228. புலவரை ரக்ஷிக்கும்


ராகம் : பந்துவராளிதாளம்: ஆதி
புலவரை ரக்ஷிக் குந்தாரு வேமது
ரிதகுண வெற்பொக் கும்பூவை மார்முலை
பொருபுய திக்கெட் டும்போயு லாவியபுகழாளா
பொருவரு நட்புப் பண்பான வாய்மையி
லுலகிலு னக்கொப் புண்டோவெ னாநல
பொருள்கள் நிரைத்துச் செம்பாக மாகியகவிபாடி
விலையில்த மிழ்ச்சொற் குன்போலு தாரிகள்
எவரென மெத்தக் கொண்டாடி வாழ்வெனும்
வெறிகொளு லுத்தர்க் கென்பாடு கூறிடு மிடிதீர
மிகவரு மைப்பட் டுன்பாத தாமரை
சரணமெ னப்பற் றும்பேதை யேன்மிசை
விழியருள் வைத்துக் குன்றாத வாழ்வையுமருள்வாயே
இலகிய வெட்சிச் செந்தாம மார்புய
சிலைநுதல் மைக்கட் சிந்தூர வாணுதல்
இமயம கட்குச் சந்தான மாகிய முருகோனே
இளையகொ டிச்சிக் கும்பாக சாதன
னுதவுமொ ருத்திக் குஞ்சீல நாயக
எழிலியெ ழிற்பற் றுங்காய மாயவன்மருகோனே
அலர்தரு புட்பத் துண்டாகும் வாசனை
திசைதொறு முப்பத் தெண்காதம் வீசிய
அணிபொழி லுக்குச் சஞ்சார மாமளி யிசையாலே
அழகிய சிக்கற் சிங்கார வேலவ
சமரிடை மெத்தப் பொங்கார மாய்வரும்
அசுரரை வெட்டிச் சங்கார மாடியபெருமாளே.

Learn The Song



Raga Pantuvarali (51st mela Alias: kamavardhini)

Arohanam: S R1 G3 M2 P D1 N3 S    Avarohanam : S N3 D1 P M2 G3 R1 S


Paraphrase

புலவரை ரக்ஷிக்குந் தாருவே (pulavarai rakshikkum thAruvE): "Oh You are the wish-fulfilling KaRpaga Tree who protects the poets!

மதுரித குண வெற்பு ஒக்கும் பூவை மார் முலை பொரு புய (madhuritha guNa veRpu okkum pUvai mAr mulai porubuya): Your shoulders engage in a war with the mountain-like bosoms of virtuous women! பூவை(poovai): women;

திக்கெட்டும் போய் உலாவிய புகழாளா (dhikkettum pOy ulAviya pugazhALA): Your fame has spread in all the eight directions!

பொருவரு நட்புப் பண்பான வாய்மையில் ( poru aru natpup paNbAna vAymaiyil): For matchless and true friendship, பொரு அரு(poru aru): incomparable; வாய்மை(vaaimai): truth;

உலகில் உனக்கு ஒப்புண்டோ எனா ( ulagil unak oppuNdO venA ): is there anyone in this world equal to you?" - with these

நல பொருள்கள் நிரைத்து செம்பாகமாகிய கவிபாடி (nala poruLgaL niraiththu sembAgamAgiya kavipAdi): choicest words, so well arranged, I composed exquisite poems; ந(ல்)ல பொருள்கள் (nala poruLgaL): Goodor choicest words; நிரைத்து(niraiththu): neatly arranged;

விலையில் தமிழ்ச் சொற்கு உன் போல் உதாரிகள் எவரென மெத்தக் கொண்டாடி (vilaiyil thamizh soRkku un pOl udhArigaL evarena meththak koNdAdi): I sang with profuse plaudits saying "For patronizing the priceless words of Tamil, could there be a more generous person than you?" விலை இல் (vilai il): priceless;

வாழ்வெனும் வெறிகொள் உலுத்தர்க்கு என் பாடு கூறிடு மிடி தீர (vAzhvenum veRikoL uluththarkku en pAdu kURidu midi theera): To end the penury which pushed me into crying my heart out to those stingy people who are obsessed only with their lives, மிடி(midi): poverty; உலுத்தர்(uluththar): greedy;

மிக அருமைப்பட்டு உன் பாத தாமரை சரணம் எனப் பற்றும் பேதையேன் மிசை (miga arumaip pattu un pAdha thAmarai saraNam enap patrum pEdhaiyEn misai): I take immense pleasure to hold Your lotus feet as my sole refuge; on this poor me,

விழி அருள் வைத்துக் குன்றாத வாழ்வையும் அருள்வாயே (vizhi aruL vaiththu kundrAdha vAzhvaiyum aruLvAyE): kindly cast Your gracious eyes and bless me with an unalloyed blissful life!

இலகிய வெட்சிச் செந்தாம மார்புய (ilagiya vetchi sendhAma mAr buya): You wear the elegant garland of vetchi flowers on Your chest and shoulders!

சிலை நுதல் மைக் கண் சிந்தூர வாணுதல் (silai nudhal maikkaN sindhUra vANudhal): She has bow-like brows, radiant forehead with kohl-laced eyes and vermilion; சிலை நுதல்(silai nuthal): brows shaped like a bow; வாள் நுதல்(vAL nuthal): radiant forehead;

இமய மகட்குச் சந்தானமாகிய முருகோனே (imaya magatku santhAnamAgiya murugOnE): and She is the daughter of Mount HimavAn; You are Her Son, Oh MurugA!

இளைய கொடிச்சிக்கும் பாகசாதனன் உதவும் ஒருத்திக்கும் சீல நாயக (iLaiya kodicchikkum bAga sAdhanan udhavum orutthikkum seela nAyaka): You are the immaculate consort of both VaLLi, the young mountain-girl, and DEvayAnai, the unique daughter of IndrA! பாக சாதனன்(baaga saathanan): Indra; பாகசாதனன் உதவும் ஒருத்தி (): Indra's daughter Deivayaanai;

எழிலி எழில் பற்றும் காய மாயவன் மருகோனே (ezhili ezhil patrum kAya mAyavan marugOnE): You are the nephew of the mystic one, Vishnu, whose body is of the complexion of beautiful dark cloud. எழிலி(ezhili): cloud; எழில் பற்றும் காயம்(ezhil patrum kAyam): beautiful body;

அலர் தரு புட்பத்து உண்டாகும் வாசனை (alar tharu pushpaththu undAgum vAsanai): The fragrance from the fully blossomed flowers from this place, அலர் தரு புட்(ஷ்)பம்(alar tharu put(sh)pam): blooming flower;

திசைதொறு முப்பத்தெண் காதம் வீசிய (disaithoRu muppaththeN kAdham veesiya): spread up to 38 kAdhams (380 miles) in all the directions;

அணி பொழிலுக்குச் சஞ்சாரமாம் அளி இசையாலே ( aNi pozhilukku sanjchAramAm aLi isaiyAlE): beetles roam about with a musical drone in the lush groves; பொழில்(pozhil): orchards, groves; அளி(aLi): bees;

அழகிய சிக்கற் சிங்கார வேலவ (azhagiya sikkaR singAra vElava): this is exquisite Sikkal where You are seated with the name "SingAra VElavan".

சமரிடை மெத்தப் பொங்காரமாய் வரும் அசுரரை ( samaridai meththa pongAramAy varum asurarai): The aggressive and angry demons who advanced in the battlefield

வெட்டிச் சங்காரம் ஆடிய பெருமாளே.(vetti sankAra mAdiya perumALE.): were all killed and destroyed by You, Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே