248. அறிவிலாதவர் ஈனர்


ராகம் : நாட்டைஅங்கதாளம் (8)
1½ + 1 + 1 + 1½ + 1½ + 1½
அறிவி லாதவ ரீனர்பேச் சிரண்டு
பகரு நாவினர் லோபர்தீக் குணங்க
ளதிக பாதகர் மாதர்மேற் கலன்கள்புனையாதர்
அசடர் பூமிசை வீணராய்ப் பிறந்து
திரியு மானுடர் பேதைமார்க் கிரங்கி
யழியு மாலினர் நீதிநூற் பயன்கள் தெரியாத
நெறியி லாதவர் சூதினாற் கவர்ந்து
பொருள்செய் பூரியர் மோகமாய்ப் ப்ரபஞ்ச
நிலையில் வீழ்தரு மூடர்பாற் சிறந்ததமிழ்கூறி
நினைவு பாழ்பட வாடிநோக் கிழந்து
வறுமை யாகிய தீயின்மேற் கிடந்து
நெளியு நீள்புழு வாயினேற் கிரங்கியருள்வாயே
நறிய வார்குழல் வானநாட் டரம்பை
மகளிர் காதலர் தோள்கள்வேட் டிணங்கி
நகைகொ டேழிசை பாடிமேற் பொலிந்துகளிகூர
நடுவி லாதகு ரோதமாய்த் தடிந்த
தகுவர் மாதர்ம ணாளர்தோட் பிரிந்து
நசைபொ றாதழு தாகமாய்த் தழுங்கி யிடர்கூர
மறியு மாழ்கட லூடுபோய்க் கரந்து
கவடு கோடியின் மேலுமாய்ப் பரந்து
வளரு மாவிரு கூறதாய்த் தடிந்தவடிவேலா
மருவு காளமு கீல்கள்கூட் டெழுந்து
மதியு லாவிய மாடமேற் படிந்த
வயல்கள் மேவுநெல் வாயில்வீற் றிருந்தபெருமாளே.

Learn The Song




Ragam nattai (Janyam of 36th mela Chala Nattai) By Ragasurabhi

Arohanam: S R3 G3 M1 P D3 N3 S    Avarohanam: S N3 P M1 G3 M1 R3 S

Paraphrase

Saint Arunagirinathar regrets the lot of people who waste and belittle their scholarly knowledge of Tamil in flattering and bootlicking the deceitful patrons for monetary gains.

அறிவிலாதவர் ஈனர் பேச்சு இரண்டு பகரு நாவினர் (aRivilAthavar eenar pEchchiraNdu pagaru nAvinar) : Unintelligent people, debased and double-tongued ones;

லோபர் தீக் குணங்கள் அதிக பாதகர் (lObar theekkuNangaL athiga pAthagar ) : miserly, vicious ones, bent upon committing heinous crimes;

மாதர் மேற் கலன்கள் புனை ஆதர் (mAtharmER kalankaL punaiyAthar ) : stupid people deriving pleasure by bejewelling harlots; கலன்கள் (kalangaL) : ornaments; ஆதர் (Athar) : அறிவிலிகள் ; stupid;

அசடர் பூமிசை வீணராய்ப் பிறந்து திரியு மானுடர் (asadar bhUmisai veeNarAyp piRanthu thiriyu mAnudar) : dimwits, men wasting their time in this world, roaming around aimlessly;

பேதைமார்க்கு இரங்கி அழியு மாலினர் (pEthaimArkku irangi azhiyum mAlinar) : people destroying themselves by obsessively coveting women,

நீதி நூற் பயன்கள் தெரியாத நெறியிலாதவர் ( neethi nool payangaL theriyAtha neRiyilAthavar) : people ignorant of the value of moral treatises and deviating from the righteous path;

சூதினாற் கவர்ந்து பொருள் செய் பூரியர் ( sUthinAR kavarnthu poruL sey pUriyar) : the decadents who grab the riches of others through gambling,

மோகமாய்ப் ப்ரபஞ்ச நிலையில் வீழ்தரு மூடர்பால் ( mOgamAy prapanja nilaiyil veezh tharu mUdarpAR ) : and the imbeciles hankering after worldly pleasures – these are the people at whose doors,

சிறந்த தமிழ் கூறி ( siRantha thamizh kURi) : I sang great songs in Tamil.

நினைவு பாழ்பட வாடி நோக்கு இழந்து ( ninaivu pAzhpada vAdi nOkku izhanthu) : My thinking was corrupted, and I languished with a diminishing eyesight.

வறுமையாகிய தீயின் மேற் கிடந்து நெளியு நீள் புழு வாயினேற்கு (vaRumai yAkiya theeyinmER kidanthu neLiyu neeLpuzhu vAyinERku) : I looked like a long worm twitching after falling on the fire of poverty.

இரங்கி அருள்வாயே ( irangi yaruLvAyE) : Kindly be merciful and bestow Your blessings on me.

When Muruga annihilates the demon Suran, celestial women rejoice and the asura women grieve.

நறிய வார் குழல் வான நாட்டு அரம்பை மகளிர் ( naRiya vAr kuzhal vAna nAttu arambai magaLir) : The celestial women with long and fragrant hair, நறிய(naRiya) : fragrant; வார் குழல் (vAr kuzhal) : long hair;

காதலர் தோள்கள் வேட்டு இணங்கி (kAthalar thOLkaL vEttu iNangi) : were locked in loving embrace with the shoulders of their lovers, வேட்கை = விரும்புதல்; to desire;

நகை கொடு ஏழிசை பாடி மேற் பொலிந்து களிகூர (nagaikodu Ezhisai pAdimER polinthu kaLikUra ) : amidst laughter and musical merriment in the seven notes;

நடுவிலாத குரோதமாய்த் தடிந்த தகுவர் மாதர் (naduvilAtha kurOthamAy thadintha thaguvar mAthar) : the women of the unjust and angry demons who were in the path of destruction, நடுவிலாத(naduvilAtha) : unjust; தகுவர் (thaguvar) : the demons or asuras;

மணாளர் தோள் பிரிந்து (maNALar thOL pirinthu) : were separated from the shoulders of their husbands,

நசை பொறாது அழுது ஆகம் மாய்த்து அழுங்கி இடர் கூர (nasai poRAthu azhuthu Agam mAythththu azhungi idar kUra) : and cried uncontrollably due to the agony of separation; (some) killed themselves and (some) inflicted wounds on their bodies and were distressed; நசை (nasai) : desire; ஆகம் (Agam) : body;

மறியும் ஆழ் கடலூடு போய்க் கரந்து (maRiyum Azhkadal UdupOyk karanthu ) : and the demon king SUran hid himself in the innermost part of the deep and wavy sea, மறி (maRi) : waves;

கவடு கோடியின் மேலுமாய்ப் பரந்து வளரு (kavadu kOdiyin mElumAy paranthu vaLaru) : taking the disguise of a mango tree, with its million branches sprawling on the surface of the sea; கவடு (kavadu) : branches;

மா இரு கூறதாய்த் தடிந்த வடிவேலா ( mAviru kURathAy thadintha vadivElA) : and that SUran was split into two by Your sharp spear, Oh Lord! தடிந்த (thadintha) : hack, hew;

மருவு காள முகீல்கள் கூட்டெழுந்து (maruvu kALa mukeelkaL kUttu ezhunthu ) : Dense and dark clouds gather together to climb up, முகீ(கி)ல் (mugeel/mugil ) : cloud;

மதி உலாவிய மாடமேற் படிந்த (mathiyu lAviya mAdamER padintha) : and graze on the tall moonlit terraces of this town,

வயல்கள் மேவு நெல் வாயில் வீற்றிருந்த பெருமாளே.(vayalkaL mEvu nel vAyil veetriruntha perumALE.) : famous for its many fertile fields, known as ThirunelvAyil, which is Your abode, Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே