245. வங்கார மார்பு


ராகம் : சிந்துபைரவிதாளம்: சதுஸ்ரத்ருவம்
கண்டநடை (35)
வங்கார மார்பிலணி தாரொடுயர் கோடசைய
கொந்தார மாலைகுழ லாரமொடு தோள்புரள
வண்காதி லோலைகதிர் போலவொளி வீசஇதழ்மலர்போல
மஞ்சாடு சாபநுதல் வாளனைய வேல்விழிகள்
கொஞ்சார மோககிளி யாகநகை பேசியுற
வந்தாரை வாருமிரு நீருறவெ னாசைமயலிடுமாதர்
சங்காளர் சூதுகொலை காரர்குடி கேடர்சுழல்
சிங்கார தோளர்பண ஆசையுளர் சாதியிலர்
சண்டாளர் சீசியவர் மாயவலை யோடடியெ னுழலாமற்
சங்கோதை நாதமொடு கூடிவெகு மாயையிருள்
வெந்தோட மூலஅழல் வீசவுப தேசமது
தண்காதி லோதியிரு பாதமலர் சேரஅருள்புரிவாயே
சிங்கார ரூபமயில் வாகனந மோநமென
கந்தாகு மாரசிவ தேசிகந மோநமென
சிந்தூர பார்வதிசு தாகரந மோநமெனவிருதோதை
சிந்தான சோதிகதிர் வேலவந மோநமென
கங்காள வேணிகுரு வானவந மோநமென
திண்சூர ராழிமலை தூள்படவை வேலைவிடுமுருகோனே
இங்கீத வேதபிர மாவைவிழ மோதியொரு
பெண்காத லோடுவன மேவிவளி நாயகியை
யின்பான தேனிரச மார்முலைவி டாதகரமணிமார்பா
எண்டோளர் காதல்கொடு காதல்கறி யேபருகு
செங்காடு மேவிபிர காசமயில் மேலழகொ
டென்காதல் மாலைமுடி ஆறுமுக வாவமரர் பெருமாளே.

Learn The Song



Raga Sindhu Bhairavi (Janyam of 20th mela Natabhairavi)

Arohanam: S R1 G2 M1 P D1 N2 S    Avarohanam: S N2 D1 P M1 G2 R1 S

Paraphrase

வங்கார மார்பிலணி தாரோடு உயர் கோடு அசைய (vangAra mArbil aNi thArodu uyar kOdu asaiya) : The golden chains on the chest heaving along with their large bosoms; மார்பில் அணிந்துள்ள பொன்மாலையுடன் மலை போல் உயர்ந்த மார்பகங்களும் அசைய, வங்காரம் (vangaaram) : gold; தார் (thaar) : garland, chain worn around the neck; கோடு (kOdu) : mountain/hill, metaphorically refers to the breasts;

கொந்தார மாலை குழல் ஆரமொடு தோள் புரள (kondhAra mAlai kuzhal Aramodu thOL puraLa) : garlands made of flower bunches on their hair rolling over their shoulders; கொந்தாரம் (konthaaram) : garland made of bunches of flowers; கொத்து மலர்களாலான மாலை / ஆரம் ;

வண் காதில் ஓலை கதிர் போல ஒளி வீச (vaN kAdhil Olai kadhirpOla oLi veesa) : the pendant ear-rings on their fleshy ears glinting like the sun's rays; வளமான காதில் காதணி சூரிய ஒளி போன்ற ஒளியை வீச,

இதழ் மலர்போல (idhazh malar pOla) : their reddish lips like the flowers;

மஞ்சாடு சாப நுதல் வாள் அனைய வேல் விழிகள் (manjAdu chApa nudhal vAL anaiya vEl vizhigaL) : just like the rainbow that shines against the clouds, their foreheads shine between the hair and the beautiful eyes that are sharp like the spear; மேகம் தவழும் வானில் தோன்றும் வானவில் போன்ற நெற்றியுடன் ஒளி வீசுகின்ற கூர்மையான வேலைப் போன்ற கண்கள் ஆகிய இவற்றுடன், மஞ்சு = மேகம்; சாபம் = வில்; நுதல் = நெற்றி; வாள் = ஒளி, கூர்மை;

கொஞ்சார மோக கிளியாக நகை பேசி (konjAra mOha kiLiyAga nagai pEsi) : they lisp romantic words, grinning and sounding like an enchanting parrot;

உற வந்தாரை வாரும் இரு(ம்) நீர் உறவென (uRa vandhArai vArum iru neer uRavena) : drawing the men closer to them by saying "Come on in; please be seated; you are closely related to me" - நெருங்கி வந்தவர்களை வாரும், இங்கே இரும், நீர் நமக்கு உறவினர் ஆயிற்றே, என்று உபசாரமாகக் கூறி,

ஆசை மயல் இடு மாதர் (asai mayal idu mAdhar) : these are the whores who provoke them into lustful delusion;

சங்காளர் சூது கொலைகாரர் குடி கேடர் (sangALar sUdhu kolaikArar kudi kEdar) : these enjoy (intoxicated) in groups; they are gamblers, murderers, and destroyers of families; சங்காளர் (sangALar) : delight (inebriate) in groups, கூடிக் களிப்பவர்கள்

சுழல் சிங்கார தோளர் பண ஆசையுளர் சாதியிலர் சண்டாளர் (suzhal singAra thOLar paNa Asai uLar jAathi ilar sandALar ) : they are women loitering around with sensuous shoulders; they are covetous after money, they indulge indiscriminately, disregarding caste differences ( சாதி பேதம் கவனிக்காது பலருடனும் கூடுபவர்) ; and they come from the basest lineage.

சீசி அவர் மாய வலையோடு அடியென் உழலாமல் (cheechi avar mAya valaiyOd adiyen uzhalAmal ) : Oh no, I do not want to suffer being snared in their tricky nets.

சங்கோதை நாதமொடு கூடி (sangOdhai nAdhamodu kUdi ) : In order that I listen to and merge with the dasanAthams (ten sounds) that could be discerned only by Yogis, (when the yogis meditate by fixing their focus between the eyebrows, they can hear the primordial sound from which all other sounds and creation emerge.)
kiNkiNi (beaded anklet), chilambu (anklet), maNi (bronze bell), sangam (conch shell), yAzh (a string instrument like veeNa), thaLam (cymbals), vEynkuzhal (flute), bEri (drum), maththaLam (percussion instrument) and mukil (thunder).

வெகு மாயை இருள் வெந்தோட (vegu mAyai iruL vendhOda ) : burn and drive away the delusory darkness,

மூல அழல் வீச உபதேசமது தண் காதில் ஓதி (mUla azhal veesa upadhEsam adhu thaN kAdhil Odhi ) : You preach 'upadesa' incantations into my cool ears so that the 'moolagni' (that remains locked at the base of the spine) spreads everywhere and

இரு பாதமலர் சேர அருள் புரிவாயே (iru pAdha malar sEra aruL purivAyE ) : gracefully let me attain Your two hallowed flower-like feet!

சிங்கார ரூப மயில் வாகன நமோநமென (singAra rUpa mayil vAhana namO namena) : "Oh handsome one, You mount the Peacock, I bow to You, I bow to You";

கந்தா குமார சிவ தேசிக நமோநமென (kandhA kumAra siva dhEsika namO namena ) : "Oh KandhA, KumarA, Oh Master of Lord SivA, I bow to You, I bow to You";

சிந்தூர பார்வதி சுதாகர நமோநமென (sindhUra pArvathi sudhAkara namO namena ) : "Oh Son of PArvathi, who wears the reddish vermilion on Her forehead, I bow to You, I bow to You";

விருது ஓதை சிந்தான சோதி கதிர் வேலவ நமோநமென (virudhOdhai sindhAna jOthi kadhir vElava namO namena) : "Your victory and triumph sounds roar like the sea waves, Oh Lord! with the sparkling Spear, I bow to You, I bow to You"; ஓதை (Othai) : noise, din; சிந்தான(sinthAna) : like the sea (sindhu)

கங்காள வேணி குருவானவ நமோநமென (gangALa vENi guruvAnava namO namena ) : and saying "You are the Master of SivA who wears in His tresses a garland of skulls, I bow to You, I bow to You" - கங்காளம்(kangaaLam) : skull, skeleton;

திண் சூரர் ஆழி மலை தூள் பட வை வேலை விடு முருகோனே (thiN sUra rAzhimalai thUL pada vaivElai vidu murugOnE ) : (amid the above cheers and prayers,) Oh MurugA, You hurled the Spear from Your hand to destroy the strong demon, SUran, the seas and Mount Krouncha, shattering them to pieces!

இங்கீத வேத பிரமாவை விழ மோதி (ingeetha vEdha biramAvai vizha mOdhi ) : BrahmA, the master of the melodious VEdAs, was knocked down by You. இனிமை வாய்ந்த வேதம் பயின்ற பிரமன் விழும்படியாக மோதியவரே! இங்கீத (ingeetha) : melodious, இனிமை வாய்ந்த;

ஒரு பெண் காதலோடு வன மேவி (oru peN kAdhalOdu vana mEvi) : Falling in love with the matchless girl, VaLLi, You went to the forest

வளிநாயகியை இன்பான தேனிரச மார் முலை விடாத கர மணி மார்பா (vaLi nAyakiyai inbAna thEni rasa mAr mulai vidAdhakara maNi mArbA ) : and never took Your hands off her sweet bosom, Oh Lord, with a hallowed chest!

எண் தோளர் காதல் கொடு காதல் கறியே பருகு (eNthOLar kAdhal kodu kAdhal kaRiyE parugu ) : The eight-shouldered Lord (SivA) once came with a desire to devour child's flesh with relish in this place, called,
--- The above refers to a story in Periya Puranam. Lord SivA came in the disguise of a Saivite sage to ThiruchchengAttankudi to test the devotion of ChiRuththoNdar. He sought the offering of the meat of SeerALan, the little child of ChiRuththoNdar who readily fulfilled His wish. In the end, SivA appeared in His true form, resurrected the child and blessed the parents and the child.

செங்காடு மேவி பிரகாச மயில் மேல் அழகொடு (sengAdu mEvi pirakAsa mayil mEl azhagodu) : ThiruchchengkAdu, where You are seated magnificently, on the bright peacock;

என் காதல் மாலை முடி ஆறுமுகவா (en kAdhal mAlai mudi ARumugavA ) : Oh my Six-faced Lord, You wear gracefully on Your tresses the garland of poems that have arisen out of my love for You! எனது உள்ளத்து அன்பின் காரணமாக எழுந்த இந்தத் தமிழ் மாலையைப் புனைந்தருளும் ஆறுமுகப் பரம்பொருளே!

அமரர் பெருமாளே.(amarar perumALE.) : You are the Lord of the Celestials, Oh Great One!

சிறுத்தொண்டர் சரிதம்

சிறுத்தொண்ட நாயனாரின் இயற்பெயர் - பரஞ்சோதியார். மனைவியார் திருவெண்காட்டு நங்கையார். அவர்களுடைய மகன் சீராளதேவர். பரஞ்சோதியார் திருச்செங்காட்டங்குடியில் உள்ள கணபதீஸ்வரர் பெருமானை வழிபடுவார். சிவனடியார்களுக்கு அமுதூட்டிய பின்னர் தாம் உண்பார்.

இவரது செயற்கரிய பக்தியின் நிலையை உலகறியச் செய்யும் பொருட்டு சிவபெருமான் பெரும் பசியுடையவர் போல சிறுத்தொண்டர் இல்லம் சென்றார். இவரது கோலம் கண்டு பணிப்பெண் சந்தனத் தாதையாரும் சிறுத்தொண்டர் அமுது செய்விக்க அடியவரைத் தேடி சென்றுள்ளார் என்று கூறி உள்ளே அமர அழைத்தாள். ஈசனும் பெண்கள் தனித்திருக்கும் இடத்தில் தனியாக வர மறுத்து கணபதீஸ்வரர் கோவில் ஆத்தி மரத்தின் கீழ் காத்திருப்பதாகக் கூறி அகன்றார்.

அடியவர் எவரையும் காணாது வருந்தி மீண்ட சிறுத்தொண்டர் மனைவியிடம் விபரம் அறிந்து விரைந்து சென்று பயிரவக் கோலம் கொண்டிருந்தவரை உணவு உண்ண அழைத்தார். அந்த துறவி தனக்கு ஐந்து வயதிற்குட்பட்ட உறுப்பில் குறையில்லாத ஒரு குடிக்கு ஒரு மகனாக, தந்தை அரியத் தாய் பிடிக்கும் போது அவர்கள் மனம் உவந்து குறையின்றி அமைக்கும் குழந்தை கறியே நான் உண்பேன் என்றார்.

சிறுத்தொண்டர் மனைவியாரிடம் விஷயம் தெரிவித்து தாம் பெற்ற மகனான சீராளனை பாடசாலையில் இருந்து அழைத்து அவனை அமுதாக்கி படைக்கும் பொழுது, "தலைக்கறி நாம் விரும்பி உண்பது" என பைரவர் தெரிவித்தார். தாதியார் பக்குவம் செய்த தலைக்கறியை கொண்டு வந்து கொடுத்தார். மீண்டும் பைரவர் தனியே உண்ண மறுத்து சிறுத்தொண்டரையும் தன்னுடன் உண்ண அழைத்தார். சிறுத்தொண்டர் உண்ணத் தொடங்க, பயிரவர் வேடத்திலிருக்கும் இறைவர் சிறுத்தொண்டரை மகனை அழைக்கும்படி பணித்தார். தொண்டர் தன் மனைவியாருடன் வெளியே வந்து "மைந்தா வருவாய்" என அழைத்தார்; பாடசாலையினின்றும் வருபவன் போல் சீராளத்தேவர் ஓடிவர, மூவரும் உள்ளே சென்ற போது, மறைந்த பயிரவர் சோமாஸ்கந்தராக விண்ணில் காட்சியளித்து அனைவருக்கும் சிவானந்த வீடுபேறு அருளினார்.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே