224.ஆதி முதல் நாளில்


ராகம் : மாயா மாளவ கௌளைஅங்கதாளம்
2½ + 1½ + 1½ (5½)
ஆதிமுத னாளி லென்றன் தாயுடலி லேயி ருந்து
ஆகமல மாகி நின்றுபுவிமீதில்
ஆசையுட னேபி றந்து நேசமுட னேவ ளர்ந்து
ஆளழக னாகி நின்று விளையாடிப்
பூதலமெ லாம லைந்து மாதருட னேக லந்து
பூமிதனில் வேணு மென்றுபொருள்தேடிப்
போகமதி லேயு ழன்று பாழ்நரகெய் தாம லுன்றன்
பூவடிகள் சேர அன்புதருவாயே
சீதைகொடு போகு மந்த ராவணனை மாள வென்ற
தீரனரி நார ணன்றன்மருகோனே
தேவர்முநி வோர்கள் கொண்டல் மாலரிபிர் மாவு நின்று
தேடஅரி தான வன்றன் முருகோனே
கோதைமலை வாழு கின்ற நாதரிட பாக நின்ற
கோமளிய நாதி தந்த குமரேசா
கூடிவரு சூரர் தங்கள் மார்பையிரு கூறு கண்ட
கோடைநகர் வாழ வந்தபெருமாளே.

Learn The Song




Paraphrase

ஆதிமுதன் நாளில் என்றன் தாய் உடலிலே இருந்து (Athi mutha nALil enRan thAy udalile irunthu) : In the beginning, I emerged from my mother's body,

ஆக மலமாகி நின்று புவி மீதில் (Aga malamAgi ninRu puvi meethil) : as a bundle of dirty flesh into this earth.

ஆசையுடனே பிறந்து நேசமுடனே வளர்ந்து (AsaiyudanE piRanthu nEsamudanE vaLarnthu) : I took birth along with desires and was raised with love;

ஆள் அழகனாகி நின்று விளையாடி (AL azhaganAgi ninRu viLaiyAdi) : I grew up into a handsome man and played about!

பூதலமெலாம் அலைந்து மாதருடனே கலந்து (pUthalamelAm alainthu mAtharudanE kalanthu) : I roamed the entire world and cohabited with several women.

பூமிதனில் வேணும் என்று பொருள் தேடி (pUmithanil vENum enRu poruL thEdi) : I earned a lot of wealth to fulfil my needs in this world.

போகம் அதிலே உழன்று பாழ் நரகு எய்தாமல் (bogam athilEy uzhanRu pAzh naragu eythAmal) : In order that I do not suffer in the wretched hell for having indulged in too much pleasure,

உன்றன் பூவடிகள் சேர அன்பு தருவாயே (unRan pUvadikaL sEra anbu tharuvAyE) : but attain Your lotus feet, You have to show kindness towards me.

சீதை கொடு போகும் அந்த ராவணனை மாள வென்ற (seethaikodu pOkum antha rAvaNanai mALa venRa) : When SitA was abducted by RAvaNA, he was overpowered and killed

தீரன் அரி நாரணன் தன் மருகோனே (theeran ari nAraNan than marugOnE) : by valorous Rama, who was Vishnu-incarnate; and You are His nephew!

தேவர் முநிவோர்கள் கொண்டல் மால் அரி பிர்மாவு நின்று(thEvar munivOrgaL koNdal mAlari pirmAvum ninRu:) : All DEvAs, sages, cloud-complexioned Vishnu and BrahmA together sought கொண்டல் (koNdal) : cloud;

தேட அரிதானவன் தன் முருகோனே (thEda ari thAna vanRan murugOnE) : but failed to find (the head and feet of) the all-pervasive SivA; and You are that SivA's Son, Oh MurugA!

கோதை மலை வாழுகின்ற நாதர் இட பாக நின்ற (kOthai malai vAzhuginRa nAthar ida bAga ninRa) : She occupies the left side of SivA who lives in the KailAsh mountain, கோதை = அழகிய கூந்தலை உடையவள், பார்வதி; கோதை மலை = கயிலை மலை;

கோமளி அநாதி தந்த குமரேசா (kOmaLi anAthi thantha kumarEsA) : She is beautiful; She has no beginning; and that PArvathi delivered You, Oh KumarA! கோமளி (komaLi) : beautiful;

கூடி வரு சூரர் தங்கள் மார்பை இரு கூறு கண்ட (kUdi varu sUrar thangaL mArbai iru kURu kaNda) : When all demons advanced together to fight You, their chests were split into two pieces by Your Spear!

கோடை நகர் வாழ வந்த பெருமாளே.(kOdai nagar vAzha vantha perumALE. ) : Your favourite abode is KOdainagar, Oh Great One!

கோடை நகர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வல்லக்கோட்டை தான் முன்னொரு காலத்தில் கோடை நகர் என வழங்கப்பட்டது. ஸ்ரீபெரும்புதூரில் இருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது வல்லக்கோட்டை சுப்ரமணிய சுவாமி திருக்கோயில்.அருணகிரிநாதர் தலயாத்திரை செய்து வருகையில் திருப்போரூர் முருகனை வழிபட்டு, மறுநாள் திருத்தணி செல்லலாம் என எண்ணினார். இரவில் இவரது கனவில் கோடைநகர் குமரன் தோன்றி தன்னை மறந்தாரா என வினவினார். கண்விழித்த அருணகிரிநாதரும் திருத்தணி செல்லும் முன் வல்லக்கோட்டை முருகனை தரிசித்தார். மற்ற கோடைநகர் பாடல்கள்:
சால நெடுநாள்
ஞாலமெங்கும் வளைத்தரற்று
தோழமை கொண்டு

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே