229. மனமெனும் பொருள்


ராகம் : நீலாம்பரிஅங்கதாளம் (7½)
1½ + 2 + 2 + 2
மனமெ னும்பொருள் வானறை கால்கனல்
புனலு டன்புவி கூடிய தோருடல்
வடிவு கொண்டதி லேபதி மூணெழுவகையாலே
வருசு கந்துய ராசையி லேயுழல்
மதியை வென்றுப ராபர ஞானநல்
வழிபெ றும்படி நாயடி யேனைநினருள்சேராய்
செனனி சங்கரி ஆரணி நாரணி
விமலி யெண்குண பூரணி காரணி
சிவைப ரம்பரை யாகிய பார்வதி அருள்பாலா
சிறைபு குஞ்சுரர் மாதவர் மேல்பெற
அசுரர் தங்கிளை யானது வேரற
சிவனு கந்தருள் கூர்தரு வேல்விடுமுருகோனே
கனக னங்கையி னாலறை தூணிடை
மனித சிங்கம தாய்வரை பார்திசை
கடல்க லங்கிட வேபொரு தேயுகிர்முனையாலே
கதற வென்றுடல் கீணவ ராருயி
ருதிர முஞ்சித றாதமு தாயுணு
கமல வுந்திய னாகிய மால்திரு மருகோனே
தினக ரன்சிலை வேளருள் மாதவர்
சுரர்க ளிந்திர னாருர காதிபர்
திசைமு கன்செழு மாமறை யோர்புகழழகோனே
திரும டந்தையர் நாலிரு வோர்நிறை
அகமொ டம்பொனி னாலய நீடிய
சிவபு ரந்தனில் வாழ்குரு நாயகபெருமாளே.

Learn The Song



Raga Neelambari (Janyam of 29th mela Shankarabaranam)

Arohanam: S G3 M1 P N3 S    Avarohanam: S N3 P D2 N2 P M1 G3 R2 M1 G3 S

Paraphrase

மனம் எனும் பொருள் வான் அறை கால் கனல் புனல் உடன் புவி கூடியதோர் உடல் வடிவு கொண்டு (manam enum poruL vaan aRai kaal kanal punaludan buvi koodiyadhOr udal vadivu koNdu) : The substance called mind in combination with the cosmic sky, blowing wind, fire, water and earth constitutes and shapes the body; மனம் என்ற ஒரு பொருளுடன் வானம், வீசுகின்ற காற்று, நெருப்பு, (ஆகிய பூதங்களோடு) நீரும் நிலமும் கூடிய பஞ்சபூதங்களின் சேர்க்கையால் ஆகிய ஒரு உடலாகிய வடிவத்தைக் கொண்டு,

அதிலே பதிமூணெழு வகையாலே வரு சுகம் துயர் ஆசையிலே உழல் மதியை வென்று ( adhilE padhimooNezhu vagaiyaalE varu sugam thuyar aasaiyilE uzhal madhiyai vendru ) : in which the modifications in the ninety-one (thirteen times seven) tatthvas cause happiness, sorrow and desires in which I remain bogged down. I should defeat my intellect (which is immersed in worldly maya), and (Tattva /truth/essential nature can be defined as primary principles or building blocks through which Lord Brahma constructs the universe.) அதில் சிவதத்துவம் நீங்கலாக உள்ள 91 தத்துவங்களுடன் பொருந்தி இருந்து, அதனால் உண்டாகின்ற இன்பம், துன்பம், ஆசை ஆகிய இவற்றில் உழலுகிகின்ற எனது சிற்றறிவினை நான் வெற்றிகொண்டு,

பராபர ஞான நல் வழி பெறும்படி நாய் அடியேனை நின் அருள் சேராய் (paraapara nyaana nal vazhi peRumpadi naay adiyEnai nin aruL sEraay) : Kindly give me, a mere dog, Your grace so that I may attain knowledge.

செனனி சங்கரி ஆரணி நாரணி (jenani sankari aaraNi naaraNi) : The goddess who is the creator of this universe, also called Shankari, AraNi and NaraNi; ஆரணி = வேதமுதல்வி,

விமலி எண்குண பூரணி காரணி (vimali eN guNa pooraNi kaaraNi) : the blemishless Devi filled with eight attributes and is the Root Cause; எண்குண பூரணி = எண்குணங்களும் நிறைந்தவள்; எட்டுக் குணங்கள் : தன்வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்கை உணர்வின்னாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களினின்று நீங்கல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பிலின்பமுடைமை;

சிவை பரம்பரையாகிய பார்வதி அருள் பாலா (sivai paramparai aagiya paarvathi aruL baalaa) : the auspicious Devi Parvati belonging to the timeless lineage; You are the child delivered by that Goddess!

சிறை புகும் சுரர் மாதவர் மேல் பெற (siRai pugum surar maathavar mEl peRa) : In order that the imprisoned celestials who were focussed on God could be freed,

அசுரர் தம் கிளையானது வேரற (asurar thankiLai yaanadhu vEraRa) : and the demons with their branches could be uprooted,

சிவன் உகந்து அருள் கூர்தரு வேல் விடு முருகோனே (sivan ugandharuL koortharu vEl vidu murugOnE) : You wielded the sharp 'vel' that Shiva happily gave to You;

கனகன் அங்கையினால் அறை தூணிடை மனித சிங்கமதாய் (kanakan ankaiyinaal aRai thooNidai manidha singamadhaay) : The demon Hiranya hit the pillar with his hands, and Narasimha emerged from it with the combined form of a lion and a human, இரணியன் தன் உள்ளங்கையால் அறைந்த தூணிலிருந்து நரசிம்ம உருவத்தில் வெளிப்பட்டு,

வரை பார் திசை கடல் கலங்கிடவே (varai paar dhisai kadal kalangidavE ) : and the mountains, the earth, the directions, and the sea trembled, மலை, பூமி, திசைகள், கடல் இவையாவும் கலங்கிடத் தோன்றி, இரணியனுடன் போர்செய்து,

பொருதே உகிர் முனையாலே கதற வென்று உடல் கீண (porudhE ugir munaiyaalE kadhaRa vendrudal keeNa ) : when He (Narasimha) fought with the demon and, with the sharp ends of His nails, cut through his body making him wail, உடல் கீண (udal keeNa) : slicing the body;

அவன் ஆருயிர் உதிரமும் சிதறாது அமுதாய் உணும் (avan aaruyir udhiramum chidhaRa adhamudhaay uNu) : and drank it like a nectar, without letting his precious life and blood scatter;

கமல உந்தியனாகிய மால் திரு மருகோனே (kamala undhiya naagiya maal thiru marugOnE) : That Narasimha is Vishnu with lotus-like navel,and You are His nephew!

தினகரன் சிலை வேள் அருள் மாதவர் (dhinakaran silai vEL aruL maathavar) : The sun, sugarcane-bow holding Manmatha, the auspicious sages,சிலை (silai) : the bow (of sugarcane); வேள் (vEL) : Manmatha, the god of love;

சுரர்கள் இந்திரனார் உரகாதிபர் (surargaL indhiranaar uragaadhipar>) : the celestials, Indra, the chiefs of the Nagaloka,

திசை முகன் செழு மாமறையோர் புகழ் அழகோனே (dhisai mugan sezhu maamaRaiyOr pugazh azhagOnE) : Lord Brahma, the auspicious Brahmins – all of them worship You, the handsome God!

திரு மடந்தையர் நாலிருவோர் நிறை அகமொடு (thiru madandhaiyar naal iruvOr niRai agamodu) : Houses inhabited by the Ashta Lakshmis, அட்டலட்சுமிகள் நிறைந்த வீடுகளிலும், நால் இருவர் (naal iruvar) : eight; திரு மடந்தை(thiru madanthai) : Lakshmi;

அம்பொனின் ஆலய நீடிய சிவபுரம் ( amponin a alaya neediya Sivapuram) : and temples decked with pure gold abound at Sivapuram;

தனில் வாழ் குரு நாயக பெருமாளே.(sivapuram thanil vaazh guru naayaka perumaaLE. ) : and You reside here, oh My Chief Master!

Understanding Pancha Mahabhutas

The nature of the five elements which make the planet / universe are very much manifest in the physical body. Whether it is the individual human body or the larger cosmic body, essentially, they are made of the pancha bhutas or the five elements – earth, water, fire, air and space. The very first element that comes to existence is akash. The next element derived is Vayu (Air) then comes Agni (Fire), then Jala (water) and lastly Prithvi (earth).

The 5 elements form subtle essence or tanmatra. (Tanmatra is a Sanskrit word which means subtle essence.) These tanmatras embodied the 5 mahabhoots as follows:
The 5 tanmatras are Sound (Shabda), Touch (Sparsha), Vision (Roopa), Taste (Rasa), Smell (Gandha). These tanmatras are related to each sense organ.

  1. Ether or Universal Space (Aakash) – Akash means space i.e. having space/ freedom to move. The qualities of the ether element include- light, subtle, and immeasurable and are related to actions such as expansion, vibration, non-resistance. The ear is the sensory organ related to ether element. The tanmatra of the ether element is Sound or Shabda.
  2. Air (Vayu) – Air element is related to movement or a sense of constant motion. The qualities of air element include sensitivity, motion, cool and subtle presence. Skin is the sensory organ related to air element. The tanmatra of the air element is Touch or Sparsha.
  3. Divine Fire (Agni) – The air element performs movements and whenever there is movement, it causes friction and this leads to the formation of fire. The qualities of fire element are related to various functions such as penetration, digestion of food, conversion of thoughts, intellect and perception of light. The tanmatra of the fire element is Vision or Rupa.
  4. Water (Jala) – The water element qualities include liquidity or fluidity. Water imparts cooling, binding and liquidity. The tanmatra of the water element is Taste or Rasa.
  5. Earth (Pruthvi) – This earth element is solid, gross, hard and dense. Earth element gives form, shape, structure and strength. For e.g. teeth, nails, bones and muscles. Nose is the sense organ related to the earth element. The tanmatra of the Earth element is Smell or Gandha.
The five senses have five dimensions in the universe. We can classify the entire Universe as five elements:
  • Smell with Earth element
  • Taste with Water element
  • Touch with Air element
  • Sound with Ether element
  • Shapes and forms with Fire element

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே