222. தரையினில் வெகு


ராகம் : லதாங்கி அங்கதாளம் (7½)
4 + 1½ + 2
தரையினில் வெகுவழி சார்ந்த மூடனை
வெறியனை நிறைபொறை வேண்டி டாமத
சடலனை மகிமைகள் தாழ்ந்த வீணணை மிகுகேள்வி
தவநெறி தனைவிடு தாண்டு காலியை
யவமதி யதனில்பொ லாங்கு தீமைசெய்
சமடனை வலியஅ சாங்க மாகியதமியேனை
விரைசெறி குழலியர் வீம்பு நாரியர்
மதிமுக வனிதையர் வாஞ்சை மோகியர்
விழிவலை மகளிரொ டாங்கு கூடியவினையேனை
வெகுமல ரதுகொடு வேண்டி யாகிலு
மொருமல ரிலைகொடு மோர்ந்து யானுனை
விதமுறு பரிவொடு வீழ்ந்து தாடொழஅருள்வாயே
ஒருபது சிரமிசை போந்த ராவண
னிருபது புயமுட னேந்து மேதியு
மொருகணை தனிலற வாங்கு மாயவன்மருகோனே
உனதடி யவர்புக ழாய்ந்த நூலின
ரமரர்கள் முனிவர்க ளீந்த பாலகர்
உயர்கதி பெறஅரு ளோங்கு மாமயி லுறைவோனே
குரைகழல் பணிவொடு கூம்பி டார்பொரு
களமிசை யறமது தீர்ந்த சூரர்கள்
குலமுழு தனைவரு மாய்ந்து தூளெழ முனிவோனே
கொடுவிட மதுதனை வாங்கி யேதிரு
மிடறினி லிருவென ஏந்து மீசுரர்
குருபர னெனவரு கூந்த லூருறைபெருமாளே.

Learn The Song




Know The Ragam Lathangi (63rd mela)

Arohanam: S R2 G3 M2 P D1 N3 S    Avarohanam: S N3 D1 P M2 G3 R2 S


Paraphrase

தரையினில் வெகுவழி சார்ந்த மூடனை (tharaiyinil vegu vazhi sArndha mUdanai) : I am an utter fool who cannot discern between good and the evil and hence wandered into several evil paths in this world; பல (தீய) வழிகளிலும் போய் கெடுகின்ற அறிவில்லாதவனை எதனினும் உறுதி இன்றி பல வழியில் சென்று அறிவு பழுதானவனும்; வெகு வழி சார்ந்த மூடனை = எதனினும் உறுதி இன்றி பல வழியில் சென்று அறிவு கெட்டவனும்;

வெறியனை நிறைபொறை வேண்டிடா மத சடலனை (veRiyanai niRai poRai vEndidA madha sadalanai) : I am a frenzied drunkard, with no desire to practise virtues or patience. My body is filled with arrogance; குடிவெறி கொண்டவன் போன்ற பித்தனை, மனதை அடக்கவேண்டும்; பொறுமை, அடக்கம் இவை இருக்கவேண்டும் என்ற எண்ணமே இல்லாத செருக்குக்கொண்டவனை, மதம் கொண்ட சரீரத்தை உடையவனை, மதம் (madham) : arrogance, intoxication;

மகிமைகள் தாழ்ந்த வீணணை (magimaigaL thAzhndha veeNanai) : I am a vagabond without any greatness at all; ஒருவித பெருமையும் இல்லாத தாழ்ந்த நிலையில் இருக்கும் பயனற்றவனை,

மிகு கேள்வி தவ நெறிதனை விடு தாண்டு காலியை (migu kELvi thava neRithanai vidu thANdu kAliyai) : I am a wastrel who has strayed away from the path of inquiry, knowledge and chastity; நிரம்பின கேள்வி, தவ வழி இவற்றை விட்டுத் தாண்டி கண்ட வழியில் திரிகின்ற கெட்டவனை,

அவமதி அதனில் பொலாங்கு தீமை செய் சமடனை (avamadhi adhanil polAngu theemai sey samadanai) : I am a fool with an evil mind who deliberately harms others;

வலிய அசாங்கமாகிய தமியேனை (valiya asAnga mAgiya thamiyEnai) : I have been outcast by the society and left alone; அசாங்கம் (asaangam) : without connection with righteous people/society; சத் சங்க சார்பு இல்லாமை;

விரை செறி குழலியர் வீம்பு நாரியர் (virai seRi kuzhaliyar veembu nAriyar) : women with fragrant hair, adamant women, விரை = வாசனை; வீம்பு நாரியர் = வீண் பகட்டும் தற்பெருமையும் பிடிவாதமும் கொண்ட பெண்கள்;

மதிமுக வனிதையர் வாஞ்சை மோகியர் (madhimuka vanithaiyar vAnchai mOgiyar) : women with moon-like faces, women who provoke lust; வாஞ்சை மோகியர் = விருப்பத்தை எழுப்பும் காம மயக்கிகள்;

விழிவலை மகளிரொடு ஆங்கு கூடிய வினையேனை (vizhivalai magaLirod Angu kUdiya vinaiyEnai ) : and women who entice and trap me with their charming eyes - I have illicit relationship with these women time and again;

வெகு மலரது கொடு வேண்டியாகிலும் (vegu malar adhu kodu vEndiyAgilum) : (I should worship You) Either by offering plenty of flowers,

ஒரு மலர் இலை கொடும் ஓர்ந்து யானுனை (oru malar ilai kodum Orndhu yAn unai) : or by offering just a single flower or a leaf, with dedicated concentration, ஓர்தல் = உணர்ந்து ஒன்றுதல்;

விதமுறு பரிவொடு வீழ்ந்து தாழ் தொழ அருள்வாயே (vidhamuRu parivodu veezhndhu thAL thozha aruLvAyE) : bless me thus so that I prostrate at Your feet with utmost affection and devotion.

ஒருபது சிரமிசை போந்த ராவணன் ( orupadhu siramisai pOndha rAvaNan ) : RAvaNA who came to fight with his matchless ten heads, ஒப்பற்ற பத்துத் தலைகளுடன் போருக்கு வந்த ராவணன்

இருபது புயமுடன் ஏந்தும் ஏதியும் ஒரு கணை தனில் அற வாங்கு மாயவன் மருகோனே (irupadhu buyamudan Endhu mEdhiyum oru kaNai thanil aRa vAngu mAyavan marugOnE) : lost his twenty shoulders, as well as the powerful sword held in his hands, to the single arrow of the mystical RAmA and You are His nephew! தன் இருபது கரங்களில் ஏந்திய வாளானது ஒரே பாணத்தினால் அற்று விழும்படி பாணத்தை விட்ட திருமாலின் மருகனே! ஏதி (Ethi) : sword; சந்திரகாசம் எனும் வாள்; கணை(kaNai) : arrow;

உனது அடியவர் புகழ் ஆய்ந்த நூலினர் (unadhu adiyavar pugazh Ayndha nUlilnar) : Those learned researchers who have studied the legends about Your devotees, உனது அடியார்களும், உனது திருப்புகழை ஆய்ந்த நூல் வல்லவர்களும்,

அமரர்கள் முனிவர்கள் ஈந்த பாலகர் (amarargaL munivargaL eendha pAlakar) : the Devas, the sages and the philanthropists / the Devas, the sons of sages; The six sons of Sage Parashara were cursed by their father for having playfully killed தேவர்களும் முனிவர்களும், கொடையால் ரக்ஷிப்பவர்களும் / முனிவரது மக்களும்; ஈந்த பாலகர் = கொடைகள் செய்து பாலிப்பவர்களும் / பெற்ற மகன்;

பராசர முனிவருடைய ஆறு மகன்கள் இளம் பருவத்தில் மீன்கள் இறந்துபடுமாறு ஒரு குளத்தில் விளையாடினார்கள். அதுகண்ட பராசரர், அவர்களை சரவணப் பொய்கையில் மீன் வடிவாக பிறக்குமாறு சபித்தனர். சரவண பொய்கையில் முருகவேள் திருவவதாரம் எடுத்து பராசத்தியின் ஞானப்பாலை பருகினார். அவர் உண்ட எச்சில் பால் சரவணத்தில் கலக்க, அதனை உண்ட மீன் வடிவத்தில் இருந்த அறுவரும் சாபம் நீங்கி பழைய வடிவம் பெற்றனர். அறுவரும் திருப்பரங்குன்றம் முருகனைத் தியானித்து தவம் இயற்றி ஞான யோகம் அடைந்தனர்

உயர்கதி பெற அருளோங்கு மாமயில் உறைவோனே (uyar gathi peRa aruL Ongu mAmayil uRaivOnE) : achieve salvation by Your Grace, oh, rider of the great peacock! உயர்ந்த நற்கதி அடையும்படி அருள் விளங்கும் அழகிய மயிலில் வீற்றிருப்பவனே!

குரை கழல் பணிவொடு கூம்பிடார் (kurai kazhal paNivodu kUmbidAr) : Those who do not worship Your feet adorned with tinkling anklets and கழல் (kazhal) : feet; குரை கழல் (kurai kazhal) : feet that make sound; வீரக் கழல் ஒலிக்கின்ற திருவடி;

பொரு களமிசை அறமது தீர்ந்த சூரர்கள் (poru kaLamisai aRamadhu theerndha sUrargaL) : those demons who fight contravening the established war rules based on DharmA, போர்க்களத்திலே தரும நெறியைக் கைவிட்ட சூராதி அசுரர்களது

குலமுழுது அனைவரு மாய்ந்து தூளெழ முனிவோனே (kulamuzhu dhanaivaru mAyndhu thULezha munivOnE) : You are the angry lord who annihilates and reduces them to dust!

கொடு விடம் அதுதனை வாங்கியே ( kodu vidam adhu thanai vAngiyE) : He received the fierce poison in His hand and commanded

திரு மிடறினில் இரு என ஏந்தும் ஈசுரர் ( thiru midaRinil iruvena Endhum eesurar) : "Stay right at my throat"; and He was Lord SivA! மிடறு ( midaRu) : throat;

குருபரன் என வரு கூந்தலூர் உறை பெருமாளே. (guruparan enavaru kUndhalUr uRai perumALE.) : You were SivA's Master, and You chose KUndhalUr as Your abode, Oh Great One!

Comments

Post a Comment

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே