218. தாரணிக்கு அதிபாவி


ராகம்: சநதிரகெளன்ஸ்மிஸ்ரசாபு (3½)
1½ + 2
தார ணிக்கதி பாவி யாய்வெகு
சூது மெத்திய மூட னாய்மன
சாத னைக்கள வாணி யாயுறு மதிமோக
தாப மிக்குள வீண னாய்பொரு
வேல்வி ழிச்சிய ராகு மாதர்கள்
தாமு யச்செயு மேது தேடியநினைவாகிப்
பூர ணச்சிவ ஞான காவிய
மோது தற்புணர் வான நேயர்கள்
பூசு மெய்த்திரு நீறி டாஇருவினையேனைப்
பூசி மெய்ப்பத மான சேவடி
காண வைத்தருள் ஞான மாகிய
போத கத்தினை யேயு மாறருள்புரிவாயே
வார ணத்தினை யேக ராவுமு
னேவ ளைத்திடு போதுமேவிய
மாய வற்கித மாக வீறிய மருகோனே
வாழு முப்புர வீற தானது
நீறெ ழப்புகை யாக வேசெய்த
மாம திப்பிறை வேணி யாரருள்புதல்வோனே
கார ணக்குறி யான நீதிய
ரான வர்க்குமு னாக வேநெறி
காவி யச்சிவ நூலை யோதியகதிர்வேலா
கான கக்குற மாதை மேவிய
ஞான சொற்கும ராப ராபர
காசி யிற்பிர தாப மாயுறைபெருமாளே.

Learn The Song





Raga Chandrakauns (Janyam of 21st mela Keeravani)

Arohanam: S G2 M1 D1 N3 S    Avarohanam: S N3 D1 M1 G2 S


Talam Demonstration


Paraphrase

தாரணிக்கு அதி பாவியாய் (dhAraNikku athi pAviyAy) : The worst sinner in this world,

வெகு சூது மெத்திய மூடனாய் (vegu sUdhu meththiya mUdanAy) : a fool filled with deceit,

மன சாதனைக் களவாணியாய் (mana sAdhanaik kaLavANiyAy) : with a mind choking with stealthy thoughts, போலியான மன எண்ண ஓட்டங்கள் உடையவனாய்

உறும் அதிமோக தாப மிக்குள வீணனாய் (uRum athi mOha thApa mikkuLa veeNanAy) : a prodigal having extreme lust,

பொரு வேல் விழிச்சியர் ஆகு மாதர்கள் தாம் உய்யச் செயும் ஏது தேடிய நினைவாகி (poru vEl vizhichchiyar Agu mAdhargaL thAm uyachcheyum Edhu thEdiya ninaivAgi) : and I am always thinking of ways of amassing wealth to satiate the survival needs of the call women or whores with combative spear-like eyes, ஏது (Ethu) : wealth;

பூரணச்சிவ ஞான காவியம் ஓது தற்ப உணர்வான நேயர்கள் மெய்ப் பூசும் திரு நீறு இடா வினையேனை (pUraNa siva nyAna kAviyam Odhu thaRpa uNarvAna nEyargaL pUsu meyth thiru neeRu idA iru vinaiyEnai) : I am trapped by my karma (good and bad deeds), and I do not wear the the holy ash (VibUthi) that is worn by the devotees who are interested in chanting the complete Saivite Scriptures (like ThEvAram and ThiruvAchakam), எங்கும் நிறைந்த சிவதத்துவ நூல்களை ஓதுகின்ற தன்மையை உடைய அடியார்கள் உடலில் இடுகின்ற திரு நீற்றை உடலில் இடாத பெரிய தீ வினைகளை உடையவனாய் திரியும் என்னை,

பூசி மெய்ப்பதமான சேவடி காண வைத்து (pUsi meyppadham Ana sEvadi kANa vaiththu) : Bless me so that I wear that ash, behold Your red and holy feet, and சே (sE) : red;

அருள் ஞான மாகிய போதகத்தினை ஏயுமாறு அருள் புரிவாயே (aruL nyAna mAgiya bOdhagath thinai yEyumARu aruL purivAyE) : and realise the respository of Pure Knowledge, True Wisdom, and holy grace. ஏய்தல் : பொருந்துதல், அடைதல்;

வாரணத்தினையே கராவும் முன்னே வளைத்திடு போது (vAraNaththinaiyE karAvum munE vaLaiththidu pOdhum ) : When, once, the elephant GajEndran was dragged and attacked by a crocodile, (கஜேந்திரனாகிய) யானையை முதலை முன்னொரு நாளில் (காலைப்பற்றி) வளைத்த போது வாரணம் (vAraNam) : elephant; கரா (karA) : crocodile;

மேவிய மாயவற்கு இதமாக வீறிய மருகோனே (mEviya mAyavaRkku idhamAga veeRiya marugOnE ) : mystic Vishnu rushed to his rescue; and You are His delightful nephew! சென்று உதவிய திருமாலுக்கு இன்பம் தரும்படி மேம்பட்டு விளங்கும் மருகனே! மாயவன் (mAyavan) : mystic, Vishnu;

வாழு முப்புர வீற தானது நீறெழப் புகையாகவே செய்த (vAzhu muppura veeRa dhAnadhu neeR ezhap pugai yAgavE seydha) : Thiripuram, which once flourished grandly, lost its grandeur as it went up in smoke; பெருவாழ்வு வாழ்ந்த திரிபுரங்களின் பொலிவெல்லாம் சாம்பலாகப் போகுமாறு புகை எழச்செய்த வீறு (veeRu) : arrogance, greatness, victory, splendour;

மா மதி பிறை வேணியார் அருள் புதல்வோனே (mA madhip piRai vENi yararuL pudhalvOnE) : by Lord SivA, who has adorned His matted locks with the great crescent moon; and You are His son!

காரண குறியான நீதியர் ஆனவர்க்கு (kAraNak kuRiyAna needhiyar Anavarkku ) : One who is the cause for everything and the Lord of Justice is Lord SivA; காரண குறி (kAraNakuRi) : root cause;

மு(ன்)னாகவே நெறி காவிய சிவ நூலை ஓதிய கதிர்வேலா (munAgavE neRi kAviyach siva nUlai Odhiya kadhir vElA) : and You, as ThirugnAna Sambandhar, sang the Great hymns of Saivite DharmA (called ThEvAram) in His shrines, Oh holder of the bright vel!

கானகக் குற மாதை மேவிய ( kAnagak kuRa mAdhai mEviya) : You sought VaLLi, the damsel of the KuRavAs, in the forest,

ஞான சொல் குமரா பராபர (nyAna soR kumarA parApara) : Oh Kumara, You always speak the language of True Knowledge and You are Supreme!

காசியிற் பிரதாப மாயுறை பெருமாளே. (kAsiyiR pira thApamAy uRai perumALE.) : You reside in KAsi eminently, Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே