233. ஊனத்தசை தோல்கள்


ராகம் : ஜோன்புரிஅங்கதாளம் 2 + 2 + 1 +1½
ஊனத்தசை தோல்கள்சு மந்த காயப்பொதி மாயமி குந்த
ஊசற்சுடு நாறுகு ரம்பை மறைநாலும்
ஓதப்படு நாலுமு கன்ற னாலுற்றிடு கோலமெ ழுந்து
ஓடித்தடு மாறியு ழன்று தளர்வாகிக்
கூனித்தடி யோடுந டந்து ஏனப்படு கோழைமி குந்த
கூளச்சட மீதையு கந்துபுவிமீதே
கூசப்பிர மானப்ர பஞ்ச மாயக்கொடு நோய்கள கன்று
கோலக்கழ லேபெற இன்றுஅருள்வாயே
சேனக்குரு கூடலி லன்று ஞானத்தமிழ் நூல்கள்ப கர்ந்து
சேனைச்சம ணோர்கழு வின்கண்மிசையேறத்
தீரத்திரு நீறுபு ரிந்து மீனக்கொடி யோனுடல் துன்று
தீமைப்பிணி தீரவு வந்த குருநாதா
கானச்சிறு மானைநி னைந்து ஏனற்புன மீதுந டந்து
காதற்கிளி யோடுமொ ழிந்து சிலைவேடர்
காணக்கணி யாகவ ளர்ந்து ஞானக்குற மானைம ணந்து
காழிப்பதி மேவியு கந்த பெருமாளே

Learn The Song




Jonpuri (janya rāga of Natabhairavi, shadava sampoorna raga)

Arohanam: S R2 M₁ P D1 N2 Ṡ    Avarohanam: Ṡ N2 D1 P M1 G2 R2 S


Dr. Charulata Mani's Isai PayaNam


Paraphrase

ஊன தசை தோல்கள் சுமந்த காய பொதி (oonath thasai thOlgaL sumandha kaayappOdhi) : This bundle called body bears perishable flesh, muscles and skin; ஊனத்தசை (oona thasai) : perishable flesh; காயப்பொதி (kaayappothi) : bundle (of different parts) making up a body;

மாயம் மிகுந்த ஊசல் சுடும் நாறும் குரம்பை ( maaya migundha oosaR sudu naaRu kurambai ) : it is the repository of illusion; this perishable body decays and is eventually burnt; குரம்பை (kurambai) : hut, bird's nest, body;

மறை நாலும் ஓத படும் நாலு முகன் த(ன்)னால் உற்றிடும் கோலம் ( maRai naalum Odhappadu naalu mukandra naal utridu kOlam ) : this body had a beautiful form, having been created by the four-faced Lord Brahma who is worshipped by the four vedas;

எழுந்து ஓடி தடுமாறி உழன்று தளர்வாகி (ezhundhu Odith thadumaaRi uzhandru thaLarvaagi) : the body rose, ran, stumbled, rambled and was fatigued,

கூனி தடியோடு நடந்து ஈனப்படு கோழை மிகுந்த கூள சடம் ஈதை உகந்து (koonith thadiyOdu nadandhu eenappadu kOzhai migundha kooLach chadameedhai ugandhu) : it stooped, walked with a stick; yet I love this repulsive, phlegm-filled and trashy body, கூளம்(kooLam) : trash;

புவி மீதே கூச பிரமாண ப்ரபஞ்ச மாய கொடு நோய்கள் அகன்று கோல கழலே பெற இன்று அருள்வாயே (buvi meedhE koosap piramaaNa prapancha maayak kodu nOygaL agandru kOlak kazhalE peRa indru aruLvaayE ) : Kindly bless me with Your beautiful feet so that I can get rid of diseases that are caused by worldly illusions, which occur as a result of (the divine law of karma) the scandalous bad deeds I have done on this earth; கூச = நிலைகுலைந்து நாணம் உறும்படியாக ; பிரமாண ப்ரபஞ்ச மாயக் கொடு = விதிப்படி இயங்கும் இந்த உலக மயக்கத்தினால் உண்டாகும்

சேன குரு கூடலில் அன்று ஞான தமிழ் நூல்கள் பகர்ந்து (sEnak guru koodalil andru nyaanath thamizh noolgaL pagarndhu) : You appeared as Thirujnana Sambanthar and sang theosophial songs in Tamil (Thevaram) at Madurai before the Jain monk gurus கூடல் (koodal) : Madurai; சேன குரு = சமண குரு; சமண குருக்களின் பெயர்கள் 'சேனன்' என்று முடிந்திருக்கும்.

சேனை சமணோர் கழுவின் கண் மிசை ஏற (sEnaich samaNOr kazhuvin kaN misai ERa) : and made the army of Jain monks ascend the stakes;

தீர திரு நீறு புரிந்து மீன கொடியோன் (dheerath thiru neeRu purindhu meenak kodiyOn ) : You gave powerful sacred ash to the Pandyan king who has the fish-flag,

உடல் துன்று தீமை பிணி தீர உவந்த குருநாதா (udal thundru theemaip piNi theera uvandha gurunaathaa) : and cured the illnesses that afflicted the king's body, oh Gurunatha!

கான சிறு மானை நினைந்து ஏனல் புனம் மீது நடந்து காதல் கிளியோடு மொழிந்து (kaanach chiRumaanai ninaindhu EnaRpuna meedhu nadandhu kaadhaR kiLiyOdu mozhindhu ) : Remembering the little deer Valli who lived in the Vallimalai foresst, You went to the milled field and spoke amorous words to the parrot-like lass Valli; கான(க)ம்(kaana) : forest; புனம் (punam) : hilly tract; ஏனல் (aenal) : millet;

சிலை வேடர் காண கணியாக வளர்ந்து (silai vEdar kaaNak kaNiyaaga vaLarndhu ) : You appeared as a kino tree in front of the bow-wielding hunters; கணி (kaNi) : a tree, pterocarpus bilobus, the kino tree; வேங்கை மரம்; அது சாதாரண மரமன்று; அம்மரத்தின் அடிப்பகுதி ரிக்; யஜுர்; சாம; அதர்வண வேதங்களாகவும், நடுப்பகுதி மேன்மைமிகு சிவாகம நூல்களாகவும், கிளைகள் யாவும் பல்வேறு கிளைகளாகவும் விளங்குமாறு கந்தப்பெருமான் எழுந்தருளி இருக்கின்றான், என்று கந்த புராணத்தில் தக்ஷ காண்டத்தினுள் வரும் வள்ளியம்மை திருமணப் படலத்தில் சொல்லப் படுகிறது.

ஆங்கது காலை தன்னின் அடிமுதல் மறைகளாக
ஓங்கிய நடுவண் எல்லாம் உயர்சிவ நூலதாகப்
பாங்கமர் கவடு முற்றும் பல்கலையாகத் தானோர்
வேங்கையின் உருவமாகி வேற்படை வீரன் நின்றான்.

ஞான குற மானை மணந்து காழி பதி மேவி உகந்த பெருமாளே ( nyaana kuRamaanai maNandhu kaazhip padhimEvi ugandha perumaaLE) : and married the wise hunter lass and resided happily at Seerkazhi, Oh, Great Lord!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே