253. இரத்தமும் சியும்


ராகம் : முகாரிதாளம்: ஆதி (2 களை)
இரத்த முஞ்சியு மூளையெ லும்புட்
டசைப்ப சுங்குடல் நாடிபு னைந்திட்
டிருக்கு மண்சல வீடுபு குந்திட்டதில்மேவி
இதத்து டன்புகல் சூதுமி குந்திட்
டகைத்தி டும்பொரு ளாசையெ னும்புட்
டெருட்ட வுந்தெளி யாதுப றந்திட்டிடமாயா
பிரத்தம் வந்தடு வாதசு ரம்பித்
துளைப்பு டன்பல வாயுவு மிஞ்சிப்
பெலத்தை யுஞ்சில நாளுளொ டுங்கித் தடிமேலாய்ப்
பிடித்தி டும்பல நாள்கொடு மந்திக்
குலத்தெ னும்படி கூனிய டங்கிப்
பிசக்கு வந்திடு போதுபி னஞ்சிச் சடமாமோ
தரித்த னந்தன தானன தந்தத்
திமித்தி மிந்திமி தீதக் திந்தத்
தடுட்டு டுண்டுடு டூடுடி மிண்டிட்டியல்தாளம்
தனத்த குந்தகு தானன தந்தக்
கொதித்து வந்திடு சூருடல் சிந்தச்
சலத்து டன்கிரி தூள்படெ றிந்திட்டிடும்வேலா
சிரத்து டன்கர மேடுபொ ழிந்திட்
டிரைத்து வந்தம ரோர்கள் படிந்துச்
சிரத்தி னுங்கமழ் மாலைம ணம்பொற்சரணோனே
செகத்தி னின்குரு வாகிய தந்தைக்
களித்தி டுங்குரு ஞானப்ர சங்கத்
திருப்பெ ருந்துறை மேவிய கந்தப்பெருமாளே.

Learn The Song




Raga Mukhari (Janyam of 22nd mela Karaharapriya)

Arohanam: S R2 M1 P N2 D2 S    Avarohanam: S N2 D1 P M1 G2 R2 S


Paraphrase

இரத்தமும் சீயும் மூளை எலும்பு உள் தசைப் பசும் குடல் நாடி புனைந்திட்டு (iraththamum seeyum mULai elumbu uL thasaip pasum kudal nAdi punainthittu) : Made of blood, pus, brain, bones, flesh in the interiors, fresh intestines, veins and arteries, ரத்தமும் சீழும், மூளை, எலும்பு, உள்ளே இருக்கும் மாமிசம், பசிய குடல், நரம்புகள், இவைகளைக் கொண்டு ஆக்கப்பட்டு

இறுக்கு மண் சல வீடு புகுந்திட்டு அதில் மேவி இதத்துடன் புகல் சூது மிகுந்திட்டு ( iRukku maN sala veedu pukunthittu athil mEvi ithaththudan pukal sUthu migunthittu) : the body is built strongly by the earth and water; into this house called the body, life enters; and the people dwelling in this body speak pleasurable words that are filled with deception and treachery; அழுத்தமாகக் கட்டப்பட்டு மண்ணாலும், நீராலும் ஆன வீடாகிய உடலில் நுழைந்து, அதில் இருந்து கொண்டு இன்பகரமாகப் பேசும் சூதான மொழிகள் அதிகமாகி,

அகைத்திடும் பொருள் ஆசை எனும் புள் தெருட்டவும் தெளியாது பறந்திட்டிட (agaiththidum poruL Asai enum puL theruttavum theLiyAthu paRanthittida) : Greed for wealth, like a bird, flies high, despite others explaining its futility; கிளைத்து எழுகின்ற பொருளாசை என்கின்ற பறவை பிறர் தெளிவாக எடுத்துச் சொன்னாலும் தெளியாமல் மேலும் மேலும் பறப்பதாயிருக்க, அகைத்தல் (agaiththal) : rising, soaring, எழுதல், தழைத்தல், கிளைத்தல்; புள் (puL) : bird; தெருட்டு (theruttu) : inform, enlighten, convince, தெளிவு பெறுவது;

மாயா பிரத்தம் வந்து அடு வாத சுரம் பித்தம் உளைப்புடன் பல வாயுவும் மிஞ்சி ( mAyA piraththam vanthu adu vAtha suram piththam uLaippudan pala vAyuvum minji) : and with increasing delusion of worldly matters, many diseases afflict the body, such as rheumatism, fever, biliousness and a host of unabated gastric ailments. உலக மாயை மிகுந்து, உண்டாகின்ற வாதம், சுரம், பித்தம் இவைகளின் வேதனைகளோடு பல வகையான வாயுக்களும் அதிகரித்து; பிரத்தம் (biraththam) : calamity, danger, mishap; அடுதல் (aduthal) : to cause pain or distress, துன்புறத்துதல்.

பெலத்தையும் சில நாளுள் ஒடுங்கி தடி மேலாய்ப் பிடித்துடும் பல நாள் கொடு ( pelaththaiyum sila nALuL odungi thadi mElAyp pidiththudum pala nAL kodu ) : In a few days, the physical strength diminishes, and the hand holds a walking stick; after suffering for many more days like this,

மந்திக் குலத்து எனும்படி கூனி அடங்கிப் பிசக்கு வந்திடு(ம்) போது பின் அஞ்சிச் சடம் ஆமோ (manthik kuluththu enumpadi kUni adangip pisakku vanthidu (m) pOthu pin anjic chadam AmO) : the hunch on the back makes one bend so much that he is considered to be belonging to the monkey-clan; drained of all energy, the body then awaits in fear the arrival of death; is there any use of such a body? பல நாட்கள் செல்ல குரங்குக் கூட்டத்தவன் என்று சொல்லும் படியாக உடல் கூனி, சத்துக்கள் அடங்கி, மரணம் வந்திடும் சமயத்தில் பயப்படுவதான இந்த உடலால் ஏதேனும் பயன் உண்டோ? பிசக்கு/பிசங்கு ((pisakku/pisangu) : dirty soil, filth, become dirty/soiled;

தரித்த னந்தன ... டூடுடி மிண்டிட்டு இயல்தாளம் (thariththa nanthana .... dUdudi miNdittu iyal thALam) : (To the sound of these beats),

தனத்த குந்தகு தானன தந்தக் கொதித்து வந்திடு சூர் உடல் சிந்தச் சலத்துடன் கிரி தூள் பட எறிந்திட்டிடும் வேலா (thanaththa kunthaku thAnana thanthak kothiththu vanthidu sUr udal sintha chalaththudan giri thUL pada eRinthittidum vElA) : he came seething with rage (to the battlefield) making the sound "thanaththa kunthaku thAnana thanthak"; You wielded the spear, destroying the body of that demon SUran, drying up the sea and smashing the mount Krauncha to pieces, Oh Lord!

சிரத்துடன் கரம் ஏடு பொழிந்திட்டு இரைத்து வந்து அமரோர்கள் படிந்துச் சிரத்தினும் கமழ் மாலை மணம் பொன் சரணோனே (siraththudan karam Edu pozhinthittu iraiththu vanthu amarOrkaL padinthuc chiraththinum kamazh mAlai maNam pon saraNOnE) : Bowing their heads in worship and offering prayers to You, the celestials shower flowers from their hands and prostrate at Your hallowed feet which carry the fragrance of the garlands decorating their heads, Oh Lord! ஏடு பொழிந்திட்டு = மலர்களைப் பொழிந்து;

செகத்தினில் குருவாகிய தந்தைக்கு அளித்திடும் குரு (sekaththinil guruvAgiya thanthaikku aLiththidum guru) : You are the Grand Master who preached to Your father, the Master of the entire Universe;

ஞான ப்ரசங்க திருப் பெருந்துறை மேவிய கந்தப் பெருமாளே. (njAna prasanga thirup perunthuRai mEviya kanthap perumALE.) : Your Father delivered a spiritual speech in this place called Thiru perunthuRai where You are seated with relish, Oh Great One!

திருப்பெருந் துறை தற்போது ஆவுடையார்கோவில் என்றே அழைக்கப்படுகிறது. சிவன் கோயில்கள் பொதுவாக கிழக்கு நோக்கித்தான் இருக்கும். அரிதாக சில தலங்கள் மேற்கு பார்த்திருக்கும். ஆனால், ஆவுடையார் கோயில் தெற்கு நோக்கியபடி இருக்கிறது. இங்கு மாணிக்கவாசகருக்கு உபதேசம் செய்த தலம் என்பதால் சிவன் தெட்சிணாமூர்த்தியாக தெற்கு நோக்கி அமர்ந்திருக்கிறார். இங்குள்ள இறைவன் அரூபமாக லிங்க மேனியில் நடுவில் உள்ள சக்தி பீடம் பகுதி மட்டுமே காணப்படுகிறார். அதற்கு மேலே குவளை ஒன்று சாத்தியிருப்பார்கள். அதாவது சக்தி பீடத்தில் அறிவொளியாக அருவமாக ஆத்ம நாதர் விளங்குகிறார். சக்தி பிம்பம் மட்டுமே பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளதால் சக்தியே பிரம்மத்தை வெளிப்படுத்துகிறது என்பது தத்துவம் ஆகும். சுவாமியைப் போலவே அம்பாளும் தெற்கு நோக்கிய சன்னிதி, ஆத்மநாத சுவாமியைப் போலவே அம்பாளும் அருவம் தான். ஸ்ரீயோகாம்பாள் சன்னிதியில் திருமேனி இல்லை. சததளபத்ம பீடத்தில் 100 இதழ்கள் கொண்ட தாமரையாகிய பீடத்தில் யோகாம்பாளின் திருவடிகள் மட்டுமே தங்கத்தாலான யந்திர வடிவமாக உள்ளன.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே