூணேர் தோளா சுரமுக கனசபை
நாதா தாதா எனவுரு கிடஅருள் புரிவாயே
மாலாய் வானோர் மலர்மழை பொழியவ
தாரா சூரா எனமுநி வர்கள்புகழ்
மாயா ரூபா அரகர சிவசிவஎனவோதா
வாதா டூரோ டவுணரொ டலைகடல்
கோகோ கோகோ எனமலை வெடிபட
வாளால் வேலால் மடிவுசெய் தருளியமுருகோனே
சூலாள் மாலாள் மலர்மகள் கலைமகள்
ஓதார் சீராள் கதிர்மதி குலவிய
தோடாள் கோடா ரிணைமுலை குமரிமுன்அருள்பாலா
தூயா ராயார் இதுசுக சிவபத
வாழ்வா மீனே வதிவமெ னுணர்வொடு
சூழ்சீ ராரூர் மருவிய இமையவர்பெருமாளே.

Learn The Song


Raga Kuntalavarali (Janyam of 28th mela Hari Kambhoji)

Arohanam: S M1 P D2 N2 D2 S    Avarohanam: S N2 D2 P M1 S

Paraphrase

உருவம், அருவம், அருவுருவம் ஆகிய மூன்றையும் கடந்தது இறைவனுடைய தன்னியல்பு. இது உண்மை இயல்பு. சொரூப இலக்கணம் எனவும் கூறப்படும். அது பேரொளிப் பிழம்பாக விளங்கும். அறிவே திருமேனியாய், ஞானவடிவாய், பரஞ்சோதியாய் அப்பேரொளி திகழும். இதைத்தான் அருணகிரிநாதர் நாலாம் ரூபா என்று வர்ணிக்கிறார்.
காம வயப்பட்டு பெண்கள் அழகில் மயங்கி அவர்கள் பேசும் மொழி பாலோ, தேனோ, அல்லது உமையாள் ஈந்த ஞானப்பாலோ என்று உருகுவதற்கு பதிலாக இறைவனுடன் நீயோ நானோ என்று சொல்ல முடியாதபடி இரண்டற கலந்து, ஒப்பு உவமை இல்லாத ஞான ஒளிவீசும் சிவபோதமாகிய ஆத்ம சொரூபம் பெற்று, இது திருநாடாகிய வைகுண்டமோ அல்லது வீடு என்னும் பரமபதமோ என்று உருகிடும் நிலையை தந்து அருளும்படி அருணகிரிநாதர் வேண்டுகிறார்.

பாலோ தேனோ பல உறு சுளை அது தானோ (pAlO thEnO pala uRu suLai athu thAnO) : "Is it milk, honey or a piece of the jack fruit? பல உறு சுளை = பலாப் பழத்தின் சுளை;

வானோர் அமுது கொல் கழை ரச பாகோ (vAnOr amuthu kol kazhai rasa pAgO) : Is it the nectar of the celestials or jaggery made from sugarcane juice?; கழை (kazhai) : sugarcane;

ஊனோடு உருகிய மகன் உண அருள் ஞானப் பாலோ (UnOdu urugiya magan uNa aruL njAnap pAlO) : Or is it the Divine milk breastfed by UmAdEvi to Her child ThirugnAna Sambandhar who sang the heartrending Divine Hymns (ThEvAram)? ஊன் (Un) : muscular and fatty tissue, the inmost or essential part; ஊனோடு உருகிய மகன் (UnOdu urugiya magan) : son (Sambandhar) with melting mind/soul, ஊன் உருகப் பாடிய பாலனாகிய திருஞான சம்பந்தர்;

வேறோ மொழி என (vERO mozhi ena) : What else could be compared with the sweet speech (of these women)?

அடு கொடு வேலோ கோலோ விழி என ( adu kodu vElO kOlO vizhi ena) : Are their eyes the spears or the arrows that kill? தாக்குகின்ற கொடுமையான வேலோ அல்லது அம்புக்கணைகளோ

முகம் அது பானோ வான் ஊர் நிலவு கொல் என ( mugam athu pAnO vAn Ur nilavu kol ena) : Is the brightness of their face that of the sun or the moon that traverses the sky?" முகம் அது பானோ (mugam athu pAnO) : முகம் சூரிய ஒளியதோ; வான் ஊர் (vAn Ur) : which crawls through the sky, ஆகாயத்தில் ஊர்ந்து செல்லும் ;

மகள் மகிழ்வேனை (makaL makizhvEnai) : (fantazing thus in my mind), I went crazy over women.

நாலாம் ரூபா கமல ஷண்முக ஒளி ஏதோ (nAlAm rUpA kamala shaNmuga oLi EthO) : Oh Lord with countless shapes and forms! Oh Lord with six lotus-like faces that are radiant, or whatever else You are, பல வடிவமும் கொண்டவரே! தாமரை போன்ற அறுமுக ஒளியோ, அல்லது வேறு எதுவோ என்று சொல்லும்படியாக, நாலாம் ரூபா (naalaam roopa) : having many forms; நாலாம் ரூபா என்பது விந்து, நாதம், மற்றும் கலை இவற்றை தாண்டின சிவ ரூபமான அரூப நிலை. இது ஜோதி மயமானது. உருவம், அருவம், அருவுருவம் ஆகிய மூன்றையும் கடந்தது இறைவனுடைய சொரூப இலக்கணம் என கூறப்படும் உண்மை இயல்பு. அது பேரொளிப் பிழம்பாக ஞானவடிவாக விளங்கும்.

மா தோம் எனது அகம் வளர் ஒளி ( mA thOm enathu akam vaLar oLi) : Your radiance grows in my heart which is stained with big blemishes! பெரிய குற்றம் பொருந்திய எனது மனத்தில் வளர்கின்ற சோதியே,! தோம் (thOm) : blemished, குற்றம் கொண்ட;

நானோ நீயோ படிகமொடு ஒளிர் இடம் அது சோதி (nAnO neeyO padikamodu oLir idam athu sOthi) : (Having been purified thus by Your radiance) my heart and Yours glow with such bright effulgence at a spot. (நானோ நீயோ) என் இதயமாகிய (உன் ஒளி பட்டு குற்றங்கள் நீங்கியதால்) பளிங்கு போல் விளங்கும் சோதி மயமான இடம் ; படிகம் (padigam) : marble,

நாடோ வீடோ (nAdO veedO) : Is that spot a heaven or the final place of liberation? சுவர்கமோ அல்லது மோட்ச வீடோ??

நடு மொழி என (nadu mozhi ena nadu thUN nEr thOLA) : (stationed right inside me) You have gracefully and impartially established the Truth of Siva-bliss to me; நடு நிலைமையிலிருந்து அதன் மெய்த்தன்மையை எனக்குள் நிலை நிறுத்தி என்னுடன் திருவிளையாடல் செய்பவனே,

நடு தூண் நேர் தோளா (nadu mozhi ena nadu thUN nEr thOLA) : Your shoulders are strong and sturdy like the Central Pillar (of a buiding that supports)! நாட்டப்பட்டு உள்ள தூணை நிகர்த்த திருத்தோள்களை உடையவரே!

சுர முக கன சபை நாதா (sura muga gana sabai nAthA) : You preside over the august assembly of the celestials, Oh Lord! தேவர்கள் முன்னிலையில் பெருமை தங்கிய சபையில் விளங்கும் நாதரே!

தாதா என உருகிட அருள் புரிவாயே (thAthA ena urukida aruL purivAyE) : You bless me to repeatedly beseech You thus with melting heart! தாதா= தந்தை, பெரியோன், கொடையாளி;

மாலாய் வானோர் மலர் மழை பொழி அவதாரா ( mAlAy vAnOr malar mazhai pozhi avathArA) : As loving celestials showered flowers on You, You incarnated in this world!

சூரா என முநிவர்கள் புகழ் மாயாரூபா (sUrA ena munivarkaL pukazh mAyArUpA) : "Oh Valiant One!" is how the sages praise You, the Lord who could take myriads of mystic forms!

அரகர சிவசிவ என ஓதா (arakara sivasiva ena OthA) : Not praising You as Hara Hara and Siva Siva,

வாதாடு ஊரோடு அவுணரொடு (vAthAdu UrOdu avuNarodu) : the argumentative demons and their minions living in SUran's land,

அலை கடல் கோ கோ கோ கோ என மலை வெடி பட (alai kadal kO kO kO kO ena malai vedi pada) : and the wavy seas were left screaming, and Mount Krouncha was shattered to pieces;

வாளால் வேலால் மடிவு செய்து அருளிய முருகோனே (vALAl vElAl madivu seythu aruLiya murugOnE) : when You wielded Your sword and spear to kill them all, Oh Gracious Muruga!

சூலாள் மாலாள் மலர் மகள் கலைமகள் (sUlAL mAlAL malar makaL kalaimakaL) : Durga who holds the trident; Lakshmi, who belongs to VishNu and is ensconced on the lotus; and Saraswathi, the Goddess of Learning,

ஓது ஆர் சீராள் கதிர் மதி குலவிய தோடாள் (Othu Ar seerAL kathir mathi kulaviya thOdAL) : all stand worshipping this magnificent Goddess; She wears the sparkling studs which radiate the moon's rays; கதிர் மதி (kathir mathi) : brightness radiated by the moon;

கோடு ஆர் இணை முலை குமரி முன் அருள் பாலா (kOdu Ar iNai mulai kumari mun aruL bAlA) : She has two mountain-like bosoms; She is UmAdEvi who once delivered You as Her child! கோடு (kOdu) : mountain;

தூயார் ஆயார் இதுசுக சிவபத (thUyAr AyAr ithusuka sivapatha) : This is the most blissful SivA's place for all the pure devotees who contemplate constantly on You; ஆயார் (Ayaar) : those who contemplate; நடனத்தை அடிப்படையாகக் கொண்டும் சுயம்புவாகத் தோன்றிய மூலவரை உடையதுமான திருவாரூரைச் சுற்றிலும் உள்ள ஏழு வழிபாட்டுத் தலங்கள் சப்தவிடங்கத் தலங்கள்; இவைகளின் தலைமையிடம் திருவாரூர். பஞ்சபூத தலங்களில் பிருத்வி தலம். சிவபெருமான் இங்கு அஜபா நடனம் ஆடிக்கொண்டு வீதி விடங்கராகக் காட்சியளிக்கின்றார். தேவர்களின் தலைவனான இந்திரனால் உருவாக்கப்பட்டு, முசுகுந்த சக்கரவர்த்திக்கு பரிசாக அளிக்கப்பட்டு, இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும். விடங்கம் என்றால் உளியால் செதுக்கப்படாதது என்று பொருள்.

வாழ்வாம் ஈனே வதிவம் எனு(ம்) உணர்வொடு ( AzhvAm eenE vathivam enu(m) uNarvodu) : they wisely decide to stay and live here permanently, ஈனே வதிவம் (eene vathivam) : இங்கேயே தங்கி வாழ்வோம்; ஈன் = இவ்விடம்; வதி = தங்குமிடம்;;

சூழ் சீர் ஆரூர் மருவிய இமையவர் பெருமாளே.(sUz seer ArUr maruviya imaiyavar perumALE.) : and so they gather at this famous town of Thiruvaroor, Your abode; You are the Lord of the celestials, Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே